திங்கள், 11 டிசம்பர், 2017

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் 12 , 1950


நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் 12 , 1950 

ரஜினிகாந்த்  என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12 , 1950 ), மராட்டியில் : रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு புகழ்பெற்ற தமிழ்த்
திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர்
ஜாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். [ சான்று தேவை] 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இளமை
ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று
இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

குடும்பம்

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா , செளந்தர்யா ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார்.தற்பொழுது இவர்களுக்கு இடையே விவாகரத்து ஆனது...
திரைப்படத்துறை
திரைப்படங்களில்
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே , காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர்
புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா , போக்கிரி ராசா , முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல
நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன் , மனிதன் ,
தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை , பாட்சா , படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த
பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த
சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது.
ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும்.
தமிழ் மொழியிலும், தெலுங்கு , இந்தி ,
கன்னடம் , மலையாளம் , வங்காள மொழி ,
ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
ரசிகர்களிடம் வரவேற்பு
ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு
தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு
ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
அரசியல் தொடர்பு
1990களில் ரஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த் எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரஜினிகாந்த் 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது,
எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறினார்
புத்தகங்கள்
ரஜினி சகாப்தமா? என்ற தலைப்பில் ரஜினியின் அரசியல் வாழ்க்கை குறித்து ஜெ. ராம்கி எழுதிய புத்தகம் 2005ல் வெளியானது
ரஜினியின் பஞ்ச் தந்திரம் என்ற தலைப்பில் இவரது படங்களில் உள்ள 30 முத்திரை வசனங்கள் மூலம் மேலாண்மை தத்துவங்களை எடுத்துக்கூறும் புத்தகம். இப்புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
பாட்சாவும் நானும் எனும் நூலில் ரஜினியை சந்தித்தது முதல் ரஜினியுடனான சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
ரஜினி இதில் அபூர்வராகங்கள் முதல் எந்திரன் வரையான ரஜினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பெற்றுள்ளன.

நடித்த திரைப்படங்கள்.

எண் திரைப்படத்தின் பெயர் மொழி
1 அபூர்வ ராகங்கள் தமிழ்
2 கதா சங்கமா கன்னடம்
3 அந்துலேனி கதா தெலுங்கு
4 மூன்று முடிச்சு தமிழ்
5 பாலு ஜீனு கன்னடம்
6 அவர்கள் தமிழ்
7 கவிக்குயில் தமிழ் த
8 ரகுபதி ராகவன் ராஜாராம் தமிழ்
9 சிலாக்கம்மா செப்பண்டி தெலுங்கு
10 புவனா ஒரு கேள்விக்குறி தமிழ்
11 ஒண்டு ப்ரேமடா கதே கன்னடம்
12 16 வயதினிலே தமிழ்
13 சகோதர சவால் கன்னடம் க
14 ஆடு புலி ஆட்டம் தமிழ்
15 காயத்ரி தமிழ்
16 குங்கும ரக்ஷே கன்னடம்
17 ஆறு புஷ்பங்கள் தமிழ்
18 தொலிரேயி காலிசண்டி தெலுங்கு
19 அம்மே கதா தெலுங்கு க
20 கலாட்டா சம்சாரா கன்னடம் சி
21 சங்கர் சலீம் சைமன் தமிழ்
22 கில்லாடு கிட்டு கன்னடம் க
23 அண்ணாடாமுல சவால் தெலுங்கு க
24 ஆயிரம் ஜென்மங்கள் தமிழ்
25 மாது தப்பட மகா கன்னடம் ப
26 மாங்குடி மைனர் தமிழ் வ
27 பைரவி தமிழ்
28 இளமை ஊஞ்சலாடுகிறது தமிழ்
29 சதுரங்கம் தமிழ்
30 வணக்கத்துக்குரிய காதலியே தமிழ் ஏ.
31 வயசு பிலிசிண்டி தெலுங்கு
32 முள்ளும் மலரும் தமிழ்
33 இறைவன் கொடுத்த வரம் தமிழ்
34 தப்பிடா தாலா கன்னடம்
35 தப்பு தாளங்கள் தமிழ்
36 அவள் அப்படித்தான் தமிழ்
37 தாய் மீது சத்தியம் தமிழ்
பாவத்தின் சம்பளம் தமிழ்
38 என் கேள்விக்கு என்ன பதில் தமிழ்
39 ஜஸ்டிஸ் கோபிநாத் தமிழ்
40 ப்ரியா தமிழ்
41 ப்ரியா கன்னடம்
42 குப்பத்து ராஜா தமிழ் ட
43 இத்தரு ஆசத்யுலே தெலுங்கு க
44 அலாவுதீனும் அற்புதவிளக்கும் மலையாளம்
45 நினைத்தாலே இனிக்கும் தமிழ்
தாயில்லாமல் நானில்லை தமிழ்
46 அந்தமைனா அனுபவம் தெலுங்கு
47 அலாவுதீனும் அற்புதவிளக்கும் தமிழ்
48 தர்ம யுத்தம் தமிழ்
49 நான் வாழவைப்பேன் தமிழ்
50 டைகர் தெலுங்கு
51 ஆறிலிருந்து அறுபது வரை தமிழ்
52 அன்னை ஓர் ஆலயம் தமிழ்
53 அம்மா எவரிகைனா அம்மா தெலுங்கு
54 பில்லா தமிழ் க
நட்சத்திரம் தமிழ்
55 ராம் ராபர்ட் ரஹிம் தெலுங்கு
56 அன்புக்கு நான் அடிமை தமிழ்
57 காளி தமிழ்
58 மயாதரி கிரிஷ்னுடு தெலுங்கு
59 நான் போட்ட சவால் தமிழ்
60 ஜானி தமிழ்
61 காளி தெலுங்கு
62 எல்லாம் உன் கைராசி தமிழ்
63 பொல்லாதவன் தமிழ்
64 முரட்டுக்காளை தமிழ்
65 தீ தமிழ் க
66 கழுகு தமிழ்
67 தில்லுமுல்லு தமிழ்
68 கர்ஜனை தமிழ் சி
69 கர்ஜனம் மலையாளம் சி
70 நெற்றிக்கண் தமிழ்
71 கர்ஜனே கன்னடம் சி
72 ராணுவ வீரன் தமிழ்
73 போக்கிரி ராஜா தமிழ்
74 தனிக்காட்டு ராஜா தமிழ் வ
75 ரங்கா தமிழ்
76 புதுக்கவிதை தமிழ்
நன்றி மீண்டும் வருக தமிழ்
77 எங்கேயோ கேட்ட குரல் தமிழ்
78 மூன்று முகம் தமிழ்
79 பாயும் புலி தமிழ்
உருவங்கள் மாறலாம் தமிழ்
80 துடிக்கும் கரங்கள் தமிழ்
81 அந்த கனூன் இந்தி
82 தாய் வீடு தமிழ்
83 சிவப்பு சூரியன் தமிழ்
84 ஜீத் கமாரி இந்தி
85 அடுத்த வாரிசு தமிழ்
86 தங்க மகன் தமிழ்
87 மெரி அடாலத் இந்தி
88 நான் மகான் அல்ல தமிழ்
89 தம்பிக்கு எந்த ஊரு தமிழ்
90 கை கொடுக்கும் கை தமிழ்
91 இதே நாசாவால் தெலுங்கு
92 அன்புள்ள ரஜினிகாந்த் தமிழ்
93 கங்க்வா இந்தி
94 நல்லவனுக்கு நல்லவன் தமிழ்
95 ஜான் ஜானி ஜனார்தன் இந்தி
ஞாயம் மீரே சேப்பலி தெலுங்கு ஜ
96 நான் சிவப்பு மனிதன் தமிழ் எ
97 மகாகுரு இந்தி எ
98 உன் கண்ணில் நீர் வழிந்தால் தமிழ் ப
99 வஃபாதார் இந்தி
100 ஸ்ரீ ராகவேந்திரா தமிழ்
101 பெவாஃபய் இந்தி
102 படிக்காதவன் தமிழ்
103 மிஸ்டர் பாரத் தமிழ்
104 நான் அடிமை இல்லை தமிழ்
105 ஜீவனா போராட்டம் தெலுங்கு
106 விடுதலை தமிழ்
107 பகவான் தாதா இந்தி
கோடை மழை தமிழ் ம
108 அஸ்லி நக்லி இந்தி
109 தோஷ்தி துஷ்மன் இந்தி
110 மாவீரன் தமிழ்
தகு ஹசின இந்தி
111 வேலைக்காரன் தமிழ்
112 இன்சப் கான் கரேகா இந்தி
113 ஊர்க்காவலன் தமிழ்
114 மனிதன் தமிழ்
மனதில் உறுதி வேண்டும் தமிழ்
115 உத்தர் டக்சன் இந்தி
116 தமச்சா இந்தி
117 குரு சிஷ்யன் தமிழ்
118 தர்மத்தின் தலைவன் தமிழ்
119 ப்ளட்ஸ்டோன் ஆங்கிலம்
120 கொடி பறக்குது தமிழ்
பிகாரி குன்டா இந்தி
121 ராஜாதி ராஜா தமிழ்
122 சிவா தமிழ்
123 ராஜா சின்ன ரோஜா தமிழ்
124 மாப்பிள்ளை தமிழ்
125 பரஷ்டச்சார் இந்தி
126 சால்பாஷ் இந்தி
127 பணக்காரன் தமிழ்
128 அதிசய பிறவி தமிழ்
129 தர்மதுரை தமிழ்
130 ஹம் இந்தி ம
131 ஃபரிஷ்டாய் இந்தி
132 கூன் கா கர்ஷ் இந்தி ம
133 ஃபூல் பனே அங்காரய் இந்தி
134 நாட்டுக்கு ஒரு நல்லவன் தமிழ்
135 தளபதி தமிழ்
136 மன்னன் தமிழ்
137 தியாகி இந்தி
138 அண்ணாமலை தமிழ் ச
139 பாண்டியன் தமிழ்
140 இன்சனியாத் கே தேவ்தா இந்தி
141 எஜமான் தமிழ் ஆ
142 உழைப்பாளி தமிழ்
143 வள்ளி தமிழ்
144 வீரா தமிழ் ச
145 பாட்ஷா தமிழ் ச
146 பெத்தராயுடு தெலுங்கு
147 அடாங் கி அடாங் இந்தி
148 முத்து தமிழ் க
149 பாக்ய தேபதா பெங்காலி
150 அருணாசலம் தமிழ்
151 படையப்பா தமிழ் க
152 புலாண்டி இந்தி
153 பாபா தமிழ் ச
154 சந்திரமுகி தமிழ்
155 சிவாஜி தமிழ்
156 குசேலன் தமிழ்
157 எந்திரன் தமிழ்
158 கோச்சடையான் தமிழ்
159 லிங்கா தமிழ் க
160 கபாலி தமிழ்
161 எந்திரன் 2 தமிழ் , இந்தி

விருதுகள்

இந்திய நடுவண் அரசின் விருதுகள்
பத்ம பூஷன் விருது, 2000
பத்ம விபூசன் விருது, 2016
தமிழக அரசின் விருதுகள்
1984 ஆம் ஆண்டு கலைமாமணி விருது
1989 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆர் விருது
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் ம
1978 முள்ளும் மலரும் காளி த
1982 மூன்று முகம்
அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்

1984 நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கம் த
1994 முத்து முத்து,
எஜமான் த
1999 படையப்பா ஆறுபடையப்பன் த
2005 சந்திரமுகி
டாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன்

2007 சிவாஜி சிவாஜி ஆறுமுகம் த
2010 எந்திரன் டாக்டர். வசீகரன்,
சிட்டி த
பிலிம்பேர் விருதுகள்
வருடம் படங்கள் வகை பல
1977 புவனா ஒரு கேள்விக்குறி
சிறந்த திரைப்படம் வெற்
1978 முள்ளும் மலரும்
சிறந்த திரைப்படம் வெற்
1979
ஆறிலிருந்து அறுபது வரை
சிறந்த திரைப்படம் வெற்
1982 எங்கேயோ கேட்ட குரல்
சிறந்த திரைப்படம் வெற்
1984 நல்லவனுக்கு நல்லவன்
சிறந்த நடிகர் வெற்
1985 ஸ்ரீ ராகவேந்திரா
சிறந்த திரைப்படம் வெற்
1991 தளபதி சிறந்த நடிகர் வெற்
1992 அண்ணாமலை சிறந்த நடிகர் வெற்
1993 வள்ளி சிறந்த கதாசிரியர் வெற்
1995 பாட்ஷா ,
முத்து
சிறந்த நடிகர்
ஆனந்த விகடன் விருது
2017 ஆம் ஆண்டு கபாலி பட நடிப்புக்காக 'சிறந்த நடிகர்' விருது.



ரஜினி 67 #HBDRajinikanth

- ரஜினிக்கு எப்போதும் பிடித்த உடை கறுப்பு. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது, " ரஜினி உனக்கு வொயிட் டிரெஸ் போட்டா நல்லா இருக்குமே" என்றார் இந்தி ஸ்டார் அமிதாப். அதில் இருந்து, வெள்ளை உடை அணிய ஆரம்பித்தார் ரஜினி.
- தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் போனில் பேசினால்கூட எழுந்து நின்று தான் பேசுவார் ரஜினிகாந்த்.
- எம்,.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னையில் சினிமாக்காரன் என்றால் வீடே வாடகைக்கு தர மாட்டார்கள். ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நம்பி நாடே கொடுத்து இருக்கிறார்கள் மக்கள் என பாராட்டிப் பேசினார்
- 'அவள் அப்படித்தான்' படத்தில் ருத்ரய்யா கொடுத்த சம்பளத்தை, ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தார். அந்தப் பணத்தில் ருத்ரய்யா வாங்கிய வீட்டின் மதிப்பு இன்று பல கோடி
- நடிகர் சங்கக் கடனை முழுமையாக அடைக்க, தானே ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. சங்கத்துக்குள் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த வாய்ப்பை இழந்துவிட்டது நடிகர் சங்கம்.

- தான் நடிக்கும் சினிமாக்களின் திரைக்கதைகளில் தலையிடமாட்டார் ரஜினி. அதே நேரம் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து, ஒரு சில காட்சிகள் தன்னுடைய முத்திரையை பதிப்பார்.
- அப்போதும் சரி, இப்போதும் சரி, தன்னை சந்திக்கும் வரை பிரபலங்களை வாசல் வரை வந்து வீட்டுக்குள் அழைத்துச் செல்வார். அதே போலவே திரும்பவும் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைக்கும் பழக்கம் கொண்டவர் ரஜினி
- வைகோ மதிமுக கட்சி ஆரம்பித்தபோது, தனக்கு ஆதரவு கேட்டு போயஸ் கார்டன் போனார். அப்போது, பெரியவர் கலைஞர் இருக்கும் போது, உங்களுக்கு ஆதரவு தர இயலாது என நாசூக்காக சொல்லிவிட்டார்.
- தனது நண்பர் ஹிமாலயஸ் என்ற புத்தகத்தை அவருக்கு கொடுத்தார். அது தான் ரஜினியை இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள வைத்ததாம்.
- ஸ்டைல் என்பது எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமான பிடித்தமான ஸ்டைலில் கலக்கியவர் ரஜினி தான்.
- கறுப்பு நிறம், கோரை முடி, சிறிய கண் என சினிமாவுக்கே சம்பந்தம் இல்லாத ஒட்டுமொத்த மைனஸ்களையும் ஒருங்கே பெற்று இருந்தாலும், அதை பிளஸ்ஸாக்கி சாதித்தவர் ரஜினி.


- 'பில்லா' படத்தில் ரஜினுக்கு நாயகியாக நடிக்க மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அழைத்தார்கள். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால், இவற்றை பற்றியெல்லாம் ஒருபோதும் ரஜினி வாய் திறந்து பேசியதில்லை.
- ரஜினி குறித்து எவ்வளவோ பாஸிட்டிவ்வான விஷயங்கள் இருக்கின்றன. சினிமாவில் போராடிய காலகட்டதில் எந்த கிசுகிசுக்களிலும் சிக்காத ஒரு ஹீரோக்களில் ரஜினியும் ஒருவர்.
- எம்ஜி ஆருக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை', எனக்கு 'பாட்ஷா' திரைப்படம் என தன் மெகா ஹிட் படமான 'பாட்ஷா' பற்றி சிலாகிப்பார் ரஜினி.
- பொதுவாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், ரஜினிக்கு பிறகு கமல் வந்தால், அவருக்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர் இருக்கையில் அமர்ந்த பின்னர் தான், இருக்கையில் அமர்வார் ரஜினி.
- ஃபோட்டொஜெனிக் ஃபேஸ், ரஜினியின் கம்பீரங்களில் ஒன்று.
- திருவிளையாடல் படத்தில், சிவாஜி நடந்த நடையை வீரநடை என்பார்கள்., சிவாஜிக்குப் பிறகு ரசிகர்களுக்கு பெரிதும் ஈர்த்தது, ரஜினியின் நடை தான்.
- சிவாஜியை பார்த்தபோது, புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், தன் ரசிகர்கள் யாரேனும், அவரை சந்திக்க வந்தால், புகைப்படம் எடுக்க மறுக்காமல், ஓகே சொல்வார் ரஜினி.
- வில்லன்+ ஹீரோ+ காமெடியன் என எல்லா கதாபாத்திரத்துக்கும் தேவையான முக அமைப்பைப் பெற்றவர் ரஜினி.
- அந்த காலத்தில் பி.எஸ். வீரப்பாவின் சிரிப்பு பிரசித்தி. அதன் பிறகு பல ஆண்டுகளாக ஹிட் எனில், அது ரஜினியின் சிரிப்பு தான்.
- தேசிய விருது வாங்கியவர் நடிகை ஷோபா. 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார் ஷோபா, அவரை சந்திக்கும் போதெல்லாம், தங்கை என்றே அழைப்பார் ரஜினி.
- பொதுவாக சபைகளில் நடிக்கத் தெரியாத ரஜினி, தன் மன உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தி விடுவார்.
- தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் உயரத்தில் அவரைக் கொண்டாடினாலும், இன்றுவரை பாதுகாவலரே இல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் ரஜினி.
- தன் பெயரைச் சொல்லி, யாரேனும் சிபாரிசு கேட்டது ரஜினிக்கு தெரிந்துவிட்டால், அவர்கள் உடனான நட்பை கட் செய்துவிடுவார் ரஜினி..
- ரஜினிக்கு நண்டுக்கறி, தலைக்கறி தான் நான் - வெஜ்ஜில் ஃபேவரைட். ஆனால், இப்போது முழுமையாக வெஜ் உணவுக்கு மாறிவிட்டார்.
- 'அவள் ஒரு தொடர்கதை' தெலுகு பதிப்பில், ஜெய்கணேஷ் வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார் ரஜினிகாந்த்.
- தன் படத்தில் நடிக்க புதிதாக ஒப்பந்தம் ஆகி இருக்கும் நடிகர்களுக்கு, தானே மொபைல் செய்து வாழ்த்து சொல்வது ரஜினி ஸ்டைல்
- கிராமிய வேஷமோ , ஐஷ்வர்யா ராய்க்கு ஜோடியோ எதுவென்றாலும், கேமரா முன், நிஜத்தில் ஜொலிப்பார் ரஜினி
- 1996-ம் ஆண்டு, தனக்கு கிடைத்த அரசியல் வாய்ப்பை வேண்டாம் என மறுத்து உதறித் தள்ளியவர் ரஜினி.
- திமுக, அதிமுக , கம்யூனிஸ்ட் என தமிழர்களுக்கு பல அடையாளம் உண்டு.,, நான் ரஜினி ரசிகன் என்ற அடையாளத்தை கொடுத்தவர் ரஜினி தான்
- தமிழக அரசியலில் இறங்கச் சொல்லி மறைந்த பத்திரிகையாளர் சோ அழைத்த போதும், நாசூக்காக மறுத்தவர் ரஜினி
-யார்க்கேனும் வாக்கு கொடுத்துவிட்டால், அதை எப்படியாவது நிறைவேற்றிவிடுவார் ரஜினி.
- தன்னைவிட வயது குறைவானவராக இருந்தாலும், அவர்களை மரியாதையாக அழைப்பதே ரஜினி ஸ்டைல்.
- இப்போது தன்னை, மனரீதியாக கண்டெக்டராக நினைத்து எளிமையாக வாழ்பவர் ரஜினி.
- சினிமா இல்லாத வெண் தாடியுடன் தான் ரஜினி இருப்பார். ஷூட்டிங் சமயங்களில் யோகா செய்து, தனது முகப்பொலிவை மீட்டெடுப்பார் ரஜினி.
- சினிமாவில் வளரும் போதும் அவருக்கு உதவியாக இருந்த பலர், இப்பொது சினிமாவில் இல்லை. ஆனாலும், அவர்களுக்கும் உரிய மரியாதை தருவதை ரஜினி நிறுத்தியதே இல்லை.
- 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானாலும், முதன்முதலாக முழு ஹீரோ ஆனது 'பைரவி' படம். பைரவியின் படைப்பாளி கலைஞானத்தை பார்க்கும்போதெல்லாம், எழுந்து நின்று மரியாதை செய்வார் ரஜினி.
- ஒருகாலத்தில் அருகில் இருந்து உதவி செய்த ஸ்ரீபிரியாவை, பெருந்தன்மையாக மரியாதைக்குரிய பெண்மணி என்றே தன் நெருங்கிய வட்டாராத்திடம் சொல்வார் ரஜினி.
- 'கபாலி' படத்தின் உணவு இடைவேளையின் போது மட்டுமே கேரவேன் செல்வார் ரஜினி.மற்ற நேரங்களில் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு நடித்தார்.
- தன் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் சிறப்பாக நடித்தால் , ஈகோ பார்க்காமல், ஷூட்டிங் ஸ்பாட்டிலே, கை தட்டி பாராட்டும் மனம் படைத்தவர் ரஜினி.
- எம்ஜிஆருக்கு வாலி பாடல் எழுதுவார், எனக்கு வைரமுத்து என சொல்லி வைரமுத்துவுக்கு எப்போதுமே ரஜினியிடம் தனி மரியாதை உண்டு
- தன்னை எதிரியாக பாவித்த, ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் இல்ல விஷேசங்களுக்குச் சென்று மனமார வாழ்த்தும் நல்ல மனசுக்காரர் ரஜினி.
- அதிமுக, திமுக இரண்டையும் தன்னுடைய நட்புக் கட்சியாக பாவித்துக் கொண்டவர் ரஜினி
- இசைஞானி இளையராஜாவை சந்தித்தால், சினிமா தவிர மணிக்கணக்கில் மற்ற விஷயங்களைத் தான் பேசுவார் ரஜினி
- தமிழகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர், "உங்களைப் பார்க்க வேண்டும்" என கூப்பிட்டால் , நானே வருகிறேன் என சொல்லி ஆச்சர்யப்படுத்துவது ரஜினி ஸ்டைல்
- விஜயின் 'திருப்பாச்சி' படத்தைப் பார்த்துவிட்டு, அவருக்கு ஆக்ஷன் + காமெடி இயல்பா வரும் என, சாமி பட விழாவில் மனதார பாராட்டினார் ரஜினி.
- தன்னைப்போலவே, பின்னணி எதுவும் இல்லாமல் முன்னணி நடிகராக வந்த அஜித் மீது, ரஜினிக்கு எப்போதும் தனி ப்ரியம் உண்டு. தன்னுடைய ஹிமாலயாஸ் புத்தகத்தை கையெழுத்து போட்டு, அஜித்துக்கு பரிசளித்தார் ரஜினி
- தன் வீட்டில் உள்ள காஸ்ட்லியான கார்களை விட, அந்தக்காலத்து அம்பாஸிடர் காரை எடுத்து இரவில் சுற்றுவதில் ரஜினிக்கு அலாதியான ப்ரியம்
- தமிழில் வெளிவந்த எத்தனையோ நாவல்களை படித்து ரசித்தாலும், ரஜினியின் ஃபேவரைட் வரலாற்று புதினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்
- எம்ஜிஆருக்குப் பிறகு, அரசியலில் இறங்கச் சொல்லி, ராம. வீரப்பன், திருநாவுக்கரசர், என்று எத்தனையோ நண்பர்கள் வற்புறுத்தியும், ஏனோ ரஜினி தவிர்த்துவிட்டார்
- தமிழ் சினிமாவில் ரஜினியை கே.பாலசந்தர் அறிமுகம் செய்தார் என்றாலும், பெரிய அளவில் தன்னை வளர்த்தவர் பஞ்சு அருணாசலம் தான் என்பதால் அவர் மீது ரஜினிக்கு அலாதி ப்ரியம்
- தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ நடிகர்கள், முன்னணியில் இருந்தாலும், சினிமா மார்க்கெட் லெவலில் ரஜினி என்ற நடிகனுக்கு போட்டி ரஜினியைத் தவிர வேறு ஒருவனும் போட்டி இல்லை
- கடந்த 25 ஆண்டுகளாக இரவு நேர படப்பிடிப்புகளில் ரஜினி கலந்து கொண்டதில்லை, அதற்குப் பிறகு இப்போது தான் கபாலி, 2.0 என தொடர்ச்சியாக இரவு நேர படபிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.
- சினிமா படப்பிடிப்பு இல்லாத நாட்களில்,போயஸ் கார்டனில் ரஜினியை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரே நபர் தனுஷின் கடைக்குட்டி லிங்கா தான்.
- ரஜினி நடித்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில், ஸ்ரீவித்யா ரஜினிக்கு மனைவி, அதே நடிகை தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்து இருப்பார். இதே ஒற்றுமை, நடிகை சுஜாதாவுக்கும் உண்டு.
- ரஜினி கமலுக்கு கடும் போட்டி நிலவிய காலம் அது,. அப்போது 'புன்னகை மன்னன்' நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டு, கமல் ரசிகர்களிடம் கரவொலி வாங்கினார் ரஜினி.
. மறைந்த சான்றோ சின்னப்ப தேவர் மீது, ரஜினிக்கு மிகுந்த மரியாதை உண்டு . மூன்று பட அட்வான்ஸை ஒரே சமயத்தில் கொடுத்து ரஜினியை புக் செய்தவர்.
- ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், சினிமாவில் நண்பர்கள் கூட்டம் மொய்த்துவிடும்.ஆனால், இன்றுவரை ரஜினிக்கு நெருக்கம் ஆனவர்கள் எல்லாம், ரஜினியின் கஷ்டமான சூழ்நிலையில் உடன் இருந்தவர்களே
நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகரனான ரஜினி, 'தெய்வ மகன்' படத்தை 29 முறை பார்த்து இருக்கிறார்.
தமிழ், தெலுகு, இந்தி என பல மொழிகளில் நடித்தவர் ரஜினி. பிளட் ஸ்டோன் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் ரஜினி
- தனது நிஜமான உடல் தோற்றம், சினிமா தோற்றம், இரண்டையும் தெளிவாக உணர்ந்து, இயல்பாக இருப்பது ரஜினியின் சிறப்பு
- அம்மாவின் பாசம் கிடைக்காத ரஜினி, அந்த உணர்வை, மனைவி லதா, மகள்களிடம் பெற்று வந்தார்.
- சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை பெறுவதைவிட, அதை தக்கவைத்துக்கொள்வதே பெரும் போராட்டம் என சொல்வார் ரஜினி
- தனது ஒவ்வொரு பிறந்தாநாளின் போதும், வீட்டில் இருக்கும் தனி அறையில் சுற்றிலும் சூழப்பட்ட கண்ணாடி முன் அமர்ந்துகொண்டு, சுய பரிசோதனை செய்வார் ரஜினி
- இன்று கிடைத்து இருக்கும் சினிமா புகழ், இறைவன் கொடுத்த வரம், தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையென, இப்போதும் சிவாஜிராவாக வாழ்பவர் ரஜினி.



‘அந்தக் காட்சி வேண்டாம்... அவர் எம்.ஜி.ஆர்!’ #ரஜினி #HBDRajini

த மிழ் சினிமா வரலாற்றை மட்டும் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் ரஜினியைத் தவிர்த்துவிட்டு நிச்சயம் எழுதமுடியாது. அவர் தீவிர அரசியலில் இல்லைதான். அவர் பட வெளியீட்டு சமயத்தைத் தவிர, அவர் எப்போதும் அரசியல் பேசியதில்லைதான்... ஏன் அவர் ஒரு காலமும் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் திண்ணமாக, தன் கருத்தைக் கூறியதில்லைதான். ஆனால், சினிமாவில் வணிக நோக்கத்துக்காகக் கட்டமைக்கப்பட்ட ரஜினி எனும் பிம்பத்தின் நிழல், அரசியல் களத்தில் இன்னும் படர்ந்துதான் இருக்கிறது. ஒரு யுகத்தின் பழமையைக் கடந்த நிமிடத்தின் மீது, அள்ளிப் பூசும்... ஒளியின் வேகத்துடன் போட்டி போட எண்ணும் இந்தச் சமூக ஊடக காலத்திலும்... ரஜினி என்னும் பிம்பம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அதனால்தான் பிரதமர் வேட்பாளரே தமிழகத்துக்கு வந்தாலும், போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குச் சென்று ஒரு புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தேர்தல் காலங்களில், சம்பந்தமே இல்லாமல் ரஜினி என் நண்பர் என அரசியல் தலைவர்கள் பேட்டி அளிக்கிறார்கள்.

சரி, ரஜினி என்னும் பிம்பம் உருப்பெற்றது எப்போது...? அந்தப் பிம்பம் திரை வணிகத்துக்கு எந்த அளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ரஜினி என்னும் பிம்பம் உச்சம்தொட்டது அண்ணாமலை திரைப்படத்துக்குப் பிறகுதான். அதற்கு முன்பே அவருக்கு சூப்பர் ஸ்டார் என்னு அடைமொழி அளிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பே அவர் பாக்ஸ் ஆஃபிஸில் முடிசூடா மன்னனாக இருந்தாலும், ரஜினி என்னும் ஆளுமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது அந்தத் திரைப்படம்தான்.
 “விளம்பரத் தட்டிகள் இல்லை”

சுரேஷ் கிருஷ்ணா “My days with Baasha" புத்தகத்தில் இவ்வாறாக எழுதுகிறார், “அண்ணாமலை திரைப்படம் வெளியான சமயத்தில், அரசியல் சூழல் ரஜினிக்கு சாதகமாக இல்லை. படம் வெளியாவது குறித்த எந்த போஸ்டர்களும், விளம்பர பதாகைகளும் இல்லை. ஆனால், படம் குறித்த இந்த மெளனம்தான், திரைப்படத்துக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது” என்கிறார். இதை படம் சார்ந்ததாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். எப்போதும் ரஜினியின் மெளனம் அல்லது அளந்து பேசுதல் தான்... ரஜினி என்னும் பிம்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. ரஜினியின் சமகாலத்து நாயகனாக இருக்கும் கமலின் பிம்பம் பேச்சால் கட்டமைக்கப்பட்டதென்றால்... ரஜினியின் பிம்பம் மெளனத்தால் கட்டமைக்கப்பட்டதுதான். மெளனத்தை சரியாக தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நாயகன் ரஜினி.
ரஜினி என்னும் பிம்பத்தை வடிவமைப்பதில் இன்னொரு காரணி முக்கிய பங்காற்றி இருக்கிறது. அது அவரது ‘அப்பாவித்தனம்’. பணபலம், படைபலம் வைத்திருக்கும் வலிமையான வில்லனைதான் தன் திரைப்படங்களில் எதிர்த்துக் கொண்டிருப்பார். ஆனால், அதே சமயம், தன் அப்பாவித்தனத்தை திரைப்படங்களில் முன்னிலைப்படுத்துவதிலும் கவனமாக இருப்பார். பெரும்பான்மையான தமிழ் மனம், புத்திசாலிகளைவிட அப்பாவிகளைதான் விரும்பும். புத்திசாலிகள் ரசிகனுடைய ஈகோவுடன் மோதுகிறார்கள். ஆனால், அப்பாவிகள் ரசிகனின் மனதைக் கரைக்கிறார்கள். இந்த உளவியலை நன்கு அறிந்து வைத்திருந்தார் ரஜினி. தன் படங்களில் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ. அதற்கு சற்றும் குறையாமல், அப்பாவித்தனமான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். மீண்டும் அண்ணாமலை படத்தையே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன். பால்காரரான ரஜினி, பால் விநியோகம் செய்வதற்காக பெண்கள் விடுதிக்கு செல்வார். அந்த சமயத்தில் அந்த விடுதியில் ஒரு பாம்பு நுழைந்து, விடுதியே அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்கும். பெண்கள் ரஜினி உதவியை நாடுவார்கள். ஆனால், ரஜினி அந்தப் பெண்களை விட அதிகம் பயம் கொள்வார். அதே நேரம், பெண்கள் ஒரு இக்கட்டில் இருக்கும்போது சினிமா மரபுப்படி நாயகன் விலகி செல்லல் ஆகாது. ரஜினி பயத்துடன் அந்த பாம்பைப் பிடிக்க எத்தனிப்பார். பாம்பு குளியலறை வழியாக வெளியே சென்றுவிடும். அந்த சமயத்தில் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் நாயகியை ரஜினி பார்த்துவிடுவார். அப்பாவித்தனமான வேடம் பூண்ட ரஜினி, தான் தவறு செய்துவிட்டதாக ஒரு விளையாட்டுதனமான ஒரு தோற்றத்தை பார்வையாளனுக்குக் கடத்த...“கடவுளே... கடவுளே...” என்ற வசனத்தை உச்சரித்துச் செல்வார். இந்த வசனத்தை இப்படத்துக்குள் கொண்டுவந்தது ரஜினி என்கிறார் அப்படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா.
இக்கட்டுரைக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும், இன்னொரு தகவலையும் இங்கு பகிர்கிறேன், அண்ணாமலை படத்தில் ரஜினியின் மீது ஒரு பாம்பு ஏறும் அல்லவா...? அந்தப் பாம்பு விஷம் எடுக்கப்படாத பாம்பாம். அந்தக் காட்சி எடுத்து முடிக்கும்வரை இந்த தகவல் இயக்குநர், ரஜினி உட்பட யாருக்கும் தெரியாதாம். விஷயம் தெரிந்தவுடன் தான் பதறிவிட்டதாக, சுரேஷ் கிருஷ்ணா தன் புத்தகத்தில் பகிர்கிறார்.
“ரஜினி என்னும் பிராண்ட்”
சரி, மீண்டும் கட்டுரைக்கு வருவோம். ரஜினி இன்னொரு விஷயத்திலும் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தனக்காக திரைப்படங்களில் துதிபாடுவது எல்லைமீறிவிட கூடாது என்பது தான் அது. ‘மலை... அண்ணாமலை’ என்னும் வசனம் அண்ணாமலை திரைப்படத்தில் ஒரே ஒரு முறை தான் உச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது போல பாட்ஷா படத்தில் வரும், காலங்கள் கடந்து நிற்கும் வசனமான, “நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற வசனம் அந்தப் படத்தில் அதிகப்பட்சமாக ஆறு முறை தான் வருகிறது. இது ஏதோ ஏதேச்சையானது அல்ல... திட்டமிட்ட ஒன்று. தனக்காகத் துதிபாடுவது எல்லைமீறிச் சென்றால், அது தனக்கே எதிராகப்போகும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் ரஜினி. அவருக்குப் பின்னால் வந்த, அவர் போல ‘பாக்ஸ் ஆஃபிஸ்’ நாயகன் ஆகவேண்டும் என்று ஆசைப்பட நாயகர்கள் தவறவிடும் இடம் இது தான்.
அவர் திரைப்படம் தொடங்கும்முன், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என்ற வரைகலைக் காட்சி வரும் அல்லவா...? அது அண்ணாமலை படத்தில்தான் முதன்முதலாக வந்தது. இந்த வரைகலையை திரையில் போடுவதற்கு, முதலில் ரஜினி ஒப்புக்கொள்ளவில்லையாம். நீண்ட தயக்கத்துக்கு பின், பாலசந்தரின் வற்புறுத்தலுக்கு பின் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் மறுத்ததற்கு அவர் வைத்த வாதம், “ரஜினி ஒரு பிராண்ட் ஆகிவிட்டால்... அதற்கு நான் தொடர்ந்து தீனி போடவேண்டும். அது மிகவும் கடினம்” என்பதே... அவர் வாதம் பொய்க்கவில்லை, ரஜினி என்னும் பிராண்டின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யமுடியாத அண்ணாமலைக்குப் பிறகு வந்த பாண்டியன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
“பிம்பத்தை உடைத்து மீண்டும் எழுப்புதல்”
அண்ணாமலையில் கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைவதைதான் ரஜினி விரும்பி இருக்கிறார். இதற்கு சினிமா என்னும் கலை சார்ந்த எந்தக் காரணமும் இல்லை. அந்தப் பிம்பம் உடைந்தால்தான், மீண்டும் அதை விட வலுவான பிம்பத்தைக் கட்டமைக்க முடியும் என்பதுதான் காரணம். அந்தப் பிம்பத்தை உடைக்க அவர் தேர்ந்தெடுத்தது, தெலுங்கு “அலரி மொகுடு” திரைப்படம். இரண்டு மனைவிகள் உள்ள ஒரு நாயகனின் கதை. இதைத் தமிழாக்கம் செய்யலாம் என்று ரஜினி கூறியபோது சுரேஷ் கிருஷ்ணா பதறிவிட்டாராம். அவர், “வேண்டாம். இது விஷப்பரிட்சை... நாம் முன்பே பேசியது போல ‘பாட்ஷா’ படத்தை செய்யலாம்” என்றிருக்கிறார். அதற்கு ரஜினி, “இல்லை... நாம் அண்ணாமலையில் உண்டாக்கிய பிம்பத்தை உடைக்க வேண்டும். மக்களை மறக்கச் செய்யவேண்டும். அப்போதுதான், பாட்ஷா பார்வையாளன் மனதில் நிற்பான். அதற்கு நாம் 'அலரி மொகுடு' திரைப்படத்தை தமிழாக்கம் செய்யவேண்டும்” என்றிருக்கிறார். பாட்ஷாவிற்காக அவர் வடிவமைத்த செயல்திட்டம் தோற்கவில்லை. ரஜினி என்னும் பிம்பத்தை வேறு வடிவில் வெளிப்படுத்திய, அலரி மொகுடின் தமிழ் பதிப்பான வீராவும் வெற்றி அடைந்தது. மீண்டும் ரஜினி பிம்பம் கட்டமைக்கப்பட்ட ‘பாட்ஷா’வும் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் ஆனது.
வீராவில் அவர் இருமனைவிகளைக் கொண்ட நாயகனாக, குடும்பம் சார்ந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்த படத்துக்குப் பிறகும் அவர் பிம்பம் அப்படியேதான் இருந்தது. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் ஆர்.எம்.வீரப்பன் தான், ‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பாளர். அவர், ரஜினியை ஆனந்த்ராஜ் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சிக்கு ஒப்புக்கொள்ளவே இல்லையாம். அவர் சொல்லிய காரணம், “எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த ஒரு பிம்பத்தை நான் ரஜினிக்கு பார்க்கிறேன். நிச்சயம் அவர் ரசிகர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். என்னால், இந்தக் காட்சிக்கு சம்மதிக்கவே முடியாது” என்று கூறியுள்ளார். பின், ரஜினியே இதில் தலையிட்டுதான் இந்த காட்சிக்குச் சம்மதம் வாங்கி உள்ளார். “நாயகன் அந்தக் காட்சியில் அடிவாங்கினால் தான், பின் அந்த நாயகன் திரும்பி அடிக்கும் போது, ரசிகர்களின் மனநிலை உச்சத்தைத் தொடும்” என்றிருக்கிறார். அதுதானே நிகழ்ந்தது.
கபாலி வரை அதுதானே நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. ரஜினி நிச்சயம் வெறும் சினிமா மட்டும் தெரிந்த நாயகன் இல்லை... ரசிகர்களின் உளவியல் அறிந்த நாயகன். அதனால்தான் அவரால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் சந்திரமுகியையும் தேர்ந்தெடுக்க முடிகிறது, வில்லனுக்குப் பயந்து ஓடும் வசீகரனாகவும் நடிக்க முடிகிறது. அவரது முடிவுகள் சில நேரம் பிசகி இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒப்பீட்டளவில் மற்ற நாயகர்களைவிட, எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினிதான் ரசிகர்களின் உளவியலை நன்கு அறிந்திருக்கிறார்.
ரஜினி... உளவியல் அறிந்த நாயகன்!


ரஜினி – எஸ்பி முத்துராமன்… மக்களை மகிழ்வித்த 25 படங்கள்!
ர ஜினி என்ற வைரத்தைக் கண்டெடுத்தது நான்தான் என்றாலும், வித விதமான வேடங்கள், எல்லையற்ற வாய்ப்புகளைத் தந்து அந்த வைரத்தைப் பட்டை தீட்டியவர் எஸ்பி முத்துராமன்” என்பார் இயக்குநர் கே பாலச்சந்தர் அடிக்கடி.
அது உண்மைதான் என்பது, ரஜினி – எஸ்பிஎம் இணைந்து பணியாற்றிய படங்களின் பட்டியலைப் பார்த்தாலே புரியும்.
புவனா ஒரு கேள்விக் குறியில் துவங்கி பாண்டியன் வரை, ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய பரிமாணத்தில் ரஜினியைக் காட்டியவர் எஸ்பிஎம். சினிமாவை ஆபாசமில்லாத, நல்ல பொழுதுபோக்காகவே கடைசி வரை தந்த பெருமைக்குரியவர்.
‘தயாரிப்பாளருக்கேற்ற இயக்குநர்… மிச்சம் பிடிப்பதில்தான் குறியாக இருப்பார். பெரிதாக கலையுணர்வுடன் எடுக்கமாட்டார்’ என்று அவரைப் பற்றி சிலர் விமர்சிப்பதைக் கேட்டிருக்கலாம். ஆனால் ரஜினியின் படங்களில் வரும் பல காட்சிகளைப் பார்த்தவர்களுக்கு இந்தக் கருத்து எத்தனை அபத்தமானது என்பது புரிந்திருக்கும். சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட மிக அழகாக வெளிப்படுத்தும்படியான காட்சிகளை அமைத்திருப்பார் எஸ்பிஎம். எங்கேயோ கேட்ட குரல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
நெற்றிக் கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், குருசிஷ்யன்… இப்படி ஒவ்வொரு சுவைக்கும் ஒரு படமாக ரஜினியை வைத்து நவரச ஹிட் கொடுத்தவர் அவர் ஒருவர்தான்.
‘என்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் பாதியை எஸ்பி முத்துராமனுடனே கழித்திருக்கிறேன்’ என்கிறார் ரஜினி.
ரஜினியுடனான தனது சினிமா அனுபவங்களை எப்போது கேட்டாலும் மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்பவர் எஸ்பிஎம். ஆனால், ரஜினி பற்றி பொதுவாகப் பேச அல்லது பேட்டி கேட்க முற்படுபவர்களை நாசூக்காக தவிர்த்துவிடுவார்.
“நான் ரஜினியின் குடும்பத்தில் ஒருவன்தான். என்னை ஒரு மூத்த சகோதரனாக அவர் நடத்துவதும், மிகுந்த உரிமையுள்ளவனாக என்னை அவர் வைத்திருப்பதும் உண்மைதான். அதனாலேயே நான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. நான் ஏதாவது சொல்லி, அதனால் ரஜினி எந்த வகையிலும் சங்கடப்படக் கூடாது பாருங்கள்…” என்கிறார்.
ரஜினியுடன் பணியாற்றிய 25 படங்கள், அதிலேற்பட்ட சுவையான அனுபவங்கள் பற்றி தனது சுயசரிதையான ‘ஏவிஎம் தந்த எஸ்பிஎம்’ புத்தகத்தில் ஓரளவு சொன்னாலும் அவர் சொல்லாமல் விட்டது ஏராளம்.
“உண்மைதான்… நிறைய விஷயங்களை அதில் அடக்க முடியவில்லை. அதையெல்லாம் இன்னொரு சமயத்தில் சொல்லும் எண்ணம் இருக்கிறது” என்கிறார் எஸ்பிஎம்.
குணச்சித்திரம், ஆக்ஷன், நகைச்சுவை, சோகம், ரொமான்ஸ் – காதல், அரசியல் எள்ளல், தத்துவம், த்ரில்லர், பக்தி… என்ன மாதிரி படமானாலும் எஸ்பிஎம்மிடம் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
புவனா ஒரு கேள்விக்குறி, ஆடுபுலி ஆட்டம், ப்ரியா, ப்ரியா (கன்னடம்), ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீராகவேந்திரா, மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன்.
– இந்த 25 படங்களில் 22 படங்கள் நூறு நாள்கள் அல்லது வெள்ளிவிழா கண்டவை. மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்கள் வெள்ளி விழாவையும் தாண்டி ஓடியவை!
ஒன்றிரண்டு படங்கள் ஓட்டத்தில் முன்னே பின்னே இருந்தாலும், அவை ரசிகர்களை, விநியோகஸ்தர்களை ஏமாற்றாதவை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இன்றைக்கு நாம் பார்க்கும் போலிச் சாமியார்கள் முகமூடியை, ஒரு ஜனரஞ்சகப் படம் மூலமும் அம்பலப்படுத்த முடியும் என நிரூபித்த கழுகு, மகான் ராகவேந்திரரே திரை அவதாரம் எடுத்து வந்ததைப் போன்ற பிரமிப்பைத் தந்த ஸ்ரீராகவேந்திரர், வாய்விட்டுச் சிரிக்க வைத்த அதிசயப் பிறவி போன்றவை அதிக நாட்கள் ஓடவில்லையே என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் ரசிகர்களை ஏமாற்றவில்லை அந்தப் படங்கள் என்பதை, சின்னத் திரையில் இன்றும் அந்தப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இத்தனை படங்களில் ஒரே இயக்குநருடன் ஒரு சூப்பர் ஸ்டார் இணைந்து பணியாற்றியது கோடம்பாக்கத்தில் புதிய சாதனைதான். ரஜினி – எஸ்பிஎம் கூட்டணிக்கு முன், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டுமே, தேவர் பிலிம்ஸுக்காக இயக்குநர் எம்ஏ திருமுகம் இயக்கத்தில் 17 படங்களில் நடித்தார். 17 படங்களும் 100 நாள் கடந்து ஓடியவை என்பது குறிப்பிடத்தக்கது!
-சரி… இந்த கட்டுரையின் நோக்கம் என்ன என்கிறீர்களா…
ரஜினி – எஸ்பிஎம் கூட்டணியில் உருவான அந்த 25 படங்கள் குறித்தும் ஜூன் 1-ம் தேதி முதல் ‘என்வழி’யில் எழுதவிருக்கிறோம், புதிய தகவல்களுடன்!
சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள், நடித்தவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் என பல சுவாரஸ்யங்கள் அதில் இடம்பெறவிருக்கின்றன.
இதில் முக்கியமானது, அந்த காலகட்டத்தில் பரபரப்பாக இருந்த பத்திரிகையாளர்களின் பார்வையும் இதில் இடம்பெறும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக