வெள்ளி, 21 ஏப்ரல், 2017

நடிகை தேவிகா நினைவு தினம் ஏப்ரல் 22 , 2002 .



நடிகை தேவிகா நினைவு தினம் ஏப்ரல் 22 , 2002 .

தேவிகா (பி. 1943 - இறப்பு ஏப்ரல் 22 , 2002 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா.
தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார்.
தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வேங்கையா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார்.
தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட அனுபவம்

தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன் ,
சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,
எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
அவர் நடித்த முதல் திரைப்படமான
முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும்,
குலமகள் ராதை , பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த சுமைதாங்கி ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு ,
வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
தேவிகா நடித்த கடைசிப்படம் இப்படியும் ஒரு பெண் ஆகும்.

திரைப்படங்கள்

தமிழ்
சத்யம் (1976)
இப்படியும் ஒரு பெண் (1975)
பிள்ளைச் செல்வம் (1974)
பாரத விலாஸ் (1973)
வெகுளிப் பெண் (1971)
அன்னை வேளாங்கண்ணி (1971)
எங்கிருந்தோ வந்தாள் (1970)
தேவி (1968)
தெய்வீக உறவு (1968)
பெண்ணே நீ வாழ்க (1967)
சரஸ்வதி சபதம் (1966)
மறக்க முடியுமா (1966)
திருவிளையாடல் (1965)
அன்புக்கரங்கள் (1965)
சாந்தி (1965)
பூஜைக்கு வந்த மலர் (1965)
நீலவானம் (1965)
பழனி (1965)
வாழ்க்கைப் படகு (1965)
முரடன் முத்து (1964)
கர்ணன் (1964)
ஆண்டவன் கட்டளை (1964)
வழி பிறந்தது (1964)
கலைக்கோவில் (1964)
நெஞ்சம் மறப்பதில்லை (1963)
இதயத்தில் நீ (1963)
ஆனந்த ஜோதி (1963)
குலமகள் ராதை (1963)
ஆயிரம் காலத்துப் பயிர் (1963)
வானம்பாடி (1963)
அன்னை இல்லம் (1963)
நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
பந்த பாசம் (1962)
சுமைதாங்கி (1962)
பலே பாண்டியா (1962)
ஆடிப்பெருக்கு (1962)
குமார ராஜா (1961)
பங்காளிகள் (1961)
கானல் நீர் (1961)
பாவ மன்னிப்பு (1961)
நாகநந்தினி (1961)
பாவை விளக்கு (1960)
இருமனம் கலந்தால் திருமணம் (1960)
சிவகாமி (1960)
களத்தூர் கண்ணம்மா (1960)
இவன் அவனேதான் (1960)
பாஞ்சாலி (1959)
மாலா ஒரு மங்கல விளக்கு (1959)
பிரெசிடென்ட் பஞ்சாட்சரம் (1959)
சகோதரி (1959)
நாலு வேலி நிலம் (1959)
முதலாளி (1958)
அன்பு எங்கே (1958)
மணமகன் தேவை (1957)

தெலுங்கு
நாட்டியதாரா




தேவிகா பற்றி கண்ணதாசன் (படித்ததில் பிடித்தது)
சில பழைய கட்டுரைகளை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். அதிலும் ஒரு நடிகையை பற்றி பிரபலமான கவிஞர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்படும். இதை படிக்கும் போது அந்த நடிகையின் நடிப்பு நம் மனக்கண்ணில் ஓடுகிறது. நான் கூட அவரின் சில படங்களே பார்த்திருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன் இந்த கட்டுரையில் ஆத்மார்த்தமாக அவரை பற்றி சொல்கிறார்...
தேவிகா...
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான்.
படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று.
இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
 “பாவி” என்றொரு சொல் தமிழில் உண்டு. இது ‘பாவி’ என்பதன் எதிர்மறை. ‘பிரதட்சிணம் அப்ரதட்சிணம்’ என்பது போல ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்’ என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன.
ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார்.
அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார்.
என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிருஷ்டவசமாக எனது ‘மங்கல மங்கை’ப் படம் பாதியிலேயே நின்று விட்டது.
அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.
ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலை எழுதினேன்.
என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார்.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு டைரக் ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா...
ஒருநாள் கூடப் படப் பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர்.
“பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள் ?.


வாழ்க்கைப் படகு: 50 ஆண்டுகள் நிறைவு!
தமிழ்த் திரைப்படங்களில் ஜெமினி கணேசனுக்கு வாய்த்த சில நல்ல திரைப்படங்களில் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த ‘வாழ்க்கைப் படகு’ முக்கியமானது. 1965-ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், ரங்காராவ், டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோகர், பாலாஜி போன்ற நட்சத்திரப் பட்டாளத்துடன், அனைவருக்கும் ஈடுகொடுக்க வேண்டிய நிலையில் தேவிகா சவாலான கதாபாத்திரம் ஏற்று நடித்த படம். வேப்பத்தூர் கிட்டு இப்படத்தின் கருவை ஒரு ஃபிரெஞ்ச் நாவலிலிருந்து பெற்றார். இப்படம் 1962-ம் ஆண்டு ‘ஜிந்தகி’ என்ற பெயரில் இந்தியில் இதே ஜெமினி ஸ்டூடியோவால் தயாரிக்கப்பட்டது. இதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ‘வாழ்க்கைப் படகு’ ஆனது.
கற்பே கருப்பொருள்
இந்திய மனங்களில் உறைந்துபோன ‘கற்பு’ என்னும் கருத்தாடல் முக்கியமான சிக்கல். இந்திய மனம் ‘காதல்’ என்பதை ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே உரித்தானதாகப் பார்க்கிறது. ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்பது இன்னொரு ஆண்மகனுடன் உள்ள எல்லாத் தொடர்புகளிலிருந்தும் துண்டித்துக்கொண்டு நிற்பதாகும். குடும்ப அமைதியின் ரகசியம் இங்குதான் அடங்கியுள்ளது. இதைப் பேணி நடக்கும் பெண் கற்புக்கரசியாகிறாள். இங்கு சிறிதளவு ஐயம் ஏற்பட்டாலும் அது குடும்ப வாழ்க்கையைச் சீரழித்துவிடுகிறது. இந்தப் பிடிமானத்தை அடிப்படையாக வைத்துத் திரைக்கதையாக்கப்பட்ட படம்தான் ‘வாழ்க்கைப் படகு’.
நடிகை எனும் அடையாளம்
வேலை தேடி அலைகிற சீதா (தேவிகா), தனக்கு வேலை கிடைத்திருப்பதாக அம்மாவிடம் சொல்லும் காட்சியில்தான் படம் தொடங்குகிறது. சீதா அந்த வேலை குறித்து அம்மாவிடம் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியுடனும் திருப்தியடைந்தவளாகவுமே சொல்கிறாள்; ஆனால் அம்மாவோ திகைக்கிறார். காரணம், கிடைக்கிற வேலை நாடக நிறுவனத்தில்; அதுவும் நடிகையாக!
இந்த ஆரம்ப முரண் மிகவும் கவனிக்கத் தக்கது. அது மாறிவரும் இந்தியப் பெண் மனத்தின் சிந்தனை முறை. இளம் பெண்ணான சீதா தான் நடிகையாவதில் பழைய கோட்பாடுகளை மனதில் கொள்ளவில்லை; அவளைப் பொறுத்த அளவில் அதுவும் ஒரு வேலைதான் அரசுப் பணி போல அல்லது ஒரு நிறுவன ஊழியர்போல.ஆனால் பழமை மனம் கொண்ட அம்மா நாடக வேலை என்றதுமே துணுக்குற்றுவிடுகிறாள்.
சீதாவைக் காதலிக்கும் ராஜன் (ஜெமினி கணேசன்) ஜமீன்தார் ராவ் பகதூரின் (ரங்காராவ்) மகன். அவனுடைய காதலைத் தன் அதிகார அந்தஸ்தின் பொருட்டாக மட்டுமல்லாமல், அவள் ஒரு நடிகை என்ற நிலையிலும் ராவ் பகதூரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீதாவின் மனநிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின் ராவ் பகதூர் ஒரு நிபந்தனையின் கீழ் தன் மருமகளாகச் சீதாவை ஏற்கிறார்.
திருமணத்தின் பின் நாடக இயக்குநர் கோபாலை எந்தக் காரணம் கொண்டும் சந்திக்கவோ பேசவோ கூடாது. சீதாவுக்கு ஏற்கெனவே அது ஒரு பிரச்சினையாக இல்லாததாலும், கோபால் ஒரு சிறந்த மனிதன் என்பதாலும் அவள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறாள். எது நிபந்தனையாகிறதோ, அதுதான் பல துயரங்களையும் சோதனைகளையும் குடும்பத்துக்குள் கொண்டுவருகிறது.
ஏற்கெனவே ஒரு நடிகையின் மீது சமூகத்துக்கு (ஜமீன்தாருக்கும்) இருக்கும் வற்றாத அந்த உள்ளுறைந்த ஐயம் தன்னை மறுபடியும் ஆங்காரமாக நிலைநிறுத்தப் பார்க்கிறது. இதனால் சீதாவின் வாழ்க்கை, கடலில் சிக்கிய துடுப்பில்லாத படகாக ஆகிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவதில் உள்ள சுழற்சிகள் நம் மனநிலைக்கு ஒத்தடம் கொடுத்து சமன்செய்கின்றன.
கண்ணதாசனின் பங்களிப்பு
இந்தப் படத்தின் பாடலாசிரியரான கண்ணதாசன் கிட்டத்தட்ட ஒரு வசனகர்த்தாவுக்கான பங்கையும் எடுத்துக்கொள்கிறார். கதையை நேர்க்கோட்டிலிருந்து பிறழ்ந்துவிடாமல் கொண்டுசெல்லும் பணி அவருக்கு உரித்தானதாகும். கதாநாயகிக்குச் சாதகமான மனநிலையை ரசிகர்களுக்கு உருவாக்குவதில் அவரின் கைவண்ணம் மிளிர்ந்திருக்கிறது.
கண்ணதாசன் தனிப்பட்ட முறையில் இந்திய ஆன்மிகப் பக்குவத்தைப் பெற்றவர்; கற்பு நிலை அவருக்கு உயிரானது. மனங்களின் தூய்மையையும் விரும்புகிறவர். ஆனால் ஒரு பெண்ணின் கற்புக்கு எப்போதும் சவால் விடுகின்ற நாடகக் கலையையும், அதில் நடிக்கும் பெண்ணையும் சமூகம் எந்த விதமாகப் பார்க்கும் என நன்றாகப் புரிந்துகொண்டு, பழமை மனங்களுக்கு நியாய உணர்வைப் போதிப்பதைப் போல பாடல்களை எழுதியிருக்கிறார். ஒரு பாடலில்..
“காதலித்தல் பாவமென்றால் கண்களே பாவமன்றோ
கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ, பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?”
என்று நாயகி உருகும்போது அந்த மனநிலைக்கு ஏற்ற உணர்வுகள் ரசிகர்களுக்குள் ஆழமாய் உட்புகுந்து கதையை மேலும் வலுப்படுத்த உதவியிருக்கின்றன.
பொதுவாக, ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பு என்றால் பிரம்மாண்டமும் கதையம்சமும் கூடிய படங்கள் என்கிற எண்ணம் நமக்கு வரும். ஆனால் ‘வாழ்க்கைப் படகு’ பிரம்மாண்டமான படம் அல்ல; கதையம்சத்தில் கூடுதல் கவனம் செலுத்தி எடுக்கப்பட்டதை உணரலாம். எனினும் பிரம்மாண்டம் என்பதைக் காட்டாமல் போய்விடக் கூடாது என்பதாலோ என்னவோ ஒரு நிலநடுக்கக் காட்சியில் சற்றே சிரத்தை எடுத்துத் தங்களின் முத்திரையையும் பதித்திருப்பார்கள். இதை அந்தக் காலத்தில் வியந்து எழுதிய பத்திரிகைகளும் உண்டு. அந்த நிலநடுக்கம்தான் ராஜனுக்கும் சீதாவுக்கும் ராவ் பகதூருக்கும் நேரிடவிருந்த கவுரவப் பங்கத்தைச் சரிசெய்து காப்பாற்றுகிறது.
படத்தின் இயக்குநர் சீனிவாசன் என்று டைட்டில் கார்டு வருகிறது. ஒரு கணம் அதிர்ச்சி. யார் இந்த சீனிவாசன்? அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்று குழப்பம் வந்தது. யோசித்துப் பார்த்ததும் படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன்தான் அந்த சீனிவாசன் என்று தெளிந்தது. மக்களின் மனநிலையிலுள்ள ‘கற்பு’க்குப் பங்கம் வந்துவிடாமல் கதை சொல்ல வேண்டும்; இல்லையென்றால் ரசிகர்களின் கோப அலைகளில் சிக்கிக் கவிழ்ந்துவிட நேரும் என்பதால்தான் படத்துக்கு ‘வாழ்க்கைப் படகு’ என்று தலைப்பு வைத்தாரோ?




இன்றளவும் என்னை கவர்ந்த பழம்பெரும் நடிகை தேவிகா! இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், பெண்மைக்கே உரிய அச்சம்,
மடம், நாணம் மற்றும் பயிற்பு போன்ற நான்கையும் ஒருங்கே பெற்றிப்பவர். இவர் நடிக்கும் போதும் சரி, பாடல்வரிகளுக்கு வாயசைத்து நடிக்கும்போதும் சரி, முதலில் நடிப்பை வெளிப்ப டுத்துவது இவரது கண்களே எனலாம். ஆம், தேவிகா அவர் கள் நடித்த படங்களை இன்றும் நான் பார்க்கும்போதெல்லாம், ஒரு வித ஈர்ப்புடன் அந்த படங் களை பார்க்கத் தூண்டும் எத்தனை முறைவேண்டுமானாலும் பார் த்து ரசித்தும் இருக்கிறேன்.
தேவிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் ஆகும். இவருக்கு இவர
து பெற்றோர் வைத்த பெயர் பிரமீளா. தனது சொந்தப் பெயரிலேயே, இரண் டாவது கதாநாயகியாக நடித்து வெற் றி பெற்ற தெலுங்குப் படம், “நாட்டிய தாரா” என்ற பெயரில் தமிழிலும் வெ ளிவந்தது. அக் காலக்கட்டத்தில் தேவி காவையும் அவரது நடிப்பையும் பார்த் தவர் கள் “யார் இந்த அழகு தேவதை?” என்று கேட்டு வியந்தனர்.
தமிழ்ப்பட உலகில் நாட்டியப்பேரொளி, பத்மினியும், நடிகையர் தில கம் சாவித்திரியும் கொடி கட்டிப்பறந்த காலக்கட்டத்தில், இவர்களு க்கு அடுத்த இடத்தைப் பெற்று, தமிழிலும், தெலுங்கிலும் சுமார் 150-
க்கும் மேற்பட்ட திரைப்படங் களில் தேவிகா நடித்துள்ளார். இந்த சம யத்தில் நடிகை பானுமதி “மணமகன் தேவை” என்ற படத் தை தமிழில் தயாரித்தார். கதாநா யகன் சிவாஜிகணேசன். இப்படத் தில் இரண்டாவது கதாநாயகியா க பிரமீளா (தேவிகா) நடித்தார்.
தமிழ்த்திரைப்பட்டத்தின் மீதுள்ள காதலால் தமிழித்திரையிலும் புக ழ் பெறவேண்டும் என்ற ஆசை பிரமீளா (தேவிகா)வுக்கு ஏற்பட்டது. அதற்காக, நல்ல நடிப்பு பயிற்சிபெற விரும்பி, அக்காலக் கட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய எஸ். வி.சகஸ்ரநாமத்தின் “சேவா ஸ்டேஜ் ” நாடகக்குழுவில் சேர்ந் தார். இந்த சமயத்தில் சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிகர் முத்து ராமன் நடித்து வந்தார். பிரமீளா தன் பெயரை “தேவிகா” என்று மாற் றிக் கொண்டார். நாடகத்தில் நடித்ததன் மூலம் , தேவிகாவின் நடிப் பில் மெருகு ஏறியது. தமி ழை அழகாகவும், திருத்தமாகவும் பேசக் கற்று க் கொண்டார்.
Sumaithangi - Endhan Paarvayin song
1957-ல் எம்.ஏ.வேணு “முதலாளி” என்ற படத் தைத் தயாரித்தார். இதில் கதாநாயகன் எஸ். எஸ்.ராஜேந்திரன். கதாநாயகி தேவிகா. பல படங்களில் துணை டைரக்டராக இருந்த “முக்தா” சீனிவாசன் டைர க்டராக அறிமுகமா னார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, 1957 தீபாவளிக்கு வெளி வந்த இப்படம், பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களையும்,
பெரிய பேனர் பட ங்க ளையும் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றது. “ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே … ஆபோகி ராகத்தில் அமைந்த அந்த பாடலை எஸ் .எஸ். ராஜேந்திரன் (டி.எம். சவுந்தரராஜ ன் குரலில்) பாட தேவிகா வயல் வெளி யில் நடந் து செல்வார். பாட்டும், இந்தக் காட்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதன் விளை வாக தேவிகா நட்சத்திர அந்தஸ்தை எட்டி ப்பிடித்தார்.
“பாவமன்னிப்பு”, “பந்த பாசம்”, “அன்னை இல்லம்”, “குலமகள் ராதை
“, “ஆண்டவன் கட்டளை”, “கர்ணன்”, “முரடன் முத்து”, “சாந்தி”, “நீல வானம்”, “பழநி , பலே பாண்டியா போ ன்ற குறிப்பிடும் படியான நிறைய படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களு க்கு ஜோடியாக தேவிகா நடித்தார். . இவற்றில் நீல வானத்தில் தேவிகா நடிப்பு அற்புதம்.
“ஆண்டவன் கட்டளை” என்ற படத்தில் வரும் ஆழகே வா என்ற இந்த ப்பாடல், இக்கதையின் ஓட்டத்திற்கும், அந்த கதாபாத்ததி ரத்திற்கும்
கட்டாயமாகத் தேவைதான் . அதை அளவோடு தந்திருப்பார்கள். அது வும் தேவிகா அவர்கள் பெரிதாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது கண்களிலே யே உணர்ச்சிகளைக் காட்டி, சிவாஜி யை மட்டுமல்ல அந்த பாடலை பார்க் கும் நம்மையும் சுண்டி இழுப் பார்.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் தேவிகா நடித்த “நெஞ்சில் ஓர் ஆலயம், “நெஞ்ச ம் மறப்பதில்லை” ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்கள் ஆகும்.
hu nee thaanaa - Nenjil Oru Aalayam.
“நெஞ்சில் ஓர் ஆலயம், திரைப்படத்தில் சொன்னது நீதானா என்ற பாடல் வரிகளுக்கு வாயசைத்து நடித்ததோடு அல்லாமல் ஏதோ அவ ரே சிதார் இசைக்கருவியை இசைப்பது போலவே தனது விரல்க ளால் மீட்டுவதுபோல் நடித்திருப்பது அற்புதம்.
inda Maname - Ananda Jothi - Devika
காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் தேவிகா ஜோடியாக நடித்த “
சுமைதாங்கி” மிகச்சிறந்த படம். இதை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார். எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் தேவிகா நடித்த “அன்பு எங்கே?”, ” வானம்பாடி”, “மறக்க முடியு மா?” ஆகிய படங்கள் குறிப்பிடத் தக்க வை. நாகேசுவரராவ், பாலாஜி, முத்து ராமன், ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், கல்யாணகுமார் ஆகியோருடன் இணை ந்து நடித்தவர் தேவிகா.
எம்.ஜி.ஆருடன் “ஆனந்தஜோதி” என்ற ஒரே ஒரு படத்தில் கதா நாயகியாக தேவிகா நடித்தார். பீம்சிங்கிடம் துணை டைரக்டராகப் பணியா ற்றிய தேவதாசுக்கும், தேவிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும்
திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய ஒரே மகள் கனகா. “வெகுளிப்பெண்” என்ற படத் தை தேவிகா சொந்தமா கத் தயாரித் தார்.
இதை டைரக்ட் செய்தவர் தேவதாஸ். கதை- வசன ம் கலைஞானம். மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த தேவிகாவுக்கு ம், தேவதாசுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இருவரும் பிரிந்த னர். தமிழ், தெலு ங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளிலும்
150-க்கு மேற்பட்ட படங்களில் நடி த்த தேவிகா, பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார்.
அம்மா, அக்கா போன்ற வேடங்களி ல் நடிக்கவில்லை. குடும்பப்பாங்கா ன படங்களில் நடிக்கப் பொருத்தமா னவர் என்ற பெயரை தேவிகா பெற் றிருந்தார். சென்னை ராஜா அண் ணா மலைபுரத்தில் உள்ள தன் வீட்டி ல் தேவிகா வசித்து வந்தார். நெஞ்சு வலி காரணமாக, ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட தேவிகா 1-5-2002 அன்று மரணம் அடைந்தார். தேவிகாவின் மகள் கனகா பல சினிமா படங்களில் நடித்தார். நடிகர் ராமராஜனுடன் அவர் நடித்த “கரகாட்டக்கார ன்” 52 வாரங்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக