சனி, 29 அக்டோபர், 2016

இசையமைப்பாளர் எஸ். டி. பர்மன் நினைவு தினம் அக்டோபர் 31.

இசையமைப்பாளர் எஸ். டி. பர்மன் நினைவு தினம் அக்டோபர் 31.

எஸ். டி. பர்மன் அல்லது சச்சின் தேவ்
பர்மன் ( Sachin Dev Burman) என்பவர் இந்தி
திரையுலகப் பின்னணி இசையில்
தனிப்பெரும் ஆளுமை
கொண்டவர் ஆவார்.
ரசிகர்களால் "தாதா" என அன்புடன்
அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன், திரிபுரா
மன்னரின் நேரடி வாரிசு ஆவார்.
இவர் இந்தியிலும் வங்காளத்திலும் 100
இற்கும் மேலான திரைப்படங்களுக்கு இசை
அமைத்துள்ளார். லதா மங்க்கேசுகர்,
முகமது ரபி , கிசோர் குமார், ஆசா போசுலே ,
கீதா தத்து போன்ற பாடகர்கள் பர்மனின்
இசை அமைப்பில் பாடியுள்ளார்கள். எஸ். டி.
பர்மன், 14 இந்தி திரைப்படங்களிலும் 13
வங்காள மொழித்
திரைப்படங்களிலும் பாடல்கள் தாமே
பாடியுள்ளார். இவரது மகன் ராகுல்
தேவ் பர்மன் பாலிவுட் திரைப்படங்களின்
பின்னணி இசையமைப்பாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
அக்டோபர் 1, 1906 அன்று, அன்றைய
பிரித்தானிய இந்தியாவின்
வங்காளத்தில் (தற்போது பங்களாதேஷ் ),
கோமில்லா என்னும் இடத்தில் பர்மன்
பிறந்தார். எஸ். டி. பர்மனின் தந்தையார்,
திரிபுராவின் ராச குடும்பத்தைச் சார்ந்த
நபாட்விப்சந்திர தேவ் பர்மன் மற்றும்
தாயார் மணிப்பூர் மன்னர் குடும்பத்தைச்
சார்ந்த நிருபமாதேவி ஆவர். அவர்களின்
9 குழந்தைகளில் 5 ஆண்பிள்ளைகளுள்
கடைசியாகப் பிறந்தவர் சச்சின் தேவ் பர்மன்
ஆவார். இவரது இரண்டாவது அகவையில்
தாயார் காலமானார்.
கல்வி
எஸ். டி. பர்மன், கோமில்லா விக்டோரியா
கல்லூயில் இளங்கலைபட்டமும்,
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்
முதுகலைப்பட்டத்தையும் முடித்துள்ளார்.
அதோடு, 1925 முதல் 1930 ஆம் ஆண்டு வரை
இசைக்கலைஞர் கே.சி டேவிடம் முறையான
இசைப்பயிற்சி பெற்றார். அதன்
பின்னர் 1932 ஆம் ஆண்டு, பீசமதேவ்
சட்டோபதயா என்பவரின் அறிவுறுத்தலின்படி
கைஃபா பாதால் கான் (சாரங்கி
கலைஞர்), அகர்தலாவில் உள்ள
உஸ்தாத் அல்லாவுதீன் கான்,
உஸ்தாத் பாதல் கான் ஆகியோரின்
கீழும் பயிற்சிகள் மேற்கொண்டார்.
விருதுகள் மற்றும்
அங்கீகாரங்கள்
1934: தங்க பதக்கம் வங்காளம் அகில
இந்திய இசை மாநாட்டில் கல்கத்தா.
1934, 1958 : சங்கீத நாடக விருது.
1958: ஆசியா திரைப்பட சொசைட்டி
விருது.
தேசிய திரைப்பட விருதுகள்
1970: சிறந்த ஆண் பின்னணி
பாடகருக்கான தேசிய திரைப்பட விருது.
1974: சிறந்த இசை அமைப்பாளருக்கான
தேசிய திரைப்பட விருது: ஜிந்தகி ஜிந்தகி.
1969: நாட்டுப்புற இசை மீது பத்ம ஸ்ரீ
சர்வதேச ஜூரி.
பிலிம்பேர் விருதுகள்
1954: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர்
விருது: டாக்சி டிரைவர்
1973: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர்
விருது: அபிமான்
1959 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர்
விருது: சுஜாதா : பரிந்துரை
1965: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர்
விருது: கையேடு: பரிந்துரை
1969: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர்
விருது: ஆராதனா: பரிந்துரை
1970: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர்
விருது: தலாஷ் : பரிந்துரை
1974: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர்
விருது: பிரேம் நகர் : பரிந்துரை
மறைவு
1975ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம்
நாள், இந்தியாவின் மகாராட்டிர
மாநிலம் , மும்பையில் தனது 69 வது
அகவையில் காலமானார்.

***********************************
இந்திய திரை இசை உலகில் எஸ்.டி. பர்மன்
(தந்தை) மற்றும் ஆர்.டி. பர்மன் (மகன்) என்று
சொன்னால்
தெரியாதவர்கள் மிகக் குறைவு. அந்த
அளவுக்கு, ஹிந்தி திரை இசை உலகில்
கொடி கட்டி பறந்தார்கள். இருவருமே
இன்று உயிரோடு இல்லை.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் கூட,
மொழி தெரியாவிட்டாலும்,
ஹிந்தி திரைப்பட பாடல்களை, குறிப்பாக
அதன் இசையை ரசித்தார்கள். அப்படிபட்ட
இசையை தந்தவர்களுள் ஆர்.டி. பர்மன்
குறிப்பிடதக்கவர்.
ஆர்.டி.பர்மனைப் பற்றி "ஆர்.டி.பர்மானியா"
என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம்
வெளி வந்துள்ளது. இப்புத்தகத்தை
மும்பையில் உள்ள முது பெரும்
பத்திரிக்கையாளர் திரு. சைதன்ய படுகோனே
எழுதியுள்ளார்.
ஆர்.டி.பர்மனுடன் தொடர்பு
ஏற்பட்டது எப்படி? ஆர்.டி.பர்மன் ஒரு முறை திரு.
சைதன்யா வீட்டில் உள்ள
தொலைபேசியில் அழைத்துள்ளார். போனை
எடுத்தவர் சைதன்யாவின் அப்பா,
அப்பாவிடம் ஆர்.டி.பர்மன் என்ன?
சொன்னார்
என்பதையெல்லாம் அப்புத்தகத்தில்
சொல்லியுள்ளார்.
இசையமப்பாளராக அறிமுகமானதிலிருந்து,
20 தடவை பிலிம் ஃபேர் விருதுக்கு அவர்
இசையமைத்த படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் இருபது வருடங்கள் கழித்துதான்
அவர் இசையமத்த "சனம் தேரி கசம்' (Sanam
Teri Kasam) என்ற ஹிந்தி படத்திற்கு கிடைத்தது.
இரண்டாவதாக 'மசூம்' (Masoom) என்ற
படத்திற்கு கிடைத்தது. ஏறத்தாழ இருபது
ஆண்டுகள் கிடைக்காமல் போன ஃபிலிம் பேர்
விருது "சனம் தேரி கசம்" படத்திற்கு கிடைத்த போது
ஆர்.டி.பர்மன் சந்தோஷமடையவில்லை.
ஏனென்றால், அந்தப் படத்தில்
எல்லாப் பாடல்கமே மேற்கத்திய இசையை
அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
ஆனால், 'மசூம்' படத்திற்கு பிலிம் ஃபேர் விருது
கிடைத்த போது ஆர்.டி.பர்மனுக்கு அளவற்ற
மகிழ்ச்சியில் இருந்தார் என்று அந்தப்
புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதோ அந்தப்
பாட்டு
மேலும், இந்தப் பாட்டை பாடிய ஆர்த்தி
முகர்ஜிக்கு, 1983ஆம் ஆண்டிற்கான , சிறந்த
பாடகிக்கான 31வது பிலிம் ஃபேர் விருதும்
மற்றும் சிறந்த பாடகிக்கான தேசிய விருதும்
கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக