நடிகர் டி. ராஜேந்தர் பிறந்த நாள் மே 9.
டி. ராஜேந்தர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.
அரசியல் வாழ்க்கை
திமுகவில்இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை
பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
2004ல் திமுகவிலிருந்து விலகி
அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.
திரைப்படங்கள்
இவர் இயக்கி நடித்த சில படங்கள்.
உயிருள்ளவரை உஷா
மைதிலி என்னைக் காதலி
தங்கைக்கோர் கீதம்
உறவைக்காத்த கிளி
தாய் தங்கை பாசம்
ஒரு தாயின் சபதம்
சொன்னால் தான் காதலா
மோனிசா என் மோனலிசா
15வது மக்களவைக்கு நடந்த தேர்தலில்
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 8,211 வாக்குகள் பெற்றார்.
டி.ராஜேந்தரின் தாடி ரகசியம்
இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், பாடகர் என 9 கிராப்ட்டுகளை செய்யும் அஷ்டவதானி டி.ராஜேந்தர். ஒரு தலை ராகம் படத்தின் மூலம் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர். அடுத்தடுத்து வெள்ளிவிழா படங்களை கொடுத்த டி.ராஜேந்தரின் இன்னொரு அடையாளம் தாடி.டி.ராஜேந்தரின் தாடிக்கு பின்னால் பல கதைகள் இருப்பதாக இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் தொடர்ந்து காதல் படங்களை கொடுத்ததால் டி.ராஜேந்தருக்கு ஒரு காதல் தோல்வி அதனால்தான் தாடி வைத்திருக்கிறார் என்றார்கள். "என் தாடிக்கு பின்னால் ஒரு கதை இருக்கு" என்று அவரும் சினிமாவில் பக்கம் பக்கமாக வசனம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் தாடியின் உண்மையான ரகசியம் இதுதான்.மாயவரத்தில் சினிமா கனவோடு திரிந்த டி.ராஜேந்தர் சென்னைக்கு சென்றால்தான் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று முடிவு செய்து சென்னைக்கு வந்தார். சட்டம் படிக்க ஆசை அதனால் சென்னை போகிறேன் என்ற வீட்டில் சொல்லிவிட்டு வந்தார். சென்னை சட்டக்கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்தது. ஆனால் பீஸ் கட்ட முடியாமல் சேரவில்லை. ஒல்லி உடம்பு, முகம் நிறைய தாடியோடும் அலைந்த அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மாயவரம் திரும்பினார்.கல்லூரியிலும் சேர முடியாமல், சினிமாவிலும் ஜெயிக்க முடியாமல் திரும்பியவரை ஊரில் பார்த்தவர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள். அவமானம் தாங்காமல் வீட்டை விட்டு வெளியே வராமால் இருந்தார். அதன் பிறகு அண்ணாமலை பல்கலைகழத்தில் எம்.ஏ. படிப்பில் சேர்ந்தார். தினமும் ரெயிலில் கல்லூரிக்கு போவார். முதல் நாள் கல்லூரிக்கு போகும்போது தனது தாடியை சவரம் செய்ய ஆயத்தமானார். அப்போது வீட்டில் இருந்த ஒரு முக்கியமானர் (அவர் யார் என்பதை சொல்ல டி.ஆர் விரும்பவில்லை) "இவன் மூஞ்சிக்கெல்லாம் ஷேவிங் ஒரு கேடா... சும்மா இருந்தா பிளேடாவது மிஞ்சும்" என்றார். ஊர் கிண்டல் செய்ததை தாங்கிக் கொண்டவரால் சொந்த வீடு கிண்டல் செய்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் கோபத்தில் ஷேவிங் கிரீமையும், ஷேவிங் ஷெட்டையும் தூக்கி எறிந்து விட்டு கிளம்பினார். சினிமாவில் ஜெயிக்கிற வரையில் தாடி எடுக்க மாட்டேன் என்று மனதுக்குள் சபதம் போட்டார். சபதப்படி சினிமாவில் ஜெயித்த பிறகு தாடி எடுக்க முடிவு செய்தார். ஆனால் நாம் ஜெயிக்க இந்த தாடிதானே காரணம் அது நம்முடனேயே இருக்கட்டும் என்று தாடியை நிரந்தரமாக்கிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக