வெள்ளி, 21 அக்டோபர், 2016

நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்த தினம் அக்டோபர் 21, (1937)

நடிகர் தேங்காய் சீனிவாசன்  பிறந்த தினம் அக்டோபர் 21, (1937)

தேங்காய் சீனிவாசன் (21
அக்டோபர் 1937 – 9 நவம்பர் 1988) 1970-
களிலும், 1980-களிலும் பிரபலமாக
இருந்த தமிழ் நடிகர் ஆவார். இவர்
கல் மணம் என்னும் நாடகத்தில்
தேங்காய் வியாபாரியாக
நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன்
என்று பரவலாக அறியப்பட்டார்.
இவர் நகைச்சுவை
கதாபாத்திரங்களிலும், கதையின்
நாயகனாக, எதிர் நாயகனாக,
குணசித்திரக்
கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தேங்காய் ஸ்ரீநிவாசன்,
சென்னையைச் சேர்ந்த
இராஜவேல் முதலியார்
என்பவருக்கும், தூத்துக்குடி
மாவட்டத்திலுள்ள
திருவைகுண்டத்தைச் சேர்ந்த
சுப்பம்மாள் என்பவருக்கும்
மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர்
21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய
தந்தையைப் போல தானும்
நடிகராக வேண்டுமென்ற
ஆசையுடன் அதற்கான முயற்சி
செய்து வந்தார். அவருடைய
தந்தை எழுதிய 'கலாட்டா
கல்யாணம்' மேடை நாடகத்தில்
அறிமுகமானார். அதற்குப்பிறகு,
ரவிந்தர், கே. கண்ணன் உட்பட
பல்வேறு எழுத்தாளர்களின்
பல்வேறு நாடகங்களில் நடித்தார்.
இவர் கே. கண்ணனின் கல் மணம்
நாடகத்தில், தேங்காய்
வியாபாரியாக சிறப்பாக
நடித்திருந்தார். அதற்காக
அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த
கே. ஏ. தங்கவேலு , இவரை
தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே
அழைக்கப்பட வேண்டும் என்று
கூறினார்; அவ்வாறே
அழைக்கப்பட்டார்.
திரைத்துறை
தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல்
திரைப்படத்தின் மூலமாக
திரைத்துறையில்
அறிமுகமானார். இவர் ம. கோ.
இராமச்சந்திரன், சிவாஜி
கணேசன் , ரஜினிகாந்த் ,
கமல்ஹாசன் உள்ளிட்ட பல
முன்ணணி நடிகர்களுடன்
இணைந்து பணியாற்றி உள்ளார்.
சுமார் 900 படங்களுக்கு மேல்
நடித்துள்ள இவர், சிவாஜி
கணேசன் நடித்த கிருஷ்ணன்
வந்தான் என்ற திரைப்படத்தை
தயாரித்தார்.
மண வாழ்க்கை
ஸ்ரீநிவாசன் லக்ஷ்மி என்பவரை
மணந்து கொண்டார். இவர்களுக்கு
கீதா, ராஜேஸ்வரி என்று இரு
மகள்களும், சிவசங்கர் என்ற மகனும்
உள்ளனர். கீதாவுடைய மகன்
யோகி / சுவரூப்பும்,
சிவசங்கரின் மகள் ஸ்ருதிகாவும்
திரைத்துறையில் நுழைந்தனர்.

இறப்பு

தேங்காய் ஸ்ரீநிவாசன்
தன்னுடைய உறவினரின் ஈமச்
சடங்கிற்காக பெங்களூருவிற்குச்
சென்றபோது, மூளை
குருதிப்பெருக்கு காரணமாக
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப்
பலனின்றி, 50-ம் அகவையில் 1987-ம்
ஆண்டு நவம்பர் 9-ம் நாள்
உயிரிழந்தார். [1]
குறிப்பிடத்தக்கத்
திரைப்படங்கள்
உதய கீதம் (1985)
கை கொடுக்கும் கை (1984)
தங்க மகன் (1983)
ராம லக்ஷ்மன் (1981)
தில்லு முல்லு (1981)
டிக் டிக் டிக் (1981)
கழுகு (1981)
பில்லா (1980)
ஆறிலிருந்து அறுவது வரை
(1979)
அன்பே சங்கீதா (1979)
தர்ம யுத்தம் (1979)
பிரியா (1978)
தியாகம் (1978)
வாழ நினைத்தால் வாழலாம்
(1978)
அன்னக்கிளி (1976)
பல்லாண்டு வாழ்க (1975)
காசேதான் கடவுளடா (1972)
எதிர் நீச்சல் (1968)
ஒரு விரல் (1965)
************************************
தேங்காய் சீனிவாசன் ‘வெர்சடைல்
ஆர்டிஸ்ட்’ என்ற சொல்லுக்கு நூறு
சதவீதம் பொருத்தமான நடிகர் ,
தமிழ் சினிமாவை பொறுத்தவரை
ஒரே ஒருவர்தான் எல்லாவித
பாத்திரங்களையும் ஏற்று நடிக்கத்
தக்கவர். நகைச்சுவை , வில்லன் ,
குணசித்திரம் , கதா நாயகன் (கலியுக
கண்ணன் ,அடுக்கு மல்லி ) என்று அனைத்து
விதமான பாத்திரங்களிலும் நடிக்க
தக்கவர் என்பது மாத்திரமல்ல ,அதில்
வெற்றி கொடி
நாட்டியவரும் கூட . அன்னக் கிளி , சட்டம்
என் கையில் போன்ற படங்களில் அவரை
காமெடி நடிகராக ஏற்றுக்
கொண்ட மக்கள்தான் தில்லு
முல்லு , ப்ரியா போன்ற படங்களில் அவரை
குணச்சித்திர நடிகராகவும் ஏற்று
மகிழ்ந்தனர் .
தேங்காய் என்ற பாத்திரத்தில் ஒரு
நாடகத்தில் நடித்தாராம் . அது முதல்
தேங்காய் சீனிவாசன் . அவரோடு ஒரு
படத்தில் பணி புரிந்தேன்.
”ரொம்பப் பேரு என்னை
பிராமணன் னு நினைச்சுட்டு
இருக்கிறாங்க. நான் முதலியார்”
என்றார் .நீங்கள் சில படங்களில்
பிராமணராக நடித்து , அந்த பாஷையை
கனக் கச்சிதமாகப் பேசி இருகிறிர்கள்.
அதனால் மக்கள் மனதில்
அப்படியொரு இமேஜ் ஏற்பட்டு
விட்டது. நானும் கூட அப்படிதான்
நினைத்திருந்தேன் ” என்றேன் .
சென்னை அடையார் அரசு திரைப் படக்
கல்லூரியில் நான் ‘டைரக்ஷன் ‘ கோர்ஸ்
படித்து வந்தேன் . அங்கே சினிமா படப்
பிடிப்புக்காக இரண்டு ‘ப்ளோர்’ வாடகைக்கு
விடப்படும் . அடிக்கடி படப்பிடிப்பு நடக்கும்.
நான் அவ்வபோது அங்கே போய் வேடிக்கை
பார்ப்பேன் , சக மாணவர்களுடன் .
ஒரு நாள் தேங்காய் நடிக்கும் படத்தின்
ஷூட்டிங் .கோடம்பாக்கத்தில் ‘ஹாலிவுட்
ஓட்டல் ‘என்றொரு ஓட்டலின்
பிரியாணியைதான் மதிய வேளைக்கு
தேங்காய் சாப்பிடுவாராம் படப்
பிடிப்பில் என்னதான் ‘உசத்தி
சாப்பாடு ‘கொடுத்தாலும் அது
அவருக்கு பிடிப்பதில்லையாம் .ஆனாலும்
வேறு ஓட்டல் பிரியாணி என்றால்
அவருக்குப் பிடிக்காது .ஹாலிவுட்
பிரியாணி மாஸ்டரின் கைப் பதம் இவரது
நாவிற்கு செட்டாகி விட்டது .
முதல் நாள் படப் பிடிப்பின்
பொது தேங்காய்
சொன்னது போலவே கம்பனி டிரைவர்
காரை எடுத்துக்கொண்டு போய்
கோடம்பாக்கம் ஹாலிவுட் ஓட்டலில்
பிரியாணி வாங்கி வந்தார் . மதிய
உணவு இடைவேளையின் போது தேங்காய்
பிரியாணியை சாப்பிட்டு விட்டு அதன் பின்
நடிக்க வந்தார் .
மறு நாள் படப் பிடிப்பு . மிக விரைவாக
படத்தை ‘சுட்டுக்'(ஷூட்டிங் )
கொண்டிருந்தார்கள் .மதிய
சாப்பாட்டுக்கு பின் இடைவேளை விட்டாகி
விட்டது .இருந்த அரைமணி நேரத்தில் மீண்டும்
படப் பிடிப்பை துவங்க வேண்டும் . தேங்காய்
பசியோடு ”எங்கேப்பா பிரியாணி ?”
என்றார் புரொடக்சன்
பாயிடம் . படப் பிடிப்பில் சாப்பாடு
வகையாராகளை கவனித்து
கொள்பவர்களை
புரொடக்சன் பாய்
என்பார்கள் .
அவரோ வேகமாக வந்து
தயாரிப்பாளரிடம் ”தேங்காய்
பிரியாணி கேட்கிறார் ” என்றார் .
தயாரிப்பாளர்,புரொடக்சன்
மேனேஜரை அழைத்து ”தேங்காய்க்கு பிரியாணி
வாங்கிட்டு வரலையா?” என்று கேட்டதும் ”
சார் இன்று காலை முதல் நமது கார் பட
வேலையா போய் வந்துக்
கொண்டிருக்கிறது. கோடம்பாக்கம்
போய் வர நேரமில்லை. அதனால் பிரியாணி
வாங்கி வரவில்லை …” என்றார் அவர்.
”என்னய்யா எழவு . இப்போ அந்த ஆள்
பிரியாணி கேக்குறானே …”
”பக்கத்தில் அடையாரில் உள்ள ஒரு
ஓட்டலில் பிரியாணி வாங்கி வந்து
கொடுத்துடறேன் ….”
”அந்த ஆளு ஹாலிவுட்
பிரியாணிதான் கேட்பான் . அவன்
என்ன பெரிய ஹாலிவுட் நடிகரா?”
”நாமளும் ஹாலிவுட் புரடியூசர்
இல்லியே”
(இரு இந்த மாசம் உன் சம்பளத்தில் கை
வைக்கிறேன் என்று முணுமுணுத்துக்
கொண்டே). “இப்போதைக்கு
பிரியாணி பிரச்னையை தீர்க்க வழியை பாரு
…” என்றார்.
புரடக் சன் மேனேஜர் கண்ணில் அங்கே ஒரு
மூலையில் கிடந்த காக்கி நிற கவர்
கண்ணில் பட்டது.முதல் நாள்
ஹாலிவுட் ஓட்டல் பிரியாணியை வாங்க
வந்த பார்சல் கவர் .(இப்போதுதான்
பாலிதீன் கவர் . அக்காலத்தில்
காக்கி நிற காகிதத்தில்தான் ) அதைப்
பார்த்ததும் மேனேஜர் முளையிலே மின்னல்
ஓடியது .
”சார் ஐடியா.அடையாறு ஓட்டலில்
பிரியாணி வாங்கிட்டு வந்து இந்த
ஹாலிவுட் கவரில் வைத்து
கொடுத்து விடுகிறேன்.அந்த ஆள்
மதியமானாலே ஒரு பெக் விஸ்கி
சாப்பிட்டு விட்டு தான் பிரியாணி
சாப்பிடுவார் . குடிக்காரன் வாய்க்கு
ஊறுகாயைத் தவிர, வேறு எதை தின்னாலும்
டேஸ்ட் வித்தியாசம் தெரியாது ..”
” உன் வாயிலிருந்து வர்ற பிராந்தி
நாத்தம் குடலைப் பிடுங்குது .சரி , நீ
சொன்ன மாதிரியே செய் ;
எப்படியோ பிரச்னைனையை முடி ” என்றார்
புரடியூசர் சித்ர மகால்.
காரை எடுத்துக் கொண்டு
புறப்பட்ட மேனேஜர் அடுத்த பதினைந்து
நிமிடத்திற்குள் பறந்து வந்து விட்டார்,
பிரியாணி பொட்டலத்துடன்.
முதல் நாள் வாங்கிய ஹாலிவுட்
ஓட்டல் கவரில், சுடச்சுட பிரியாணிப்
பொட்டலத்தை வைத்தார்,
தேங்காயிடம் சேர்ப்பித்தும் விட்டார்,
அடுத்த பத்து நிமிடத்தில் பிரித்திருந்த
பிரியாணி பொட்டலத்தை கையில்
ஏந்தியபடி ஆவேசமாக ‘செட்‘டுக்குள்
வந்தார் தேங்காய். அங்கிருந்த
புரடியூசரைப் பார்த்து, “யோவ், ஐயரே!
வாய்யா, இங்கே!” என்றார். விளங்கி
விட்டது புரடியூசருக்கு,. நடுங்கிய படி
வந்தார்.
பிரியாணியை உன் முஞ்சியிலே துப்பிடுவேன்,
வயசிலே முத்தவன்னு பார்க்கிறேன். இருபது
வருசமா ஹாலிவுட் பிரியாணி
சாப்பிட்டுட்டு இருக்கேன். எனக்கே‘பிலிம்‘
காட்டறியா?” என்றபடி பிரியாணி
பொட்டத்தை வீசி எறிந்தார்.
“இன்னும் பத்து நிமிடத்தில் எனக்கு
ஹாலிவுட் பிரியாணி வரணும். இல்லே
ஒரு மாசத்துக்கு என் கால்ஷீட் உனக்கு
கிடையாது….”
சீற்றத்தோடு மீண்டும் மேக்கப் ருமிற்குள் போய்
விட்டார்,
அப்புறம் பிரியாணி வந்ததா?
சாப்பிட்டாரா? ஷுட்டிங் நடந்ததா?
அது பற்றி எனக்கு ஒன்றும்
தெரியாது.
எங்கள் திரைப்படக் கல்லுரியை ஒட்டி ‘கேட்டரிங்
டெக்னாலஜி இன்ஸ்ட்டியூட்! சமையல்
கலை பாடக்கல்லுரி . அங்கே ஒரு நாள்
படப்பிடிப்பிற்கு தேங்காய் வந்திருந்தார்,
படத்தின் வசனகர்த்தா ‘வியட்நாம்’ ‘டேக்’
ஆரம்பமானது, தேங்காய் பேசி
நடித்தார். கட் கட் என்றார்
வசனகர்த்தா “அப்படியா….?
எப்படின்னா….? என்று ஏதோ இரண்டு வரி
விடுபட்டு விட்டன. வசனத்தை எடுத்துச்
சொன்னார், ‘வசனம்!’
‘சரி’என்று சொல்லிவிட்டு மீண்டும்
ஒருமுறை வசனத்தை படிக்கச்
சொல்லி கேட்டுக்
கொண்ட தேங்காய் அப்படியே
பேசினார்,
மீண்டும் கட் கட் என்றார் வசனம். இந்த
முறை வேறு ஒரு வரி விட்டுப் போய் விட்டதாம்.
ஆத்திரமானார் தேங்காய்,
“டேய், திருவள்ளுவரு! நீ என்ன திருக்குறளா
எழுதிப்புட்ட? நான் மாத்தி
சொல்லிட்டதா குற்றம்
சொல்லி நெற்றிக் கண்ணை
காட்றே! வசனத்திலேயே நீ
சொல்லியிருக்கிற விஷயத்தை
சரியா சொல்லிட்டேனா? அது
போதும். நான் நடிக்க வந்தேனா, உன்
வசனத்தை அப்பழுக்கில்லாம
சொல்ல வந்தேனா? ஊமைப் பட
காலத்திலேர்ந்து நடிகனுங்க நடிச்சுக்கிட்டு
இருக்காங்க…பேசும் படம் வந்த
பிறகுதான்டா நீங்க எழுத வந்தீங்க….
பேமானி, ஒரு ஓரமா போயி உட்காருடா….
டேய்.. எவனாவது இவன் கையிலே
எழுத்தாணியும் பனை ஓலையும்
குடுங்கடா…. உட்கார்ந்து நாலடியார்
மாதிரி எதாவது ஏழடியார்
எழுதட்டும்….” என்றார்.
ஆஹா ..தேங்காய் மட்டும் நடிகராக
ஆகாமல் வசனகர்த்தாவாக
வந்திருந்தால் பொளந்து
கட்டியிருப்பார் என்று உணர்ந்து
கொண்டேன்.
அன்று இந்த வசன கர்த்தா வியட்நாம்
என்ன பண்ணினார் தெரியுமா ?
தேங்காய் மது அருந்திக்கொண்டே
பேசுகிற மாதிரி ஒரு காட்சி. இதற்காக
டம்மி மது பாட்டில் ஏற்பாடு
செய்திருக்க வேண்டும். ஆனால்
தயாரிப்பாளரிடம் சொல்லி
விலை உயர்ந்த ஒரு மது வகையை வாங்க
வரச் சொல்லி இருந்தார் .
”அவசரத்திற்கு டம்மி மது பாட்டில் ஏதும்
அப்போதைக்கு அவ்விடத்தில் கிடைக்கவில்லை
என்றும் லோக்கல் சரக்கு மது பாட்டில்
தான் இருக்கிறது . கதையில் கோடீஸ்வரன்
வேடத்தில் நடிக்கும் தேங்காய் இப்படி
லோக்கல் சரக்கு சாப்பிடுவது மாதிரி
காட்டினால் யதார்த்தமாக
இருக்காது ” என்றும் காரணம் கூறி
விலையுர்ந்த சரக்கு ஒன்றை முழு (புல் )
பாட்டில் வாங்கி வரச்
சொன்னார் .
‘டேக் ‘ முடிந்ததும் அதை தான் சாப்பிட்டு
விட உத்தேசம் .
வந்தது சரக்கு பாட்டில் . தேங்காய் முன்
டேபிளில் வைக்கப்பட்டது .பார்த்தார் .
தேங்காய் .புது பாட்டில் என்பது புரிந்து
விட்டது .ஆனால் தேங்காய்க்கு இந்த
உண்மை தெரியக் கூடாது
என்பதற்காக அதன் மூடியை (சீலை )
உடைத்துதான் வைத்திருந்தார் வசனம்
தேங்காய் மது குடிப்பது போல் காட்ட
பாட்டிலின் பக்கத்திலயே ஒரு மதுக்
கிண்ணத்தில் கறுப்பு நிற குளிர் பானம்
(கோகோ கோலா போல )ஒன்றை ஊற்றி
வைத்திருந்தார்கள்
கேமரா ஓடத் தொடங்கியதும்
தேங்காய் அந்த மது கிண்ணத்திலிருந்து
ஒரு’ சிப் ‘ பருகி விட்டு , வசனத்தைப் பேச
வேண்டும் . ‘ரெடி டேக்’ காமிரா ஓடத்
தொடங்க டைரக்டர் ” ஆக்ஷன்”
என்று குரல் கொடுத்தார் .
எதிர்பாராத விதமாக பாட்டிலை
எடுத்தார் . திறந்தார் தேங்காய்
.பாட்டிலில் இருந்த மதுவை அந்த
கிண்ணத்தில் ஊற்றி கட கடவென்று
குடித்து விட்டு வாயை துடைத்த படியே ”..ம்
அப்புறம் ?” என்று வசனத்தைப் பேசினார்.
ஏனோ திடீர் என்று இருமினார் ..கட் கட்
என்று அவரே காமிராவை நிறுத்தச்
சொன்னார் .
”இருமல் வந்து விட்டது. சரி டேக் போவோம் ”
என்றார்.
அடுத்த டேக் கேமரா ஓட , ஆக்ஷ்ன்
சொல்லப் பட தேங்காய் மதுக்
கிண்ணத்தில் அடுத்த ரவுண்டு
ஊற்றினார். சாப்பிட்டார்.பிறகு
வசனம் , இருமல் டேக் நிறுத்தம் ….
வசனகர்த்தாவுக்கு புரிந்து விட்டது .
இன்னிக்கு இந்த ஆள் நமக்கு ஒரு
சொட்டு கூட பாக்கி வைக்க
மாட்டான் என்று . அப்படிதான்
ஆயிற்று. தேங்காய்க்கு போதை
அதிகமாகிவிட ஷுட்டிங்கிலிருந்த விடை
பெற்று காரிலே ஏறி விட்டார் .
பாக்கி இருந்த சரக்கை தேங்காயின் டிரைவர்
கையில் எடுத்துப் போய் காரில் வைத்து
விட்டான் . தேங்காயிடம் டிரையினப்
ஆனவன்தானே டிரைவர் ,
சொல்லியா தர வேண்டும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக