வியாழன், 29 ஜூன், 2017

நடிகர் அர்விந்த்சாமி பிறந்த நாள் 30 ஜூன் 1967.



நடிகர் அர்விந்த்சாமி பிறந்த நாள் 30 ஜூன் 1967.

அர்விந்த்சாமி (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய் , மின்சார கனவு , இந்திரா , தேவராகம் ,
அலைபாயுதே என்பன அவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் சில.
இளமை வாழ்வு
அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று
தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
திரைப்பட வாழ்வு
அவரது திரைப்பட அறிமுகம்
மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
தனி வாழ்வு
அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் எம் பி ஏ பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.
அர்விந்த்சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். [2]
திரைப்படங்கள்
ஆண்டு பெயர் வேடம்
1991 தளபதி அர்ஜூன்
1992 ரோஜா ரிசிக்குமார்
1993 மறுபடியும் கெளரி சங்கர்
1993 டாடி
1993 பாசமலர்கள்
1995 பம்பாய் சேகர்
1995 மௌனம்
1995 இந்திரா தியாகு
1996 தேவராகம் விஷ்னு
1997 சாத் ரங் கே சப்னே மஹிபல்
1997 மின்சார கனவு தாமஸ்
1997 புதையல் Koti
1999 என் சுவாசக் காற்றே அருண்
2000 அலைபாயுதே ஐஏஎஸ் அதிகாரியாக
2002
ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா
மோஹித் குமார்
2005 சாசனம் முத்தையா
2012 கடல் பாதர்
2015 தனி ஒருவன்
பழநி (சித்தார்த் அபிமன்யு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக