நடிகர் பி. ஜி. வெங்கடேசன் நினைவு தினம் - டிசம்பர் 24, 1950
பி. ஜி. வெங்கடேசன் (அண். 1910 - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார். தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் (1931) கதாநாயகனாக நடித்தவர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன். பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" எனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.
நடித்த திரைப்படங்கள்
காளிதாஸ் (1931)
பட்டினத்தார் (1936)
அம்பிகாபதி (1937)
தாயுமானவர் (1938)
ஜோதி (1939)
சகுந்தலை (1940)
சதி முரளி (திரைப்படம்) (1940)
திலோத்தமா (1940)
பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) (1940)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
வேதவதி (சீதா ஜனனம்) (1941)
சன்யாசி (1942)
மாயஜோதி (1942)
கங்காவதார் (1942)
பொன்னருவி (1947)
கங்கணம் (1947)
ஜம்பம் (1948)
ஞானசௌந்தரி (1948)
பிழைக்கும் வழி (1948)
கலியுகம் (1952)
பாடல்கள்
1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் விபவசுகுண தேவா ,
பிரம்மன் எழுத்தினால் ,[அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆகிய பாடல்களைப் பாடினார்.
1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே என்ற பாடலைப் பாடினார்.
மறைவு
பி. ஜி. வெங்கடேசன் தனது 40 ஆவது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக