ஞாயிறு, 9 அக்டோபர், 2016

நடிகை மனோரமா நினைவு தினம் அகடோபர் 10 (2015).

நடிகை மனோரமா நினைவு தினம்  அகடோபர் 10 (2015).

மனோரமா (26 மே 1937 - 10
அக்டோபர் 2015) தென்னிந்தியத்
திரைப்பட நடிகையாவார்.
நகைச்சுவைக்
கதாபாத்திரங்களில் தனது
திறனை வெளிப்படுத்திய இவர்
1500 திரைப்படங்களுக்கு மேல்
நடித்தார். இவர் தமிழ்த்
திரையுலகினராலும், தமிழ்த்
திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி'
என அன்போடு அழைக்கப்பட்டார்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து
முதலமைச்சர்களுடன் நடித்த
பெருமை கொண்டவர். கா. ந.
அண்ணாதுரை, மு. கருணாநிதி
இருவரும் நாடக மேடைகளில்
மனோரமாவுடன்
நடித்திருக்கிறார்கள். தவிர
ஜெயலலிதா மற்றும் ம. கோ.
இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த்
திரைப்படங்களில்
நடித்திருக்கிறார்கள். மேலும்
என். டி. ராமராவ் தெலுங்கு
படங்களில் இவருடன்
நடித்திருக்கிறார்.
ஆரம்பகால
வாழ்க்கை
இவரது இயற்பெயர் கோபிசாந்தா.
இவரது பெற்றோர் காசி 'கிளாக்'
உடையார் மற்றும் ராமாமிர்தம்.
மனோரமா தமிழ்நாடு
மாநிலத்தில் தஞ்சாவூர்
மாவட்டத்திலுள்ள
ராஜமன்னார்குடியில் வசதியான
குடும்பத்தில் பிறந்தவர்.  தந்தை
ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப்
பணியாற்றியவர். தந்தை காசி
கிளாக்குடையார்
மனோரமாவின் தாயின்
தங்கையை இரண்டாம் தாரமாகத்
திருமணம் புரிந்தார்.  இதனை
அடுத்து கணவனால்
புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம்
மனோரமாவுடன் வறுமையின்
காரணமாக காரைக்குடி அருகே
உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு
குடிபெயர்ந்தார்.  6 ஆம் வகுப்பு
வரை படித்துள்ளார். அங்கு
அவர்கள் பலகாரம் சுட்டு விற்பனை
செய்து வாழ்க்கையைத்
தொடங்கினார்கள். தனது
12ஆவது அகவையில் நடிப்புத்
தொழிலில் இறங்கினார்.
"பள்ளத்தூர் பாப்பா" என
அழைக்கப்பட்டார்  . நாடக
இயக்குனர் திருவேங்கடம்,
ஆர்மோனியக் கலைஞர்
தியாகராஜன் ஆகியோர்
இவருக்கு "மனோரமா" எனப் பெயர்
சூட்டினர்.
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா"
நாடகங்களில் சிறு வேடங்களில்
நடித்து வந்தார். அக்காலத்தில்
புதுக்கோட்டையில் எஸ். எஸ்.
ராஜேந்திரன் நாடகங்களில்
நடித்துக் கொண்டிருந்த போது
அவருக்கு மனோரமா பி. ஏ.
குமார் என்பவரால் அறிமுகம்
செய்து வைக்கப்பட்டார்.
மனோரமாவின் திறமையை
அறிந்துகொண்ட இராசேந்திரன்
தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக
மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார்.
இந்நாடக நிறுவனத்தின்
மணிமகுடம் , தென்பாண்டிவீரன்,
புதுவெள்ளம் உட்பட
நூற்றுக்கணக்கான நாடகங்களில்
நடித்தார். மனோரமா முதன்
முதலாக மஸ்தான் என்பவர்
இயக்கிய ஒரு சிங்கள மொழித்
திரைப்படத்தில் கதாநாயகிக்குத்
தோழியாக நடித்திருந்தார்.
பின்னர் ராஜேந்திரன், தேவிகா
நடித்த ஒரு திரைப்படத்தில் இவர்
நடித்தார். ஆனால் இத்திரைப்படம்
வெளிவராமல் பாதியிலேயே
நின்று விட்டது.
பெற்ற விருதுகள்
1000 திரைப்படங்களுக்கு மேல்
நடித்ததற்காக கின்னஸ் உலக
சாதனைப் புத்தகத்தில்
இடம்பெற்றார்.
பத்ம ஸ்ரீ – 2002
தேசிய திரைப்பட விருது -
சிறந்த துணை நடிகை -புதிய
பாதை - 1988
தமிழ்நாடு அரசின்
கலைமாமணி விருது
வாழ்நாள் சாதனையார் விருது
- 2015 புதிய தலைமுறை
(தொலைக்காட்சி) சக்தி
விருதுகள் [10]
சொந்த வாழ்க்கை
மனோரமா 1964 ஆம் ஆண்டில்
தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த
எஸ். எம். ராமநாதன் என்பவரைக்
காதலித்துத் திருமணம்
புரிந்தார். இவர்களுக்கு பூபதி
எனும் மகன் பிறந்தார். 1966 ஆம்
ஆண்டில் இராமநாதனுடன்
மணமுறிப்புப் பெற்று,
சென்னையில் தனியாக வாழ்ந்து
வந்தார்.
மறைவு
மனோரமா தனது 78 ஆவது
அகவையில் 2015 அக்டோபர் 10
அன்று இரவு 11:00 மணியளவில்
மாரடைப்பால் சென்னையில்
உள்ள தனியார் மருத்துவமனை
ஒன்றில் காலமானார்.
திரைத்துறைப்
பங்களிப்புகள்
முதன்மைக் கட்டுரை: மனோரமா
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
.
பாடிய பாடல்கள்
"தாத்தாதாத்தா பொடி
கொடு" ( மகளே உன் சமத்து )
"வா
வாத்தியார்" ( பொம்மலாட்டம்)
"தில்லிக்கு
ராஜானாலும்" ( பாட்டி சொல்லை
தட்டாதே )
"மெட்ராச சுத்தி பாக்க" ( மே
மாதம் )
"தங்கையெனும்
பாசக்கிளி" ( பாசக்கிளிகள் )
"தெரியாதோ நோக்கு
தெரியாதோ" ( சூரியகாந்தி )
"பார்த்தாலே தெரியாதா" ( ஸ்ரீ
ராகவேந்திரா )
மஞ்சள்கயிறு

**********************************
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம்
மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு
மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர்
நடிகை மனோரமா. அவரது
இயற்பெயர் கோபிசாந்தா.
அவருடைய குடும்பம்
மன்னார்குடியில் இருந்து
காரைக்குடி அருகேயுள்ள
பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.
குடும்பச்சூழல் காரணமாக 12
வயதிலேயே மேடை நாடகங்களில்
நடிக்கத் தொடங்கினார். நாடக
நடிகையானபோது அவருக்கு
மனோரமா என்கிற பெயர்
சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன
உச்சரிப்பு, நடனம் என்று
அனைத்திற்காகவும் அவர் நாடக
உலகில் பாராட்டப்பட்டார்.
வைரம் நாடக சபா உள்ளிட்ட
தொழில்முறை நாடக நிறுவனங்கள்
பலவற்றில் நடித்துக்கொண்டிருந்த
மனோரமாவை மேடை நாடகக்
கலைஞராக பெரிய அளவில்
அடையாளம் காட்டியது திராவிட
இயக்கத்தின் பிரச்சார
நாடகங்கள்தான்.
திமுக நிறுவனர் அண்ணா, மு.
கருணாநிதி, எஸ் எஸ் ராஜேந்திரன்
உள்ளிட்ட பல முன்னணி திராவிட
இயக்கத்தலைவர்களுடன் அவர் மேடை
நாடகங்களில் நடித்தார். அவரது
தெளிவான வசன உச்சரிப்பும்,
உச்சஸ்தாயியில் அநாயாசமாக
பாடும் வல்லமையும் அவருக்கு
ரசிகர்கள் மத்தியில் பெரும்
வரவேற்பை பெற்றுத்தந்தன.
மாலையிட்ட மங்கையாக
திரைப்படத்துறைக்குள் வந்தார்
நாடக நடிகையாக இருந்த
மனோரமாவை கவியரசு
கண்ணதாசன் திரையுலகில்
அறிமுகம் செய்தார். கண்ணதாசன்
தயாரித்து 1958 ஆம் அண்டு
வெளியான "மாலையிட்ட மங்கை"
என்கிற திரைப்படத்தில்
அறிமுகமானார் மனோரமா.
மனோரமா முதன்முதலில்
கதாநாயகியாக நடித்த திரைப்படம்
"கொஞ்சும் குமரி". மாடர்ன்
தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்
தயாரித்து 1963ஆம் ஆண்டு
வெளியானது இந்த திரைப்படம்.
அதேசமயம் மனோரமா என்ற
மாபெரும் நடிகையின்
நடிப்புத்திறன் பெரிதும்
வெளிப்பட்ட முக்கிய திரைப்படமாக
தில்லானா மோகனாம்பாள்
படத்தையே திரை விமர்சகர்கள்
இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.
அந்த திரைப்படத்தின் கதாநாயகன்
சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த
சிவாஜிக்கும், திருவாரூர்
மோகனாம்பாளாக நடித்த
பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல்,
‘ஜில் ஜில் ரமாமணி’ என்ற
நகைச்சுவைக் கதாபாத்திரத்தில்
மிகச்சிறப்பாக நடித்துப்
பாராட்டைப் பெற்றார் மனோரமா.
ஜில் ஜில் ரமாமணியாக
சிரிக்கவைத்தார்
ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம்
நகைச்சுவை நடிகையாக
மனோரமா புகழ் பதித்த பல
திரையுலக பாத்திரங்களில்
முக்கியமானதாக இன்றுவரை
பேசப்படுகிறது.
அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த்
திரையுலகின் கதாநாயகர்கள்,
நகைச்சுவை நடிகர்கள்,
குணச்சித்திர நடிகர்கள்
ஆகியோருக்கு ஈடுகொடுத்து
நடித்து புகழ் பெற்றவர் மனோரமா.
அவர் திரைத்துறையில்
அறிமுகமானபோது
தமிழ்த்திரையுலகின் முடிசூடா
மன்னர்களாக திகழ்ந்த சிவாஜி,
எம்.ஜி.ஆர் படங்களில் துவங்கி கமல்,
ரஜினி படங்களில் அவர்களுக்கு
போட்டி போட்டு நடித்தவர், நாகேஷ்,
சோ, தேங்காய் சீனிவாசன்,
தங்கவேலு, சுருளிராஜன்,
கவுண்டமணி எனப் பல நகைச்சுவை
நடிகர்களுடன் நடித்தவர்,
பாக்கியராஜ், சத்யராஜ் என்று
பலதரப்பட்ட நடிகர்களுடனும்
நடித்திருக்கிறார்
மனோரமா.நகைச்சுவையாக
மட்டுமல்லாமல் குணச்சித்திர
வேடங்களிலும் மனோரமாவின்
நடிப்பு முத்திரை பதித்தது.
தனித்துவம் வாய்ந்தது.
நகைச்சுவைக்கு மட்டுமல்ல
நவரசங்களுக்கும் நாயகி என
பாராட்டப்பட்டார்
நகைச்சுவை நடிப்போடு அவரது
தனித்துவமான குரலில் பாடிய
நூற்றுக்கணக்கான பாடல்களும்
இன்றளவும் ரசிகர்கள் நினைவில்
நிற்பவை. மனோரமாவைத்
திரையில் முதலில் பாட வைத்தவர்
இசையமைப்பாளர்
ஜி.கே.வெங்கடேஷ். மகளே உன்
சமத்து என்ற படத்தில் ‘தாத்தா..
தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத
வயசிலே சடுகுடு’ என்று
எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து
பாடினார் மனோரமா.
பொம்மலாட்டம் படத்தில்
வி.குமாரின் இசையில் ‘வா..
வாத்யாரே வூட்டாண்ட.. நீ
வராங்காட்டினா வுடமாட்டேன்”
என்று சென்னை வழக்கில்
மனோரமா பாடிய பாடல்; கருந்தேள்
கண்ணாயிரம் படத்தில்,
‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு
பின்னாலே.. நான் போயி
வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே..”
என்று அவர் பாடிய பாடல்; பாட்டி
சொல்லைத் தட்டாதே படத்தில்
சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு
ராஜான்னாலும் பாட்டி சொல்லைத்
தட்டாதே‘ என்ற பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான்
இசையில் மே மாதம் படத்தில்,
‘மெட்ராஸை சுத்திப்பார்க்கப்
போறேன்‘ என்கிற பாடல் என
மனோரமாவின் கம்பீரமான குரலில்
ஒலித்தபாடல்கள் இன்றளவும்
பிரபலமாக இருக்கின்றன.
ஆயிரம் படங்களைத்தாண்டிய
ஆச்சி
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம்,
இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல்
நடித்து கின்னஸ் சாதனை
படைத்திருப்பவர் மனோரமா. அவர்
நடித்த நாடகங்களின் எண்ணிக்கை
இரண்டாயிரத்திற்கு அதிகம்.
திரைப்படத்துறையில் முன்னணி
நடிகையாக இருந்தபோதும் அவர்
மேடை நாடகங்களில் தொடர்ந்து
நடித்தவர். அவர் நடித்த மேடை
நாடகங்களின் எண்ணிக்கை 5000
வரை இருக்கலாம் என்றும் சில
புள்ளி விவரங்கள்
வெளியாகியுள்ளன.
இது தவிர பல வானொலி
நாடகங்கள், தொலைக்காட்சித்
தொடர்களிலும் மனோரமா
நடித்திருக்கிறார். உலகின்
தமிழர்கள் வாழும் அனைத்து
நாடுகளிலும் நாடகங்களும், கலை
நிகழ்ச்சிகளும் நடத்தியவர் அவர்.
இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ,
சிறந்த குணச்சித்திர நடிகைக்கான
தேசிய விருது, தமிழக அரசின்
கலைமாமணி விருதுகளுடன்
ஏராளமான திரைத்துறைக்கான
விருதுகளையும் மனோரமா
பெற்றிருக்கிறார்.
ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர்
திமுக நிறுவனர் சி என்
அண்ணாதுரை, மு. கருணாநிதி,
அதிமுக நிறுவனர் எம் ஜி
ராமச்சந்திரன், ஜெ ஜெயலலிதா,
ஆந்திராவின் தெலுகு தேசம்
நிறுவனர் என் டி ராமராவ் என ஐந்து
முதல்வர்களுடன் நடித்தவர்
மனோரமா.
சுமார் 50 அண்டு காலம், ஆயிரம்
திரைப்படங்களுக்கும் மேலாக
நடித்திருக்கிறார். மிகச்சிறந்த
நடிப்பாற்றல், தெளிவான வசன
உச்சரிப்பு, கணீர் குரலில் பாட்டு
என அவரது பன்முகத்திறமைகள்
அவரை சுமார் அரை
நூற்றாண்டுகாலம் திரையுலகில்
அசைக்க முடியாத ஆளுமையாக
வைத்திருந்தது.
தமிழ் திரைப்படத்துறையில்
கலைவாணரில் தொடங்கி இன்றைய
இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை
ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு
என்றொரு தொடர்ச்சியான நெடிய
பாரம்பரியம் உண்டு.
ஆனால், நகைச்சுவை
நடிகைகளுக்கு அப்படியானதொரு
தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை
என்கிற விமர்சனம் உண்டு. தமிழில்
நகைச்சுவை நடிகைகளின்
எண்ணிக்கை குறைவு என்பது
மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள்
நீடித்து நிலைப்பது இல்லை.
நகைச்சுவைக்கென வரும்
நடிகைகள் குறைவான காலத்தில்
கிடைக்கும் வாய்ப்புகளில்
பிரகாசித்து விட்டு
ஒதுங்கிவிடுவார்கள்.
ஆனால், மனோரமா அதிலும்
மாறுபட்டவர். பெருமளவு
ஆண்களின் ஆதிக்கத்துக்கு
உட்பட்டதொரு துறையாக
வர்ணிக்கப்படும்
தமிழ்த்திரைப்படத்துறையில் அரை
நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக
அசைக்கமுடியாத நடிகையாக
நிலைத்திருந்தவர் ஆச்சி என்று
அன்பு கலந்த மரியாதையுடன்
அழைக்கப்பட்ட நடிகை மனோரமா.
அவரின் புகழ் அடுத்த
நூற்றாண்டிலும் பேசப்படும்
என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக