ஞாயிறு, 8 ஜூலை, 2018

இயக்குனர் கே. பாலசந்தர் பிறந்த நாள் ஜூலை 09.


இயக்குனர்  கே. பாலசந்தர் பிறந்த நாள் ஜூலை 09. 
கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

வாழ்க்கையும், கல்வியும்
இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி. தந்தை கைலாசம் தாயார் காமாச்சியம்மாள். தந்தைக்கு கிராம முனிசிப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர்.  "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அறிமுகப்படுத்திய புதுமுகங்கள்
இயக்குனர் ஸ்ரீதரைப் போலப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். அவர்களுள் மிக உச்சத்தை அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலச்சந்தர் அல்லவெனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர்.

அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.

மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.

வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர் அவர்களை அறிமுகம் செய்த படத்தில் மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.

எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே விளைந்தது.

எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே.

சுவையான தகவல்கள்
தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.
இயக்குனர் ஸ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவரது பாராட்டுப் பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
சிவாஜி கணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.
பாலச்சந்தர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர் இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை. பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.
துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இவை வெற்றிப்படங்களாக விளங்கிடினும், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம் இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது), பொய்க்கால் குதிரை ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.
அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநாதனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்), அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.
பல ஆண்டுகளுக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பலவற்றிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்பட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் முதலிய நடிகர்கள் இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.
நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். தெய்வத் தாய் என்னும் அத்திரைப்படம் ஆர். எம். வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி. மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.
சிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.
கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும். ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.
பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெறினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.


பாலச்சந்தர் இயக்கிய படங்கள்
நீர்க்குமிழி
நாணல்
மேஜர் சந்திரகாந்த்
இரு கோடுகள்
பூவா தலையா
பாமா விஜயம்
தாமரை நெஞ்சம்
நான் அவனில்லை
புன்னகை
எதிர் நீச்சல்
சிந்து பைரவி
அபூர்வ ராகங்கள்
தண்ணீர் தண்ணீர்
அச்சமில்லை அச்சமில்லை
வறுமையின் நிறம் சிகப்பு
புதுப்புது அர்த்தங்கள்
பார்த்தாலே பரவசம்
நூற்றுக்கு நூறு
டூயட்
சிந்து பைரவி
சொல்லத்தான் நினைக்கிறேன்
ஒரு வீடு இரு வாசல்
ஜாதிமல்லி
பொய்
அக்னிசாட்சி
கல்கி
வானமே எல்லை
பாலச்சந்தர் இயக்கிய இந்தித் திரைப்படங்கள்[தொகு]
ஏக் தூஜே கே லியே - தெலுங்கில் மரோசரித்ரா
ஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு
ஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்
இவற்றில் முதலாவதைத் தவிர மற்றவை இரண்டும் பெரும் தோல்வியைத் தழுவின.

விருதுகள்
பத்மஸ்ரீ விருது, 1987
தாதாசாகெப் பால்கே விருது, 2010[3].
மறைவு
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாலசந்தர் திசம்பர் 23, 2014 அன்று காலமானார்.

தமிழ் திரையுலக இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்படும் கே. பாலச்சந்தர் அவர்கள், ஒரு புகழ் பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் ஆவார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.

பல துணிச்சலானக் கருத்துகளைத் தன்னுடைய படங்களில் மூலம் திரையில் தந்த அவரது திரைப்படங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணிர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அற்புத படைப்புகளாகப் போற்றப்படுகிறது.


தமிழ் திரையுலகில் தற்போது ஜாம்புவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்’ மற்றும் ‘ரஜினிகாந்த்’ எனப் பல நடிகர்களைத் திரையுலகிற்கு தந்தவர். செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு போன்றவை இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகளாகும்.

திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், ‘தேசிய விருது’, ‘மாநில விருது’, ‘அண்ணா விருது’, ‘கலைஞர் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ எனப் பல விருகதுளையும் வென்றுள்ளார்.

ஒரு மேடைநாடக கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்த் திரைப்படத்துறையில் அரைநூற்றாண்டுகளையும் கடந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும் இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

அவரைப்பற்றி...

‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் என அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள், 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பள்ளிப்படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘வினோத ஒப்பந்தம்’, போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.

திரைப்படத்துறையில் கே. பாலச்சந்தரின் பயணம் 
மேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1965 ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.

இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது.

இதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன. தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘கவிதாலயா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தாயாரித்து இருக்கிறார்.

பாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற படைப்புகள் 

‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்ரகாந்த்’, ‘இருகோடுகள்’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, ‘நான் அவனில்லை’, ‘புன்னை’, ‘எதிர் நீச்சல்’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘தில்லு முல்லு’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னிசாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதிமல்லி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘கல்கி’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய்’.

கே. பாலச்சந்தரின் சின்னத்திரை படைப்புகள் 

1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, தூர்தர்ஷனில் வெளிவந்த இவருடைய “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலும், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரைப் படைப்புகளாகும்.

விருதுகளும், மரியாதைகளும் 

1987 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.
2005-ல் சத்தியபாமா பல்கலைக்கழகத்திடமிருந்தும்,
2005-ல் அழகப்பா பல்கலைக்கழகத்திடமிருந்தும்,
2007-ல் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்தும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கப்பட்டது.

1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார். மேலும்,
2011-ல் ‘தாதாசாஹெப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.
1981 – “ஏக் துஜே கேலியே” என்ற இந்தித் திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர் விருது’.

1974-ல் ‘அவள் ஒரு தொடர் கதை’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1978-ல் ‘மரோ சரித்திரா’ (தெலுங்கு), 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1985-ல் ‘சிந்து பைரவி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1991-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. மேலும்,
 1995- ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

1968-ல் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘தாமரை நெஞ்சம்’, 1978-ல் ‘தப்பு தாளங்கள்’, 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1980-ல் ‘அக்னி சாட்சி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1992-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’, 1993-ல் ‘ஜாதி மல்லி ‘போன்ற திரைப்படங்களுக்காக ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.


மேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.


இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ‘சகலகலா வல்லவராக’ விளங்கிய கே. பாலசந்தர் அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவராவார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கித் திரைப்படத்துரையில் முத்திரைப் பதித்த கே. பாலசந்தர் அவர்கள், வருங்கால இயக்குனர்களுக்கு ஆசானாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

நினைவலைகள்...

1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநரானார்.

அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான்.

எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர்.

மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.

அவரைப்பற்றிய சுவையான தகவல்கள் 
* தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.

சகோதர இயக்குனர்களைப் பாராட்டுவதில் பாலச்சந்தர் தனியிடம் வகிக்கிறார். இயக்குனர் ஸ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவரது பாராட்டுப் பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

சிவாஜி கணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.

பாலச்சந்தர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர் இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை. பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.

துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இவை வெற்றிப்படங்களாக விளங்கிடினும், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம் இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது), பொய்க்கால் குதிரை ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஒரு இயக்குனர் என்ற முறையில், பாலச்சந்தரின் பிம்பம் மாறிவிட்டதும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலச்சந்தர் அனுபவித்தது உண்டு. நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.

அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநாதனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்), அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.

பல ஆண்டுகளூக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பலவற்றிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்பட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் முதலிய உச்ச நடிகர்க்ள இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.

நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். தெய்வத் தாய் என்னும் அத்திரைப்படம் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி.மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.

சிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுக்களும் பெற்றது.

கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும். ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.

பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெறினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். அண்மையில், ஜீவன் நடித்து செல்வா இயக்கத்தில் இதன் மறுவாக்கம் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.

பாலச்சந்தர் இயக்கிய   பிரபல திரைப்படங்கள்

நீர்க்குமிழி,   மேஜர் சந்திரகாந்த்

இரு கோடுகள்,   பூவா தலையா,

பாமா விஜயம், தாமரை நெஞ்சம்,

நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை,

புன்னகை,  மனதில் உறுதி வேண்டும்,

எதிர் நீச்சல், சிந்து பைரவி

அபூர்வ ராகங்கள்,   தண்ணீர் தண்ணீர்

அச்சமில்லை அச்சமில்லை

அக்னிசாட்சி,  வறுமையின் நிறம் சிகப்பு

புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை

ஜாதிமல்லி,   நூற்றுக்கு நூறு

கல்கி,   பார்த்தாலே பரவசம்,  பொய்

பாலச்சந்தர் இயக்கிய இந்தித் திரைப்படங்கள்

ஏக் துஜே கேலியே - தெலுங்கில் மரோசரித்ரா

ஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு

ஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்....

தமிழ்சினிமா போற்றிய ஒரு இயக்குனர் சிகரம் தற்போது சரிந்துவிட்டது... இவரது இழப்பு  தமிழ்சினிமாவில் ஈடுசெய்ய முடியாததுதான்.... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்.

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

தமிழ் சினிமாவின் பீஷ்மர், உறவுகளுக்கு, உணர்வுகளுக்கு புது வண்ணம் பூசிய பிதாமகன், செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.


·         தஞ்சைத் தரணியின் நன்னிலம்- நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜீலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில் தான் ஆரம்பம்!


·         சென்னை ஏ.ஜி.ஆபிஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். `மேஜர் சந்திரகாந்த்’ மிகப் பிரபலமான நாடகம். `எதிர்நீச்சல்’, `நாணல்’, `விநோத ஒப்பந்தம்’ போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!.


·         கமல், ரஜினி, சிரஞ்சிவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி!.


·         இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், `நீர்க்குமிழி’, `பொய்’ வரை பட்டியல் நீள்கிறது!.


·         ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.


·         தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!.


·         மனைவியின் பெயர் ராஜம், கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். மிகுந்த இடைவெளிவிட்டுப் பிறந்ததால் பிரசன்னா மட்டும் ரொம்பச் செல்லம்!.


·         பி.எஸ்சி, முடித்துவிட்டு முத்துபேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். `தென்றல் தாலாட்டிய காலம்’ என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்!.


·         தோட்டக் கலையில் ஆர்வம், யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்!.


·         ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்!.


·         எம்.ஜி.ஆரின் `தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியை வைத்து `எதிரொலி’ என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!.


·         மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். `அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் பெயரையும் சேர்த்தவர்!.


·         விநாயகர்தான் இஷ்ட தெய்வம், பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர் கூட `விநாயகா’!


·         பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து இவரை கல்லூரி வரை படிக்கவைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதற்காக. திரைத் துறையில் தான் பெரிய உயரக்கு வந்ததை  அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் இன்னுமும் இருக்கு டைரக்டருக்கு!.


·         1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்!


·         கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணி விடலாம்!.


·         தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். `ஏக் துஜே கேலியே’ மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய `தேரே மேரே பீச் மே’ இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!.


·         பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.


·         அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.


·         சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் `ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடிக்கிறார்!.


·         இன்னமும் சினிமாவின் உலகம் சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும் தான் விரும்புவார். உறவினர்களுக்கு ஒரு புன்னகை, கையசைப்பு அவ்வளவுதான்!.


·         படங்களில் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால். உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். `16 வயதினிலே’ பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறி விட்டார் பாரதிராஜா!.


·         ஷீட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்து விடுவார், இல்லாவிட்டால் ஆறு மணி. இவரின் சுறுசுறுப்பை இன்றைய இளைஞர்களிடம் கூட காண முடியாது!.


·         ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!.


·         தூர்தர்ஷனில் 1990 –ல் வெளிவந்த இவரது `ரயில் சிநேகம்’ இன்றளவும் பேசப்படும்  தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்!.
நன்றி -விக்கிபீடியா, கவிதை வீதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக