திங்கள், 24 அக்டோபர், 2016

பாடகர் மனோ பிறந்த நாள் அக்டோபர்26,

பாடகர் மனோ பிறந்த நாள் அக்டோபர்26, (1965) .

மனோ ( தெலுங்கு: మనో) (பிறப்பு அக்டோபர்
26, 1965) தென்னிந்தியத்
திரைப்படங்களில் பாடிவரும் ஓர் திரைப்படப்
பின்னணிப் பாடகர். இவர் தமிழ் ,
மலையாளம் , தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி மொழிகளில்
பாடியுள்ளார். தமது திரைவாழ்வை
நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப்
பாடகராக புகழ்பெற்றார்.
சின்னத் தம்பி என்ற படத்தில் "தூளியிலே"
என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு
விருது பெற்றார்.
இளமை வாழ்வும்
திரைவாழ்வும்
மனோ தெலுங்கு இசுலாமியக்
குடும்பத்தில் பிறந்தவர். இவரது
இயற்பெயர் நாகூர் பாபு ஆகும்.
இவரது பெயரை பிற்காலத்தில் மனோ
என்று இளையராஜா மாற்றினார். தமது
கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர்
நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம்
பெற்றார்.
துவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து
15 தெலுங்குத் திரைப்படங்களில்
நடித்துள்ளார். இவரது
படமொன்றிற்கு இசையமைக்க வந்த
இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்
இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய
குழுவில் துணை புரிய சென்னைக்கு
அழைத்துக்கொண்டார். அவரிடம்
இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்
[1] . 1984ஆம் ஆண்டு தெலுங்கு
இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம்
பணிபுரியத் தொடங்கினார்.
1984ஆம் ஆண்டு கற்பூரதீபம் என்ற
படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி.
சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர்
வாய்ப்பு கிடைத்தது  . அதனைத்
தொடர்ந்து கன்னடத் திரைப்படம்
ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா
வாய்ப்பு கொடுத்தார். 1986ஆம்
ஆண்டு இளையராஜா பூவிழி வாசலிலே
என்றத் தமிழ்த் திரைப்படத்தில் "அண்ணே
அண்ணே" என்ற பாடலைப் பாட வாய்ப்பு
கொடுத்தார். தொடர்ந்து
எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில்
திருப்புமுனை தந்த "செண்பகமே", "மதுரை
மரிக்கொழுந்து வாசம்" மற்றும்
வேலைக்காரன் படத்தில் "வா வா
கண்ணா வா", "வேலையில்லாதவன்"
போன்ற பாடல்கள் மூலம் பரவலாக
அறியப்படத் தொடங்கினார்.
சிங்கார வேலன் படத்தில் ஓர் வேடமேற்று
நடித்துள்ளார்.
காதலன் படத்தில் "முக்காலா
முக்காபலா", முத்து படத்தில்
"தில்லானா தில்லானா" மற்றும்
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் "அழகிய
லைலா" போன்ற பாடல்கள்
பெருவெற்றி பெற்றன.
நடித்த திரைப்படங்கள்
தெலுங்கு
1979- நீடா
1979- ரங்கூன் ரவுடி (ராஜூ
கதாபாத்திரம்)
2003- நீ மனசு நாக்கு தெலுசு
2015- சிவம்
தமிழ்
1992- சிங்கார வேலன் (மனோவாக)
2003- எனக்கு 20 உனக்கு 18
2014- வெற்றி செல்வன்
***********"******"*************
பிரபல பின்னணி பாடகர் மனோவின்
இயற்பெயர் நாகூர் பாபு. ஆந்திர
மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள
சட்டேனபல்லியில் 1965 ஆம் ஆண்டு, அக்டோபர்
மாதம் 26 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை
ரசூல், விஜயவாடா வானொலி
நிலையத்தில் பணியாற்றியவர் . தாயார்
ஷகீதா மேடை நடிகையாக இருந்தார்.
இதனால் சிறு வயதிலிருந்தே நடிப்பும், பாடும்
திறனும் இவருக்கு இயல்பாகவே அமைந்தது.
பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம்
கர்நாடக இசையை பயின்ற இவர். 1970 ஆம்
ஆண்டில் ரங்கூன் ரவுடி மற்றும் கேது Gadda
போன்ற தெலுங்கு படங்களில் துணை
பாத்திரங்களில் நடித்தார் அதைத்
தொடர்ந்து நாடகங்களிலும்,
பதினைந்துக்கும் மேற்பட்ட தெலுங்கு
படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு
கிடைத்தது .
தந்தையின் உதவியால், இசையமைப்பாளர்
எம்.எஸ்.விஸ்வநாதன் அறிமுகம் கிடைக்க,
அவரது இசையில் பாடுவதற்காக
சென்னை வந்தார்.இவர் அவரிடம்
இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்த இவர்,
1984ஆம் ஆண்டுமுதல் தெலுங்கு
இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம்
பணிபுரியத் ஆரம்பித்தார். அவரதி இசையில்
உருவான கற்பூரதீபம் என்கிற படத்தில்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன்
இணைந்து பாடும் வாய்ப்பு இவருக்கு
கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து கன்னடத்
திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர்
அம்சலேகா இசையில் ஒரு பாடலை பாடினர்.
1986ஆம் ஆண்டு தமிழில் பூவிழி வாசலிலே
படத்தில் இடம்பெற்ற "அண்ணே
அண்ணே" பாடலைப் பாடும் வாய்ப்பை
இவருக்கு வழங்கினார் இசைஞானி
இளையராஜா. தொடர்ந்து எங்க
ஊர் பாட்டுக்காரன் படத்தில்
"செண்பகமே", "மதுரை
மரிக்கொழுந்து வாசம்"
பாடல்களைப பாடும் வாய்ப்ப்களை
இவறுக்குத் தந்தார் இளையராஜா. இந்தப்
பாடல்கள் இவருக்கு பெரும் புகழை
தந்தன .
ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்தில்
"வா வா கண்ணா வா",
"வேலையில்லாதவன்" போன்ற பாடல்கலை
பாடினர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதலன் படத்தில்
"முக்காலா முக்காபலா", முத்து படத்தில்
"தில்லானா தில்லானா" பாடல்களை
பாடினர். சிற்பி இசையில் உள்ளத்தை
அள்ளித்தா படத்தில் "அழகிய லைலா",
வித்யாசாகர் இசையில் கர்ணா படத்தில்
"ஏ ஸபா" போன்ற பாடல்களை பாடினர்.
இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும்
புகழை பெற்று தந்தது. தொடர்ந்து
முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரது
இசையிலும் பாடும் வாய்ப்பினைப்
பெற்றார் இவர் .
கே.எஸ் சித்ரா, ஸ்வர்ணலதா, ஜானகி
ஆகிருடன் இணைந்து ஏராளமான டூயட்
பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
ஒரியா, இந்தி ஆகிய மொழிகளில்
1,200 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும்
இவர் 250 நாடகங்களிலும், 3000 மேடை
நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்
கமல் நடித்த அத்தனை படங்களுக்கும்
தெலுங்கு மொழியில்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல்
கொடுத்தார் என்றால் ரஜினி
நடித்த பல படங்களுக்கு தெலுங்கில் குரல்
கொடுத்தவர் இவர் .
அனைத்து இசையமைப்பாளர்களுடனும் அவர்
பணியாற்றினாலும், இசைஞானி
இளையராஜா இசையில்தான் இவர் அதிகம்
பாடியுள்ளார். நாகூர் பாபு என்கிற
இவரது பெயரை மனோ என்று மாற்றி
வைத்தவரும் இசைஞானி
இளையராஜாதான்
கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில்
கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை
வேடத்தில் நடித்துள்ள இவர் இப்போது
சின்னத்திரையில் நடக்கும் இசைப் போட்டிகள்
பலவற்றிற்கு நடுவராக இருக்கிறார்.
சின்னத் தம்பி படத்தில் பாடிய "தூளியிலே"
என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது
பெற்ற இவர். தமிழக அரசின்
கலைமாமணி விருதையும் ஆந்திர அரசின் நந்தி
விருது, கண்டசாலா விருது போன்ற
விருதுகளையும் பெற்ருள்ளார்
இவரது மனைவியின் பெயர் ஜமீலா.
இவர்களுக்கு ஷாகீர், ராபி என்கிற இரு
மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனோவின்
பாடல்களில் மட்டுமின்றி பழகும் தன்மையிலும்
இனிமை இருக்கும் இவரது வெற்றியின்
ரகசியம் அதுதான் என்றால் அது
மிகையில்லை.

*******************************
மனோ வின் சில பாட்டு :-)

1. மீனம்மா மீனம்மா - ராஜாதி
ராஜா
2. வா வா வா கண்ணா வா -
வேலைக்காரன்
3. பாராமல் பார்த்த நெஞ்சம் -
பூந்தோட்டக் காவல்காரன்
4. மதுரை மரிக்கொழுந்து வாசம் -
எங்க ஊரு பாட்டுக்காரன்
5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க
ஊரு மாப்பிள்ளை
6. மல்லியே சின்ன முல்லையே - பாண்டித்துரை
7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை
தான் - இது நம்ம பூமி
8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை
வந்தாச்சு
9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே
10. நிலாக்காயும் நேரம் சரணம் -
செம்பருத்தி
11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல்
வெத போட்டு - தென்மதுரை வைகை நதி
(மைக்கேல் மதன காமராஜன்
ரெக்கார்ட்டில் வந்தது)
12. அடிச்சேன் காதல் பரிசு -
பொன்மனச் செல்வன்
13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட்
ராஜ்
14. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த
புருஷன்
15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே
16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்
17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்
18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு
நிலாவே
19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை
20. அன்பே நீ என்ன - பாண்டியன்
21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி
நாட்டுத்தங்கம்
22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என்
ராசாதான்
23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்
24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய
வீட்டுப் பண்ணக்காரன்
25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி
26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப்
பாட்டுக்காரன்
27. மலைக்கோவில் வாசலில் - வீரா
28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்
29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி
30. சின்ன ராசாவே - வால்டர்
வெற்றிவேல்
31. சோலை இளங்குயில் - காவலுக்குக்
கெட்டிக்காரன்
32. நிலவ நிலவ - காத்திருக்க நேரமில்லை
33. மணியே மணிக்குயிலே - நாடோடித்
தென்றல்
34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு
ஊர்ல ஒரு ராஜகுமாரி
35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய
வச்சா
36. சிங்கார மானே தேனே - தாய்
மொழி
37. சொல்லிவிடு வெள்ளி நிலவே -
அமைதிப்படை
38. மானே மரகதமே - எங்க தம்பி
39. சத்தம் வராமல் - மை டியர்
மார்த்தாண்டன்
40. தென்றல் காத்தே தென்றல்
காத்தே - கும்பக்கரை தங்கய்யா
41. தண்ணீரிலே முகம் பார்க்கும் -
மணிக்குயில்
42. வெட்டுக்கிளி வெட்டி வந்த
வாசம் - பிரியங்கா
43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி
44. கண்ணே இன்று கல்யாணக்கதை -
ஆணழகன்
45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்
46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்
48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள
49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்
50. விழியில் புதுக்கவிதை படித்தேன் -
தீர்த்தக்கரையினிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக