நடிகை சுஜாதா நினைவு தினம் ஏப்ரல் 6 , 2011 .
சுஜாதா ( திசம்பர் 10 , 1952 - ஏப்ரல் 6 , 2011 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை . இவர்
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.
பிறப்பு
சுஜாதா, 1952-ம் ஆண்டில், டிசம்பர் 10-ந் தேதி, இலங்கையில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர், கேரள மாநிலம் காலே. அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார்.
வாழ்க்கை
1977-ம் ஆண்டில் சுஜாதா, ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். திவ்யா, டாக்டருக்கு படித்து இருக்கிறார்
திரைப்படத்துறையில்
`போலீஸ் ஸ்டேஷன்' என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், `தபஷ்னி' என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் ` அவள் ஒரு தொடர்கதை ' படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
நடித்த படங்கள்
அவர்கள்,
கடல் மீன்கள்,
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது,
மயங்குகிறாள் ஒரு மாது,
அமைதிப்படை,
விதி,
வில்லன்,
நட்புக்காக,
வரலாறு
அந்தமான் காதலி
பலப்பரீட்சை,
பரீட்சைக்கு நேரமாச்சு
உழைப்பாளி,
பாபா
தெலுங்கு, தமிழ், மலையாளர் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி உள்ளிட்ட வேடங்களில் சுஜாதா நடித்துள்ளார்.
`வரலாறு' படத்தில், அஜீத்குமாரின் அம்மாவாக நடித்து இருந்தார். அதுதான் அவர் நடித்த கடைசி படம். அதன்பிறகு சுஜாதா நடிக்கவில்லை.
மறைவு
இருதய நோயால் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. 6-4-2011 பிற்பகல் 2.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மரணம் அடைந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக