புதன், 17 மே, 2017

பாடகி கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani)பிறந்த தினம் மே 17 1938.



பாடகி கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani)பிறந்த தினம் மே 17  1938.

கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

பாடிய சில பாடல்கள்
காளை வயசு, இவர்கானா, தாரா தாரா வந்தாரா ( தெய்வப்பிறவி )
செந்தமிழ் தேன்மொழியால் ( மாலையிட்ட மங்கை)
பாட்டொன்று ( பாசமலர் )
காட்டில் மரம், பெண் பார்க்கும் மாப்பிள்ளை ( கவலை இல்லாத மனிதன் )
ஆசையும் என் நேசமும் ( குலேபகாவலி )
சித்திரத்தில் பெண் ( ராணி சம்யுக்தா )
சின்ன சின்ன கட்டு ( சிவகங்கை சீமை)
என் கண்ணைக் கொஞ்சம் ( கைதி கண்ணாயிரம் )
காலம் சிறிது ( தை பிறந்தால் வழி பிறக்கும் )
வாழ்க வாழ்க ( ஆளுக்கொரு வீடு)
காதல் என்றால் என்ன, மேலே பறக்கும் ராக்கெட்டு ( அன்பு எங்கே )
வருவாளோ இல்லையோ ( பாசமும் நேசமும் 1964)
காவேரி தாயே ( மன்னாதி மன்னன் 1960)
நெஞ்சில் நிறைந்த ( நகரத்தில் சிம்பு 1961)
காமுகர் நெஞ்சம் ( மகாதேவி 1957)
உங்க மனசு ஒரு தினுசு ( மகளே உன் மனசு )
எந்த நாளும் சந்தோஷமே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு )
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
கலைமாமணி விருது.


கே.ஜமுனாராணி [பின்னணிப் பாடகி]
தமிழில் பிரபலமான துள்ளிசைப் பாடகியர்களுள் இவரும் ஒருவர். பாடல் பதிவின் போதோ, மேடை நிகழ்ச்சிகளின் போதோ இவர் ஆடிக்கொண்டே பாடுவதில்லை என்பது சிறப்பு.
”திரைப்படங்களில் பின்னணிப் பாடுவதில் ஒரு புது வகையைச் செய்ய இவருக்கு வாய்ப்பு கிட்டியது. சாதாரணமாகப் பாடுவதோடு இல்லாமல், ஓரளவு பொப்பிசை எனப்படும் ஜனரஞ்சகமான பாடல்களைப் பாட இவருக்கு சந்தர்ப்பங்கள் கிட்டின. கேளிக்கை விடுதிகளில் நடனமாடும் நடன மாதுக்களுக்கும், கிராமிய, நாடோடிப் பாடல்களைப் பாட இவரது பொருத்தமாக இருந்திருக்கிறது ஜமுனாராணிக்கு”.
’ஆரம்பத்தில் இவர் பரதநாட்டியம் தான் கற்றுக்கொண்டார். இவரது தாயார் திரௌபதி அவர்கள் பெண்களையே கொண்டு அமைத்த வாத்தியக்குழுவில் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வீணையில் தேர்வில் சித்தி பெற்றிருக்கிறார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இவரது குரலைக் கேட்ட அவர் இவரைப் பாடச் சொல்லலாமே எனக் கூறியுள்ளார். அது முதல் தான் பாடுவது என ஆரம்பித்துள்ளார்.
”1952-இல் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘கல்யாணி’ என்ற படத்தில் பாட இவருக்கு சந்தர்ப்பம் அளித்தனர்”. ‘சக்ஸஸ்’ என்ற ஒரு பாட்டும், ‘ஒன் டூ த்ரீ’ என்ற ஒரு பாட்டும் அதில் இவர் பாடினார். இவ்விரண்டு பாடல்களுமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
‘அநேகமாக வில்லி கதாபாத்திரங்கள் ஏற்றவர்களுக்காக ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். “குலேபகாவலி” படத்தில் இவர் பாடிய ’ஆசையும் என் நேசமும் இரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா’ என்ற பாடல் பலரையும் கவர்ந்தது. பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், சூர்யகலா போன்ற நடிகையர்களுக்காக ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர்.
’விடுதி நடனங்கள்’ பாடல்களா ஜமுனாராணியை பாடச்சொல் என்று அழைப்பார்கள் 1960-களில். ‘மாலையிட்ட மங்கை’யில் மைனாவதிக்காக இவர் பாடிய செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாட்டும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
’அன்பு எங்கே’ படத்தில் ‘மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு’ என்ற பாட்டும் எல்லோரையும் கவர்ந்தது. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ’குமுதம்’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் இவர் இணைந்து பாடிய “மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா’ என்ற பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாடலாகும். இப்பாடல் காட்சியில் நடித்தவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் பி.எஸ்.சரோஜா மற்றும் கள்ளபார்ட் நடராஜனும்.
இப்படி பாடிப்பாடி இப்படித்தான் இவரால் பாடமுடியும் என்று ஒரு பெயர் இவருக்கு ஏற்பட்டுவிட்டது. சுந்தர்லால் நட்கர்னி ‘மகாதேவி’ என்ற ஒரு படத்தினை எடுத்தார். அதில் சாவித்திரி பாடவேண்டிய ஒரு பாட்டு. பாடல் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் சொன்னார் இந்தப் பாடலை ஜமுனாராணியைக் கொண்டு பாடச் செய்யலாம் குரல் நன்றாக இருக்கும் என்று. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் முடியாது என்று மறுத்துவிட்டனர்.
உடனே கவிஞர் ஜமுனாவைப் பாடச் சொல்லுங்கள். பதிவு செய்த பிற்கு கேட்டுப்பார்ப்போம். நன்றாக வந்தால் நீங்கள் ஊதியத்தை அவருக்கு இரண்டு மடங்காக தரவேண்டும். நன்றாக வரவில்லையென்றால் இன்றைய செலவை நான் தந்துவிடுகிறேன் என்றார். இப்படி இவர்கள் பந்தயம் கட்டிக்கொண்டு இவரைப் பாட வைத்தார்கள். எல்லா தெய்வங்களையும் பிரார்த்தனை செய்துகொண்டு இவரும் பாடினார். “காமுகர் நெஞ்சில் நீதியில்லை” என்ற அந்தப் பாட்டு மிக நன்றாக அமைந்தது. இது இவரது வாழ்வில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ‘மன்னாதி மன்னனிலும்’, பாசமலரிலும் [பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்] பாட இவருக்கு வாய்ப்புக்கள் கொடுத்தனர் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்.
தற்போது இவருக்கு 77 வயதாகிறது. 1938-ஆன் ஆண்டு கே.வரதராஜுலு, கே.திரௌபதி தம்பதியரின் மகளாக ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
தெலுங்கில் முதன்முதலாக 1946-ஆம் ஆண்டு ’தாசில்தார்’ என்ற படத்தில் பாடினார். தொடர்ந்து ‘தியாகய்யா” என்ற படத்தில் பாடிய பின்னர் பிரபலமானார். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ஏராளமான படங்களில் இவர் பாடியுள்ளார். இவர் மொத்தமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாது சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் தாய் மொழியான தெலுங்கு மொழிகளிலும் பாடியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அடுத்து ‘நீ தொடும் போது’ படத்தில் இளையராஜாவின் இசையில் பாடியவர் 1992-இல் சந்திரபோஸ் இசையில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடலை ஜிக்கியுடன் இணைந்து பாடினார். இவர் தற்போது குடும்பத்தாருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இவர் பாடிய மேலும் சில அமுதகானங்கள்:
1. அன்பு எங்கே படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பூவில் வண்டு போதை கொண்டு
2. அதிசயத் திருடன் படத்தில் யாரென இனிமேல் கேட்காதே
3. ஆசை படத்தில் ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட ராஜா
4. இரு கோடுகள் படத்தில் சுசீலாவுடன் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
5. இருமனம் கலந்தால் திருமணம் படத்தில் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து மலர்ந்திடும் இன்பம் வண்ணம் போலே…
6. இரும்புத்திரை படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து நிக்கட்டுமா போக்கட்டுமா நெஞ்சத் தொறந்து காட்டட்டுமா
7. உத்தம புத்திரன் படத்தில் ஏ.பி.கோமளா, ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
8. எங்க வீட்டுப் பெண் படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து எனக்கு நீதான் மாப்பிள்ள
9. எங்கள் குல தேவி படத்தில் தனித்துப் பாடிய கண்ணாடி கிண்ணம் காண்பவர்
10. எங்கள் செல்வி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலெட்சுமியுடன் இணைந்து பாடிய என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்
11. எங்கள் குடும்பம் பெரிசு படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து அதிமதுரா அனுராதா ஜீவிதமே…..
12. கடவுளைக் கண்டேன் படத்தில் பி.சுசீலாவுடன் அண்ணா அண்ணா சுகம்தானா
13. கடவுளைக் கண்டேன் படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் இணைந்து கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நிண்ணுக்கணும்…..
14. கவிதா படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து மணக்கும் ரோஜா மை லேடி
15. கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பார்க்க பார்க்க மயக்குதடி
16. கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பறக்கும் பறவைகள் நீயே
17. கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
18. கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து உள்ளே இருக்கும் பொன்னம்மா
19. கண் திறந்தது படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து இருக்கும் வரையில் ரசிக்கணும் இன்பமாக இருக்கணும்
20. காட்டு ரோஜா படத்தில் தனித்துப் பாடிய என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்கத்தோணும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக