வியாழன், 4 மே, 2017

நடிகை டி. ஆர் ராஜகுமாரி பிறந்த தினம் மே 5, 1922 .



நடிகை டி. ஆர் ராஜகுமாரி பிறந்த தினம் மே 5, 1922 .

டி. ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 – செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரை இழந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
திரைப்படத்துறை பங்களிப்புகள்
நடிப்பு
1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின்
குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி , சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து
கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.
எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா , எம். கே. ராதா , டி. ஆர். மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.
பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி ,
ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய
ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.
கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார்.
வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில்
தங்கப்பதுமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.
சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.
நடித்த திரைப்படங்களின் பட்டியல்
குமார குலோத்துங்கன் (1939)
சூர்யபுத்ரி (1941)
மனோன்மணி (1942)
சதி சுகன்யா (1942)
பிரபாவதி (1942)
சிவகவி (1943)
குபேர குசேலா (1943)
ஹரிதாஸ் (1944)
சாலிவாகனன் (1945)
வால்மீகி (1946)
விகடயோகி (1946)
பங்கஜவல்லி
சந்திரலேகா (1948)
சந்திரலேகா (1948)
பிரம்மரிஷி விஷ்வாமித்திரா (1948)
கிருஷ்ணபக்தி (1949)
பவளக்கொடி (1949)
இதய கீதம் (1950)
விஜயகுமாரி (1950)
வனசுந்தரி (1951)
அமரகவி (1952)
பணக்காரி (1953)
என் வீடு (1953)
அன்பு (1953)
வாழப்பிறந்தவள் (1953)
மனோகரா (1954)
நல்ல தங்கை (1955)
குலேபகாவலி (1955)
புதுமைப்பித்தன் (1957)
மல்லிகா (1957)
தங்கமலை ரகசியம் (1957)
தங்கப்பதுமை (1959)
மந்தாரவதி
பின்னணிப் பாடகியாக
இதய கீதம் திரைப்படத்தில் வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே , ஓடி வா வெண்முகில் போலே ஆகிய இரண்டு பாடல்களை டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார்.


தமிழ் சினிமாவில் முதல் அழகு நடிகை, கனவு கன்னி என்று டி.ஆர்.ராஜகுமாரியை குறிப்பிடுவார்கள். ஆனால் முதல் கவர்ச்சி நடிகை என்றால் அது தவமணி தேவிதான்.பட அதிபரும், இயக்குனருமான டி.ஆர்.சுந்தரம் தனது முதல் தயாரிப்பான சதி அகல்யா என்ற படத்தை பற்றி பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது என் படத்தில் நடிக்கும் ஹீரோயின் இவர் தான் என்று ஒரு படத்தை பத்திரிக்கையாளர்களிடம் கொடுத்தார். அந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியில உறைந்து நின்றார்கள். அந்தப் படத்தில் தவமணி தேவி நீச்சல் உடையில் இருந்தார். சதி அகல்யா படத்தில், தவமணி தேவி ஆடல் பாடலுடன் கவர்ச்சியாகவும் நடித்தார்.யாழ்ப்பாணத்தில் பிறந்த தவமணி தேவி, ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த 1930களில் தமிழ் சினிமாவுக்கு வந்தார். முறைப்படி பரநாட்டியம், சங்கீதம் கற்றிருந்தார். அந்தக் காலத்திலேயே குட்டை பாவடை டிசர்ட்டுடன் வெளி உலகில் வலம் வந்த துணிச்சலான நடிகை.அடுத்த நடித்த வனமோகினி படத்தில் காட்டுவாசி பெண் வேடத்தில் கவர்ச்சியாக நடித்தார். இது ஆங்கில படத்தின் ரீமேக். மூலப் படத்தில் ஹாலிவுட் நடிகை நடித்த அதே மாதிரி உடை அணிந்து நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வித்யாபதி என்ற படத்தில் தேவதாசி கேரக்டரில் நடித்து அனைவரையும் ஆச்சயர்ப்பட வைத்தார். வேலைக்காரி மாதிரியா குடும்ப படங்களிலும் தனது நடிப்பை நிரூபித்தார். ராஜகுமாரி படத்தில் இளவரசி வேடத்தில் கலக்கினார். இப்படி அந்தக் கால இளைஞர்களை தன் நடிப்பால், அழகால், கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் தவமணி. சிங்களத்து குயில் என்று அழைக்கப்பட்டார். தவமணி தேவியை வாழ்நாளில் ஒரு முறையாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்பதே அன்றை இளைஞர்களின் லட்சியமாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக