வியாழன், 6 ஏப்ரல், 2017

இயக்குநர் ராம் கோபால் வர்மா பிறந்த தினம் ஏப்ரல் 7.



இயக்குநர்  ராம் கோபால் வர்மா பிறந்த தினம் ஏப்ரல் 7.

ராம் கோபால் வர்மா ( ஆங்கிலம் :Ram Gopal Varma) சுருக்கமாக ஆர்.ஜி.வி என அறியப்படுபவர் இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர் , எழுத்தாளர் மற்றும்
தயாரிப்பாளர் ஆவார். இவரது பணிகள்
பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே
இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார், மேலும் இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள்,
அரசியல்வாதி , இசையகம், குற்றவியல் தொடர்புடைய மேலும் பல வகைத்
திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.

வாழ்க்கை

ராம் கோபால் வர்மா ஏப்ரல் 7 , 1962 ஆம் ஆண்டு அன்று ஆந்திரப் பிரதேசம் ,
ஹைதராபாத்தில் பிறந்தார். மேலும்
கிருஷ்ணம் ராஜு பென்மிட்ச (Krishnam Raju Penmetsa), சூரியாம்மா வர்மாவின்
பெற்றோர் ஆவார்கள். மற்றும் இவர் தன் இளம் வயதில், விஜயவாடாவில் உள்ள
சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். மேலும் ராம் கோபால் வர்மா அவர்கள் ரத்னா என்பவரைத்
திருமணம் செய்துக் கொண்டர், இத் தம்பதியருக்கு ரேவதி வர்மா என்னும் ஒரு
மகளும் உள்ளார். பின்னர் குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக பின்
விவாகரத்து ஆனது.

திரைப்பட வாழ்க்கை

ராம் கோபால் வர்மா தெலுங்கு திரைப்படத் துறையில் தனது முதல் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். முதலில் அவர் ஏதாவது வாய்ப்புக் கிடைக்காதா என்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஒளிப்பட நிலையத்தைச் (ஸ்டூடியோ) சுற்றி வந்து கொண்டிருந்தார். இந்த ஓளிப்பட நிலையமானது பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் தந்தைக்குச் சொந்தமானதாகும். அப்போது அங்கு நாகார்ஜூனா நடித்தத் திரைப்படமான
கலெக்டர் காரி அப்பாயி படத்தின்
இசையமைப்பு நடந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு நாகார்ஜூனாவைச் சந்திக்கும் வாய்ப்பு வர்மாவிற்க்கு கிடைத்தது, அப்போது வர்மா சிவா திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை விளக்கிக் கூறினார். கதை பிடிக்கவே சிவாவில் நடிக்க சம்மதித்தார், அதன் படி இப்படத்திற்க்கு இளையராஜா இசையமைத்து 1989 ஆம் ஆண்டு சிவா திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்து, பின்னர் இத்திரைப்படம் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியானது. [9] மேலும் இத்திரைப்படம்
உதயம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியானது. பின்னர் வர்மாவின் இரண்டாவது திரைப்படம் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீதேவி நடித்த க்ஷானா க்ஷானம் தெலுங்குத் திரைப்படம் வெற்றியடைந்ததன் விளைவாக இந்தியில் ஹெராண் என்றத் தலைப்பில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ரத்த சரித்திரம் திரைப்பட படப்பிடிப்பில் சூர்யா மற்றும் இயக்குனர் ராம் கோபால் வர்மா உள்ளார்
அதன் பின் வர்மா அவர்கள் ரக்தா சரித்ர என்ற திரைப்படத்தை அக்டோபர் 22 , 2010 அன்று தெலுங்கு மற்றும் இந்தியில் முதல் பாகமும் இதன் இரண்டாம் பாகம் ரத்த சரித்திரம் இத்திரைப்படத்தில் சூர்யா ,
விவேக் ஒபரோய் மற்றும் பிரியாமணி நடித்து திசம்பர் 3 , 2010 அன்று இந்தி , தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து
செப்டம்பர் 8 , 1995 ஆம் ஆண்டு ஆமிர் கான் மற்றும் ஊர்மிளா நடித்து, ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த ரங்கீலா திரைப்படம், மற்றும் சூலை 3 , 1998 ஆம் ஆண்டு சத்யா ஆகியத் திரைப்படங்கள் இந்தி சினிமாவில் வர்மாக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படத்தின் மூலம் வர்மா இந்தி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, சிறந்தத் திரைப்படம், சிறந்த இசைக்கான விருதினைப் பெற்றுத்தந்தது.

திரைப்பட வரலாறு
விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள்
சிறந்த இந்தித் திரைப்படத்திற்கான
தேசியத் திரைப்பட விருது ( தயாரிப்பாளர் ) சூல் - 1999 [10]
பிலிம்பேர் விருதுகள்
சிறந்தத் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருது - சத்யா ( 1998 )
சிறந்த திரைக் கதைக்கான பிலிம்பேர் விருது - ரங்கீலா ( 1995 )
பிலிம்பேர் விருதுகள் தெற்கு
பிலிம்பேர் சிறந்த இயக்குனர் விருது ( தெலுங்கு ) - சிவா ( 1989 )

நந்தி விருதுகள்

சிறந்த இயக்குனர்கான நந்தி விருது - சிவா ( 1989 )
சிறந்த இயக்குனர்கான நந்தி விருது - க்ஷானா க்ஷானம் ( 1991 )
சிறந்த இயக்குனர்கான நந்தி விருது - காயம் ( 1993 )
சிறந்த இயக்குனர்கான நந்தி விருது - பிரேம கதா ( 1999 ) [11]
பாலிவுட் திரைப்பட விருதுகள்
பாலிவுட் திரைப்பட விருது - சிறந்த இயக்குனர்
சத்யா ( 1998 )
ஜங்கிள் ( காடு ) ( 2000 )
கம்பேனி ( நிறுவனம் ) ( 2002 )
பூத் ( பேய் ) ( 2003 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக