திங்கள், 1 மே, 2017

நடிகர் அஜித் குமார் பிறந்த நாள் மே 1 , 1971 .


நடிகர் அஜித் குமார் பிறந்த நாள் மே 1 , 1971 .

அஜித் குமார் , (பி. மே 1 , 1971 )தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
காதல் கோட்டை, காதல் மன்னன் , வாலி ,
அமர்க்களம் , தீனா , பூவெல்லாம் உன் வாசம் ,
வில்லன் , அட்டகாசம் , வரலாறு , கீரிடம்,
பில்லா , அசல், மங்காத்தா , பில்லா 2 போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகின்றார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012ஆவது ஆண்டு பட்டியலில் அஜித் குமாருக்கு 61ஆவது இடம் கிடைத்தது. 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில்
கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகராக வலம் வருகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார்.
திரை வாழ்க்கை
தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம் என்ற
தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள் ,
பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில்
பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.
அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
2003–05
2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். 2003இல் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான என்னை தாலாட்ட வருவாளா திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்த கால கட்டத்தில் சாமி , காக்க காக்க , கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார்.
நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்த
ஜனா திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஒரேயொரு திரைப்படம் சரண் இயக்கத்தில் வெளியான
அட்டகாசம் திரைப்படம் மட்டுமே. இப்படத்தில் அஜித்தின் இரட்டை கதாப்பாத்திரங்களின் நடிப்பும், " தல தீபாவளி" பாடலும் அஜித்தின் அதிரடி நாயகன் எனும் தகுதியை உயர்த்தியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி திரைப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைப் பெற்றாலும், இப்படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், இப்படம் பெற்ற ஒரு வலுவான தொடக்கமும் அஜித் மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாகத் தொடங்க உதவியது. ஆக, 2003 முதல் 2005 வரையில் வெளியான ஐந்து படங்களில், அட்டகாசம் திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.
2010–தற்போது வரை
2009 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அசல் திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனது.
இரண்டாவது முறையாக மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்ட பின்னர்
வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்.
சர்ச்சைகள்
பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த
கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.
இருங்காட்டுக் கோட்டையில் நடந்த கார் பந்தயத்தின் போது அஜித் குமார்
உதவி
பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். [15]
இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.
அறுவை சிகிச்சை
ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால் , மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
விருதுகள்
அஜித் குமார் தாம் நடித்த முதல்
தெலுங்கு படத்திற்காக (பிரேம புத்தகம்) பரத்முனி ஆர்ட் அகாதமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
2002ஆம் ஆண்டு வில்லன் படத்திற்காக
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
சிறந்த தென்னிந்திய நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் விருதுகளின் சிறந்த எதிர்நாயகன் மற்றும்
விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழக அரசு திரைப்பட விருதுகள்
வென்றவை
தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது -
பூவெல்லாம் உன் வாசம் (2001)
தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது - வரலாறு (2006)
பிலிம்பேர் விருதுகள்
வென்றவை
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாலி (1999)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வில்லன் (2002)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வரலாறு (2006)
பரிந்துரைக்கப்பட்டது
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பில்லா (2007)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - மங்காத்தா (2011)
விஜய் விருதுகள்
வென்றவை
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - வரலாறு (2006)
விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) -
மங்காத்தா (2011)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - மங்காத்தா (2011)
பரிந்துரைக்கப்பட்டது
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - பில்லா (2007)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஏகன் (2008)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - அசல் (2010)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஆரம்பம் (2013)
பிற விருதுகள்
வென்றவை
சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - வாலி (1999)
சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - சிட்டிசன் (2001)
சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருது - மங்காத்தா (2011)
திரைப்பட விபரம்
நடித்துள்ள திரைப்படங்கள்
சுட்டி
இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
குறிக்கப்பட்ட இரண்டு திரைப்படங்களைத் தவிர அனைத்தும் தமிழ்த் திரைப்படங்கள்.
எண் ஆண்டு திரைப்படம் கதாப
1 1990 என் வீடு என் கணவர்
2 1993 பிரேம புத்தகம் சித்த
3 1993 அமராவதி அர்ஜு
4 1994 பாசமலர்கள் குமா
5 1994 பவித்ரா அசோ
6 1995 ராஜாவின் பார்வையிலே சந்துர
7 1995 ஆசை ஜீவா
8 1996 வான்மதி கிரு
9 1996 கல்லூரி வாசல் வசந்த்
10 1996 மைனர் மாப்பிள்ளை இராம
11 1996 காதல் கோட்டை சூர்ய
12 1997 நேசம் இரங்க
13 1997 ராசி குமா
14 1997 உல்லாசம் குரு
15 1997 பகைவன் பிரபு
16 1997 ரெட்டை ஜடை வயசு விசய்
17 1998 காதல் மன்னன் சிவா
18 1998 அவள் வருவாளா ஜீவா
19 1998
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
சஞ்சய்
20 1998 உயிரோடு உயிராக அசய்
21 1999 தொடரும் ஜெயர
22 1999 உன்னை தேடி ரகு
23 1999 வாலி தேவா
24 1999 ஆனந்த பூங்காற்றே ஜீவா
25 1999 அமர்க்களம் வாசு
26 1999 நீ வருவாய் என சுப்பி
27 2000 முகவரி சிறீதர்
28 2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மனோ
29 2000 உன்னை கொடு என்னை தருவேன் சூர்ய
30 2001 தீனா தீனதய
31 2001 சிட்டிசன் சிட்டி சுப்பி
32 2001 பூவெல்லாம் உன் வாசம் சின்ன
33 2001 அசோகா சுசிம
34 2002 ரெட் ரெட்
35 2002 ராஜா இராச
36 2002 வில்லன் சிவா, விசு
37 2003 என்னை தாலாட்ட வருவாளா சதிஷ்
38 2003 ஆஞ்சநேயா பரமகு
39 2004 ஜனா ஜனார்
40 2004 அட்டகாசம் குரு,
41 2005 ஜி வாசு
42 2006 பரமசிவன்
சுப்பி சிவா (பரமசி
43 2006 திருப்பதி திருப்
44 2006 வரலாறு
சிவசங் ஜீவா, விஷ்
45 2007 ஆர்வார் சிவா
46 2007 கிரீடம் சக்திவ இராசர
47 2007 பில்லா
டேவி பில்ல சரவண
48 2008 ஏகன் சிவா
49 2010 அசல் ஜீவா சிவா
50 2011 மங்காத்தா விநா மகாத
51 2012 பில்லா 2 டேவி பில்ல
52 2012 இங்கிலீஷ் விங்கிலிஷ்
சாசி, பயணி
53 2013 ஆரம்பம் அசோ குமா
54 2014 வீரம் விநா
55 2015 என்னை அறிந்தால் சத்யத
56 2015 வேதாளம் கணே (வேத
57 2017 விவேகம் TBA
வர்த்தக விளம்பரங்கள்
அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும்.
எண் ஆண்டு விளம்பரம் பாத்திரம் தயா
1 மியாமி குசன் [76] -
2 2005 நெஸ்லே சன்ரைஸ் - ராஜீ மேன.



எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: மே 1, 1971
பிறப்பிடம்: ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
பணி: நடிகர், கார் பந்தய வீரர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
என்னதான் பாலக்காடு வழி தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், அஜீத் குமார் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது பற்றற்றவராகவே காணப்பட்டார். இதனால், 1986ல் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.
ஆரம்பகாலப் பணிகள்
தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், அவரைப் பல வணிக முகவர்கள் அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் நடிக்க வைக்க அவரைத் தூண்டினர். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
திரையுலக வாழ்க்கை
1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். இதைத் தொடர்ந்து, அவர், ‘பாசமலர்கள்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘ராஜாவின் பார்வையிலே’ (1995), ‘ஆசை’ (1995) போன்ற படங்களில் நடித்தார். இதில், 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில், ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது.
தனது இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜீத் குமார் அவர்கள், தொடர்ந்து ‘வான்மதி’ (1996), ‘கல்லூரி வாசல்’ (1996), ‘மைனர் மாப்பிள்ளை’ (1996), ‘காதல் கோட்டை’ (1996), ‘நேசம்’ (1997), ‘ராசி’ (1997), ‘உல்லாசம்’ (1997), ‘பகைவன்’ (1997), ‘ரெட்டை ஜடை வயசு’ (1997), ‘காதல் மன்னன்’ (1998), ‘அவள் வருவாளா’ (1998), ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ (கௌரவ வேடம்) (1998), ‘உயிரோடு உயிராக’ (1998), ‘தொடரும்’ (1999), ‘உன்னை தேடி’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆனந்த பூங்காற்றே’ (1999), ‘நீ வருவாய் என’ (கௌரவ வேடம்) (1999), ‘அமர்க்களம்’ (1999), ‘முகவரி’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘உன்னை கொடு என்னை தருவேன்’ (2000), ‘தீனா’ (2001), ‘சிட்டிசன்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘அசோகா’ (கௌரவ வேடம்) (2001), ‘ரெட்’ (2002), ‘ராஜா’ (2002), ‘வில்லன்’ (2002), ‘என்னை தாலாட்ட வருவாளா’ (கௌரவ வேடம்) (2003), ‘ஆஞ்சநேயா’ (2003), ‘ஜனா’ (2004), ‘அட்டகாசம்’ (2004), ‘ஜீ’ (2005), ‘பரமசிவன்’ (2006), ‘திருப்பதி’ (2006), ‘வரலாறு’ (2006), ‘ஆழ்வார்’ (2007), ‘கிரீடம்’ (2007), ‘பில்லா 2007’ (2007), ‘ஏகன்’ (2008), ‘அசல்’ (2010), ‘மங்காத்தா’ (2011), ‘பில்லா 2’ (2012), ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ (2012) போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்த் திரையுலகில் தக்கவைத்துக் கொண்டார்.
இப்போது, விஷ்ணுவர்தனின் ‘வலை’ என்ற படத்தில் ஆர்யா மற்றும் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.
பந்தய வாழ்க்கை
தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இல்லற வாழ்க்கை
1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.
விருதுகள்
2௦௦1 – தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.
2006 – தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.
விஜய் விருதுகளை 2௦௦6ல் ‘வரலாறு’, 2011ல் மங்காத்தா படத்திற்காக இரண்டு முறையும் பெற்றார்.
சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2௦௦1ல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.
சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, ‘மங்காத்தா’ படத்திற்காக 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2002ல் ‘வில்லன்’ படத்திற்காகவும், 2006ல் ‘வரலாறு’ படத்திற்காகவும், 2௦௦7ல் ‘பில்லா’ படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.
காலவரிசை
1971: ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், சுப்ரமணியம் என்பவருக்கும், மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1986: உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.
1991: தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.
1992: ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
1992: செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ என்ற படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.
1999: ‘அமர்க்களம்’ படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.
2௦௦௦: இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
2௦௦1: தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.
2003: ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.
2006: தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.
2008: ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.
2010: ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக