நடிகை பி. சாந்தகுமாரி பிறந்த தினம் மே 17, 1920 .
பி. சாந்தகுமாரி (மே 17, 1920 - ) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த நடிகையாவார். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான பி. புல்லையா சாந்தகுமாரியின் கணவராவார்.
பிறப்பும் தொடக்க வாழ்வும்
சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் பிறந்தவர். பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார்.
தனது 13ஆவது வயதில் கருநாடக இசையில் வாய்ப்பாட்டு, வயலின் வாசிப்பில் தேர்ச்சி பெற்றார். தனது 15ஆவது வயதில், தென்னிந்தியா முழுவதும் இசைக் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்தார். பள்ளியொன்றில் இசையாசிரியராகவும் பணியாற்றி வந்தார். கச்சேரி ஒன்றில் சாந்தகுமாரியை சந்தித்த பி. வி. தாஸ் எனும் இயக்குநர், மாயா பஜார் (1936) திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
திரைத்துறைக்கான பங்களிப்புகள்
திரைப்படங்களில் தாய் வேடமேற்று நடிப்பதில் புகழ் பெற்றிருந்தார். திரைப்படங்களில் சாந்தகுமாரியின் மகனாக நடித்த நடிகர்கள், திரைப்படத்திற்கு வெளியே இயல்வாழ்விலும் 'மம்மி' என இவரை அழைத்தனர் (mummy - அம்மா என்பதனைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை).
சாந்தகுமாரி மொத்தமாக 250 திரைப்படங்களில் நடித்தார். அவற்றுள் 60 தமிழ்த் திரைப்படங்கள் அடங்கும்.
நடித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
1. பக்த ஜனா (1948)
2. அம்மா (1952)
3. பொன்னி (1953)
4. மனம்போல் மாங்கல்யம் (1953)
5. பெண்ணின் பெருமை (1956)
6. பொம்மை கல்யாணம் (1958)
7. சாரங்கதாரா (1958)
8. கலைவாணன் (1959)
9. நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
10. சிவந்த மண் (1969)
11. வசந்த மாளிகை (1972)
பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும்
திரைப்பட நடிப்பிலிருந்து விலகிய பிறகு, பக்திப் பாடல்களை எழுதுவதிலும், அவற்றிற்கு இசையமைப்பதிலும் ஈடுபட்டார். இப்பாடல்களை பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
தெலுங்குத் திரைப்படத்துறைக்கான சிறப்பான பங்களிப்பிற்காக, இரகுபதி வெங்கையா விருது (1999); வழங்கியது: ஆந்திர அரசாங்கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக