திங்கள், 3 அக்டோபர், 2016

நடிகை சுகுமாரி பிறந்த தினம் அக்டோபர் 6.

நடிகை சுகுமாரி பிறந்த தினம் அக்டோபர் 6.

சுகுமாரி ( அக்டோபர் 6, 1940 - மார்ச் 26
2013 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
இவர் தமிழ் மற்றும் மலையாள
மொழிப் படங்களில் அதிகமாக
நடித்துள்ளார்.
நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-
வது வயதில் இருந்தே நடிக்கத்
தொடங்கினார். பல்வேறு
கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் இந்திய அரசின் 2003 ஆம்
ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப்
பெற்றவர். 2010ம் ஆண்டு நம்ம
கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை
நடிகைக்கான தேசிய விருதும்
பெற்றுள்ளார்.
தீக்காயம் பட்டு சென்னை குளோபல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
சுகுமாரி 2013 மார்ச் 26-ம் தேதி சிகிச்சை
பலனின்றி இறந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக