வியாழன், 15 ஜூன், 2017

இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர் நினைவு தினம் ஜூன் 15.



இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர்  நினைவு தினம் ஜூன் 15. 2016.

ஏ. சி. திருலோகச்சந்தர் ( A. C. Tirulokachandar , 11 சூன் 1930 - 15 சூன் 2016) தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி ,
தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம்
ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார்.
இயக்கிய திரைப்படங்கள் சில
இல. ஆண்டு திரைப்படம் மொழ
1 1987 அன்புள்ள அப்பா தமிழ்
2 1985 பாபு இந்தி
3 1985 தோ திலான் கி டாஸ்தான் இந்தி
4 1982 தெரி கசாம் இந்தி
5 1982 வசந்தத்தில் ஓர் நாள் தமிழ்
6 1981 லாரி டிரைவர் ராஜாகண்ணு தமிழ்
7 1980 விஸ்வரூபம் தமிழ்
8 1978 பைலட் பிரேம்நாத் தமிழ்
9 1978 வணக்கத்திற்குரிய காதலியே தமிழ்
10 1978 என்னைப்போல் ஒருவன் தமிழ்
11 1977 பெண் ஜென்மம் தமிழ்
12 1977 பத்ரகாளி தெலு
13 1976 பத்ரகாளி தமிழ்
14 1975 டாக்டர் சிவா தமிழ்
15 1975 அன்பே ஆருயிரே தமிழ்
16 1975 அவன்தான் மனிதன் தமிழ்
17 1974 தீர்க்கசுமங்கலி தமிழ்
18 1973 பாரத விலாஸ் தமிழ்
19 1972 அவள் தமிழ்
20 1972 தர்மம் எங்கே தமிழ்
21 1971 பாபு தமிழ்
22 1970 எங்க மாமா தமிழ்
23 1970 எங்கிருந்தோ வந்தாள் தமிழ்
24 1969 தெய்வமகன் தமிழ்
25 1969 திருடன் தமிழ்
26 1969 அன்பளிப்பு தமிழ்
27 1969 இரு மலர்கள் தமிழ்
28 1968 என் தம்பி தமிழ்
29 1968 ராமு தெலு
30 1967 அதே கண்கள் தமிழ்
31 1967 ஆவே கல்லு தெலு
32 1967 தங்கை தமிழ்
33 1966 அன்பே வா தமிழ்
34 1966 ராமு தமிழ்
35 1965 நாடி ஆடாஜன்மே தெலு
36 1965 காக்கும் கரங்கள் தமிழ்
37 1964 மெயின் பி லட்கி ஹூன் இந்தி
38 1963 நானும் ஒரு பெண் தமிழ்
39 1962 வீரத்திருமகன் தமிழ்
மறைவு
திருலோகச்சந்தர் 2016 சூன் 15 அன்று தனது 86-ஆவது அகவையில்
சென்னையில் காலமானார். இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக