எஸ். பி.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் ஜூன் 4 , 1946 , (S.P.B)
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4 , 1946 ,
நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம் ) புகழ்பெற்ற
இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார்.
எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு
தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது. [2] இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.
தொடக்கம்
1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார் .இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் ௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக
சாந்தி நிலையம் படத்தில் வரும்
இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த
அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய
ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.
சாதனைகள்
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான
தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும்
சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின்
கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா , பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
ஆரம்ப கால வாழ்க்கை
பாலசுப்பிரமணியம் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா இவருக்கு இளைய தங்கை ஆவார் சைலஜாவும் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.
டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.
ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல்
பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.
குடும்ப வாழ்க்கை
பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி,மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண் , சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.
திரையிசை வரலாறு (1960-1970)
எஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (15,திசம்பர், 1966), இத்திரைப்படத்தில்
ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக
ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த
சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர்
கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.அதற்குப்பிறகு எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் "இ கடலும் மறு கடலும்" பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார். இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன் ,
சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,
ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார். இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா , எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா , எஸ். பி. பி ,
எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.
1980-உலகளாவிய வெற்றி
௭ஸ். பி பாலசுப்பிரமணியம்-1985
எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர்
கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார். . இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.
எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழ் திரையிசையில் இளையராஜா , எஸ் பி பி,
எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.
1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு
சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில்
லதா மங்கேஷ்கர் உடன் எஸ் பி பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.
1990களில்
௭ஸ் பி பாலசுப்பிரமணியம்1990களில் இசையமைப்பாளர்களான தேவா,
வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார் , பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.
பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.
2000ஆம் ஆண்டிற்கு பிறகு
எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா , கார்த்திக் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் ,டி. இமான் , ஜி. வி. பிரகாஷ்குமார் , நிவாஸ் கே. பிரசன்னா போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.
எஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் "நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்" தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.
பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்.
பின்னணிக்குரல், இசையமைப்பு, நடிப்பு
எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன் , ரசினிகாந்த் ,
சல்மான் கான் , கே. பாக்யராஜ் , மோகன் , அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன் , அர்ஜுன் சர்சா, நாகேஷ் ,
கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் , தெலுங்கு , கன்னடம் , இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.
பெற்ற விருதுகள்
இந்திய தேசிய விருதுகள்
வருடம் திரைப்படம் பாடல்
1996 மின்சார கனவு தங்க தாமரை தம
1995
சங்கீத சகர கனயோகி பஞ்சக்சற கவை
உமண்டு க்ஹுமண்டு கன கர்
க
1988 ருத்ரவீன செப்பாழனி உண்டி த
1983 சாகர சங்கமம் வேதம் அனுவனுவுன த
1981 ஏக் தூஜே கே லியே
தேரே மேரே பீச் மேனி இந்
1979 சங்கராபரணம் ஓம் கார நதானு த
திரைப்பட பட்டியல்
நடித்த திரைப்படங்கள்
வருடம் திரைப்படங்கள் மொழி
1969 பெல்லண்டி நூரெல்ல பந்த தெலுங்கு
1972 முகமது பின் துக்ளக் தெலுங்கு
1980 பக்கிண்டி அம்மாயி தெலுங்கு பா
1982
பாலூன்டு சதுரங்க கன்னடம்
மல்லே பந்திரி தெலுங்கு ச ம
1983
பாரத் 2000 கன்னடம்
திருகு பான கன்னடம்
பா த நா
1987 மனதில் உறுதி வேண்டும் தமிழ் மர
1988
பிரேம தெலுங்கு வ ஆ
விவாஹ பூஜனம்பூ தெலுங்கு
கல்லு தெலுங்கு
1990
கேளடி கண்மணி தமிழ் ஏ.
பாலைவன ராகங்கள் தமிழ்
1991 சிகரம் தமிழ் த
1992
தியாகு தமிழ்
குணா தமிழ் க
பர்வதலு பானக்கலு தெலுங்கு பா
தலைவாசல் தமிழ் ச
பரதன் தமிழ் ரா
1993
திருடா திருடா தமிழ்
லட் நா ஐ
முதின மாவ கன்னடம் ரா
1994 காதலன் தமிழ் கத
1995 ராஜ ஹம்ச தெலுங்கு மர கு
பாட்டு பாடவா தமிழ் கி
1996
துரோகி தெலுங்கு
காதல் தேசம் தமிழ் தப
மைனா தெலுங்கு
பவித்ர பந்தம் தெலுங்கு வ தந்
அவ்வை சண்முகி தமிழ்
கண்டேன் சீதையை தமிழ் க
1997
தேவல்லு தெலுங்கு கட
பெல்லிவரமண்டி தெலுங்கு கத தந்
பிரேன தெலுங்கு
உல்லாசம் தமிழ் தங்
ரட்சகன் தமிழ் எல்
மின்சார கனவு தமிழ் தங்
பெரிய மனுஷன் தமிழ் மர
நந்தினி தமிழ்/தெலுங்கு
அ ரா
1998
சந்தர்ப கன்னடம்
உய்யாலா தெலுங்கு மர
பெல்லடி ஜுப்பிஸ்டா தெலுங்கு அ கு
மாங்கல்யம் தந்துநானேநா கன்னடம் ரவ தந்
ஜாலி தமிழ் ஆ
ஃவைப் ஆப் வி. வரபிரசாத் தெலுங்கு வி த
1999
ஆரோ பிரனம் தெலுங்கு கத தந்
தீர்க்க சுமங்கலி பவ தெலுங்கு
தச கு ந
மெக்கானிக் மாவய்யா தெலுங்கு வி
பாடுடா தீயாக தெலுங்கு கத தந்
பெத்த மனசுலு தெலுங்கு
மாயா
தமிழ்/தெலுங்கு/கன்னடம்
பா
2000
கோபிண்டி அல்லுடு தெலுங்கு பா தந்
மனசு பத்தனு கன்னி தெலுங்கு ரா
பிரியமானவளே தமிழ் வி வி
2001 சிரிச்சலு தெலுங்கு ரி
2002
இந்தரா தெலுங்கு அ
பதரெல்ல அம்மாயி தெலுங்கு
ஏப்ரல் மாதத்தில் தமிழ் அ
2003
மேஜிக் மேஜிக் 3D தமிழ் ஆ
ஃபூல்ஸ் தெலுங்கு
மகா ஏதபிதங்கி கன்னடம்
2006 மாயாபஜார் தெலுங்கு கட
ரூம்மேட்ஸ் தெலுங்கு அ
2007
என் உயிரினும் மேலான தமிழ் எ
கல்யோனதவச கன்னடம் ஒய் ரா
மல்லே பந்தரி தெலுங்கு
அஸ்ட்ரம் தெலுங்கு ரா
கெத்தரி கென்னன்னே கெரபெகு
கன்னடம் Dr. ரா
2010 நாணயம் தமிழ் சி
2011 சக்தி தெலுங்கு
2012 தேவஸ்தானம் தெலுங்கு
மிதுனம் தெலுங்கு அப்
2014
திருடன் போலீஸ் தமிழ் ப
சந்திரா கன்னடம்/தமிழ்
2015
மூணே மூணு வார்த்தை தமிழ்
மூடு முக்கலோ செப்பலண்டி
தெலுங்கு
இசையமைத்த திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் மொழி
1977 கன்னியா குமரி தெலுங்க
1978 சந்தர்ப கன்னடம்
1979
கேப்டன் கிருஷ்ணா தெலுங்க
ரா ரா கிருஷ்ணய்யா தெலுங்க
'தூர்ப்பு வெள்ள ரயிலு தெலுங்க
1980 ஹம் பஞ்ச் (பின்னணி இசை) ஹிந்தி
1981 ஒஹம்ம கத தெலுங்க
சங்கீதா தெலுங்க
1983
துடிக்கும் கரங்கள் தமிழ்
உருண்ட சங்கரண்டி தெலுங்க
1984
பர்யாமணி தெலுங்க
சீதாம்மா பெல்லி தெலுங்க
1985
பங்காரு சிலகா தெலுங்க
புல்லெட் தெலுங்க
தேவரல்லதனே கன்னடம்
தூங்கல்லோ தூரா தெலுங்க
ஜாக்கி தெலுங்க
கொங்குமுடி தெலுங்க
மயூரி தமிழ்
மயூரி தெலுங்க
முத்துலா மனவரலு தெலுங்க
1986
பெடெ கன்னடம்
மஹதீருடு தெலுங்க
நாச்சி மயூரி
(பின்னணி இசை) ஹிந்தி
பதமதி சந்திய ராகம் தெலுங்க
சௌபாக்கியலட்சுமி கன்னடம்
1987
கௌதமி தெலுங்க
லாயர் சுகாசினி தெலுங்க
பிரதீமா தெலுங்க
ராமு தெலுங்க
1988
சின்னூடு பெட்டூடு தெலுங்க
கல்லு தெலுங்க
நீக்கு நாக்கு பெல்லண்ட தெலுங்க
ஓ பார்ய கத தெலுங்க
பிரம்மயானம் தெலுங்க
ரமண சமண கன்னடம்
விவாஹ போஜனம்பூ தெலுங்க
1990 சித்தார்த்தா தெலுங்க
1991
மகாயானம் தெலுங்க
சிகரம் தமிழ்
தையல்காரன் தமிழ்
ஜெய்தர யாத்ரா தெலுங்க
1992
பெல்லியப்பா பனகாரப்பா கன்னடம்
கிஸீர சஹார கன்னடம்
ஊர்பஞ்சாயத்து தமிழ்
போங்கடா நீங்களும் உங்க அரசியலும் தமிழ்
1993 முதின மாவ கன்னடம்
2003 உன்னை சரணடைந்தேன் தமிழ்
பின்னணிக்குரல் தந்த திரைப்படங்கள்
(இதுவொரு முழுமையான பட்டியல் அல்ல)
வருடம் திரைப்படம் மொழி ந
1983 ஆனந்த பைரவி தெலுங்கு க
1988 சத்யா தமிழ் க
1991 ஆதித்யா 369 தெலுங்கு த
1997 அன்னமய்யா தெலுங்கு ச
1997 அன்னமாச்சாரியா தமிழ்
2005 அத்தடு தெலுங்கு ந
2008 சிலம்டாக் மில்லியனர் தமிழ் அ
2012 ஸ்ரீ ராம ராஜ்ஜியம் தமிழ் ந ப
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
பெயர் மொழி குறிப்புகள்
நதி எங்கே போகிறது தமிழ் நெடுந்தொடர்
சன்னல் தமிழ் நெடுந்தொடர்
வானம்பாடி தமிழ் இசை நிகழ்ச்சி
பாடுதே தீயாக தெலுங்கு இசை நிகழ்ச்சி
பாடலானி உந்தி தெலுங்கு இசை நிகழ்ச்சி
என்டரு மஹனுபவலு தெலுங்கு நெடுந்தொடர்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்
தமிழ் இசை நிகழ்ச்சி
இதே தம்பி ஹாடுவேனு கன்னடம் இசை நிகழ்ச்சி
இசைவானில் இளையநிலா, ஏர்டல் சூப்பர் சிங்கர்
தமிழ்
இசை நிகழ்ச்சி, சிறப்பு நடுவர்..
SPB பற்றி சுவையான சிறு குறிப்புகள்
பாட்டுடைத் தலைவன், களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி.யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று பல்லவிகளும் சரணங்களும் வாழ்வான எஸ்.பி.பி-யின் பெர்சனல் பக்கங்கள்...
· பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்!
· முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம் ’
படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி ’ தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது `அடிமைப் பெண் ’ படப் பாடலான
`ஆயிரம் நிலவே வா ’!
· பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி ’, `காதலன்’ இரண்டு, இன்றும் நினைவில் நிற்பவை!
· எஸ்.பி.பி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள்.
`சங்கராபரணம் ’,` ரூத்ர வீணா ’, `ஏக் துஜே கேலியே ’, `மின்சாரக் கனவு ’ என இவர் பாடியதெல்லாம் ஒலி பரப்பாகாத நாளே இல்லை!
· ``ஏக் துஜே கேலியே ’’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இதுதான் எல்லாப் பாடகர்களையும்விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு!
· இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள் இருவரும் `வாடா, போடா’ எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்!
· சுத்தமான சைவ உணவுப் பழக்கம், இவ்வளவு பெரிய ஆகிருதிகொண்ட இவர் சாப்பிட எடுத்துக்கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள். தயிர் சாதம்... இஷ்ட உணவு!
· இதுவரை 42,000 பாடங்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்!
· எஸ்.பி.பி. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்!
· மூச்சுவிடாமல், `கேளடி கண்மனி ’ யில்
`மண்ணில் இந்தக் காதல் ’ `அமர்க்களம் ’ பட
`சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் ’ என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பிக் கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்!
· எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி ஜேசுதாஸ், முகமது ரஃபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார். டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்தப் பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்!
· எம்.ஜி.ஆரே விரும்பிக் கொடுத்த பாடல்
`ஆயிரம் நிலவே வா ’ அந்தப் பாடலுக்கு எஸ்.பி.பி.அழைக்கப்பட்டபோது, குளிர் காய்ச்சலில் இருந்தார். `ரெஸ்ட் எடு, நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர் பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய் மூணு நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு! ’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்!
· கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பி-யின் தணியாத தாகம், விரைவில் ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம்!
· பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும்,
`ராஜா... ராஜாதான் ’ என்கிற கட்சி!
· ’மழை ’ படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்துவைத்து. பாடி வெளியேறியது எல்லாம் 12 நிமிடகளில் முடிந்துவிட்டது!
· கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார்!
· `துடிக்கும் கரங்கள் ’ படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்!
· பிறந்த தினம் ஜீன் 4, 1946. இப்போது 65 வயதாகிறது. இன்றும் பிஸியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை!
· `முதல் மரியாதை ’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்!
· ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை.
`எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு ’ என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்!
· சினிமாவில் இருந்தாலும் சினிமாக்காரகள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லை. ஏனோ, இப்போதும் தனிமைதான் இவருக்கு விருப்பம். சினிமாவையும் வீட்டையும் தள்ளித் தள்ளியே வைத்திருக்க விரும்புவார்!
· எஸ்.பி.பி பிரமாதமாக வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறை வழி கசிவதை இன்றைக்கும் கேட்கலாம்!
· எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு!
· தெலுங்குப் படங்களில் நிறைய `ராப் ’
பாடல்கள் எழுதியவர். `கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு ’ என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!
· கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக