பாடகி அனுராதா ஸ்ரீராம் பிறந்த நாள் ஜூலை :9 , 1970.
அனுராதா ஸ்ரீராம் (பிறப்பு: 9 ஜூலை 1970), தமிழகத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும்
கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 90-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு ,
மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தித்
திரைப்படங்களில் பாடியுள்ளார்.மீனாட்சி சுந்தரம் -ரேணுகா தேவி தம்பதியின் மகளாகப் பிறந்தார் அனுராதா ஸ்ரீராம். அம்மா பின்னணிப் பாடகியாக இருந்தவர். ‘கந்தன் கருணை’யில் ‘ஆறுமுகமான பொருள்...’ பாடலில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து ஒலிக்கும் குரல் அவருடையதுதான். 6 வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார் அனுராதா. ‘காளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் இவர். 12 வயது வரை இந்தியாவின் பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் கச்சேரி செய்தார். தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன், டி. பிருந்தா, பண்டிட் மணிக்பா தாகூர்தாஸ் ஆகியோரிடம் சங்கீதம் கற்றவர் இவர். நியூயார்க்கில் பேராசிரியர் ஷிர்லி மீயரிடம் ஓபெரா இசையைக் கற்றார்.சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பின்போது தங்கப்பதக்கம் வாங்கியவர்.
திரைப்படத்துறை
அனுராதா ஸ்ரீராம் தமிழ் திரைப்படத்துறையின் வாயிலாக அறிமுகமானார். இவர் 1995-ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த " மலரோடு மலர் இங்கு " என்ற பாம்பே திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இவர்
இந்திரா திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை என்ற பாடலை முதன்முதலில் தனித்துப்பாடினார். அதன்பிற்கு மின்சார கனவு திரைப்படத்தில் அன்பென்ற மழையிலே பாடல், ஜீன்ஸ் திரைப்படத்தில்
அன்பே அன்பே பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.தேவா இசையில் ‘வாலி’ படத்தில் இவர் பாடிய ‘நிலவைக் கொண்டு வா...’ பாடல் மெல்லிசையும் துள்ளலும் கைகோர்த்த இசைக்குரல் வடிவமாக அமைந்தது. ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் பாடிய ‘கறுப்பு தான் எனக்குப்பிடிச்ச கலரு...’ பாடல், கறுப்பாக இருப்பதை தாழ்வு மனப்பான்மையோடு உணரும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பாராட்டையும் நன்றியையும் அனுராதாவுக்கு வாங்கிக் கொடுத்தது. ‘குஷி’ படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடிய ‘ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாத்தேன்...’, இளையராஜா இசையில் ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் ஜேசுதாசுடன் பாடிய ‘ஒருநாள் ஒரு கனவு...’, ‘ஹரிஹரனுடன் பாடிய ‘ரோஜா பூந்தோட்டம்...’, ‘சொக்கத்தங்கம்’ படத்தில் ‘என்ன நெனச்சே நீ என்ன நெனச்சே...’, ‘கில்லி’யில் ‘அப்படிப்போடு போடு...’, தினா இசையில் ‘திருப்பாச்சி’ படத்தில் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பாடிய ‘அப்பன் பண்ணுன தப்புல...’, இமான் இசையில் ‘கிரி’ படத்தில் ‘டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா...’, பரத்வாஜ் இசையில் ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு ஓ போடு...’, ‘ஆதி’ படத்தில் ‘ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு...’,
பெற்ற விருதுகள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
சிறந்த பின்னணிப் பாடகி – ஜெமினி
கர்நாடக அரசு திரைப்பட விருதுகள்
சிறந்த பின்னணிப் பாடகி – "Omkara Nadamaya"- Hrudayangali
சிறந்த பின்னணிப் பாடகி – "raja raja kanasina raja"- preethsod tappa மேலும் இரண்டு தெலுங்கு பட விருதுகள் பெற்றார்
பாடியுள்ள பாடல்கள்
அனுராதா திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். [2] இவர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 4000 பாடல்கள் பாடியுள்ளார்.
1995-ம் ஆண்டு முதல் பாடிவருகிறார் பாடிய பாடல்களின் பட்டியல்.
ஆண்டு பாடல் திரைப்படம் மொழி இசையமைப்பாளர்
2012 "சுந்தர புருசா" முரட்டு காளை தமிழ் ஸ்ரீகாந்த் தேவா
"நீ ரொம்ப ரொம்ப" உயிரோடு தமிழ் தாமஸ் ரத்னம்
2011 "மேலே மேலே" மகாரமஞ்சு மலையாளம் ரமேஷ நாராயன்
"ஒரே கின்னா" செவன்ஸ் மலையாளம் பிஜிபால்
2010 "ஏம்பில்லோ ஆப்பிள் ஓ" ரகடா தெலுங்கு தமன்
"நுடிசாலே" கிச்சா ஹச்சா கன்னடம் எஸ். நாராயன்
"கண்ணாலா சில்லாகா" வில்லன் தெலுங்கு ஏ. ஆர். ரகுமான்
"காட்டு சிறுக்கி" இராவணன் தமிழ் ஏ. ஆர். ரகுமான்
"ரஞ்சா ரஞ்சா" இராவன் இந்தி ஏ. ஆர். ரகுமான்
2009 "ஜுல்பனே கோல்" டூ நாட் டிஸ்டர்ப் இந்தி
"சம்பா" டேடி கூல் மலையாளம் பிஜிபால்
"அம்பரை" தொப்புள் கொடி தமிழ் தாமஸ் ரத்னம்
"சித்தன்ன வாசலில்" ராகவன் தமிழ் கங்கை அமரன்
2008 "மொழ மொழன்னு" குருவி தமிழ் வித்யாசாகர்
"ஆகா பிதுரு பொம்பெகே" காலிப்பட்டா கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"நம்ம ஊரு நல்லாருக்கு" சேவல் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்
2007 "புலரி பொன்" பிளாஷ் மலையாளம் கோபி சங்கர்
"பாண்டிச்சேரி சரக்கு" மணிகண்டா தமிழ் தேவா
"இஞ்சி இஞ்சி" மணிகண்டா தமிழ் தேவா
"மாமா மாமா மாமா" மணிகண்டா தமிழ் தேவா
2006 "மஸ்தி மாரோ" பங்காரம் தெலுங்கு வித்தியாசாகர்
"ஒல்லி ஒல்லி இடுப்பே" ஆதி தமிழ் தீனா
"கொடே கொடே கொபரிமித்தாய்" சுந்தரகாளி கன்னடம் சாது கோகிலா
"வஸ்தாவா" விக்ரமகுடு தெலுங்கு கீரவாணி
2005 "தை மாசம்" மஜா தமிழ் வித்யாசாகர்
"தேரி குர்தி செக்சி" வாடா இந்தி ஹிமேஷ் ரேஷாமியா
"ஓ பிரியசகி" பிரியசகி தமிழ் பாரத்துவாசர்
"நீ பேரு" பிப்ரவரி 14 தமிழ் பாரத்துவாசர்
"சஞ்சே சூரியனே" 7'ஒ குளொக் கன்னடம் எம். எஸ். மதுக்கார்
"கொய்யாங்கோ" இதயத் திருடன் தமிழ் பாரத்துவாசர்
"தச்சுக்கோ தச்சுக்கோ" பொன்னியின் செல்வன் தமிழ் வித்யாசாகர்
"அப்பன் பண்ண தப்பில" திருப்பாச்சி தமிழ் தீனா
"உயிரே என் உயிரே" தொட்டி ஜெயா தமிழ் ஹாரிஸ் ஜெயராஜ்
2004 "ஏ சங்டில் சனாம்" தும் – எ டேஞ்சரஸ் ஒப்செசன் இந்தி அனு மாலிக்
"ஜின் மின் ஜினி" மக்பூல் இந்தி விசால் பரத்வாஜ்
"அப்படிப் போடு" கில்லி தமிழ் வித்யாசாகர்
2003 "சம்டே ஓ சம்டே" தும் இந்தி Sandeep Chowta
"பங்ரா பா லீ" தலாஷ் - த ஹண்ட் பிகின்ஸ் இந்தி Sanjeev Darshan
"ஒக்க மகடு" சீத்தையா தெலுங்கு கீரவாணி
"சிலி செடுகுடு" ஜெமினி தெலுங்கு ஆர். பி. பட்நாயக்
2002 "ஓ போடு" ஜெமினி தமிழ் பாரத்துவாசர்
"டொல்லு டொல்லு" மழமேக பிரவுகள் மலையாளம் சிறீ ராம்
"வாளெடுத்தால்" மீச மாதவன் மலையாளம் வித்யாசாகர்
"கான் கே நீச்சே" சோர் மச்சாயே சோர் இந்தி அனு மாலிக்
"சத் கயி சத் கயி" சோர் மச்சாயே சோர் இந்தி அனு மாலிக்
"தும் டாடா ஹோ யா பிர்லா" சோர் மச்சாயே சோர் இந்தி அனு மாலிக்
"Dupatta" Jeena Sirf Merre Liye இந்தி Nadeem-Shravan
"Chori Chori" Om Jai Jagadish இந்தி அனு மாலிக்
"Mujhe Rab Se Pyaar" Ab Ke Baras இந்தி அனு மாலிக்
"Aakashame Akaramaai" Sri Manjunatha தெலுங்கு, கன்னடம் ஹம்சலேகா
2001 "ஹரி கோரி" மஜ்னு தமிழ் ஹாரிஸ் ஜெயராஜ்
"கள்ளி அடி கள்ளி" நந்தா தமிழ் யுவன் சங்கர் ராஜா
"ஆயியே ஆஜாயியே" லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்) இந்தி அனு மாலிக்
"Chunari Chunari" Monsoon Wedding Multilingual அனு மாலிக்
"Once Upon A Time In India" லகான் இந்தி ஏ. ஆர். ரகுமான்
"Band Kamre Mein" Kuch Khatti Kuch Meethi இந்தி அனு மாலிக்
"மலை மலை" சாக்லெட் தமிழ் தேவா
"ஒரு பொண்ணு ஒன்னு" குஷி தமிழ் தேவா
"துப்பட்டா" Mujhe Kuch Kehna Hai இந்தி அனு மாலிக்
"Satrangi" Deewaanapan இந்தி Aadesh Shrivastav
மாங்கல்ய காலம் வக்காலத்து நாரயாணகுட்டி மலையாளம் மோகன் சித்தாரா
"ராஜா ராஜா" ப்ரீத்சாட் தாப்பா கன்னடம் ஹம்சலேகா
"பங்காரடிந்தா" ப்ரீத்சாட் தாப்பா" கன்னடம் ஹம்சலேகா
"சோனே சோனே" ப்ரீத்சாட் தாப்பா கன்னடம் ஹம்சலேகா
2000 "Ammammalu Taatayyalu" நுவ்வே காவாலி தெலுங்கு Koti
"பூ விரிஞ்சாச்சு" முகவரி தமிழ் தேவா
"எத்தனை மணிக்கு" கரிசக்காட்டு பூவே தமிழ் இளையராஜா
"ரோஜா பூந்தோட்டம்" கண்ணுக்குள் நிலவு தமிழ் இளையராஜா
"பிரேம் ஜால்" Jis Desh Mein Ganga Rehta Hain இந்தி ஆனந்த்ராஜ் ஆனந்த்
1999 "Devudu Karunisthadani" பிரேம கதா தெலுங்கு Sandeep Chowta
"Pacific Lo" கலிசுந்தம் ரா தெலுங்கு எஸ். ஏ. ராஜ்குமார்
"இசாக் பினா கியா" தால் (திரைப்படம்) இந்தி ஏ. ஆர். ரகுமான்
"காதல் இல்லாமல்" தாளம் (இசை) தமிழ் ஏ. ஆர். ரகுமான்
"Chunari Chunari" Biwi No.1 இந்தி அனு மாலிக்
"நீ எந்தன் வானம்" மோனிசா என் மோனோலிசா தமிழ் டி. ராஜேந்தர்
"வானில் காயுதே வெண்ணிலா" வாலி தமிழ் தேவா
"நிலவை கொண்டுவா" வாலி தமிழ் தேவா
1998 "சின்னச் சின்ன கிளியே" கண்ணெதிரே தோன்றினாள் தமிழ் தேவா
"தில் சே ரே" தில் சே இந்தி ஏ. ஆர். ரகுமான்
"சந்தோச கண்ணீரே" தில் சே தமிழ் ஏ. ஆர். ரகுமான்
"அன்பே அன்பே கொல்லாதே" ஜீன்ஸ் தமிழ் ஏ. ஆர். ரகுமான்
"இஷ்வர் அல்லா" 1947 எர்த் இந்தி ஏ. ஆர். ரகுமான்
"Kushalave Kshemave" யாரு நீனு செலுவே கன்னடம் ஹம்சலேகா
"டயானா டயானா" யாரு நீனு செலுவே கன்னடம் ஹம்சலேகா
"Ek Tarf Hai" Gharwali Baharwali இந்தி அனு மாலிக்
"Jo Tum Kaho" Chhota Chetan இந்தி அனு மாலிக்
1997 "Pehli Pehli Baar" Zor இந்தி Agosh
"அன்பென்ற மழையிலே" மின்சார கனவு தமிழ் ஏ. ஆர். ரகுமான்
"மாரோ மாரோ சுஸ்வாகதம் தெலுங்கு எஸ். ஏ. ராஜ்குமார்
"Pelli Kala" Preminchunkondam Raa தெலுங்கு மகேஷ்
1996 "நலம் நலமறிய ஆவல்" காதல் கோட்டை தமிழ் தேவா
"உன் உதட்டோர" பாஞ்சாலங்குறிச்சி தமிழ் தேவா
"வந்தேயல்லோ" பாஞ்சாலங்குறிச்சி தமிழ் தேவா
1995 "இனி அச்சம் அச்சம் இல்லை" இந்திரா தமிழ் ஏ. ஆர். ரகுமான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக