வியாழன், 21 ஜூன், 2018

நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 ,1974 .


நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன்  22 ,1974 .

விஜய் ( ஆங்கிலம்: Vijay , பிறப்பு: சூன் 22 ,
1974 ; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை " தளபதி" என்று அழைக்கிறார்கள்.

பிறப்பு சூன் 22, 1974 (அகவை 43)
சென்னை தமிழ்நாடு இந்தியா
தொழில் திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர் , நடன அமைப்பாளர் , பின்னணிப் பாடகர்
துணைவர் சங்கீதா சொர்ணலிங்கம் (1999-தற்போது)
பிள்ளைகள் ஜேசன் சஞ்சய்,
திவ்யா சாஷா
பெற்றோர் எஸ். ஏ. சந்திரசேகர்
சோபா சந்திரசேகர்
இணையத்தளம் http://www.vijaytheactor.com/

திரைப்படத்துறை

விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த
முதல் படம்
நாளைய தீர்ப்பு . பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

அரசியல்

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில்
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

திரைப்பட விபரம்

நடித்த திரைப்படங்கள்
ஆண்டு படம் வேடம் உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
2017 மெர்சல் வெற்றிமாறன்\வெற்றி\மாறன் எஸ். ஜே. சூர்யா ,
வடிவேலு , காஜல் அகர்வால் , சமந்தா ,
நித்யா மேனன் அட்லீ விஜய் மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம்.
2017 பைரவா பைரவா கீர்த்தி சுரேஷ் பரதன் கல்வி நிலையங்கள் செய்யும் அநியாயங் களைத் தட்டிக்கேட்கிறான் `பைரவா'. [3]
2016 தெறி விஜய் குமார்(விஜய்) / ஜோசெப் குருவில்லா / தர்மேஸ்வர் சமந்தா , எமி ஜாக்சன் அட்லீ இயக்குநர் திரு.
மகேந்திரன் அவர்கள் ( உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும் ) நடிகராக அறிமுகம்
2015 புலி மருதீரன்/புலிவேந்தன் ஹன்சிகா மோட்வானி ,
சுருதி ஹாசன் ,
ஸ்ரீதேவி சிம்புதேவன்
2014 கத்தி கதிரேசன்/ஜீவானந்தம் சமந்தா ஏ. ஆர். முருகதாஸ் இரட்டை வேடம்
2014 ஜில்லா ஷக்தி மோகன்லால் , காஜல் அகர்வால் ஆர். டி. நேசன்
2013 தலைவா விஷ்வா அமலா பால் , சத்யராஜ் விஜய் (இயக்குனர்) தமிழகம், புதுவை தவிர அனைத்து இடங்களிலும் ஆகத்து 9 அன்று வெளியானது .
2012 ரவுடி ரதோர் பிரபு தேவா இந்தி திரைப்படத்தில் சிறப்புத் தோற்றம்
2012 துப்பாக்கி ஜெகதீஸ் காஜல் அகர்வால் ஏ. ஆர். முருகதாஸ் மாபெரும் வசூல் சாதனை
2012 நண்பன் பஞ்சவன் பாரிவேந்தன் / பாரி / கொசக்சி பசப்புகழ் ஸ்ரீகாந்த் , ஜீவா ,
இலியானா , சத்யராஜ் ஷங்கர் திரீ இடியட்ஸ்(2009) இந்தி படத்தின் மீளுருவாக்கம்.
2011 வேலாயுதம் வேலு(எ)வேலாயுதம் ஹன்சிகா மோட்வானி ,
ஜெனிலியா மோ. ராஜா ஆசாத் (2000) என்ற தெலுங்கு படத்தின் தழுவல்.

2011 காவலன் பூமிநாதன் அசின் , வடிவேல் சித்திக் 14வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா திரையிடப்பட்டது

2010 சுறா சுறா தமன்னா எஸ்.பி. ராஜ்குமார் விஜயின் 50வது படம்.
2009 வேட்டைக்காரன் போலிஸ் ரவி அனுஷ்கா பாபு சிவன் புலி வேட்டை என்னும் பெயரில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2009 வில்லு புகழ் நயன்தாரா பிரபு தேவா இந்தியில் மொழி பெயர்க்கபட்டது
2008 பந்தயம் விஜய் எஸ். ஏ. சந்திரசேகர் சிறப்புத் தோற்றம்
2008 குருவி வெற்றிவேல் திரிஷா , விவேக் தரணி உதயாநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸின் முதல் தயாரிப்பு.
2007 அழகிய தமிழ் மகன் குரு / பிரசாத் சிரேயா சரன் , நமிதா பரதன் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம், தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2007 போக்கிரி சத்தியமூர்த்தி / தமிழ் அசின் பிரபு தேவா இதே பெயரில் 2006ல் வெளிவந்த தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம்.
2006 ஆதி ஆதி திரிஷா ரமணா
2005 சிவகாசி முத்தப்பா / சிவகாசி அசின் , நயன்தாரா , பேரரசு
2005 சுக்ரன் சுக்ரன் ரவி கிருஷ்ணா , நதீஷா,
ரம்பா எஸ். ஏ. சந்திரசேகர் சிறப்புத் தோற்றம்
2005 சச்சின் சச்சின் ஜெனிலியா , பிபாசா பாசு , ஜான் மகேந்திரன் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2005 திருப்பாச்சி சிவகிரி திரிஷா , மல்லிகா பேரரசு அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது.
2004 மதுர மதுரைவேல் சோனியா அகர்வால் , ரக்ஷிதா, தேஜாஸ்ரீ ஆர். மாதேஷ்
2004 கில்லி சரவணவேலு / கில்லி திரிஷா தரணி ஒக்கடு (2003) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம்.
2004 உதயா உதயக்குமரன் சிம்ரன் அழகம் பெருமாள்
2003 திருமலை திருமலை ஜோதிகா ரமணா
2003 புதிய கீதை சாரதி மீரா ஜாஸ்மின் , அமீஷா பட்டேல் கே. பி. ஜெகன்
2003 வசீகரா பூபதி சினேகா கே. செல்வபாரதி
2002 பகவதி பகவதி ரீமா சென் ஏ. வெங்கடேஷ்
2002 யூத் சிவா சந்தியா, சிம்ரன் வின்சென்ட் செல்வா
2002 தமிழன் சூர்யா பிரியங்கா சோப்ரா ஏ. மஜீத்
2001 ஷாஜகான் அசோக் ரிச்சா பலோட் , மீனா ரவி
2001 பத்ரி பத்ரி பூமிகா , மோனல் அருண் பிரசாத்
2001 பிரெண்ட்ஸ் அரவிந்த் தேவயானி , சூர்யா சித்திக்
2000 பிரியமானவளே விஜய் சிம்ரன் கே. செல்வபாரதி பவித்ர பந்தம் (1996) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம்
2000 குஷி சிவா ஜோதிகா , ஷில்பா ஷெட்டி எஸ். ஜே. சூர்யா
2000 கண்ணுக்குள் நிலவு கௌதம் சாலினி ஃபாசில்
1999 மின்சாரக் கண்ணா கண்ணன்/காசி ரம்பா கே. எஸ். ரவிக்குமார்
1999 நெஞ்சினிலே கருணாகரன் இசா கோபிகர் எஸ். ஏ. சந்திரசேகர்
1999 என்றென்றும் காதல் விஜய் ரம்பா மனோஜ் பட்னாகர்
1999 துள்ளாத மனமும் துள்ளும் குட்டி சிம்ரன் எஸ். எழில்
1998 நிலாவே வா சிலுவை சுவலட்சுமி ஏ. வெங்கடேசன்
1998 பிரியமுடன் வசந்த் கௌசல்யா வின்சென்ட் செல்வா
1998 நினைத்தேன் வந்தாய் கோகுல கிருஷ்ணன் தேவயானி , ரம்பா கே. செல்வபாரதி
1997 காதலுக்கு மரியாதை ஜீவானந்தம் சாலினி ஃபாசில் அனியத்திப்ராவு (1997) என்ற மலையாள படத்தின் மீளுருவாக்கம்.
1997 நேருக்கு நேர் விஜய் சூர்யா , சிம்ரன் ,
கௌசல்யா வசந்த் நடிகர் சூர்யா வின் முதல் படம்
1997 ஒன்ஸ்மோர் விஜய் சிம்ரன் , சிவாஜி கணேசன் , சரோஜாதேவி எஸ். ஏ. சந்திரசேகர்
1997 லவ் டுடே கணேஷ் சுவலட்சுமி பாலசேகரன்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணன் டிம்ப்பல் ஆர். சுந்தர்ராஜன்
1996 செல்வா செல்வா சுவாதி ஏ. வெங்கடேசன்
1996 மாண்புமிகு மாணவன் சிவா கீர்த்தனா எஸ். ஏ. சந்திரசேகர்
1996 வசந்த வாசல் விஜய் சுவாதி எம். ஆர். சச்சுதேவன்
1996 பூவே உனக்காக ராஜா சங்கீதா, அஞ்சு அரவிந்த் விக்ரமன்
1996 கோயம்புத்தூர் மாப்ளே பாலு சங்கவி சி. ரெங்கநாதன்
1995 சந்திரலேகா ரகீம் வனிதா, விஜயகுமார் நம்பிராஜன்
1995 விஷ்ணு விஷ்ணு சங்கவி எஸ். ஏ. சந்திரசேகர்
1995 ராஜாவின் பார்வையிலே விஜய் இந்திரா அஜித் ஜானகி சௌந்தர் விஜயும் அஜீத்தும் இணைந்து நடித்த ஓரே படம்
1994 தேவா தேவா சுவாதி எஸ். ஏ. சந்திரசேகர்
1994 ரசிகன் விஜய் சங்கவி எஸ். ஏ. சந்திரசேகர்
1993 செந்தூரப் பாண்டி ' விஜய் யுவராணி, விஜயகாந்த் எஸ். ஏ. சந்திரசேகர்
1992 நாளைய தீர்ப்பு விஜய் கீர்த்தனா எஸ். ஏ. சந்திரசேகர் அறிமுகம்
1987 சட்டம் ஒரு விளையாட்டு விஜய் எஸ். ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம், சிறப்புத் தோற்றம்
1985 நான் சிவப்பு மனிதன் விஜய் எஸ். ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம், சிறப்புத் தோற்றம்
1984 வெற்றி விஜய் விஜயகாந்த் எஸ். ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம், சிறப்புத் தோற்றம்


பாடிய பாடல்கள்

இவர் சில திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். அவை,
ஆண்டு பாடல் படம் குறிப்புகள்
2016 செல்ல குட்டி தெறி
2015 ஏன்டி ஏன்டி புலி
2014 லெட்ஸ் டெக் ய செல்ஃபி புல்ல கத்தி
2014 கண்டாங்கி கண்டாங்கி ஜில்லா டி இமான்
2013 வாங்கண்ணா வணக்கங்கண்ணா தலைவா அழ. விஜய்
2012 கூகுள் கூகுள் துப்பாக்கி ஏ. ஆர். முருகதாஸ் தோன்றும் காட்சி இடம்பெறும் பாடல்
2005 வாடி வாடி சச்சின்
2002 கொக்கா கோலா பகவதி
உள்ளத்தைக் கிள்ளாதே தமிழன்
2001 என்னோட லைலா பத்ரி
2000 மிசிச்சிப்பி நதி குலுங்க பிரியமானவளே
சின்னஞ்சிறு கண்ணுக்குள் நிலவு
இரவு பகலை கண்ணுக்குள் நிலவு
1999 தங்கநிறத்துக்கு நெஞ்சினிலே
1998 டிக் டிக் டிக் துள்ளி திரிந்த காலம்
ரோட்டுல ஒரு பெரியண்ணா இந்த பாடலை நடிகர் விஜய் நடிகர் சூர்யாக்காக பாடினார்.
தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பெரியண்ணா இந்த பாடலை நடிகர் விஜய் நடிகர் சூர்யாக்காக பாடினார்.
காலத்துக்கு ஒரு கனா வேலை
சந்திர மண்டலத்தை நிலாவே வா
நிலவே.. நிலவே நிலாவே வா
மௌரிய மௌரிய ப்ரியமுடன்
1997 ஓஹ பேபி பேபி மற்றும் என்னை தாலாட்ட வருவாளா காதலுக்கு மரியாதை
ஊர்மிளா ஊர்மிளா ஒன்ஸ் மோர்
1996 சிக்கன் கரே செல்வா
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி காலமெல்லாம் காத்திருப்பேன்
திருப்பதி போனா மொட்ட மாண்புமிகு மாணவன்
1995 பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி கோயம்புத்தூர் மாப்ளே
1994 தொட்டபெட்டா விஷ்ணு
1994 அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு தேவா
1994 கோத்தகிரி குப்பம்மா தேவா
விருதுகள்
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்
காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்
விருது திரைப்படங்கள் ஆண்டு மூலம்
நாளைய சூப்பர் ஸ்டார் திருப்பாச்சி, சிவகாசி 2006
இந்த ஆண்டின் கேளிக்கையாளர் போக்கிரி, அழகிய தமிழ் மகன் 2007
விருப்பமான நாயகன் வேட்டைக்காரன் 2009
இந்த ஆண்டின் கேளிக்கையாளர் நண்பன்,துப்பாக்கி 2012
விருப்பமான நாயகன் துப்பாக்கி 2012
பிற விருதுகள்
கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது.


நடிகர் விஜய் பற்றிய சிறப்பு தொகுப்பு

விஜய்
தனது ரசிகர்களால் இளையதளபதி என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய். தமிழ்த் திரைப்படத் துறையில் விஜய் என்கிற பெயரில் அறிமுகமனார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார். "நாளைய தீர்ப்பு" என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பிறப்பு:
சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்தார். இவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழர், அம்மா ஷோபா மலையாளி.
விஜயின் குடும்பம்:
விஜய் அவர்களின் தந்தை ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். இந்த தகவலை முதன் முதலாக அவர்  ''சினிமா கனவில், 18 வயதில் ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஓடிவந்து... தெருவோரங்களில் படுத்துக் கிடந்த எனக்கு... இன்று ஒரு மதிப்பான வாழ்க்கை கிடைத்திருக்கிறது" என ஆனந்த விகடன் பேட்டியில் தெரிவித்தார். அவரது தாய் ஷோபா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வாழ்ந்த திரு.நீலகண்டன் என்ற நாடக இயக்குநரின் மகளாவார். ஷோபா பிரபல மேடைப் பாடகரும் ஆவார். "நண்பர் இளையராஜாவின் மேடைக் கச்சேரிகளில் பாடச் செல்வார். ஒரு கச்சேரி பாடினால் 100 ரூபாய் கிடைக்கும். அவர் பாடும் நாட்களில் எங்களுக்கு உணவு... பாடாத நாட்கள் பட்டினி. ஆனால்... அந்த வறுமையிலும்கூட எங்களின் மகிழ்ச்சி குறையாமல் இருந்தது!'' என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மனைவி பெயர் சங்கிதா, மகன் - ஜேசன் சஞ்சய், மகள் - திவ்யா சாஷா
விஜயின் இளமைப் பருவம் - கல்வி:
விஜய் ஒரு கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு 12 வயதில் ஞானஸ்தானம் செய்து வைக்கப்பட்டது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள "பால லோக் மெட்ரிகுலேஷன் பள்ளி"யில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். " நடிகர் விஜய் படிக்கும் போது ஒழுக்கமான மற்றும் அமைதியான மாணவன். அவர் விளையாட்டுகளில் மிகவும் திறமையானவர்" என அவரின் ஆங்கில ஆசிரியரான திருமதி.மீனா சுரேஷ் ஒரு விழாவில் குறிப்பிட்டார். சென்னை லயோலா கல்லூரியில் "காட்சி ஊடக" இளங்கலை படித்த விஜய் நடிக்கும் ஆர்வத்தில் பாதியில் கல்லூரிப்படிப்பை கைவிட்டார்.
‘‘நான் பிறந்ததே சினிமா குடும்பம்தானே. அப்பா அப்போ பரபரப்பான கமர்ஷியல் டைரக்டர். குழந்தை நட்சத்திரமா நிறைய படங்களில் நடிக்க வெச்சார். குட்டி விஜயகாந்த்னா அப்போ என்னைத்தான் கூப்பிடுவாங்க. எனக்கும் சினிமா தான் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். லயோலாவுல சேர்ந்ததும் இன்னும் ஆர்வம் பத்திக்குச்சு!’’
விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை:
விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். ஜேசன் சஞ்சய் "வேட்டைக்காரன்" படத்திலும், சாஷா "தெறி" படத்திலும் சிறு காட்சியில் நடித்திருந்தனர். விஜய் -சங்கீதா திருமணம் காதல் திருமணமாகும். விஜய் அவர்களின் மனைவி சங்கீதா லண்டனில் படித்து வளர்ந்த இலங்கை யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத்தமிழர்.
'' ‘பூவே உனக்காக' படத்தைப் பார்த்து விஜய்யோட தீவிர ரசிகை ஆயிட்டேன். அவரைப் பார்க்கிறதுக்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்துட்டேன். ரசிகைனு அறிமுகமாகி, நண்பர்களாகி, அப்புறம் காதலர்களானோம். அந்தச் சமயத்தில் விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியா இருந்தார். ஒருமுறை தன்னோட வீட்டுக்கு வரச்சொல்லி அழைச்சிருந்தார். விஜய்யோட அம்மா, அப்பா எல்லாருமே எங்கிட்ட நல்லா பழகினாங்க. விஜய்யைப் பார்க்க ரெண்டாவது முறை அவரோட வீட்டுக்குப் போனப்போ, அவரோட அப்பா எங்கிட்ட, 'விஜய்யும் நீயும் திருமணம் செய்துகொள்ளுங்கள்'னு சொன்னார். இன்ப அதிர்ச்சியா இருந்தது. எல்லாரோட ஆசிர்வாத்தோடும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்"
ஆகஸ்ட் 25-ம் தேதி 1999-ம் ஆண்டு சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்தார். 2000-ல் சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய்.
விஜயின் சினிமா பங்களிப்பு:
தந்தை இயக்குநர் சந்திரசேகர் படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்த விஜய் அவரின் இயக்கத்திலேயே "நாளைய தீர்ப்பு" என்கிற படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து "செந்தூரப்பாண்டி" என்கிற படத்தில் நடித்தார். இதில் விஜயகாந்த் கௌரவ வேடத்தில் நடித்தார். இது வரை மொத்தம் 67 படங்களில் நடித்துள்ள விஜய் 60 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது 61-வது படம் தயாராகி வருகிறது.
தெறி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணியில் இன்னொரு படம் உருவாக உள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ஜோதிகா, சமந்தா, வடிவேலு, சத்யராஜ் என்ற பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கவிருக்கின்றனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெற்றி', 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1984ல் 'வெற்றி' படம் ரிலீஸ் ஆனது. அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.
காதலுக்கு மரியாதை (1998) படத்துக்காகவும், திருப்பாச்சி (2005) படத்துக்காகவும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை இருமுறை பெற்றவர். 'விஜய் டி.வி"-யின் விருதுகளை 5 முறை வென்றுள்ளார். இவை தவிர, கில்லி (2004) - 'சென்னை கார்ப்பரேட் கிளப்'-பின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'தினகரன்' நாளிதழின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'ஃபிலிம் டுடே' சிறந்த நடிகர் விருது, பொதுச்சேவை அறிவிப்புக்கு (2005) வெள்ளி விருது, போக்கிரி (2007) - தமிழின் சிறந்த நடிகருக்கான 'அம்ரிதா மாத்ருபூமி' விருது, போக்கிரி (2007 )- சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, வேட்டைக்காரன் (2009) - சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, துப்பாக்கி, நண்பன் (2012) - விகடன் சிறந்த நடிகர் விருது... என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ’புலி’ படத்தின் 'ஏண்டி ஏண்டி' பாடலுடன் சேர்த்து 29 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இவருக்கு முதலில் பாடும் வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் தேவா இசையில் மட்டும் பத்து பாடல்களைப் பாடியிருக்கிறார். 'கத்தி' படத்தின் வசூல் 100 கோடிகளைத் தொட்டதில் தமிழில் ரஜினிக்குப் பிறகு 100 கோடி க்ளப்பில் இணைந்த நாயகன் விஜய்தான்.
விஜயின் சாதனைகள்:
விஜய் நடித்த கத்தி படம் வெளியான முதல் நாளே 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினிக்கு பிறகு 100 கோடி வசூல் செய்த முதல் ஹீரோ விஜய்தான்
விஜய் வாங்கிய விருதுகள்:
காதலுக்கு மரியாதை படத்துக்காக 1998-ல் ஒருமுறையும், 2005-ல் 'திருப்பாச்சி' படத்திற்காகவும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை இருமுறை பெற்றுள்ளார்.
சிறந்த நடிகருக்கான விகடன் விருது
விஜயின் சேவைகள்:
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி அன்று ஆதரவற்றோர் இல்லங்களிலும் அரசு மருத்துமனைகளிலும் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது விஜய் அவர்களின் வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை முதல் தனது ரசிகர் மன்றங்களை "மக்கள் இயக்கம்" என்கிற அரசியல் கட்சியாக மாற்றினார். அன்றைய காலகட்டத்தில் ஆளும் திமுக அரசை எதிர்த்து சில போராட்டத்திலும் அந்த இயக்கம் ஈடுபட்டது. 2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது.
திருச்சி மாவட்ட விஜய் தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பீரோ, மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 51 சீர்வரிசைப் பொருட்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக