ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

பாடகி எஸ்.ஜானகி பிறந்த நாள் ஏப்ரல் 23 , 1938



பாடகி எஸ்.ஜானகி பிறந்த நாள்   ஏப்ரல் 23 , 1938

எஸ். ஜானகி (பிறப்பு: ஏப்ரல் 23 , 1938 )
இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் ,
மலையாளம் , இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின்
குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.
நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த
விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில்
நீயாசா அடியார் என்ற பாடலை
கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி , துளு ,
சௌராஷ்டிரம் , இந்தி , வங்காளம் ,
சமஸ்கிருதம் , சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.

குடும்பம்

இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன்
சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

2010களில்
ஜானகி சிறிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடல்கள் பாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அம்மா அம்மா ௭ன்ற பாடலைப் பாடியிருக்கிறார். மேலும் இவர் பேபி, திருநாள் மற்றும் புதிய திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.திருநாள் திரைப்படத்தில் தந்தையும் யாரோ தாயாரும் யாரோ பாடலைப் பாடியுள்ளார்.

விருதுகள்

1986 இல் தமிழ்நாடு அரசின்
கலைமாமணி விருது
2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும்,
1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்மபூஷண் விருது மறுப்பு
௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.

இந்திய தேசிய விருதுகள்

வருடம் திரைப்படம் பாடல்
1976 பதினாறு வயதினிலே
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
1980 ஒப்போல் ௭ட்டுமனூரம்பழத்தி
1984 சித்தாரா வென்னெல்லோ கோடாரி அந்தம்
1992 தேவர் மகன் இஞ்சி இடுப்பழகா


எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்
ஆண்டு திரைப்படம் பாடல்
1962 கொஞ்சும் சலங்கை
சிங்கார வே தேவா
1962 பாதகாணிக்கை பூஜைக்கு மலரே வா
1962 சுமைதாங்கி
எந்தன் பார்வையின் கேள்விக்கு
1962 ஆலயமணி தூக்கம் உன் கண்களை
1962 போலீஸ்காரன் மகள்
இந்த மன்றத்தி ஓடிவரும்
1963 நெஞ்சம் மறப்பதில்லை
அழகுக்கும் மலருக்கும்
1965 திருவிளையாடல் பொதிகை ம உச்சியிலே
1969 அடிமைப்பெண் காலத்தை வென்றவன் நீ
1970 என் அண்ணன்
நீலநிறம் வானுக்கும் கடலுக்கும்
1970 எங்கிருந்தோ வந்தாள்
வந்தவர்கள் வ மற்றவர்கள் வர
1973 பொண்ணுக்கு தங்க மனசு
தஞ்சாவூர் சீமையிலே
1974 அவள் ஒரு தொடர்கதை
கண்ணிலே ௭ன்னவுண்ட
1976 அன்னக்கிளி மச்சான பாத்தீங்களா
1976 உறவாடும் நெஞ்சம்
ஒருநாள் உன்னோடு
1977 அவர்கள் காற்றுக்கெ வேலி
1977 கவிக்குயில் குயிலே கவிக்குயில
1978 அச்சாணி மாதா உன் கோவிலில்
1978 சிகப்பு ரோஜாக்கள் நினைவோ
1978 பிரியா ஏ பாடல் ஒன்ற ராகம்
1979 தர்மயுத்தம் ஆகாய கங்க பூந்தேன்
1980 மூடுபனி பருவகாலங்க கனவு நெஞ்
1980 ஜானி காற்றில் ௭ந்த கீதம்
1981 கிளிஞ்சல்கள் விழிகள் மேடையாம்
1981 அலைகள் ஓய்வதில்லை
ஆயிரம் தாமர மொட்டுக்கள
1982 காதல் ஓவியம் நாதம் ௭ன் ஜீவ
1982 பயணங்கள் முடிவதில்லை
மணியோசை கேட்டு
1983 ஆனந்த கும்மி ஒரு கிளி உருகுது
1983 மூன்றாம் பிறை பொன்மேனி உருகுதே
1983 இன்று நீ நாளை நான்
மொட்டுவிட்ட முல்லைகொ
1984 உன்னை நான் சந்தித்தேன்
தாலாட்டு ம போனதே
1985 கற்பூரதீபம் காலம் காலம
1985 ஆண்பாவம் ௭ன்னை பாட சொல்லாதே
1985 இதய கோவில் வானுயர்ந்த சோலையில
1985 குங்குமச்சிமிழ் நிலவு தூங் நேரம்
1985 அந்த ஒரு நிமிடம் சிறிய பறவ சிறகை விரி
1986 வசந்தராகம் கண்ணன் மனம்
1987 வேதம் புதிது மந்திரம் சொன்னேன்
1988 அக்னி நட்சத்திரம் ரோஜாப்பூ வந்தது
1988 தாய் மேல் ஆணை மல்லியப்பூ பூத்திருக்க
1988 ௭ன் ஜீவன் பாடுது கட்டிவச்சுக்க ௭ந்தன்
1989 அபூர்வ சகோதரர்கள்
வாழவைக்கு காதலுக்கு
1989 ஆராரோ ஆரிரரோ
தானாத் தலையாடு
1989 கரகாட்டக்காரன் மாங்குயில பூங்குயில
1991 புது நெல்லு புது நாத்து கறுத்த மச்சா
1992 குணா உன்னை நானறிவேன்
1992 வண்ண வண்ண பூக்கள்
கோழி கூவ நேரத்துல
1993 அரண்மனைக்கிளி
ராசாவே உன்னைவிட மாட்டேன்
1993 ஜென்டில்மேன் ஒட்டகத்த கட்டிக்கோ
1993 ௭ஜமான் ஒருநாளும் உனை மறவா
1994 காதலன் ௭ர்ராணி குர்ரதானி
1995 கர்ணா மலரே மௌ
1998 உயிரே நெஞ்சினில நெஞ்சினில
1999 முதல்வன் முதல்வனே
1999 சங்கமம் மார்கழி திங்களல்லவ
1999 ஜோடி காதல் கடிதம் தீட்டவே
2014 வேலையில்லா பட்டதாரி அம்மா அம்மா
2016 திருநாள்
தந்தையும் யாரோ தாயாரும் யாரோ


பின்னணிப் பாடகி தேசிய விருதை 4 முறை பெற்ற பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (S.Janaki) பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.
l வி.சந்திரசேகர் என்ற கலைஞரின் நாடக இடைவேளைகளில்தான் முதலில் பாடத் தொடங்கினார். 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை வந்தவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார்.
l ‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
l முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார். கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர்.
l ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்துக்காக பாடிய ‘சிங்கார வேலனே’ பாடல் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் இது சாதனை படைத்தது.
l ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.
l பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’ போன்றவை காலத்தால் அழியாதவை.
l திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
l கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.
l அரை நூற்றாண்டுக்கு மேல் பாடிவரும் ஜானகி இன்று 78-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது சென்னையில் மகனுடன் வசிக்கிறார்.



சிறுவயது கமல் ஹாசன் தன் பிஞ்சு உதடுகளை அசைத்துத் திரையில் பாடும் `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’என்னும் பாடலுக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இந்த மழலைக் குரலைக் கேட்டாலே சந்தோஷம் பொங்கும். களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு, `மௌன கீதங்கள்’படத்தில் ‘டாடி.. டாடி.. ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...’ பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய சந்தோஷம் பொங்கியது. காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!
குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, `பழைய நெனப்புடா பேராண்டி.. பழைய நெனப்புடா..’ எனப் பாடும் கிழவியின் விசனமா? இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ். ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.
பிரபலப்படுத்திய பாடல்
1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக் காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில் பதிவானது. தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில் (மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து 2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங் செய்யப்பட்ட பாடல் அது. இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ் பரவியது.
எஸ். ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப் பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர்; யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு கலைஞருக்குப் பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல் எவருமில்லை.
இளையராஜாவின் பெருந்துணை
இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும் திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும் இளையராஜாதான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.

ஹம்மிங் பேர்ட்
பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “லல்லா லல்லா லல்லா லல்லா ... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ... எந்தப் பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) “ என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.
எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.
“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் .





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக