சனி, 2 ஜூன், 2018

நடிகர் ராதா பிறந்த நாள் ஜூன் 3 .



நடிகர் ராதா பிறந்த நாள் ஜூன் 3 .

ராதா ( மலையாளம் : രാധ; பிறப்பு சந்திரிகா 3 ஜூன் 1966)  ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் ,
தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும்
இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை
அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வாழ்க்கை குறிப்பு
திருவனந்தபுரம் மாவட்டம் கல்லராவில் பிறந்த இவருக்கு அம்பிகா மற்றும் மல்லிகா என இரண்டு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது சகோதரிகளுள் ஒருவரான அம்பிகாவும் இவரது காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவராவார்.
இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட் விருதினை வென்றுள்ளன.
இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர் , ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான
துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

நடித்த திரைப்படங்களில் சில

தமிழ் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குநர்
1991 மறுபக்கம் சிவகுமார் ,
ஜெயபாரதி
சாந்தி எனது சாந்தி டி. ராஜேந்தர் ,
சிலம்பரசன்
சிகரம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ,
ரேகா, ரம்யா கிருஷ்ணன் ,
1990 மனைவி ஒரு மாணிக்கம் அர்ஜுன் ,
1989 ராஜாதி ராஜா ரஜினிகாந்த் ,
நதியா
பிட் பாக்கெட் சத்யராஜ், சில்க் ஸ்மிதா
சின்னப்ப தாஸ் சத்யராஜ் சி. வி. ராஜேந்திரன்
ஒரு பொண்ணு நினைச்சா மோகன்
நியாயத் தராசு நிழல்கள் ரவி
சின்ன மயில் சுரேஷ்
1988 உள்ளத்தில் நல்ல உள்ளம் விஜயகாந்த்
என் உயிர் கண்ணம்மா பிரபு
அண்ணாநகர் முதல் தெரு சத்யராஜ், அம்பிகா ,
பிரபு பாலு ஆனந்த்
1987 ஆனந்த் பிரபு , ஜெயஸ்ரீ சி. வி. ராஜேந்திரன்
ஜல்லிக்கட்டு சிவாஜி கணேசன் ,
சத்யராஜ் மணிவண்ணன்
காதல் பரிசு கமல்ஹாசன் ,
அம்பிகா ஏ. ஜெகநாதன்
உழவன் மகன் விஜயகாந்த் ,
ராதிகா
நினைவே ஒரு சங்கீதம் விஜயகாந்த் , ரேகா,
ஸ்ரீவித்யா ,
கவுண்டமணி
எங்க சின்ன ராசா பாக்யராஜ் பாக்யராஜ்
1986 மனிதனின் மறுபக்கம் சிவகுமார்
அம்மன் கோயில் கிழக்காலே விஜயகாந்த் சுந்தர்ராஜன்
மெல்லத் திறந்தது கதவு மோகன் , அமலா சுந்தர்ராஜன்
மனக்கணக்கு விஜயகாந்த்
1985 இதயக் கோயில் மோகன், அம்பிகா மணிரத்னம்
முதல் மரியாதை சிவாஜி கணேசன் ,
சத்யராஜ் பாரதிராஜா
ஒரு கைதியின் டைரி கமல்ஹாசன் , ரேவதி பாரதிராஜா
நல்ல தம்பி கார்த்திக் எஸ். பி. முத்துராமன்
ஜப்பானில் கல்யாண ராமன் கமல்ஹாசன் எஸ். பி. முத்துராமன்
நீதியின் நிழல் சிவாஜி கணேசன் ,
பிரபு
1984 நான் மகான் அல்ல ரஜினிகாந்த்
தாவணி கனவுகள் பாக்யராஜ் , ராதிகா
சிம்ம சொப்பனம் சிவாஜி கணேசன் ,
பிரபு
சரித்திர நாயகன் சிவாஜி கணேசன் ,
பிரபு
இரு மேதைகள் சிவாஜி கணேசன் ,
பிரபு
கைராசிக்காரன் பிரபு
அம்பிகை நேரில் வந்தாள் மோகன்
1983 பாயும் புலி
துடிக்கும்
அபூர்வ சகோதரிகள் ராதா / விஜயா
சந்திப்பு
தூங்காதே தம்பி தூங்காதே
முத்து எங்கள் சொத்து
வெள்ளை ரோஜா ரோசி
சிவப்பு சூரியன்
நெஞ்சமெல்லாம் நீயே
1982 எங்கேயோ கேட்ட குரல் காமாட்சி
காதல் ஓவியம் ஜானகி
கோபுரங்கள் சாய்வதில்லை ஜூலி
இளஞ்சோடிகள் ராதா
கண்ணே ராதா ராதா
வாலிபமே வா வா
பக்கத்து வீட்டு ரோஜா
நேரம் வந்தாச்சு
துணை ராதா
காதலித்து பார்
அதிசய பிறவிகள் கீதா
ஆயிரம் முத்தங்கள்
ஆனந்த ராகம்
கடவுளுக்கு ஒரு கடிதம்
1981 டிக் டிக் டிக் ராதா
அலைகள் ஓய்வதில்லை மேரி முதல் திரைப்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக