வெள்ளி, 30 டிசம்பர், 2016

நடிகை வித்யா பாலன் பிறந்த நாள் ஜனவரி 1, 1978 .



நடிகை வித்யா பாலன் பிறந்த நாள் ஜனவரி 1, 1978 .
வித்யா பாலன் (பிறப்பு ஜனவரி 1, 1978) பாலிவுட் திரைப்படங்களில் மற்றும் விளம்பரப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். சமூகவியல் பட்டபடிப்பு முடித்தவுடன், வித்யா பாலன், தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், சவற்கார விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் தொடங்கி, பாலோ தேகோ (2003) என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்குள் நுழைந்தார். பிறகு இவர் இந்தி திரைப்படமான பரிநீத்தா (2005) என்பதில் அறிமுகமாகி, பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார் மேலும் தனது முதல் வணிக வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் (2006) படத்தின் மூலம் பெற்றார் அதைத் தொடர்ந்து ஹே பேபி (2008) மற்றும் பூல் பூலையா (2008) ஆகிய படங்களில் நடித்தார். அதில் பூல் பூலையாவில் தனது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேரின் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2009 இல் ஆர். பால்கியின் திரைப்படமான பாவுக்கு, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். 59வது தேசியத் திரைப்பட விருதுகளில் டர்ட்டி பிக்சர் என்ற இந்தித் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.

ஆரம்பக்கால வாழ்க்கையும் பின்னணியும்

வித்யா பாலன் கேரளாவின், பாலக்காட்டில் உள்ள ஒரு தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தில், பி.ஆர். பாலன் (இ.டி.சி சேனலின் துணைத்தலைவர்) என்பவருக்கும் இல்லத்தரசியான சரசுவதி பாலனுக்கும் பிறந்தார். வித்யாவிற்கு பிரியா என்னும் மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார். ஒரு காணொளி நேர்காணலில், இவர் தன்னை ”மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைவர்” என்றும், தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவில் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வித்யா பாலன் தன் பள்ளிப்படிப்பை புனித அந்தோணி பள்ளியிலும் அதன் பிறகு தனது சமூகவியல் பட்டப் படிப்பை புனித சேவியர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பைப் படிக்கும் பொழுது, தனது முதல் திரைப்பட வாய்ப்பைப் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
ஆரம்பக்கால திரைத்துறை வாழ்க்கை
முதன் முதலாக இவர் மோகன்லாலுடன் இணைந்து "சக்கரம்" என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆனால் அப்படம் தள்ளி வைக்கப் பெற்றது. அதன்பிறகு இவர் தமிழ் திரைப்படமான ரன் திரைப்படத்தில் நடிக்க கையொப்பமிட்டார், ஆனால் காரணங்கள் வெளியிடாமல் முதல்கட்ட படப்பிடிப்பிற்குப் பிறகு நீக்கப் பெற்றார். அவருக்கு பதிலாக மீரா ஜாஸ்மீன் அவ்வேடத்தில் நடித்தார். மீண்டும் சக்கரம் படம் பிருதிவிராஜை முதன்மையாகக் கொண்டு துவங்கிய பொழுது, வித்யா பாலனுக்கு பதிலாக மீரா ஜாஸ்மீனே நடித்தார். இவர் ஸ்ரீகாந்த்துடன் நடிக்கவிருந்த இரண்டாவது தமிழ் திரைப்படமான மனசெல்லாம் படத்திலிருந்தும் ’செயல்திறமற்றவர்’ என்கிற அடிப்படையில் நீக்கப் பெற்றார் மற்றும் இவருக்கு பதிலாக திரிஷா கிருஷ்ணன் அதில் நடித்தார்.

அதன்பிறகு இவர் தன்னை தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் திசைதிருப்பிக் கொண்டார். 1998 முதல், இவர் எண்ணற்ற தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் தோன்றினார், அவற்றில் பலவற்றை பிரதீப் சர்க்கார் இயக்கினார். இவர் இசைக் காணொளிகளின் துணை பாத்திரங்களையும் ஏற்று, இயுஃபோரியா, சுபா முத்கல் மற்றும் பங்கஜ் உதாஸ் போன்ற இசைக்கலைஞர்களின் பாடகர்கள் மற்றும் இசைக்குழுவினருடனும் தோன்றினார். வித்யா பாலன் ஹம் பாஞ்ச் என்ற தொலைக்காட்சி தொடரின் முதல் பருவத்தின் சில பகுதிகளில் ராதிகா மாதூர் என்னும் கதாபாத்திரத்தில் தோன்றினார், ஆனால் முதல் பருவத்தின் இறுதியில் இவருக்கு பதிலாக அமிதா நங்கியா என்பவர் நடித்தார்.

திருப்புமுனை, 2003-தற்காலம்
2003 இல், இவர் வங்காளித் திரைப்படமான பாலோ தேகோ வில் தோன்றியதன் மூலம், கொல்கத்தாவின் அனந்தலாக் புரஸ்கார் சிறந்த நடிகை விருதினை வென்றார். வித்யா பாலன் அடுத்து அறிமுகமான இந்தி திரைப்படமான பரிநீத்தா மிகுந்த விமர்சனரீதியிலான வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் அவரது செயல்திறம் விமர்சகர்களால் வரவேற்கப்பெற்று, அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுகநடிகைக்கான விருதினையும் மற்றும் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கான முன்மொழியும் வாய்ப்பினையும் பெற்றுத்தந்தது. இவரது முதல் இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, மனசெல்லாம் படத்திலிருந்து தன்னை நீக்கிய அதே தயாரிப்பாளரால் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுக்கு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிடும்படி ஆர்வமுடன் அழைக்கப்பெற்றார், ஆனால் இவர் அந்த வாய்ப்பை மறுத்தார் மற்றும் இவருக்கு பதிலாக இப்படத்தில் அசின் தொட்டும்கல் கையொப்பமிட்டார். 2006 இல், இவர் மிகப்பெரிய வெற்றிப்படமான லகே ரஹோ முன்னாபாய் படத்தில் சஞ்சய் தத்துக்கு மாறான பாத்திரத்தில் தோன்றினார். மீண்டும் ஒருமுறை இவரது செயல்திறம் விமர்சகர்களால் மிகுந்த வரவேற்பைப் பெற்றது[6] மற்றும் இப்படம் அவ்வாண்டின் மிகுந்த மொத்தவருமானம் ஈட்டிய இரண்டாவது திரைப்படமாகத் திகழ்ந்தது.

மணிரத்னம் அவர்களின் சிறந்த விமர்சன வரவேற்பைப் பெற்ற குரு திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் படமாக வித்யா பாலனுக்கு அமைந்தது, இதில் இவர் தண்டுவட மரப்பு நோயால் அவதிப்படும் பெண்ணாக நடித்தார். இத்திரைப்படம் மிகச்சிறந்த வசூலைப் பெற்றது[8] மற்றும் இவரது பாத்திரமும் வெகுவாக பாராட்டைப் பெற்றது. இவர் நடித்து அடுத்து வெளியான இரண்டு படங்களான, சலாமே இஷ்க்(Salaam-e-Ishq: A Tribute To Love) (2007) மற்றும் ஏக்லவ்யா - Eklavya: The Royal Guard (2007) ஆகிய படங்கள் வெற்றி பெறமால் தோல்வியடைந்தன[8] ஆனால் ஏக்லவ்யா படம் 80 வது அகாடமி விருதுகளுக்கான ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பட்டியலில் தேர்ந்தெடுக்கப் பெற்றது.அவ்வாண்டிலேயே வித்யா பாலன் நடித்து இறுதியாக வெளியான இரு படங்களான, ஹேய் பேபி (2007) மற்றும் பூல் புலைய்யா (2007) ஆகியவை மிகச்சிறந்த வசூலைக்குவித்த படங்களாக அமைந்தன.

2009 இல், பாலன் பா எனும் திரைப்படத்தில் இளம் மகளிர் மருத்துவராகவும் அதே சமயம் முதிரா முதுமையுடைய 12 வயது மகனுக்கு தாயாகவும் நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் பாலனின் மகன் ஆரோவாக நடித்தார். இப்படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் பாலனின் நடிப்புத்திறனை வெகுவாகப் பாராட்டினர். ரெடிப்பின் சுகன்யா வர்மா எழுதியதாவது, " வித்யா பாலன் மிக கச்சிதமாக தனது தாய் கதாப்பாத்திரத்தில் பொருந்தியுள்ளார் மேலும் மற்ற பாலிவுட் படங்களில் தாய் காதப்பாத்திரத்தில் வரும் நடிகைகள் போல் அல்லாமல் நன்றாக நடித்துள்ளார். 1980களில் நல்லதொரு நடிகையான கடுமையான, நேர்த்தியான கதாப்பாத்திரத்தில் நடித்த டிம்புள் கப்பாடியவை நினைவுப்படுத்துகிறார்." தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிக்காட் காஸ்மி "பாலன் தனது நடிப்பாற்றல் மூலமாக பாலிவுட் தாய்களுக்கு நல்லதொரு கண்ணியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது அமைதிப்பாங்கான நடிப்புடன் அவரது உணர்ச்சி வெளிப்பாடுகளால், இவர் தைரிய மிகு தாயாக உருமாறியிருந்தார்". இவருடைய சித்தரிப்பு, இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருதையும் பெற்றுத்தந்தது.

இவர் தற்பொழுது பிளாக் திரைப்படத்தின் கதையை எழுதிய பவானி ஐயர் எழுதும் மற்றும் விபு பூரி இயக்கும் திரைப்படமான செனாப் காந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். காதலுக்கு அப்பாற்பட்ட பாடல்களற்ற இத்திரைப்படம் அமிதாப் பச்சன், ராஜீவ் காண்டெல்வால் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் ஏற்று நடித்துள்ள மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றியும் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வீரரான எல்லை காந்தி என்றறியப்படும் கான் அப்துல் கஃபர் கான் அவர்களை மையமாகக் கொண்டும் அமைந்துள்ளது.

இயக்குநர் நிகில் அத்வானி கடந்த ஜனவரி 2009 இல் தாம் வித்யா பாலனுடன் பணியாற்ற இருப்பதாக அறிவித்தார். சந்த் பாய் என்று பெயரிட்ட இத்திரைப்படத்தில் அக்‌ஷய் குமார் அவர்களுடன் நடிப்பார். இத்திரைப்படம் கடமை தவறும் இளையோரை அடிப்படையாகக் கொண்டது. வித்யா பாலன் UTV ஸ்பாட்பாய்ஸ் நிறுவன தயாரிப்பில் நோ ஒன் கில்டு ஜெஸிக்கா திரைப்படத்தில் ராணி முகர்ஜியுடன் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளார்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

பிலிம்பேர் விருதுகள்
வெற்றி பெற்றது

    2006: பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருது, பரிநீத்தா
    2006: ஆண்டின் பிலிம்பேர் முகம், பரிநீத்தா

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்
வெற்றி பெற்றது

    2006: மிகச்சிறப்பான எதிர்காலமுடைய புதுமுகத்திற்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது - பெண், பரிநீத்தா
    2010: சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது - பா

ஜீ சினி விருதுகள்

வெற்றி பெற்றது

    2006: சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ சினி விருது, பரிநீத்தா

சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி விருதுகள்

வெற்றி பெற்றது

    2006: IIFA வின் சிறந்த அறிமுக நடிகை, பரிநீத்தா

ஸ்டார் டஸ்ட் விருதுகள்

வெற்றி பெற்றது

    2006: ஸ்டார் டஸ்டின் நாளைய சிறந்த நட்சத்திரம் - பெண், பரிநீத்தா

மற்ற விருதுகள்

    2004: அனந்தலாக் புரஸ்கார் விருதுகள், சிறந்த நடிகை , பாலோ தேகோ
    2005: மிகச்சிறந்த அறிமுகத்திற்கான அப்சரா புரொட்யூசர்ஸ் கியூல்ட் விருதுகள், பரிநீத்தா
    2006: ஸ்டாரின் சப்சே ஃபேவரைட் நயி ஹீரோயின் , பரிநீத்தா
    2007: அனந்தலாக் புரஸ்கார் விருதுகள், சிறந்த நடிகை (இந்தி) , பூல் புலைய்யா
    2010: லயன்ஸ் கோல்டு விருதுகள், சிறந்த நடிகை , பா
    பத்மசிறீ விருது (2014)

திரைப்படப் பட்டியல்
ஆண்டு     திரைப்படம்     பாத்திரம்     குறிப்புகள்
2003     பாலோ தேகோ     ஆனந்தி     வங்காளி திரைப்படம்
2005     பரிநீத்தா     லலிதா     இரட்டை-வெற்றிகள் , பிலிம்பேர் சிறந்த பெண் அறிமுக தோற்றம் விருது மற்றும்;
அவ்வாண்டின் பிலிம்பேர் முகத்திற்கான விருது
பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு, முன்மொழியப்பெற்றார்.
2006     லகே ரஹோ முன்னா பாய்     ஜான்வி    
2007     குரு     மீனு சக்ஸேனா    
Salaam-e-Ishq: A Tribute To Love     தேஸிப் ரெய்னா    
Eklavya: The Royal Guard     ராஜேஸ்வரி     ஆஸ்காருக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவு
ஹேய் பேபி     இஷா    
பூல் புலைய்யா     அவ்னி/மஞ்சுலிகா     பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓம் சாந்தி ஓம்     அவராகவே     தீவான்ஜி தீவான்ஜி பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றம்
2008     ஹல்லா போல்     ஸ்நேகா    
கிஸ்மத் கன்னக்ஷன்     பிரியா    
2009     பா     வித்யா    
2010     இஷ்க்யுயா     கிருஷ்ணா     29 ஜனவரி, 2010 இல் திரையிடப்பட உள்ளது
முக்தி     ஹாஷி     படப்பிடிப்பு
2011     நோ ஒன் கில்டு ஜெஸிக்கா     சப்ரினா லால்    
2011     உருமி     மக்கோம் / சிறப்புத் தோற்றம்     மலையாளத் திரைப்படம்
2011     'தேங்க் யூ     கிசனின் மனைவி / சிறப்புத் தோற்றம்    
2011     தம் மாரோ தம்     திருமதி. கமத் / சிறப்புத் தோற்றம்    
2011     தி டர்டி பிக்சர்     சில்க் ஸ்மிதா     சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது

2012     கஹானி     வித்யா பாக்‌ஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக