வெள்ளி, 1 ஜூன், 2018

இயக்குநர் மணிரத்னம் பிறந்த நாள் - ஜூன் 2 , 1956.


இயக்குநர் மணிரத்னம் பிறந்த நாள் - ஜூன் 2 , 1956.

மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2 , 1956 ) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான
தொழில்நுட்பத்திற்கும் , சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய
பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய
நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத முப்படங்களான ரோஜா (1992),
பம்பாய் (1995), உயிரே (1998) பெரிதும் பேசப்பட்டன.
ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இளமை

மணிரத்னம் 2 ஜூன் 1956 ல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம் வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும் தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன் இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணிரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது. திரைப்படம் பார்ப்பது அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன் என அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் வளர்ந்த சிறுவனாக திரைப்படம் பார்க்க துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும் நாகேஷும் இவருக்கு பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்கள் பார்த்து அவர் ரசிகரானார்.
பள்ளிப் படிப்பு முடிந்து ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலான்மை கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார்.


மணவாழ்க்கை

திரைப்பட நடிகை சுஹாசினி யை 1988ல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.

இவரது வெற்றித் திரைப்படங்களில் சில

1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
1984 - உணரு (மலையாளம்)
1985 - இதய கோவில்
1985 - பகல் நிலவு
1986 - மௌன ராகம் (பாக்யராஜின் "அந்த ஏழு நாட்கள்" திரைப்படத்தின் தழுவல் என்று விமர்சனங்களுக்கு உள்ளானது)
1987 - நாயகன்
1988 - அக்னி நட்சத்திரம்
1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)- தமிழில்
இதயத்தை திருடாதே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
1990 - அஞ்சலி
1991 - தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாக கருதப்பட்டது)
1992 - ரோஜா இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது
1993 - திருடா திருடா
1995 - பம்பாய்
1997 - இருவர்
1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
2000 - அலைபாயுதே
2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
2004 - ஆய்த எழுத்து - யுவா வும் ஆய்த எழுத்து ம் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன
2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
2010 - ராவணன் (இந்தி)- திரைக்கதை இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது
2013- கடல்
2015 - ஓ காதல் கண்மணி
2017 - காற்று வெளியிடை
திரைப்பட விபரம்
வருடம் திரைப்படம் திரைப்பட இயக்குனர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் மொழி குறிப்புகள்
1983 பல்லவி அனுபல்லவி ஆம் ஆம் கன்னடம் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கர்நாடக அரசின் திரைப்பட விருது. இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒ பிரியா பிரியா என்று மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
ஒ பிரியா பிரியா ஆம் ஆம் தமிழ் கன்னடத்தில் வெளியான பல்லவி அனுபல்லவி ன் மொழி மாற்றம் ஒ பிரியா பிரியா ஆம் ஆம் தெலுங்கு
1984 உணரு ஆம் மலையாளம்
1985 பகல் நிலவு ஆம் ஆம் தமிழ்
இதய கோவில் ஆம் ஆம் தமிழ்
1986 மௌன ராகம் ஆம் ஆம் தமிழ் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
1987 நாயகன் ஆம் ஆம் ஆம் தமிழ்
1988 அக்னி நட்சத்திரம் ஆம் ஆம் தமிழ் Tamil Nadu State Film Awards - Best Film
1989 கீதாஞ்சலி ஆம் ஆம் தெலுங்கு National Film Award for Best Popular Film Providing Wholesome Entertainment
1990 சத்ரியன் ஆம் ஆம் தமிழ்
அஞ்சலி ஆம் ஆம் தமிழ் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
1991 தளபதி ஆம் ஆம் தமிழ்
1992 ரோஜா ஆம் ஆம் தமிழ் National Film Award for Best Feature Film on National Integration
Filmfare Award for Best Director – Tamil
Tamil Nadu State Film Award for Best Director
Nominated—Golden St. George for Best Film at
Moscow International Film Festival
கசக் ஆம் ஆம் இந்தி தமிழில் வெளியான மௌன ராகம் ன் இந்தி மறுபடி
1993 காயம் ஆம் தெலுங்கு
திருடா திருடா ஆம் ஆம் தமிழ்
1995 பம்பாய் ஆம் ஆம் ஆம் தமிழ் National Film Award for Best Feature Film on National Integration
Filmfare Critics Award for Best Movie
Special Award at the
Political Film Society Awards
Wim Van Leer In Spirit of Freedom Award at the
Jerusalem Film Festival
Gala Award at the
Edinburgh International Film Festival
1995 ஆசை ஆம் தமிழ்
1996 இந்திரா ஆம் ஆம் தமிழ் Best Film at Belgrade International Film Festival
1997 இருவர் ஆம் ஆம் ஆம் தமிழ் Best Film at Belgrade International Film Festival
நேருக்கு நேர் ஆம் தமிழ்
1998 தில் சே ஆம் ஆம் ஆம் இந்தி NETPAC Award (Special Mention) at Berlin International Film Festival
உயிரே ஆம் ஆம் ஆம் தமிழ்
2000 அலைபாயுதே ஆம் ஆம் ஆம் தமிழ் NETPAC Award (Special Mention) at Berlin International Film Festival
2001 டும் டும் டும் ஆம் ஆம் தமிழ்
2002 5 ஸ்டார் (திரைப்படம்) ஆம் தமிழ்
கன்னத்தில் முத்தமிட்டால் ஆம் ஆம் ஆம் தமிழ் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
Filmfare Award for Best Director – Tamil
Tamil Nadu State Film Award for Best Director
Best Film award at
Jerusalem Film Festival
ITFA Best Director Award
Audience Award for Best Feature Film at Indian Film Festival of Los Angeles
Audience Choice Award for Narrative Competition at RiverRun International Film Festival
Best Picture at Zimbabwe International Film Festival
Audience Award, Jury Award and Special Award at Film Fest New Haven
Best International Film at
Westchester Film Festival
சாத்தியா ஆம் இந்தி தமிழில் வெளியான அலைபாயுதே ன் இந்தி மறுபடி
2004 யுவா ஆம் ஆம் ஆம் இந்தி ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியானது.
Filmfare Critics Award for Best Movie (இந்தி)
Filmfare Award for Best Screenplay (இந்தி)
Nominated— Star Screen Award for Best Director
(இந்தி)
Nominated— Star Screen Award for Best Screenplay (இந்தி) யுவா ஆம் ஆம் ஆம் தெலுங்கு
ஆய்த எழுத்து ஆம் ஆம் ஆம் தமிழ்
2007 குரு ஆம் ஆம் ஆம் இந்தி ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியானது.
Filmfare Critics Award for Best Movie (இந்தி)
Filmfare Award for Best Screenplay (இந்தி)
Nominated— Star Screen Award for Best Director (இந்தி)
Nominated— Star Screen Award for Best Screenplay (இந்தி) குரு ஆம் ஆம் ஆம் தமிழ்
குருகந்த் ஆம் ஆம் ஆம் தெலுங்கு
2010 ராவண் ஆம் ஆம் ஆம் இந்தி ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியானது. ராவணன் ஆம் ஆம் ஆம் தமிழ்
வில்லன் ஆம் ஆம் ஆம் தெலுங்கு
2013 கடல் ஆம் ஆம் ஆம் தமிழ் ஒரே நாளில் இரு மொழிகளிலும் வெளியானது. கடலி ஆம் ஆம் ஆம் தெலுங்கு
2015 ஓ காதல் கண்மணி ஆம் ஆம் ஆம் தமிழ் ஒரே நாளில் இரு மொழிகளிலும் வெளியானது. ஓகே பங்காரம் ஆம் ஆம் ஆம் தெலுங்கு
2017 ஓக்கே ஜானு ஆம் ஆம் இந்தி தமிழில் வெளியான ஓ காதல் கண்மணி யின் இந்தி மறுபடி.
காற்று வெளியிடை ஆம் ஆம் ஆம் தமிழ் ஒரே நாளில் இரு மொழிகளிலும் வெளியானது. செழியா ஆம் ஆம் ஆம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக