நடிகை சுகன்யா பிறந்த நாள் ஜூலை 8, 1969.
சுகன்யா (பிறப்பு: சூலை 8, 1969)
இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர்
தமிழ் , மலையாளம் , கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சுகன்யா தமிழ் , மலையாளம் , கன்னடம்,
தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவர் புது நெல்லு புது நாத்து , வால்டர் வெற்றிவேல்,
ராஜராஜன் திரைப்படங்கள் உட்பட மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
திருமண வாழ்க்கை
சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர்.
நடித்த திரைப்படங்கள்
தமிழ் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1991 புது நெல்லு புது நாத்து கிருஷ்ணவேணி அறிமுக திரைப்படம்
1991 எம். ஜி.ஆர் நகரில் சோபனா
1992 சின்ன கவுண்டர் தெய்வானை
1992 கோட்டை வாசல் வசந்தி
1992 திருமதி பழனிச்சாமி அம்சவேணி
1992 தம்பி பொண்டாட்டி சுமதி
1992 செந்தமிழ் பாட்டு துர்கா
1992 இளவரசன் பூங்கோதை
1992 சோலையம்மா சோலையம்மா
1993 சின்ன மாப்ளே ஜானகி
1993 வால்டர் வெற்றிவேல் சுமதி
1993 உடன் பிறப்பு பவானி
1993 அகத்தியன் ராசாத்தி
1993 சர்க்கரை தேவன் சரசு
1993 கருப்பு வெள்ளை சுவர்ணா
1993 தாலாட்டு ரேவதி
1993 சின்ன ஜமீன்
1994 கேப்டன் உமா
1994 சீமான் பாக்கியம்
1994 ஹீரோ சீதா
1994 வண்டிச்சோலை சின்ராசு பார்வதி
1994 மகாநதி யமுனா
1994 ராஜ பாண்டி புவனா
1995 மிஸ்டர் மெட்ராஸ் மீரா
1996 மகாபிரபு மகாலட்சுமி
1996 இந்தியன் அமிர்த வள்ளி
1996 புதிய பராசக்தி பராசக்தி
1996 பரிவட்டம்
1996 சேனாதிபதி மீனாட்சி
1996 ஞானப்பழம் ஆர்த்தி
1997 ஆஹா கீதா
1997 கோபுர தீபம் மீனா
1997 தம்பி துரை
2000 குட்லக் தேவி
2001 கிருஷ்ணா கிருஷ்ணா பாமா
2001 ஸ்ரீ பண்ணாரி அம்மன் சிறப்புத் தோற்றம்
2004 அடிதடி
2006 சில்லுனு ஒரு காதல் நிர்மலா
2007 தொட்டால் பூ மலரும் பெரிய நாயகி
2008 ஆயுதம் செய்வோம் லீலாவதி
2008 எல்லாம் அவன் செயல்
2009 அழகர் மலை
2013 சந்திரா
2014 என்னமோ நடக்குது காயத்ரி
தொலைக்காட்சித் தொடர்கள்
சுவாமி ஐயப்பன் (ஏசியாநெட்)
ஆனந்தம் (சன் தொலைக்காட்சி ) - சாந்தி
ஜன்னல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக