கே. பி. சுந்தராம்பாள் பிறந்த தினம் அக்டோபர் 10, ( 1908 ).
கே. பி. சுந்தராம்பாள் என
அறியப்படும் கொடுமுடி
பாலாம்பாள் சுந்தராம்பாள்
( அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19,
1980 ) தமிழிசை , நாடகம் , அரசியல்,
திரைப்படம், ஆன்மிகம் எனப்
பலதுறைகளிலும் புகழ்
ஈட்டியவர். இவர் கொடுமுடி
கோகிலம் என்றும்
அழைக்கப்பட்டார்.
இளமைப்பருவம்
ஈரோடு மாவட்டத்திலுள்ள
கொடுமுடியில் பாலாம்பாள்
என்ற அம்மையாருக்கு
சுந்தராம்பாள் பிறந்தார்.
இவருக்கு கனகசபாபதி,
சுப்பம்மாள் என்ற இரண்டு
சகோதரர்கள். இளம்வயதிலேயே
தந்தையை இழந்தார். தனது
சகோதரர்களின் ஆதரவால்,
குடும்பத்தை நடத்தி வந்தார்
தாயார். 'கொடுமுடி லண்டன்
மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார்
சுந்தராம்பாள்.
நாடக வாழ்வில்
இள வயதில் சுந்தராம்பாள்
வேலுநாயர் - ராஜாமணி அம்மாள்
நாடகக் குழுவினர் நல்லதங்காள்
நாடகம் நடத்த கரூருக்கு
வந்திருந்தனர். அந்த நாடகத்தில்
நல்லதங்காளின் மூத்த
பிள்ளையான ஞானசேகரன்
வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று
ஆண் வேடத்தில் நடித்தார்.
பசிக்குதே! வயிறு பசிக்குதே
என்ற பாட்டை மிக அருமையாகப்
பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த
பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து
நாடகங்களில் நடிக்கத்
தொடங்கினார். சொந்தக்
குரலிலேயே பாடி நடித்தார்.
1917 −ல் கொழும்பு சென்று
நடிக்கத் தொடங்கினார்.
இலங்கையின் பல ஊர்களிலும்
இவர் நடித்த நாடகம் நடைபெற்றது.
1929களில் நாடு திரும்பினார்.
வள்ளி திருமணம், நல்லதங்காள்,
கோவலன், ஞானசெளந்தரி,
பவளக்கொடி போன்ற
அக்காலத்தில் புகழ்பெற்ற
நாடகங்களில் நடித்தார்.
கிட்டப்பாவுடன்
திருமணம்
மீண்டும் கே.பி.எஸ். 1926 −ல்
கொழும்புக்கு நாடகக்
குழுவுடன் சென்றார். கே.பி.எஸ்
புகழ் பரவலாக வளர்ந்திருந்தது.
அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா
தனது குரல் வளத்தால் நடிப்பால்
பலரது கவனத்தைப் பெற்று
புகழுடன் இருந்து வந்தார்.
கொழும்பில் கேபிஎஸ் உடன்
இணைந்து கிட்டப்பா நடிக்க
ஆரம்பித்தார்.
1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் -
கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம்
அரங்கேறியது. இருவரும் பின்னர்
திருமணம் புரிந்து கொண்டனர்.
பல்வேறு இசைத் தட்டுகளில்
கேபிஎஸ் பாடல்கள் பதிவு
செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத்
தொடங்கின.
1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா
காலமானார். அப்போது
அவருக்கு வயது 28.
சுந்தராம்பாளுக்கு வயது 25.
அன்றிலிருந்து அவர் வெள்ளை
சேலைக் கட்டத்தொடங்கினார்.
எந்தவொரு ஆண் நடிகருடனும்
ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை
என சபதம் மேற்கொண்டார். அதைக்
கடைசி வரை காப்பாற்றி வந்தார்.
நீண்டகாலமாக
பொதுவாழ்க்கையில் இருந்து
ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934 −ல்
நந்தனார் நாடகத்தில் நடித்தார்.
தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி
வந்தார். அவைகளில்
பெரும்பாலும் அவர் ஆண் வேடம்
தரித்து பெண் வேடத்துக்கு
வேறு பெண் நடிகர்களை
அமர்த்தியிருந்தார்.
திரைப்படத்
துறையில்
பக்த நந்தனார் என்னும் படத்தில்
நந்தனார் வேடம் பூண்டு
நடித்தார். பக்த நந்தனாரில்
மொத்தம் 41 பாடல்கள். இவற்றில்
கேபிஸ் பாடியவை 19 பாடல்கள்.
1935இல் இப்படம் வெளிவந்தது.
அடுத்ததாக மணிமேகலையில்
நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு
ஆரம்பிக்கப்பட்டு 1940 −ல் படம்
வெளிவந்தது. இப்படத்தில் 11
பாடல்களை இவர் பாடியிருந்தார்.
தமிழிசை முதல் மாநாட்டு
இசையரங்கில் ( ஜனவரி 4, 1944 )
கலந்து கொண்டார்.
தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார்
என்ற படத்தில் ஔவையார்
வேடமேற்று நடித்தார். இப்படம்
1953 −ல் வெளிவந்தது. 'பொறுமை
யென்னும் நகையணிந்து' ,
'கன்னித் தமிழ்நாட்டிலே -
வெண்ணிலவே' போன்ற பாடல்கள்
பிரசித்தமானவை. ஒளவையார்
படத்தில் 48 பாடல்கள். இவற்றில்
கேபிஎஸ் பாடியவை 30.
1964 பூம்புகார் படம்
வெளிவந்தது. இப்படத்தில்
கவுந்தி அடிகள் பாத்திரத்தை
கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.
மகாகவி காளிதாஸ் ( 1966),
திருவிளையாடல் ( 1965), கந்தன்
கருணை (1967) , உயிர் மேல் ஆசை
( 1967 ), துணைவன் ( 1969 ), சக்தி
லீலை ( 1972 ), காரைக்கால்
அம்மையார் ( 1973), திருமலை
தெய்வம் ( 1973 ), மணிமேகலை
(பாலசன்யாசி) உள்ளிட்ட 12
படங்களில் கேபிஎஸ் பாடி
நடித்தார்.
அரசியலில்
காங்கிரஸ் பிரச்சாரங்களில்
சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு
வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை
ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய
எதிர்ப்பு ஆகிய பாடல்களையும்
பாடி வந்தார். காமராசர்
ஆட்சியின் போது 1958 ஆம்
ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற
மேலவை உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதுகளும்
சிறப்புகளும்
இசைப்பேரறிஞர் விருது,
1966 ; வழங்கியது: தமிழ் இசைச்
சங்கம்
பத்மஸ்ரீ, 1970; வழங்கியது: இந்திய
அரசு
சிறந்த தேசிய பின்னணிப்
பாடகர் - பெண், திரைப்படம் -
துணைவன் 1969;
இவர் பாடிய சில
திரைப்படப்
பாடல்களின்
பட்டியல்:
எண் பாடல் பாடல
1 பழம் நீயப்பா... கண்ணதா
2
அறியது
அறியது... /
என்றும் பாடல்
புதியது..
கண்ணதா
3 துன்பமெல்லாம்... மாயவநா
4
அன்று
கொல்லும் /
நீதியே
நீயென்னும்…
மாயவநா
5 வாழ்க்கை
என்னும் /
ஒருவனுக்கு
ஒருத்தி…
மு. கரு
6 தப்பித்து
வந்தானம்மா… மாயவநா
7 கேட்டவரம்… கண்ணதா
8 ஓடுங்கால் ஓடி… கண்ணதா
9 ஏழுமலை
இருக்க…
உளுந்தூ
சண்முகம்
10 ஞானமும்
கல்வியும்… கண்ணதா
11 பழநி மலை
மீதிலே… கண்ணதா
12 கொண்டாடும்
திருச்செந்தூர்… கண்ணதா
13 சென்று வா
மகனே... கண்ணதா
14 காலத்தால்
அழியாத… கண்ணதா
***********************************
நா டகத்திலும், சினிமாவிலும்
புகழ் பெற்று விளங்கியவர்
கே.பி.சுந்தராம்பாள். சினிமா
படங்கள் ஒரு லட்சம் ரூபாய் செலவில்
தயாரிக்கப்பட்டு வந்த காலக்கட்டத்தில்
(1935), 'நந்தனார்' படத்தில் நடிக்க ரூ.1
லட்சம் வாங்கியவர், அவர்.
சுந்தராம்பாளின் வரலாறு,
சினிமா கதையையும்
மிஞ்சக்கூடியது.
கரூரை அடுத்த கொடுமுடியில்
ஒரு ஏழைக்குடும்பத்தில் 1908-ம்
ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி
சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு
கனகசபாபதி என்று ஒரு தம்பி.
சுப்பம்மாள் என்று ஒரு தங்கை.
குடும்பத்தலைவர் இறந்ததால்,
சுந்தராம்பாள் குடும்பம்
வறுமையில் வாடியது. வறுமை
அளவு கடந்து போனதால்
சுந்தராம்பாளின் தாயார்
பாலம்பாள், குழந்தைகளுடன்
காவிரியில் விழுந்து தற்கொலை
செய்து கொள்ள முயன்றார்.
குழந்தைகள் பயந்து அழுத தால்,
அவர் தன் மனதை மாற்றிக்கொண்டு,
குழந்தைகளுடன் சேர்ந்து அழுதார்.
சுந்தராம்பாளுக்கு நல்ல குரல்
வளம் உண்டு. அதனால்
வேலுநாயக்கர் நடத்திய
நாடகக்கம்பெனியில் குழந்தை
நட்சத்திரமாக சேர்ந்தார்.
படிப்படியாக முன்னேறி ஸ்பெஷல்
நாடகங்களில் நடித்துப்
புகழ்பெற்றார்.
கிட்டப்பா
இந்தக்கால கட்டத்தில், நாடக உலகின்
முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்
எஸ்.ஜி.கிட்டப்பா. நெல்லை
மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை,
அந்தக் காலத்தில் திருவாங்கூர்
சமஸ்தானத்தில் சேர்ந்திருந்தது.
அங்கு கங்காதர அய்யர் -
மீனாட்சியம்மாள் தம்பதிகளின்
மகனாக 1906-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்
தேதி கிட்டப்பா பிறந்தார்.
அவருடைய இயற்பெயர்
ராமகிருஷ்ணன். எல்லோரும்
செல்லமாக 'கிட்டப்பா', 'கிட்டன்'
என்று அழைப்பார்கள். அதில்
'கிட்டப்பா' என்ற பெயர்
நிலைத்துவிட்டது.
கிட்டப்பாவுடன் பிறந்தவர்கள் எட்டு
சகோதரர்கள். ஒரு சகோதரி.
சகோதரர்களில் மூன்று பேர்,
அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய
சங்கரதாஸ் சுவாமிகளின்
நாடகக்குழுவில் நிரந்தர
நடிகர்களாக இருந்தார்கள்.
கிட்டப்பா ஆறு வயது சிறுவனாக
இருந்தபோது, சகோதரர்களின்
நாடகத்தைக் காணச் சென்றார்.
மேடையில் ஏறி, கணீர் குரலில்
பாடினார். அதுமுதல் அவரும் நாடக
நடிகரானார். இனிய குரலில் பாடி
புகழ்பெற்றார்.
கிட்டப்பாவுக்கு அவருடைய 18-வது
வயதில் (24-6-1923) திருமணம் நடந்தது.
மணமகள் பெயர் கிட்டம்மாள்!
ஆச்சரியமான பெயர்ப்பொருத்தம்.
கிட்டப்பா நடித்த நாடகங்களில்
'தசாவதாரம்' தனிச் சிறப்பு
வாய்ந்தது. ஒரே ஆண்டில் 200 முறை
மேடை ஏறியது.
இலங்கையில் நாடக சங்கமம்
இந்த சமயத்தில் கே.பி.சுந்தராம்பாள்
இலங்கையில் நாடகங்களில் நடித்துக்
கொண்டிருந்தார்.
'கிட்டப்பாவையும்,
சுந்தராம்பாளையும் ஜோடியாக
நடிக்க வைத்தால், நாடகங்கள்
பிரமாதமாக இருக்கும். வசூலும்
அமோகமாக இருக்கும்' என்று நாடக
அமைப்பாளர்கள் நினைத்தார்கள்.
இலங்கைக்கு வந்து நாடகங்களில்
நடிக்கும்படி கிட்டப்பா
சகோதரர்களுக்கு அழைப்பு வந்தது.
அந்த அழைப்பை ஏற்று,
கிட்டப்பாவும் அவருடைய
சகோதரர்களும் 1925-ம் ஆண்டு
இறுதியில் இலங்கை சென்றனர்.
எஸ்.ஜி.கிட்டப்பாவும்,
கே.பி.சுந்தராம்பாளும் முதன்
முறையாக இலங்கையில்
'வள்ளித்திருமணம்' நாடகத்தில்
ஜோடியாக நடித்தனர். இருவரும்
போட்டிபோட்டுப் பாடி, ரசிகர்களின்
பாராட்டைப் பெற்றனர்.
தமிழ்நாட்டுக்குத் திரும்பிய
பிறகும் கிட்டப்பாவும்,
சுந்தராம்பாளும் பல நாடகங்களில்
இணைந்து நடித்தனர். அவர்கள் புகழ்
திக்கெட்டும் பரவியது.
'வள்ளித் திருமணம்', 'கோவலன்',
'ஞான சவுந்தரி' முதலிய நாடகங்கள்
சக்கைபோடு போட்டன. பேசும்
படங்கள் வராத அந்தக்காலக் கட்டத்தில்
கிட்டப்பாவும், சுந்தராம்பாளும்
நாடகப்பாடல்கள், இசைத் தட்டுகளாக
வெளிவந்து மூலை
முடுக்கெல்லாம் எதிரொலித்தன.
காதல் திருமணம்
நாடகங்களில் இணைந்து நடித்ததால்,
கிட்டப்பாவுக்கும்,
சுந்தராம்பாளுக்கும் காதல்
மலர்ந்தது.
கிட்டப்பா திருமணம் ஆனவர் என்பது
சுந்தராம்பாளுக்குத் தெரியும்.
எனினும் 'கடைசி வரை உன்னைக்
காப்பாற்றுவேன்' என்று கிட்டப்பா
உறுதிமொழி அளித்ததால், அவரை
மணக்க சம்மதித்தார்.
கிட்டப்பா-சுந்தராம்பாள் காதல் பற்றி
அறிந்த கிட்டப்பாவின் சகோதரர்
அப்பாதுரை அய்யரும்,
சுந்தராம்பாளின் மாமா
மருக்கொழுந்துவும் கலந்து பேசி,
இருவருக்கும் திருமணம் செய்து
வைக்க ஏற்பாடு செய்தனர்.
1927-ம் ஆண்டில், கிட்டப்பா-
சுந்தராம்பாள் திருமணம்
மாயவரத்தில் எளிய முறையில்
நடந்தது.
1. ஜெமினி அவ்வையாரில்,
அவ்வையாராக
கே.பி.சுந்தராம்பாள்
2. நாடகத்தில் ராஜா வேடத்தில்
கே.பி. சுந்தராம்பாள்
இந்தத் தம்பதிகளுக்கு ஓர் ஆண்
குழந்தை பிறந்து சில நாட்களில்
இறந்து விட்டது. இதனால் பெரும்
சோகத்திற்கு உள்ளான
கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் சில
மாதங்கள் நாடகங்களில் நடிக்காமல்
இருந்தனர்.
இதற்கிடையே, கிட்டப்பாவையும்,
சுந்தராம்பாளையும் பிரிக்க,
உறவினர்களில் சிலர் சதி செய்து,
அதில் வெற்றியும் பெற்றனர்.
கிட்டப்பா, சுந்தராம்பாளை
பிரிந்தார். இருவரும் பிரிய
நேரிட்டதற்கு, இன்னொரு
காரணமும் அப்போது கூறப்பட்டது.
'கிருஷ்ணலீலா' என்ற நாடகத்திற்குப்
போக வேண்டாம் என்று கிட்டப்பா
கூறியதாகவும், அதை மீறி
சுந்தராம்பாள் அந்த நாடகத்திற்கு
சென்றதால், கிட்டப்பா கோபம்
அடைந்ததாகவும் பத்திரிகைகள்
எழுதின.
'நான் என்ன பிழை
செய்திருந்தாலும், மன்னித்து
வீட்டுக்கு வாருங்கள்' என்று
கிட்டப்பாவுக்கு பல கடிதங்கள்
எழுதினார், சுந்தராம்பாள். பலன்
இல்லை. அக்கடிதங்கள், கல்லையும்
கரைக்கும் கண்ணீர் காவியங்களாக
திகழ்ந்தன.
கிட்டப்பா மரணம்
கிட்டப்பாவுக்கு குடிப்பழக்கம்
உண்டு. குடும்ப சூழ்நிலை
காரணமாக, குடிப்பழக்கம்
அதிகமாகி, மதுவுக்கு
அடிமையானார்.
சிகிச்சை அளித்த டாக்டர், 'உங்கள்
குடல் வெந்து போயிருக்கிறது.
ஈரல் சுருங்கிப் போய்விட்டது. இனி
குடித்தால், உயிருக்கு ஆபத்து'
என்று எச்சரித்தும் குடியை
கிட்டப்பா நிறுத்தவில்லை.
1933-ம் ஆண்டு திருவாரூரில் ஒரு
நாடகத்தில் நடித்துக்
கொண்டிருக்கும் போது, மயக்கம்
போட்டு விழுந்தார். பிறகு குணம்
அடைந்தாலும், படுத்த
படுக்கையானார்.
1933, டிசம்பர் 2-ந் தேதி கிட்டப்பா
காலமானார். இறந்தபோது
அவருக்கு வயது 28.
சுந்தராம்பாளுக்கு வயது 25.
கிட்டப்பா இறந்த செய்தியை
சுந்தராம்பாளுக்கு தாமதமாகவே
தெரிவித்தார்கள். தகவல் அறிந்ததும்,
அழுது கொண்டே
விரைந்தோடினார். ஆனால், பிற்பகல்
3 மணிக்கு இறந்த கிட்டப்பா உடலை 6
மணிக்கு தகனம் செய்து விட்டார்கள்.
ஆயினும் சுந்தராம்பாள்
கிட்டப்பாவின் அஸ்தி கலசத்தை
பெற்று, காசிக்குச் சென்று
திரிவேணி சங்கமத்தில் கரைத்தார்.
துறவுக்கோலம்
கிட்டப்பா, சுந்தராம்பாளைப்
பிரிந்து வாழ்ந்த போதிலும், அவர்
மீது கொண்டிருந்த அன்பு அளவு
கடந்தது.
கிட்டப்பா இறந்ததும், சுந்தராம்பாள்
வெள்ளை ஆடை உடுத்தி
துறவுக்கோலம் பூண்டார்.
நாடகங்களில் நடிக்க மறுத்தார்.
சுந்தராம்பாள் பாடலைக் கேட்டு
இதயத்தை பறி கொடுத்தவர்கள் அவர்
பாடாமலும், நடிக்காமலும்
இருந்ததைக் கண்டு கவலை
அடைந்தார்கள்.
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி
உள்பட பலரும் கேட்டுக்
கொண்டதற்கு இணங்க, 'ஆண்களுடன்
சேர்ந்து நடிப்பதில்லை' என்று
உறுதி எடுத்துக் கொண்டு,
'நந்தனார்' நாடகத்தில் நந்தனாராக
நடித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில், தமிழில்
பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கி
இருந்தன. சினிமாவில் நடிப்பதற்கு
வந்த அழைப்புகளை சுந்தராம்பாள்
ஏற்கவில்லை.
ரூ.1 லட்சம் சம்பளம்
வட நாட்டைச் சேர்ந்த அசன்தாஸ் என்ற
பட அதிபர், 'நந்தனார்' கதையை
தமிழில் படமாகத் தயாரிக்க
விரும்பினார்.
கே.பி.சுந்தராம்பாளுக்கு இருந்த
பெயரையும் புகழையும் அறிந்த
அவர், சுந்தராம்பாளை நந்தனாராக
நடிக்க வைக்க விரும்பினார்.
அவர், காங்கிரஸ் தலைவர்
சத்தியமூர்த்தியை அழைத்துக்
கொண்டு சுந்தராம்பாள் வீட்டுக்குச்
சென்றார். அப்போது சுந்தராம்பாள்
வீட்டில் இல்லை. சுந்தராம்பாள் தாய்
மாமன் மட்டும் தான் இருந்தார்.
'நான் நந்தனார் கதையை சினிமா
படமாகத் தயாரிக்கப் போகிறேன்.
அதில் சுந்தராம்பாள் நடிக்க
வேண்டும்' என்று அசன்தாஸ்
கேட்டுக்கொண்டார்.
'சுந்தராம்பாள் சினிமாவில் நடிக்க
சம்மதிப்பது இல்லையே' என்றார்,
சுந்தராம்பாளின் தாய்மாமன்.
'நந்தனார் நாடகத்தில் சுந்தராம்பாள்
நடித்தாரே! அதே வேடத்தில்
சினிமாவில் நடிப்பதில் தவறு
இல்லையே' என்று
விடாப்பிடியாகக் கூறினார்,
அசன்தாஸ்.
பட அதிபரை விரட்ட என்ன வழி என்று
யோசித்தார், சுந்தராம்பாளின்
மாமன். ஒரு பெரிய தொகையைச்
சொன்னால், அசன்தாஸ்
சொல்லிக்கொள்ளாமல் ஓடிப் போய்
விடுவார் என்று நினைத்த அவர்,
'ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கத்
தயாரா?, சுந்தராம்பாளை நடிக்க
சொல்கிறேன்' என்று ஒரு
போடுபோட்டார்.
ஆனால், அவர் நினைத்தபடி
நடக்கவில்லை. அசன்தாஸ் சிரித்துக்
கொண்டே, 'ஒரு லட்சம் தானே!
தாராளமாகத் தருகிறேன். இதோ,
அட்வான்ஸ்' என்று, ரூ.25
ஆயிரத்துக்கு 'செக்'
எழுதிக்கொடுத்தார்.
சத்தியமூர்த்தியும், அசன்தாசும்
போய் சிறிது நேரத்துக்குப் பின்
சுந்தராம்பாள் வந்து சேர்ந்தார்.
நடந்ததையெல்லாம் அவரிடம் மாமன்
சொன்னார்.
சுந்தராம்பாள் யோசித்தார்.
அட்வான்ஸ் வாங்கிய பிறகு,
மறுப்பது சரியல்ல என்று
எண்ணினார். நடிப்பதற்கு சம்மதம்
தெரிவித்தார்.
அந்தக்காலத்தில் ஒரு லட்சம் ரூபாய்
இருந்தால், முழுப்படத்தையும்
தயாரித்து விடலாம். ஒரு பவுன்
விலை 13 ரூபாய். அப்படி இருக்க,
சுந்தராம்பாளுக்கு ரூ.1 லட்சம்
கொடுக்கப்பட்ட செய்தி,
பத்திரிகைகளில் பெரிய
தலைப்புடன் பிரசுரிக்கப்பட்டது.
இந்தப்படத்தை எம்.எல்.டாண்டன்
டைரக்ட் செய்தார். துணை
இயக்குனர், பிற்காலத்தில்
டைரக்ஷனில் பெரும் சாதனைகள்
புரிந்த எல்லீஸ் ஆர்.டங்கன். சங்கீத
வித்துவான் மகாராஜபுரம்
விசுவநாத அய்யர், வேதியராக
நடித்தார். அவருடைய சம்பளம்
ரூபாய் 3 ஆயிரம்.
படத்துக்கு மொத்தம் 3 லட்ச ரூபாய்
செலவிட்டார், அசன்தாஸ். மூன்று
மாத காலம் தொடர்ந்து படப்பிடிப்பு
நடந்தது. படத்தில் மொத்தம் 41
பாடல்கள் இடம்பெற்றன. அதில்
சுந்தராம்பாள் பாடியவை 19.
சுந்தராம்பாள் பாடல்கள் சிறப்பாக
அமைந்த போதிலும், படம்
எதிர்பார்த்த வெற்றியைப்
பெறவில்லை. சுமாராகவே
ஓடியது. 'படம் ரொம்ப சாதாரணம்'
என்பதே பத்திரிகைகளின்
பொதுவான விமர்சனம்.
தீ விபத்து
இதில் வருந்தத்தக்க செய்தி
என்னவென்றால், 1936, நவம்பரில்
கல்கத்தா நியூ தியேட்டர்ஸ்
ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில்,
இந்தப்படத்தின் நெகடிவ் எரிந்து
போயிற்று.
ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு கேட்டு,
ஸ்டூடியோ மீது அசன்தாஸ் வழக்கு
தொடர்ந்தார். அவர்கள், ரூ.9 ஆயிரம்
தான் தரமுடியும் என்று கூறி
அந்தத் தொகையை கோர்ட்டில்
கட்டிவிட்டனர்.
அடுத்து சுந்தராம்பாள் நடித்த படம்
'மணிமேகலை'. மாதவியின்
மகளாகப் பிறந்து துறவியாக
வாழ்ந்த மணிமேகலை வேடத்தில்
சுந்தராம்பாளும், உதயகுமாரனாக
கொத்தமங்கலம் சீனுவும் நடித்தனர்.
இந்தப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன்-
டி.ஏ.மதுரம் ஆகியோரும்
இடம்பெற்றனர்.
இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
இப்படத்தில், சுந்தராம்பாள் பாடிய
'சிறைச்சாலை என்ன செய்யும்?'
என்ற பாடல் மிகப் புகழ்பெற்றதுடன்,
அது சுதந்திரப் போராட்ட காலம்
ஆகையால் காங்கிரஸ் மேடைகளில்
எல்லாம் பாடப்பட்டது.
ஜெமினி 'அவ்வையார்'
ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்,
அவ்வையார் வரலாற்றை
பிரமாண்டமாகத் தயாரிக்கத்
திட்டமிட்டு, அவ்வையாராக
நடிக்கும்படி சுந்தராம்பாளைக்
கேட்டுக்கொண்டார். நீண்ட
யோசனைக்குப் பிறகு
சுந்தராம்பாள் ஒப்புக்கொண்டார்.
படத்தயாரிப்பு சுமார்
ஐந்தாண்டுகள் நீடித்தது. படம்
சிறப்பாக அமைய வேண்டும்
என்பதற்காக, பணத்தை தண்ணீராக
செலவிட்டார், வாசன். 1953-ம் ஆண்டில்
வெளிவந்த 'அவ்வையார்' மகத்தான
வெற்றி பெற்றது. ஜெமினிக்கு,
'சந்திரலேகா' போல் பெருமை
தேடித்தந்த படம் 'அவ்வையார்'.
பிறகு கலைஞர் கருணாநிதி
தயாரித்த 'பூம்புகார்' (1964) படத்தில்
கவுந்தியடிகளாகவும்,
ஏ.பி.நாகராஜன் தயாரித்த
'திருவிளையாடல்' (1965) படத்தில்
அவ்வையாராகவும் சுந்தராம்பாள்
நடித்தார்.
பிறகு மகாகவி காளிதாஸ் (1966),
கந்தன் கருணை (1967), உயிர்மேல்
ஆசை (1967), துணைவன் (1969),
காரைக்கால் அம்மையார் (1973),
திருமலைத் தெய்வம் (1973) ஆகிய
படங்களில் நடித்தார்.
அதன்பின் டி.ஆர்.ராஜகுமாரியின்
சகோதரர் டி.ஆர்.ராமண்ணா
தயாரித்த 'சக்திலீலை' என்ற படத்தில்
நடித்தார். இதுவே அவர் நடித்த
கடைசி படம்.
1980-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி
சுந்தராம்பாள் காலமானார்.
1. நந்தனாராக
கே.பி.சுந்தராம்பாள்.
வேதியராக மகாராஜபுரம்
விஸ்வநாத அய்யர்
2.‘நந்தனார்’ திரைப்படத்தில்
எம்.எம். தண்டபாணிதேசிகர்
தண்டபாணி தேசிகர் நடித்த
ஜெமினியின் 'நந்தனார்'
ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்
தயாரித்த 'நந்தனார்' படம், மாபெரும்
வெற்றி பெற்றது. இதில்
நந்தனாராக நடித்த
எம்.எம்.தண்டபாணி தேசிகர்,
அற்புதமான பாடல்களை பாடி,
இசை மழை பொழிந்தார்.
1942-ம் ஆண்டு ஜெமினி எடுத்த படம்
நந்தனார். வசனத்தை கி.ரா. எழுத,
படத்தை முருகதாசா இயக்கினார்.
எம்.டி.பார்த்தசாரதியும்,
ராஜேஸ்வரராவும் இசை
அமைத்தனர். பாடல்கள்:
கோபாலகிருஷ்ண பாரதி,
பாபநாசம் சிவன், கொத்தமங்கலம்
சுப்பு.
நந்தனாராக எம்.எம்.தண்டபாணி
தேசிகரும், வேதிகராக
செருகளத்தூர் சாமாவும் நடித்தனர்.
'என்னப்பன் அல்லவா',
'காணவேண்டாமா', 'மாடு
வழிமறித்து நிற்குதே' முதலான
பாடல்களை தமது வெண்கலக்
குரலால் பாடி படத்தை இசை
காவியமாக்கினார், தேசிகர்.
இதில் எல்லா பாடல்களும் சிறப்பாக
அமைந்ததால், 3 சிறந்த பாடல்களை
தேர்ந்தெடுக்கும் போட்டியை
ரசிகர்களுக்கு ஜெமினி
நடத்தியது. படம் பார்க்கவரும்
ரசிகர்களுக்கு, டிக்கெட்டுடன்
கூப்பன் ஒன்று தரப்பட்டது. அதை
பூர்த்தி செய்து, தியேட்டரில் உள்ள
பெட்டியில் போடவேண்டும்.
சிறந்த விடை எழுதியவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக