இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி பிறந்த தினம் டிசம்பர் 1919
வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (மலையாளம்: വി ദക്ഷിണാമൂര്ത്തി; 9 டிசம்பர் 1919 - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கருநாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ் , மலையாளம் ,
தெலுங்கு , கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர்.
1948ல் வெளிவந்த ' நல்லதங்காள் ' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
நல்லதங்காள், நந்தா என் நிலா , ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி , ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி , உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர்
இளையராஜா , பி.சுசீலா , யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.
நான்கு தலைமுறை பாடகர்கள்
மலையாளத் திரைப்பட பாடகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகன் கே. ஜே. யேசுதாஸ் , யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் , மற்றும் விஜய் யேசுதாஸ் மகள் அமேயா ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் கீழ் பாடியுள்ளனர் .
இறப்பு
விருதுகள்
சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;
சுவர்ணமால்யா யேசுதாசு விருது;
கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;
மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக