திங்கள், 2 ஜனவரி, 2017

பாடகி சைந்தவி பிறந்த நாள் ஜனவரி 03


பாடகி சைந்தவி பிறந்த நாள் ஜனவரி 03 .
சைந்தவி (பிறப்பு 3 சனவரி 1990) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். அந்நியன் படத்தில் இடம்பெற்ற ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடல் மூலமாக ரசிகர்களின் நெஞ்சில் ரண்டக்க ரண்டக்க என தனது குரளால் தாளம் போட்டவர் பின்னணி பாடகி சைந்தவி. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு தமிழ்சினிமாவில் அறிமுகமானவர்.

தொடர்ந்து ‘இன்னிசை அளபெடையே’, ‘அடடா மழைடா’, ‘பிறைதேடும், ‘யாரோ இவன்’, ‘யார் இந்த சாலையோரம்’ என பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடிய சைந்தவி  தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார். இவருக்கும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாசுக்கும் திருமணம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக