வியாழன், 27 ஏப்ரல், 2017

நடிகர் வினுச்சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் இன்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் 7 மணியளவில் காலாமானார். ஏப்ரல் 27.


நடிகர் வினுச்சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் இன்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் 7 மணியளவில் காலாமானார். ஏப்ரல் 27.
கருப்பு நிறம், கம்பீரமான குரல், கரைபுரண்ட நடிப்பு என தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தவர் நடிகர் வினுச்சக்கரவர்த்தி.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் 7 மணியளவில் காலாமானார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பங்காற்றியிருக்கிறார்.
இவர் வில்லன், காமெடியன், குணச்சித்திர வேடம் என 1000 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவருடைய ஆயிரமாவது படம்தான் முனி.
எங்க ஊரு பாட்டுக்காரன், மண்வாசனை, மண்ணுக்கேத்த பொண்ணு, மனிதன், குருசிஷ்யன் போன்ற ஏராளமான படங்களில் முக்கியமான பாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார்.
அவர் நடித்த கேரக்டரிலேயே அவருக்கு மிகவும் பிடித்தது. வேட்டைக்கு செல்லும் கிராம எல்லை தெய்வமான சுடலைமாடனாக ஒரு படத்தில் நடித்ததுதான். வினுச்சக்கரவர்த்தி அந்த வேடம் ஏற்று நடித்தபோது, அந்த கிராமத்தில் நிஜத்தில் ஆண்டுதோறும் அருள்வந்து வேட்டைக்கு செல்லும் சாமியாடியே இவரின் தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்து வணங்கினாராம்
இவர் சினிமாவுக்கு வருவதுக்குமுன் ரயில்வே துறையில் பணியாற்றியிருக்கிறார்.
அந்த சமயத்தில், இவர் பணியில் இருந்தபோது சில பெண்கள் இவருக்கு புரியாத தெலுங்கு மொழியில் எறுமை மாடு போல கறுப்பா இருப்பதாக நேராகவே திட்டியிருக்கின்றனர். அந்த வார்த்தைக்குள்ள அர்த்தத்தை பிறர் மூலம் தெரிந்துகொண்ட வினுச்சக்கரவர்த்தி மறுநாள் வழக்கம் போல அந்த பெண்கள் வரும்போது நான் சிவப்பா இருந்தாதானம்மா தப்பு, கறுப்பா இருப்பது தப்பு இல்ல காரணம், என் அப்பா அம்மா இருவருமே நல்ல கருப்பு என சாதாரணமாக சொல்லி அவர்களை சிந்திக்க வைத்தாராம் தனது கருப்புக்காக கலங்காத சக்கரவர்த்தி..
ரோஜாப்பு ரவிக்கைக்காரி படம் வித்தியாசமான கிராமிய கதையால் காவியமாக அமைந்த வெற்றிப்படம் அது வினுச்சக்கரவர்த்தியினுடைய திரைக்கதைதான்.


முதல்மரியாதை படத்தில் சிவாஜி நடிக்க வேண்டி, அவரை பாரதிராஜா சந்திக்க தயங்கியபோது, சினிமாவுக்கு வந்தபோது உன்னை யாருக்கும் தெரியாது. இப்போ, உன்னை இந்தியாவுக்கே தெரியும் அதனால், உன் விருப்பம் நிறைவேறும் என்று தன்னம்பிக்கையூட்டியவர் வினுச்சக்கரவர்த்திதான்.
வண்டிச்சக்கரத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த அவர், அதே படத்தில் சில்க்சிமிதாவை அறிமுகப்படுத்தினார். அவர் பிரபலமான கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். சில்க் இறந்தபோது அவருக்கு நண்பராக இருந்து வந்த வினுச்சக்கரவர்த்திக்கும் அதனால், சிக்கல் ஏற்பட்டது.
தமிழ் திரையுலகில் பலதுறைகளிலும் தனது திறமையால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வினுச்சக்கரவர்த்தி கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை உறவினர்களும் நண்பர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் நலம் விசாரித்து வந்தனர்.
1945 டிசம்பர் 15 ல் தோன்றி 2015 ல் மறைந்த வினுச்சக்கரவர்த்தி, தனது 70 வருட வாழ்க்கை பயணத்தில் திரைப்படங்களின் மூலம் மக்களை பல சுவையான பாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தார்.
சமீப காலமாக படவாய்ப்புகள் குறைந்து போனதால், தனது பிறவி கடமையை நிறைவு செய்த திருப்தியோடு ஓய்வில் தான் இருந்தார். இப்போது இறைவன் திருவடிகளில் இளைப்பாற சென்ற அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக