திங்கள், 5 ஜூன், 2017

பழம்பெரும் நடிகர் சாமிக்கண்ணு காலமானார் ஜூன் 04,2017


பழம்பெரும் நடிகர் சாமிக்கண்ணு காலமானார் ஜூன் 04,2017.

பழம்பெரும் குணசித்ர நடிகரும், காமெடி நடிகருமான சாமிக்கண்ணு நேற்று காலமானார். அவருக்கு வயது 95. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சாமிக்கண்ணு முதுமை காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் நேற்று அவர் காலமானார். அவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், தயானந்தன், விவேகானந்தன் என்ற 2 மகன்களும், ராஜராஜேஸ்வரி, அம்பிகா என்ற 2 மகள்களும் உள்ளனர். இன்று மாலை அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது.சாமிக்கண்ணு தனது 8 வயது முதல் நாடகங்களில் நடித்து வந்தார். 1954ம் ஆண்டு புதுயுகம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சகலகலா வல்லவன், வண்டிச் சக்கரம், உதிரிபூக்கள், என் ராசாவின் மனசிலே, ஜானி உள்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக