செவ்வாய், 12 டிசம்பர், 2017

இயக்குநர் கர்ணன் நினைவு தினம்: டிசம்பர் 13 , 2012 .


இயக்குநர் கர்ணன் நினைவு தினம்: டிசம்பர் 13 , 2012 .

கர்ணன் (இறப்பு: டிசம்பர் 13 , 2012 ) தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஆவார். ஏறத்தாழ 150 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் 25 திரைப்படங்களில் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகம் திரைப்படத்தில் அறிமுகமாகிய கர்ணன்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் , வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன் , சிவப்பு சூரியன் உட்படப் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பல சாகசக் காட்சிகளைத் திறம்பட படம் பிடித்தவராக அறியப்படுகிறார். இவர் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் நீரினடியே எடுக்கப்பட்ட காட்சிகளும் இவரது மேற்கத்திய பாணி திரைப்படங்களில் குதிரைத் துரத்தல்களை படம் பிடித்த விதமும் பெரிதும் பேசப்பட்டன.
இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் பாமா, தாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். தமது 79வது அகவையில் திசம்பர் 13, 2012இல் மாரடைப்பால் காலமானார்.

இயக்கிய திரைப்படங்கள் சில

காலம் வெல்லும் (1970)
ஜக்கம்மா (1972)
கங்கா (1972)
ஒரே தந்தை (1976)
எதற்கும் துணிந்தவர்கள் (1977)
புதிய தோரணங்கள் (1980)
ஜம்பு (1980)


கர்ணன் – ஒளிப்பதிவாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்

சாரதா, கற்பகம், சிம்லா ஸ்பெஷல் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், ‘கங்கா’, ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஜம்பு’ போன்ற பதினொரு படங்களுக்கு மேல் இயக்கியவரும், பெண்ணே நீ வாழ்க, பெண்ணை வாழ விடுங்கள் போன்ற படங்களைத் தயாரித்தவர் கர்ணன்.

வீரபாண்டிய கட்டபொம்மனைப் போன்ற கம்பீரம், முறுக்கிய வெள்ளை மீசை, எளிமையான ஆடை, புருவங்களுக்கிடையே குங்குமம். அவர்தான் கர்ணன்.

திரையுலகுக்கு வரவேண்டுமென்று விரும்பி வந்தவரில்லை இவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விருப்பப்பட்டார். பெற்றோர் விடவில்லை. இவர் சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே சினிமாத்துறையைச் சார்ந்த அநேகர் கோடம்பாக்கத்தில் குடியிருந்தார்கள். அதனால் சுற்றுப்புற சூழ்நிலைகள் காரணமாக இவருக்கும் சினிமாத் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

’படங்களை மொழி மாற்றம் செய்ய டப்பிங்கைக் கண்டுபிடித்தவர் சவுண்ட் இஞ்சினியர் சீனிவாச ராகவன். அவருக்குச் சொந்தமான ரேவதி ஸ்டூடியோவில் முதன்முதலாக அப்பிரண்டீஸ் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தேன். இவர்களது தலைமை ஒளிப்பதிவாளர் என்.சி.பாலகிருஷ்ணன். அவர்தான் இவருக்கு வேலைப் பயிற்சியளித்தார். உதவி ஒளிப்பதிவாளராக இவர் பணிபுரிந்தது ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. இந்த ஸ்டூடியோவில் காமிரா யூனிட்டில் இவர் பணிபுரிந்த காலத்தில் ரெஹ்மான், பி.எஸ்.ரங்கா, பி.என்.ராய், வின்செண்ட், போன்ற மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.

டபிள்யூ.ஆர்.சுப்பாராவிடம் உதவியாளராக பணிபுரிய வேண்டுமென்பதற்காக ரேவதி ஸ்டூடியோவிலிருந்து விலகினார். பிறகு ஏ.எல்.சீனிவாசன் நிர்வாகத்திலிருந்த பரணி ஸ்டூடியோவில் சுப்பாராவ், பி.ஆர்.பந்துலு ஆகியோரின் சிபாரிசின் பேரில் ஒளிப்பதிவாளராகச் சேர்ந்தார்.

இவர் சுயமாக ஒளிப்பதிவு செய்த முதல் படம் ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’. அந்தப் படத்தின் இயக்குநர் பீம்சிங்.

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படமான ‘சாரதா’ வை இவர் ஒளிப்பதிவு செய்தார். அது போல இயக்குநர் பி.மாதவன் போன்ற பல முன்னணி இயக்குநர்களின் படங்களையும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

15.10.1982 சினிமா எக்ஸ்பிரஸ் திரையிதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

இவர் இயக்கிய படங்களின் பெயர்கள்:-

காலம் வெல்லும்
கங்கா
ஜக்கம்மா
எங்க பாட்டன் சொத்து
ஜம்பு
புதிய தோரணங்கள்
அவனுக்கு நிகர் அவனே
சட்டத்துக்கு ஒரு சவால்
இது எங்க பூமி
ஆண்டவன் சொத்து
ஜான்சி ராணி
கருப்புச் சட்டைக்காரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக