வெள்ளி, 6 ஜனவரி, 2017

நடிகை பி. சரோஜாதேவி பிறந்த தினம் ஜனவரி 07 .



நடிகை பி. சரோஜாதேவி  பிறந்த தினம் ஜனவரி 07 .

பி. சரோஜாதேவி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜா தேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார்; 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர்.

தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.

பெங்களூரைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி பைரப்பா, ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாகப் பிறந்த சரோஜா தேவி ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. கன்னடப் படத்தில், எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958).

இதன்பின் ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு' 1959 படத்தில் நடித்து, நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

அன்றைய கல்லூரி மாணவிகள், இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைப் பின்பற்றித் தங்களை சிங்காரித்துக்கொண்டார்கள். 1960–70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார். இவர் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் நடித்தார்.

நடித்துள்ள திரைப்படங்கள்
தமிழ்


    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)
    பார்த்திபன் கனவு (1960)
    இருவர் உள்ளம் (1963)
    அஞ்சல் பெட்டி 520
    அரச கட்டளை
    அன்பளிப்பு
    அன்பே வா
    ஆசை முகம்
    ஆதவன்
    ஆலயமணி
    இரும்புத்திரை
    எங்க வீட்டுப் பிள்ளை
    என் கடமை
    ஒன்ஸ்மோர்
    ஓடும் நதி
    கண்மலர்
    கல்யாண பரிசு
    கல்யாணியின் கணவன்
    கலங்கரை விளக்கம்
    குடும்பத்தலைவன்
    குலமகள் ராதை
    குலவிளக்கு
    கைராசி
    சபாஷ் மீனா
    சிநேகிதி
    செங்கோட்டை சிங்கம்
    தங்க மலர்
    தர்மம் தலைகாக்கும்
    தாய் சொல்லை தட்டாதே
    தாயைக்காத்த தனயன்
    தாலி பாக்கியம்
    திருடாதே
    தெய்வத்தாய்
    நாடோடி
    நாடோடி மன்னன்
    நான் ஆணையிட்டால்
    நீதிக்குப்பின் பாசம்
    படகோட்டி
    பணக்கார குடும்பம்
    பணத்தோட்டம்
    பணமா பாசமா
    பறக்கும் பாவை
    பனித்திரை
    பாகப்பிரிவினை
    பாசம்
    பார்த்தால் பசி தீரும்
    பாலும் பழமும்
    பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
    புதிய பறவை
    பெரிய இடத்துப் பெண்
    பெற்றால்தான் பிள்ளையா
    மாடப்புறா
    யானைப்பாகன்
    வளர் பிறை
    வாழ்க்கை வாழ்வதற்கே
    வாழவைத்த தெய்வம்
    விடிவெள்ளி

தேசிய விருதுகள்

    2008 வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருது
    1992 பத்மபூஷன், இந்திய அரசின் தேசிய விருது
    1969 பத்மஸ்ரீ இந்திய அரசின் தேசிய விருது

பிற விருதுகள்

    2009 ஆந்திர அரசின் என் டி ஆர் தேசியவிருது
    2009 கர்நாடக அரசின் ராஐகுமார் தேசியவிருது
    2009 நாட்டிய கலாதர் - தமிழ் சினிமா by Bharat Kalachar Chennai
    2007 என் டி ஆர் விருது for remarkable achievement by Karnataka Telugu Academy
    2007 ரோட்டரி சிவாஜி விருது by the Charitable Trust and Rotary Club of Chennai
    2006 பெங்களூர் பல்கலைக் கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம்
    2003 தினகரன் சாதனையாளர் விருது
    2001 ஆந்திர அரசின் என்டிஆர் தேசியவிருது 2001
    1997 எம்.ஜி.ஆர். விருது - தமிழக அரசு
    1997 சாதனையாளர் விருது - சினிமா எக்ஸ்பிரஸ் சென்னை
    1997 Filmfare award for All-round Achievement
    1989 கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது
    1980 அபினண்டன -காஞ்சனா மாலா விருது by Karnataka State
    1965 Honoured as a title "அபிநய சரஸ்வதி " - கர்நாடக அரசு
*******************************************************************************************************


‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில், தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘மகாகவி காளிதாஸ்’, ‘நாடோடி மன்னன்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பாலும் பழமும்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’ போன்ற படங்கள் இவரின் நடிப்பில் முத்திரைப் பதித்த திரைப்படங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ‘எம்.ஜி.ஆர்’, ‘சிவாஜி’ மற்றும் ‘ஜெமினிகணேசன்’ போன்ற ஜாம்பவான்களுடன், தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டமும், தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர் விருது’, ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டமும்’, 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் ‘தேசிய விருது’ என மேலும் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே கதாநாயகியாகத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, தென்னிந்திய ரசிகர்களால் ‘கன்னடத்து பைங்கிளி’ மற்றும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் போற்றப்பட்ட சரோஜாதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜனவரி 07, 1938

பிறப்பிடம்: பெங்களூர், கர்நாடகம் மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை  

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சரோஜாதேவி அவர்கள், 1938  ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா என்பவருக்கும், ருத்ரம்மாவிற்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை பெங்களூரில் ஒரு காவல்துறை துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சரோஜாதேவி அவர்கள், பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளிக்கூடத்தில் தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்பொழுது, பள்ளிகளுக்கிடையே நடந்த, ஒரு இசைப்போட்டியில் இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு கன்னடத் திரை உலகின் பிரபல நடிகரும், பட அதிபருமான ஹன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜாதேவி பாடலைக் கேட்ட அவர், ‘இந்தப் பெண் நன்றாக பாடுகிறாள், இவரை சினிமாவில் பின்னணிப் பாட வைக்கலாம்’ என நினைத்து, அவரை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று குரல் வளத்திற்கான சோதனை செய்தார். அப்பொழுது அவருக்கு, ‘சரோஜாதேவியை நடிகையாக்கினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றியது. அதனால், ஹன்னப்ப பாகவதர் தான் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக சரோஜாதேவியை சினிமாத் துறையில் முதன் முதலாக அறிமும் செய்தார். 1955 ஆம் ஆண்டு ஹன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளியிடப்பட்ட ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. குறுகிய காலத்திற்குள் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்பட்டார்.

தமிழ் திரைப்படத்துறையில் சரோஜாதேவியின் பயணம்
கன்னடத்தில் தாம் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாகப் புகழ்பெற்ற அவர், 1958 ஆம் ஆண்டு ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் சரோஜாதேவிக்கு ஒரு அங்கீகாரத்தைப் தேடித்தந்த படம், எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படமாகும். இதன் பின், 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம், தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுத்தந்தது. இதனைத் தொடர்ந்து, ‘வாழவைத்த தெய்வம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’,  ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘குல விளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள்

‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ (1958), ‘நாடோடி மன்னன்’ (1958), ‘சபாஷ் மீனா’ (1958), ‘தேடி வந்த செல்வம்’ (1958), ‘பாகப்பிரிவினை’ (1959), ‘கல்யாண பரிசு’ (1959), ‘வாழவைத்த தெய்வம்’ (1959), ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ (1960), ‘இரும்பு திரை’ (1960), ‘பார்த்திபன் கனவு’ (1960), ‘மணப்பந்தல்’ (1960), ‘பாலும் பழமும்’ (1961), ‘பனித்திரை’ (1961), ‘திருடாதே’ (1961), ‘குடும்பத்தலைவன்’ (1962), ‘பாசம்’ (1962), ‘ஆலயமணி’ (1962), ‘இருவர் உள்ளம்’ (1963), ‘பெரிய இடத்துப் பெண்’ (1963), ‘பணத் தோட்டம்’ (1963), ‘தர்மம் தலைக்காக்கும்’ (1963), ‘நீதிக்குப் பின் பாசம்’ (1963), ‘படகோட்டி’ (1964), ‘தெய்வத்தாய்’ (1964), ‘புதிய பறவை’ (1964), ‘என் கடமை’ (1964), ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965), ‘கலங்கரை விளக்கம்’ (1965), ‘நான் ஆணையிட்டால்’ (1966), ‘நாடோடி’ (1966), ‘பறக்கும் பாவை’ (1966), ‘அன்பே வா’ (1966), ‘குல விளக்கு’ (1969), ‘தேனும் பாலும்’ (1971), ‘தாய்மேல் ஆணை’ (1988), ‘தர்ம தேவன்’ (1989), ‘ஒன்ஸ் மோர்’ (1997), ‘ஆதவன்’ (2009), ‘இளங்கதிர் செல்வன்’ (2010).

தனிப்பட்ட வாழ்க்கை

‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீஹர்ஷா பி.ஈ பட்டம் பெற்ற ஒரு என்ஜினியர் ஆவார்.

விருதுகளும், மரியாதைகளும்

1965 – கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டம்.

1969 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.

1980 – கர்நாடக அரசால் ‘அபினண்டன் காஞ்சனா மாலா’ விருது.

1989 – கர்நாடக அரசின் ‘ராஜ்யோத்சவ’ விருது.

1992 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.

1997 – சென்னை சினிமா எக்ஸ்பிரஸ் மூலம் ‘சாதனையாளர் விருது’.

1997 – தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர்’ விருது.

2001 – ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய’ விருது.

2003 – ‘தினகரன் சாதனையாளர்’ விருது.

2006 – பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டம்’.

2007 – ரோட்டரி ‘சிவாஜி’ விருது.

2007 – ‘என்.டி.ஆர்’ விருது.

2008 – வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இந்திய அரசின் தேசிய விருது’.

2009 – நாட்டிய ‘கலாதர்’ விருது.

2009 – கர்நாடக அரசின் ‘ராஜகுமார்’ தேசிய விருது.

2010 – தமிழ்நாடு அரசின் ‘வாழ்நாள் சாதனையாளருக்கான’ விருது.

திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேல் முன்னணிக் கதாநாயகியாக விளங்கிய இவர், சினிமாவில் தன்னுடைய நடிப்பிற்கென தனி பாணியை உறவாக்கிக் கொண்டவர். ஆடை, அணிகலன்கள், சிகை அலங்காரம் என அனைத்திலும் புதுமையைப் புகுத்தியவர். நடை, உடை, பாவனையில் கூட பல அபிநயங்களை நடிப்பில் வெளிபடுத்தி ‘அபிநய சரஸ்வதி’ எனப் பெயர் பெற்றவர். குறிப்பாக சொல்லப்போனால், சரோஜாதேவி அவர்கள், சினிமா துறைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்!

***************************************************************************************************************

 சரோஜா தேவி  பிறந்த தினம்: ஜனவரி 7

தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி.

இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜாதேவி, பெங்களூரின் செயிண்ட் தெரசா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். எல்லாரும் கன்னடக் கீர்த்தனைகள், கன்னட சினிமா பாடல்கள் என்று பாட, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நமது ஹீரோயின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘ஏ ஜிந்தகி ஹே மேளே' என்ற இந்திப் படப் பாடலைப் பாடிக் கவர்ந்தார்.

நௌஷா இசையில் முகமது ரஃபி பாடிப் பிரபல்யம் அடைந்த அந்தத் தத்துவப் பாடலைத் தனது இனிமையான கீச்சுக் குரலில் இவர் பாடியது சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகரும் தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதருக்குப் பிடித்துவிட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் சரோஜாதேவியை அழைத்த ஹொன்னப்பர், “அப்பா அல்லது அம்மா யாரையாவது அழைத்துக்கொண்டு, என் ஸ்டூடியோவுக்கு வா. உன்னைப் பாடகி ஆக்குகிறேன்” என்றார்.

அம்மாவுடன் கிளம்பிப் போனார். வசதியான குடும்பத்துப் பெண் என்பதால் ஜொலிக்கும் உடை, அம்மா பார்த்துப் பார்த்துச் செய்த மேக்- அப் ஆகியவற்றுடன் வந்து நின்ற சரோஜா தேவியைப் பார்த்த பாகவதருக்கு ஷாக். பள்ளிச் சீருடையில் வந்து பாடிய அந்தச் சின்னப் பெண்ணா இப்படி ஜொலிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார்.

“நீ பாடுவது இருக்கட்டும், கதாநாயகியாக நடிக்கவே செய்யலாமே! நீங்கள் சரியென்றால் உங்கள் மகளை எனது படத்திலேயே கதாநாயகி ஆக்குகிறேன்” என்றார். ஆனால் சரோஜாதேவியின் அப்பா மறுத்துவிட்டார். அவரது அலுவலகத்துக்கே சென்று அவரைச் சந்தித்து, இது காளிதாஸனின் வாழ்க்கை வரலாறு; கவுரவமான வேடம் என்று எடுத்துக்கூறிச் சம்மதிக்க வைத்தார். இந்த ஒரு படத்தில் மட்டுமே என் மகள் நடிப்பாள் என்று கண்டிப்பாகக் கூறினார் பைரவப்பா.

இப்படித்தான் ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. அந்தப் படத்தில் “ பாரொ கிளியே.. மரளி மனகெ..” என்று சி. எஸ். சரோஜினி பாடிய சோகப் பாடலை வீணை வாசித்தபடியே பாடுவதாக அமைந்த சரோஜாதேவியின் அறிமுகக் காட்சியைக் கண்டு ரசிகர்கள் கண்ணீர்விட்டார்ககள்.

படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது. ஒரே படத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு இந்தப் படம் கொண்டுவந்த புகழ், வீட்டின் முன் ரசிகர் கூட்டத்தைக் கூட்டியது. ராசியான ஹீரோயின் என்ற சென்டிமென்டும் சேர்ந்துகொள்ளப் பாகவதர் தனது ‘ஆஷாடபூதி’, 'பஞ்ச ரத்தினம்' ஆகிய படங்களிலும் இவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

தமிழுக்கு வந்தார்

தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. இங்கே பானுமதி, சாவித்திரி, அஞ்சலிதேவி ஆகியோர் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார்கள். இந்த நேரத்தில் ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி.பி. பிள்ளையா இயக்கத்தில் ஜெமினி – அஞ்சலிதேவி நடிப்பில் 1958-ல் வெளியான இந்தப் படத்தில் சரளாதேவி என்ற நாட்டியப் பெண்மணியாகச் சின்ன வேடத்தில் நடித்து யார் இந்தப்பெண் என்று ரசிகர்களைக் கேட்க வைத்தார்.

பரிசாக அமைந்த படம்

அதன் பின்னர் இரண்டாவது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின. அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் முதல்பாதி முழுவதும் பானுமதி கதாநாயகியாகத் தோன்ற, இரண்டாவது பாதியை ‘ரத்னா’வாக வந்து அலங்கரித்தவர் சரோஜாதேவி. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.

எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் காதல் கனிரசம் சொட்டிய, கதையம்சத்தில் குறையாத படங்கள். காதல் காட்சிகளில் கிள்ளையின் குரலில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கிய அவரது நடிப்பைக் கண்ட தமிழகம் அவரை ‘கன்னடத்துப் பைங்கிளியாக’க் கொண்டாட ஆரம்பித்தது. தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.

எம்.ஜி.ஆருடன் ஆரம்பக் கவனம் கிடைத்தாலும் சரோஜாதேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி.

கல்லூரிக்குப் புறப்படும்போது, 'அம்மா போயிட்டு வர்றேன்' என்று, மாடியில் குடியிருக்கும் ஜெமினி கணேசனுக்கு கேட்க வேண்டும் என்று இருமுறை கத்தி சொல்லிவிட்டுப் போவார். குறும்பான இந்தக் காதல் காட்சி உட்படப் படம் முழுவதும் சரோஜாதேவியின் நடிப்பு காந்தமாகக் கல்லூரி மாணவ- மாணவியரைக் கவர்ந்து இழுத்தது.

சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.

அடிக்க மறுத்தார்

சிவாஜியுடன் நடித்த படங்களும் சாதனை வெற்றிகளாக அமையக் கல்யாணப் பரிசு வெளியான அதே 1959-ல் வெளியானது பாகப்பிரிவினை. எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக்கண்ணீருக்குப் பிறகு பெரும் திருப்பு முனையைக் கொடுத்த படம். வில்லனாக நடித்த எம்.ஆர். ராதாவை சரோஜாதேவி துடைப்பத்தால் அடிப்பது போன்ற காட்சி கதையில் முக்கியமானது. ஆனால் “அவரை நான் அடிக்க மாட்டேன்” என்று மறுத்து அழ ஆரம்பித்துவிட்டார் சரோஜாதேவி.

இது நடிப்புதானே என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் ராதா. அப்படியும் அவருக்குத் தைரியம் வரவில்லை..இனி வேலைக்கு ஆகாது என்று முடிவுசெய்த இயக்குநர் ராதாவையும் சரோஜாதேவியும் ஒரு அறையில் இருக்கவைத்து முதலில் அலறியபடி ராதாவை வெளியே ஓடிவரச்செய்து படம்பிடித்தார். பிறகு துடைப்பத்துடன் சரோஜாதேவியை ஆவேசமாக வெளியே ஓடிவரச் செய்து படமாக்கினார்.

கதையம்சம், பாத்திரப்படைப்பு இவற்றில் அபத்தங்கள் தென்பட்டாலும் அவற்றையும் மீறித் தன் நடிப்பில் ஒரு கண்ணியத்தை நேர்த்தியான நளினத்துடன் வெளிப்படுத்தியதில் இவருக்கு இணை இவரென்றே மாறினார். தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டிலும் புகழ்பெற்றார்.

மாயையைத் தகர்த்த மகத்தான நாயகி
படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜாதேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர் இன்றும் நடித்துக்கொண்டிருக்கும் கன்னடத்துப் பைங்கிளிதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக