இயக்குனர் டி. ராஜேந்தர் பிறந்த நாள் அக்டோபர் 03.
டி. ராஜேந்தர் ஒரு தமிழ்த்
திரைப்பட நடிகரும்,
இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும்,
தமிழக அரசியல்வாதியும் ஆவார்.
வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில்
நடித்துள்ளார். இவரின் மூத்த மகன்
சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ்
திரைப்பட நடிகர் ஆவார்.
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர்
தற்போது தன் பெயரை விஜய டி.
ராஜேந்தர் என்று
மாற்றிக்கொண்டுள்ளார்.
திரைப்படங்களில் அடுக்கு மொழி
வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.
அரசியல் வாழ்க்கை
திமுகவில்இணைந்து தனது அரசியல் பணியை
துவக்கினார். திமுகவில் கொள்கை
பரப்புச் செயலாளராக
இருந்துள்ளார். 1996ல் சென்னை
பூங்காநகர் தொகுதியில்
போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக
இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட
ஆலோசனை குழு துணைத் தலைவராகவும்
பணியாற்றி உள்ளார். 2004ல்
திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற
அரசியல் கட்சியை
தொடங்கியுள்ளார். 2013 ஆம்
ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை
கலைத்து விட்டு மீண்டும் திமுகவில்
இணைந்தார்.
திரைப்படங்கள்
இவர் இயக்கி நடித்த சில படங்கள்.
உயிருள்ளவரை உஷா
மைதிலி என்னைக் காதலி
தங்கைக்கோர் கீதம்
உறவைக்காத்த கிளி
தாய் தங்கை பாசம்
ஒரு தாயின் சபதம்
சொன்னால் தான்
காதலா
மோனிசா என் மோனலிசா
15வது மக்களவைக்கு நடந்த தேர்தலில்
கள்ளக்குறிச்சி மக்களவைத்
தொகுதியில் போட்டியிட்டு 8,211
வாக்குகள் பெற்றார்.
**********************************
சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர்
சகலகலா வல்லவர் என்று திரைத்துறையில்
அழைக்கப்படும் டி.ராஜேந்தர் 1955 ஆம் ஆண்டு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாயவரத்தில்
தேசிங்கு ராஜா உடையார், ராஜலட்சுமி
தமபதியினருக்கு மகனாக பிறந்தவர்.
மாயவரத்தில் இருந்து சில கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மண்ணம்பந்தல்
என்ற ஊரில் அமைந்துள்ள ஏவிசி கல்லூரியில்
எம்.ஏ. படித்த இவர், அக்கல்லூரியில் தனக்கு
ஏற்பட்ட காதல் அனுபவத்தை அக்கல்லூரிலேயே
படமாக எடுத்தார்.
இவரது முதல் படம் ஒருதலை ராகம். முற்றிலும்
புதுமுகங்கள் நடித்திருந்த அப்படம்
வியாபாரம் ஆகாமல் பெரும்
வலியோடு 1980 ஆம் ஆண்டு
வெளியானது. ஆனால் அப்படத்தை
ரசிகர்கள் வரவேற்று மாபெரும்
வெற்றி படமாக்கி வசூலில் சரித்திர
சாதனை படைக்க வைத்தனர்.
மேஜையில் தளம் போட்டு பாட்டுப் பாடி பட
வாய்ப்பை பெற்ற திறமைக்கு
சொந்தக்காரர் இவர். இப்படத்தில்
இவர் எழுதி இசை அமைத்த அத்தனை
பாடல்களும் அவர் கல்லூரியில் படித்துக்
கொண்டிருந்த போது எழுதிய
பாடல்கள்.
அடுத்து இவர் இயக்கிய வசந்த அழைப்புகள்
படத்தை ஜெப்பியார் தயாரித்தார்.
இந்தப் படத்தை அடுத்து வெளியான
ரயில் பயணங்களில் படம் பெரும்
வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து காதல் கதைகளை
படமாக தந்தவர் தங்கையின் பாசத்தை
மையமாக வைத்து தங்கைகோர் கீதம் என்கிற
படத்தை இயக்கினார். இந்தப் படமும்
அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
இந்தப் படத்தின் இசையும் பாடல்களும்
பெரிதும் வரவேற்பை பெற்றன. இதில்
நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.
அடுத்து இயக்கிய உயிருள்ள வரை உஷா,
உறவைக் காத்த கிளி போன்ற படங்களும்
அவருக்கு வெற்றிப் படங்களாக
அமைந்தன. இப்படங்களில் நடிகராகவும்
வலம் வந்தார். இப்படங்களின்
பாடல்களுக்கு செட் அமைதிதிருந்தது
பெரிய அளவில் பேசப்பட்டது.
அதன் பிறகு இவர் இயக்கிய படங்களில்
அவரது மகன் சில்ம்பரசனுக்கு முக்கியத்துவம்
வருகிற மாதிரி கதைகளை அமைத்தார். தாய்
தங்கை பாசம், ஒரு தாயின் சபதம், எங்க
வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், காதல்
அழிவதில்லை என்று வரிசையாக படங்களை
கொடுத்தார். இந்தப் படங்களும்
அவருக்கு பெரும் வெற்றிப்
படங்களாக அமைந்தன.
அவருடன் புதுமுகங்களை வைத்து
சொன்னால் தான் காதலா,
மோனிசா என் மோனலிசா, வீராச்சாமி போன்ற
பாடங்களையும் இயக்கினார்.
அவரது அறிமுகங்களான அமலா, நளினி,
ஜோதி, ஜீவிதா, மும்தாஜ் போன்ற நடிகைகள்
தென்னிந்திய மொழிகளில் பல
படங்களில் நடித்து புகழ் பெற்றனர்.
இவரது படங்களில் குடிப்பது, புகைப்பது,
வன்முறையை துண்டுவது போன்ற காட்சிகள்
இருக்காது. எப்போதும் சமூகத்துக்கு தவறான
கருத்துக்களை சொல்லிவிடக்கூடாது
என்பதில் உறுதியாக இருந்தார்
இவரது பாடல்களையும், இசையையும் ரசித்து ஒரு
ரசிகராக இவரை பூக்களை பறிக்காதீர்கள்
படத்திற்கு இசையமைக்க வைத்தார்
தயாரிப்பாளர் தரங்கை சண்முகம்.
புதுமுகங்கள் நடித்த அப்படம் இவரது
இசைக்காகவும் மாபெரும் வெற்றி
படமாக அமைந்தது என்கிறார் அவர்.
இவர் நடிக்காத சில படங்களுக்கும்
இசையாமதிருக்கிறார் இவர். இவரது மகன்
சிலம்பரசன் நடித்த வல்லவன் படத்தில்
அம்மாடி ஆத்தாடி, ஒஸ்தி படத்தில்
கலாசலா போன்ற பாடல்களையும் பாடி
இருக்கிறார்.
நடிகர், இயக்குனர், பாடகர்,
இசையமைப்பாளர், கலை இயக்குனர், நடன
இயக்குனர், ஒளிப்பதிவாளர்,
பாடலாசிரியர், என பன்முக கலைஞர் இவர்.
இவரது திரைப்படங்களில் அடுக்கு
மொழி வசனம் பேசுவது இவரது தனிச்
சிறப்பாகும். என்பதுகளில் இவரது
வசனத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது.
படம் வெளியான பிறகு கதை வசன
புத்தங்களே தனியாக விற்பனையானது .
திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை
துவக்கினார். திமுகவில் கொள்கை
பரப்புச் செயலாளராக
இருந்துள்ளார். 1996ல் சென்னை
பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு
தமிழக சட்டமன்ற உறுப்பினராக
இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட
ஆலோசனை குழு துணைத் தலைவராகவும்
பணியாற்றி உள்ளார்.
2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய
லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற
அரசியல் கட்சியை தொடங்கினார்.
தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று
மாற்றிக் கொண்டுள்ளார்.
டி.ராஜேந்தர், உஷா இருவருக்கும் காதல்
தோல்வி இருந்ததாகவும், அந்த தோல்வியின்
வலியை இருவரும் பகிர்ந்து கொண்ட
போது, இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஒரு அன்பு
உருவாகி அதுதான் திருமணத்தில் முடிந்தது
என்கிறார்கள் மூத்த சினிமா நிருபர்கள்.
இவர்களுக்கு சிலம்பரசன், குரளரசன் என்கிற
இரு மகன்களும் இலக்கிய என்கிற ஒரு
மகளும் உள்ளனர். மகள் இலக்கியாவை,
ஆந்திராவைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கு
திருமணம் செய்து
கொடுத்துள்ளார்.
இவரின் மூத்த மகன் சிலம்பரசன் தமிழில்
புகழ்பெற்ற முன்னணி நடிகராக இருந்து
வருகிறார். இளைய மகன் குரளரசன்,
சிலம்பரசன் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தி
மூலம் இசையமைப்பாளராக
அறிமுகமாகிறார்
34 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம்
படத்தை இயக்கிய இவர், இப்போது ஒரு தலைக்
காதல் என்ற படத்தை இயக்கி நடித்துக்
கொண்டிருக்கிறார். அதீத
தன்னபிக்கையும் பலவகைத் திறனும்
கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர்
இவர்.
தன் தனித்தனி திறமைகளால் அந்தத்
துறைகளில் மட்டும் முன்னுக்கு வந்தவரை விட
அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர்
இவர்.
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது"
என்பது ஒரு பழமொழி. இது இவருக்கு
அப்படியே பொருந்தும்.
நன்றிவிக்கிப்பீடியா.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக