ஞாயிறு, 7 மே, 2017

நடிகர் அதர்வா பிறந்த தினம் மே 7



நடிகர் அதர்வா பிறந்த தினம் மே 7

அதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார்.
பிறப்பும் வளர்ப்பும்
தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே 7 அன்று இரண்டாவது குழந்தையாக அதர்வா பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள்.
2009இல் பத்ரி வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய பாணா காத்தாடி படத்தில் கதாநாயகன் வேடம் அதர்வாவிற்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகை சமந்தாவுடன் அதர்வா நடித்தார்.

நடித்துள்ள திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
2010 பாணா காத்தாடி ரமேசு
2011 கோ நடிகர்
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் ராமச்சந்திரன்
2013 பரதேசி[1] ராசா
2013 இரும்புக் குதிரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக