இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த நாள்: ஜூன் 13, 1987.
ஜி. வி. பிரகாஷ் குமார் (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட
இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும்,
வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த்
திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
திரைப்பட விவரம்
இசையமைத்துள்ள திரைப்படங்கள்
வெயில் (2006)
கிரீடம் (2007)
பொல்லாதவன் (2007)
நான் அவள் அது (2008)
சேவல் (2008)
அங்காடி தெரு (2009)
ஆயிரத்தில் ஓருவன் (2009)
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2009)
மதராசபட்டினம் (2010)
வ (2010)
ஆடுகளம் (2011)
தெய்வத்திருமகள் (2011)
மயக்கம் என்ன (2011)
முப்பொழுதும் பொழுதும் உன் கற்பனைகள் (2012)
ஓரம் போ (2007)
எவனோ ஒருவன் (2007)
காளை (2007)
குசேலன் (2008)
தாண்டவம் ( 2012 )
சகுனி ( 2012 )
தாண்டவம் (2012 )
ஏன் என்றால் காதல் என்பேன் (2012)
பென்சில் (2013)
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2008 குசேலன் அவராகவே "சினிமா சினிமா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 நான் ராஜாவாகப் போகிறேன் அவராகவே "காலேஜ் பாடம்" பாடலில்
சிறப்புத் தோற்றம்
2013 தலைவா நடனம் ஆடுபவர் "வாங்கண்ணா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2015 டார்லிங் கதிர்
2015 பென்சில் பின்தயாரிப்பு
2015 திரிஷா இல்லைனா நயன்தாரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக