செவ்வாய், 19 ஜூன், 2018

நடிகை காஜல் அகர்வால் பிறந்த நாள் ஜூன் : 19 ,1985 .


நடிகை காஜல் அகர்வால் பிறந்த நாள் ஜூன் : 19 ,1985 .

காஜல் அகர்வால் (Kajal Aggarwal) (பிறப்பு: 19 சூன் , 1985 ) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த
பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010),
மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ் , தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.


இளமைக் கால வாழ்க்கை

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால் , தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
திரை வாழ்க்கை

ஆரம்ப காலம்

இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா , ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை,  பின்னர் 2007-ம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.
அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு
பாரதிராஜாவின் , பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை.
புகழின் உச்சத்தில் (2009 – தற்போது வரையிலும்)
2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஒடாத நிலையைல், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில்
இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது, இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.


இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர். பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.
தற்போது, சூர்யாவுடன் , மாற்றான் திரைப்படத்திலும்  ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன்
துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.   தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படமொன்றிலும் நடித்து வருகிறார்.


திரைப்படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2004 கியூன்! ஹோ கயா நா... தியாவின் தோழி இந்தி
2007 லக்ஷ்மி கல்யாணம் லக்ஷ்மி தெலுங்கு
2007 சந்தமாமா மஹாலக்ஷ்மி தெலுங்கு
2008 பவ்ருடு சம்யுக்தா தெலுங்கு
2008 பழனி (திரைப்படம்) தீப்தி தமிழ்
2008 ஆட்டாடிஸ்டா சுன்னந்தா தெலுங்கு
2008 சரோஜா (திரைப்படம்) பூஜா தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 பொம்மலாட்டம் அனிதா தமிழ்
2009 மோதி விளையாடு ஈஸ்வர் லக்ஷ்மிராம் தமிழ்
2009 மஹதீரா யுவராணி மித்ராவிந்த தேவி,
இந்திரா (இந்து) தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டவை — சிறந்த நடிகைக்கான
பிலிம் பேர் விருது - (தெலுங்கு)
2009 கணேஷ் ஜஸ்ட் கணேஷ் திவ்யா தெலுங்கு
2009 ஆர்யா 2 கீதாஞ்சலி தெலுங்கு
2010 ஓம் சாந்தி மேக்னா தெலுங்கு
2010 டார்லிங் நந்தினி தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டவை — சிறந்த நடிகைக்கான
பிலிம் பேர் விருது - (தெலுங்கு)
2010 நான் மகான் அல்ல பிரியா சுதர்சன் தமிழ்
2010 பிருந்தாவனம் பூமி தெலுங்கு வென்றவை , சிறந்த நடிகைக்கான சினிமா விருது (CineMAA Award)
2011 மிஸ்டர். பர்பெக்ட் ப்ரியா தெலுங்கு
2011 வீரா ச்சிட்டி தெலுங்கு
2011 சிங்கம் காவ்யா போஷ்லே இந்தி பரிந்துரைக்கப்பட்டவை — சிறந்த நடிகைக்கான
பிலிம் பேர் விருது - (இந்தி)
பரிந்துரைக்கப்பட்டவை — சிறந்த அறிமுக நடிகைக்கான சீ சினி விருது
2011 தாதா ரியா தெலுங்கு
2012 பிஸ்னஸ் மேன் சித்ரா தெலுங்கு
2012 மாற்றான் அஞ்சலி தமிழ்
2012 பிரதர்சு தெலுங்கு மாற்றானின் தெலுங்கு மொழிபெயர்ப்பு
2012 துப்பாக்கி நிஷா தமிழ்
2013 ஸ்பெஷல் சப்பீஸ் இந்தி
2013 பாட்ஷா தெலுங்கு
2013 யேவது தெலுங்கு படப்பிடிப்பில்
2013 ஆல் இன் ஆல் அழகு ராஜா சித்ரா தேவி பிரியா தமிழ்
2013 ஜில்லா சாந்த்தி தமிழ்
2015 மாரி ஸ்ரீதேவி தமிழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக