வெள்ளி, 15 ஜூன், 2018

நடிகை அஞ்சலி பிறந்த நாள் ஜூன் 16 , 1986



நடிகை அஞ்சலி பிறந்த நாள் ஜூன் 16 , 1986

அஞ்சலி (Anjali, தெலுங்கு : అ౦జలి) தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர்
இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனி யாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார். மேலும் நடிப்புத்திறன் தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்.

அஞ்சலி
பிறப்பு 16 சூன் 1986 (அகவை 31)
ராஜமுந்திரி , ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
பணி நடிகை, முன்னாளர்.
செயல்பட்ட
ஆண்டுகள் 2006–இன்றுவரை


விருதுகள்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
2008: சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது - கற்றது தமிழ்
2011: சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - அங்காடித் தெரு


விஜய் விருதுகள்

2008: சிறந்த அறிமுக நடிகை – கற்றது தமிழ்
2011: சிறந்த நடிகை – அங்காடித் தெரு
மற்ற விருதுகள்
2011: சிறந்த நடிகைக்கான விகடன் விருது - அங்காடித் தெரு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக