நடிகை ரியா சென் பிறந்த நாள் ஜனவரி 24, 1981.
ரியா சென் ( வங்காள: রিয়া সেন; இந்தி :रिया सेन, உச்சரிப்பு பெயர் [ˈrɪ.aː ˈʃeːn] ) (பிறப்பில் ரியா தேவ் வர்மா ஜனவரி 24, 1981) ஒரு இந்திய திரைப்பட நடிகையும் மாடலும் ஆவார். பாட்டி சுசித்ரா சென் , தாய் மூன் மூன் சென் மற்றும் சகோதரி ரெய்மா சென் ஆகிய திரை நட்சத்திரங்களின் குடும்பத்தில் இருந்து வந்தவரான ரியா சென் தனது நடிப்பு வாழ்க்கையை 1991 ஆம் ஆண்டில்
விஷ்கன்யா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் துவக்கினார். வர்க்கரீதியாக அவரது நடிப்புலக வாழ்க்கையின் முதல் வெற்றிப் படம்
ஸ்டைல் , 2001 ஆம் ஆண்டில் இந்தியில் வெளிவந்த இப்படம் என். சந்திரா இயக்கிய ஒரு செக்ஸ் காமெடி திரைப்படம் ஆகும். தயாரிப்பாளர் பிரிதிஷ் நந்தி இயக்கிய
இசைப் படமான ஜான்கார் பீட்ஸ் (2001), இந்தி மற்றும் ஆங்கிலக் கலப்பாக ஹிங்கிலிஷில் வெளிவந்த ஷாதி நம்பர். 1 (2005), மலையாள திகில் படமான ஆனந்தபத்ரம் (2005) ஆகியவை அவர் நடித்த பிற படங்களில் சில.
ஃபால்கனி பதக்கின் இசை வீடியோவான
யாத் பியா கீ ஆனே லகி யில் பதினாறு வயதில் நடித்த போது அவர் முதலில் ஒரு மாடலாகத் தான் அறியப்பட்டார். அப்போது முதல், அவர் இசை வீடியோக்களிலும்,
தொலைக்காட்சி விளம்பரங்களிலும், ஃபேஷன் ஷோக்களிலும், மற்றும்
பத்திரிகை அட்டைகளிலும் தோன்றியுள்ளார்.
ரியா ஒரு பொது ஆர்வலராகவும் இருந்து, எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடம் இருந்த தவறான கருத்துகளை அகற்றும் நோக்கில், எய்ட்ஸ் விழிப்புணர்வு இசை வீடியோ ஒன்றில் தோன்றினார். குழந்தைகள் கண் பாதுகாப்புக்கும் அவர் நிதி திரட்ட உதவினார். நடிகர் அஷ்மித் படேலுடனான எம்எம்எஸ் வீடியோ துண்டு , புகைப்பட நிபுணர் தபூ ரத்னானியின் வருடாந்திர காலண்டரில் அரை நிர்வாண புகைப்படம், மற்றும் கலாச்சார பழம்பெருமை மிக்க இந்திய திரைத் துறையில் துணிச்சலான திரை முத்தங்கள் ஆகிய சர்ச்சைகளை ரியா சந்தித்துள்ளார்.
நடிப்பு வாழ்க்கை
முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில்
விஷ்கன்யா திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக ரியா தோன்றினார், அதில் அவர் இளம் வயது பூஜாவாக நடித்தார். 15 வயதில் அவர், தேசிய திரைப்பட விருதுகள் வென்ற இயக்குநர்
பாரதிராஜாவின் தாஜ்மஹால் (2000) என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார், ஆனால் இப்படம் வர்த்தகரீதியாக வெற்றி பெறவில்லை. அக்ஷய் கன்னா ஜோடியாக லவ் யூ ஹமேசா திரைப்படத்தின் மூலம் அவரது பாலிவுட் அறிமுகம் நடைபெற இருந்தது; ஆனால் அந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டதால், 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த என்.சந்திராவின்
ஸ்டைல் திரைப்படம் அவரது முதல் இந்தி திரைப்படமாக அமைந்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த செக்ஸ் காமெடி திரைப்படம் தான் அந்த இயக்குநருக்கு பத்துவருட காலத்தில் முதல் வெற்றி திரைப்படமாக அமைந்தது. சக புதுமுகங்களான
ஷர்மான் ஜோஷி, ஷாகில் கான் மற்றும் ஷில்பி முத்கல் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து ரியா நடித்த இந்த படம் ரியாவுக்கு ஒரு அறிமுக தளத்தை அமைத்துக் கொடுத்ததோடு, இந்தியாவில் குறைந்த பட்ஜெட் படங்கள் வர்த்தகரீதியாக வெற்றி பெறும் போக்கிற்கு ஒரு முன்னோடியாகவும் அமைந்தது. ஸ்டைல் திரைப்படத்தின் தொடர்ச்சி அத்தியாயமாக வந்த
எக்ஸ்கியூஸ் மீ திரைப்படத்தில், ரியா மற்றும் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு பதிலாக வளரும் நடிகைகளான சுனாலி ஜோஷி மற்றும் ஜெயா சீல் ஆகியோர் நடித்தனர்.
அவரது அடுத்த வெற்றித் திரைப்படம்
ஜான்கார் பீட்ஸ் , இது பழம்பெரும் இசையமைப்பாளரான ஆர் டி பர்மனின் இசையைச் சுற்றி நடக்கும் ஒரு காமெடிப் படம், இதில் அவர் ஷயான் முன்ஷி, ஜூஹி சாவ்லா , ராகுல் போஸ், ரிங்கி கன்னா மற்றும் சஞ்சய் சூரி ஆகியோருடன் இணைந்து ஒரு சிறிய கவர்ச்சி பாத்திரத்தில் நடித்திருந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் வெளியீட்டு இயக்குநராக இருந்த பிரிதிஷ் நந்தியால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், 25 மில்லியன் ரூபாய் (525,000 அமெரிக்க டாலர்கள் ) பட்ஜெட்டில் தயாரானது, பிரிதிஷ் நந்தி கம்யூனிகேஷன்ஸ் (PNC) தயாரித்த சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களில் ஆறாவதாய் இது அமைந்தது. வித்தியாசமான கதையம்சத்துடன் ஒரு அலை போல் வெளிவந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருந்தது, இத்தகைய திரைப்படங்கள் பெரும்பாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போயின என்றாலும், இத்திரைப்படம் வெளிவரும் சமயத்தில் மக்கள் கவனத்தைப் பெற்றதால், குறிப்பிட்ட வகை பார்வையாளர்களை மட்டும் கருத்தில் கொண்டு இருபது நகரங்களில் தேர்ந்தெடுத்து வெளியிட்டதில் இந்த படம் வர்த்தகரீதியான வெற்றியைக் கண்டது.
ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசும் ஹிங்கிலீஷில் வெளிவந்த முதல் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 2005 ஆம் ஆண்டில் இவர் ஷாதி நம்பர் 1 திரைப்படத்தில் நடித்தார், இதில் கதாநாயகிகளே இல்லை. நவீன திருமணங்களை கருவாகக் கொண்ட இந்த காமெடி படம், இந்த வகையான படங்கள் எடுப்பதில் புகழ்பெற்ற ஒரு இயக்குநராக இருந்த, டேவிட் தவான் இயக்கத்தில் வந்ததாகும்.
ஸ்டைல் , ஜான்கார் பீட்ஸ் போன்ற திரைப்படங்கள் வர்த்தகரீதியாக வெற்றி பெற்றன என்றாலும், அவரது பிந்தைய கால திரைப்படங்கள் குறைந்த அளவு வருமானத்தையே தந்தன. அவற்றில் ஏராளமான படங்கள் முடிக்கப்படாமலேயும் இருக்கின்றன. அவரது படங்கள் பலவற்றிலும் அவர் கவர்ச்சி நடிகையாகவோ அல்லது கொஞ்ச நேரம் வந்து போகும் பாத்திரங்களிலோ தான் நடித்திருந்தார் என்றாலும், அவர் கதாநாயகியாக நடித்த சில திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன. தில் வில் பியார் வியார் (2002), கயாமத் (2003) மற்றும்
பிளான் (2004) ஆகிய திரைப்படங்களில் அவர் சிறு பாத்திரங்கள் தான் ஏற்றிருந்தார் என்றாலும், இந்த மூன்று படங்களிலுமே அவரது கவர்ச்சி பாடல்கள் பெரும் கவனத்தை ஈர்த்தது, அதிலும் குறிப்பாக கயாமத் படத்தில் அவர் குமிழ்-குளியல் செய்யும் காட்சி. இவை தவிர, ராம் கோபால் வர்மா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜேம்ஸ் (2005) திரைப்படத்திலும் அவர் கவர்ச்சி நடிகையாக நடித்தார், சமீரா ரெட்டி , இஷா கோபிகர் மற்றும் கோயனா மித்ரா போன்ற நடிகை-மாடல்களை இதே போன்ற பாத்திரங்களில் நடிக்க வைத்த வரலாறு ராம் கோபால் வர்மாவுக்கு உண்டு. இது போக, சஜித் கானின் ஹே பேபி (2007) திரைப்படத்திலும் அவர் ஒரு நடனக் காட்சியில் பங்குபெற்றார், இந்த திரைப்படத்தில் ஏழு பிரதான பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்தியல்லாத திரைப்படங்கள்
பாலிவுட் திரைப்படங்கள் தவிர, ரியா
பெங்காலி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் தோன்றினார். மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்த பாரதிராஜாவின்
தாஜ்மஹால் , பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த மனோஜ் பட்னாகரின் குட்லக் ஆகிய தமிழ் திரைப்படங்கள் மூலம் மிகப் பிரகாசத்துடன் அவரது சினிமா வாழ்க்கை துவங்கியது. இரண்டு திரைப்படங்களுமே வர்த்தகரீதியாக தோல்வியுற்றன, அதற்குப் பின் என்.மகாராஜனின் அரசாட்சி திரைப்படத்தில் ஒரேயொரு பாடல் காட்சிக்கு ஆடி தமிழ் திரைப்படங்களில் அவரது குறுகிய மறுபிரவேசம் அமைந்தது.
அவரது முதல் ஆங்கில மொழி திரைப்படம்
இட் வாஸ் ரெய்னிங் தேட் நைட் என்பதாகும், இது சுதேஷ்னா ராய் எழுதி மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கிய ஹேய் ப்ரிஷ்திர் ராத் எனும் பெங்காலி திரைப்படத்தின் தழுவலாகும். இந்த திரைப்படத்தில் அவர் தாய் மூன் மூன் சென் உடன் நடித்தார். பெங்காலி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தயாரான அஞ்சன் தத்தாவின்
தி போங் கனெக்ஷன் திரைப்படத்தில் ரியா தனது சகோதரியுடன் நடிப்பதாக இருந்தது, ஆனால் இறுதியில் அவர் இப்படத்திலிருந்து கழற்றி விடப்பட்டு அவருக்கு பதிலாக பியா ராய் சவுத்ரி இடம்பெற்றார். [32] இரண்டு சகோதரிகளும் பின்னர் இயக்குநர் அஜய் சின்ஹாவின் தி பேச்சலர் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர், இந்த பெங்காலி திரைப்படம், 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, இன்னும் முடிவடையாததாக இருந்தது.
இந்தியல்லாத மொழிகளில் அவரது திரைப்படங்களில் பெரிய வெற்றி பெற்றது சந்தோஷ் சிவனின் ஆனந்தபத்ரம் (2005) திரைப்படமாகும். ரியா மற்றும் சிவன் இருவருக்குமே முதல் மலையாளத் திரைப்படமாக அமைந்த இது,விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. கேரள மாநில விருதுகள் ஐந்தினை வென்ற இந்த திரைப்படம் அந்த ஆண்டில் மிகப் பெரும் வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது
அதில், திகாம்பரன் எனும் கொடிய மந்திரவாதியால் ஏமாற்றப்படும் கிராமத்துப் பெண் பாமா பாத்திரத்தை இவர் ஏற்றிருந்தார், மந்திரவாதியாக மனோஜ் கே. ஜெயன் நடித்தார். பாமாவை திகாம்பரன் மந்திரச் சடங்குகளுக்கான ஒரு ஊடகமாக மாற்றும் பாடல் நடனக் காட்சியில், நடன இயக்குநர் அபர்ணா சிந்தூர் கதகளி அசைவுகளை ஏராளமாகப் பயன்படுத்தியிருந்தார். கலாச்சார நடன மறுமலர்ச்சியின் ஒரு உயர்ந்த அம்சமாக கதகளியைப் பயன்படுத்துவதென்பது,
ஷாஜி கருணின் வானபிரஸ்தம் (1999) மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின்
காலமண்டலம் ராமன்குட்டி நாயர் (2005) உள்ளிட்ட மற்ற பெரிய இந்திய திரைப்படங்களிலும் இருந்திருக்கிறது. ரியாவின் முதல் தெலுங்கு திரைப்படமான நேனு மீகு தெலுசா....? படத்தில் மனோஜ் மஞ்சுவுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.
மாடலிங் வாழ்க்கை
பிரபல பாடகர்களின் இசை வீடியோக்களில் தோன்றியதையடுத்து ரியா ஒரு பிரபலமான மாடலாக இருந்தார், ஃபல்குனி பதக்கின் யாத் பியா கீ ஆனே லகி (வேறொரு தலைப்பு: சுடி ஜோ கன்காயி ), ஆஷா போஸ்லேயின் ஜூம்கா கிரா ரே , ஜக்ஜித் சிங் மற்றும் போஸ்லேயின் ஜப் சாம்னே தும் மற்றும்
கஹின் கஹின் சே , லதா மங்கேஷ்கர் , போஸ்லே மற்றும் சிங்கின் தில் கஹின் ஹோஷ் கஹின் , சோனு நிகமின் ஜீனா ஹை தேரே லியே மற்றும் ஷானின்
சுட்டா மரோ ஆகியவை இந்த வீடியோக்களில் அடக்கம். தனது முதல் இசை வீடியோவான யாத் பியா கீ ஆனே லகீ க்கு பதினாறு வயதில் அவர் நடித்தார். இதனால் அவரது ஆரம்ப தொழில் வாழ்க்கையில் அவர் முதன்மையாக இசை வீடியோக்களுக்கான ஒரு நடிகையாக அடையாளம் காணப்பட்டார், இந்த ஒரு பிம்பத்தை போக்க வேண்டும் என்று 2005 இல் அவர் விரும்பினார். ஃபெமினா , எலான் ,
மேன்'ஸ் வேர்ல்டு ,கிளாட்ராக்ஸ் ,
ஸேவி மற்றும் எலே , மாக்சிம் மற்றும்
காஸ்மோபொலிட்டன் ஆகியவற்றின் இந்திய பதிப்புகள் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளில் அட்டைப்படங்களிலும், அத்துடன் லக்மே ஃபேஷன் வீக் (2005-07) மற்றும் வில்ஸ் ஃபேஷன் வீக் (2006-07)போன்ற பெரும் ஃபேஷன் ஷோக்களின் காட்சிநடைகளிலும் ரியா இடம்பெற்றிருக்கிறார். தனது மூத்த சகோதரியான ரெய்மா சென்னுடன் இணைந்து இவர் ஃபேஷன் ஷோக்களில் பங்குபெற்றிருக்கிறார். மாடலிங் தவிர, விளம்பர உலகிலும் ரியா முயற்சி செய்திருக்கிறார். அவரது மாடலிங் வாழ்க்கையின் ஒரு உச்ச கட்டம் 2006 ஆம் ஆண்டில் வந்தது, அந்த ஆண்டில் அவர்
தீபிகா படுகோனேவுக்கு பதிலாக குளிர்பானமான லிம்காவின் விளம்பரத் தூதரானார். கோல்கேட் , டாபர் வாடிகா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் , காட்பரி டெய்ரி மில்க் சாக்கலேட், மற்றும் நிர்மா ஆகியவையும் அவர் தூதராக இருந்த பிற முக்கியமான விளம்பரங்களாகும்.
2004 ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்னணி புகைப்பட நிபுணரான தபூ ரத்னானியின் வருடாந்திர காலண்டரில் அவர் பாதி நிர்வாணமாக காட்சி தந்தார், இது இந்திய கவர்ச்சி உலகில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. [53][54] தபூ கூற்றின் படி, "அவரது தாயார் காலண்டர் வெளிவந்த பிறகு தாமதமாகத் தான் பார்த்தார். அது ரொம்பவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் ரியா அதனை செய்திருக்கக் கூடாது என்றும் அவர் நினைத்தார். ஆனால் இந்த புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. தனது அடுத்த விளம்பர படத்திலும், இதில் செய்ததைப் போன்ற அதே வெளிச்சத்தில் தன்னைக் காட்டும் படி என்னை கேட்டுக் கொள்ளும் அளவுக்கு ரியா மிகவும் மகிழ்ச்சியுற்றார்." ஒரு மாடல் நடிகையின் தொழில்வாழ்க்கையின் சிறப்பம்சமாக, ரத்னானி அவரை தனது வருடாந்திர காலண்டருக்கென மூன்று வருடங்கள் ஒப்பந்தம் செய்வதற்கு அது இட்டுச் சென்றது. [57] காலண்டரில் அடுத்தடுத்து ஐந்து வருடங்கள் (2003-07) தொடர்ந்து இடம்பிடித்த ஒரே பெண் இவர் தான்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம்
மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் ஜனவரி 24, 1981 இல் பிறந்த ரியா சென் முன்னாள் நடிகை மூன் மூன் சென்னின் மகளாவார், பெங்காலி சினிமாவில் ஒரு பழம்பெரும் நடிகையான சுசித்ரா சென்னின் பேத்தி. மும்பைக்கு இடம்பெயரும் முன்னதாக, கொல்கத்தாவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரி ரெய்மா சென்னுடன் அவர் வசித்து வந்தார், ரெய்மா சென்னும் ஒரு நடிகையே. அவரது தந்தை பாரத் தேவ் வர்மா திரிபுராவின் ராஜ குடும்ப உறுப்பினராவார். அவரது தந்தை வழி பாட்டியான இலா தேவி, கூச் பேஹார் சமஸ்தானத்தின் இளவரசி, அவரது இளைய சகோதரியான காயத்ரி தேவி
ஜெய்பூர் மகாராணி. அவரது தந்தை வழி பாட்டியான இந்திரா தான் பரோடா மகாராஜா மூன்றாம் சயோஜிராவ் கேக்வாட்டின் ஒரே மகள். ரியாவின் தாய்வழி கொள்ளுத்தாத்தாவான ஆதிநாத் சென் ஒரு புகழ்பெற்ற கொல்கத்தா வணிகர், அவரது தந்தை தினாநாத் சென் - இவர் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரான அஷோக் குமார் சென்னின் உறவினராவார் - திரிபுரா மகாராஜாவிடம் திவான் அல்லது மந்திரியாக இருந்தார். பாட்டியின் ஆரம்ப பெயர் தான் இந்த சகோதரிகளுக்கு திரையில் கொடுக்கப்படுகிறது, ஆயினும் அவர்களது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எல்லாம் தேவ் வர்மா என்னும் துணைப் பெயர் தான் உள்ளது.
ரியா தனது பள்ளிப் படிப்பை லோரெடோ ஹவுஸ் மற்றும் ராணி பிர்லா கல்லூரியில் முடித்தார், இவை இரண்டுமே கொல்கத்தாவில் தான் உள்ளன. அதற்குப் பின் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தில் படித்த அவர், நகை வடிவமைப்பை தனது பொழுதுபோக்காக கொண்டார். திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் தான் அணியும் ஆடைகளில் அநேகமானவை இவரே வடிவமைப்பதாகும். கதக்கில் ரியா பயிற்சி பெற்றுள்ளதோடு இப்போதும் விஜய்ஸ்ரீ சவுத்ரியிடம் அதனைத் தொடர்ந்து பயின்று வருகிறார், மற்றும்
குத்துச்சண்டையிலும் பயிற்சி எடுக்கிறார், ( பெல்லி நடனத்தின் 5 நிலைகளில் முதலாவது நிலையை நிறைவு செய்துள்ளார்). பகுதி நேர மாடலிங் வாய்ப்புகள் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்த ரியா, தனது ஆரம்ப கால வாழ்க்கையில் கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் இடையே பொதுப் போக்குவரத்தின் மூலமே பயணம் செய்து வந்தார். திரைப்படத் துறையில் கால்பதித்ததும், தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் பாலிகன்கே சர்குலர் சாலையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தார். ஜூஹூவில் உள்ள குடும்ப வீட்டிற்கு இடம்பெயர்ந்த அவர், தனது சகோதரியுடன் அங்கு வசித்து வருகிறார். [73][75] அவர் மும்பையில் தங்கியிருந்த போது, ஊடகங்கள் அவரை மாடல் மற்றும் நடிகராக இருக்கும் ஜான் ஆபிரகாமுடன் இணைத்து பேசின. இந்தி திரையுலக பத்திரிகைகளில், 2008 ஆம் ஆண்டில், அவர் நாவல் எழுத்தாளரான
சல்மான் ருஷ்டியுடன் இணைத்து பேசப்பட்டார், ஆனாலும் இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினர்.
ரியா ஏராளமான எதிர்பாராத சம்பவங்களில் சிக்கியுள்ளார். பிரான்சில்
ஷாதி நம்பர் 1 படப்பிடிப்பின் போது, ஒரு
சண்டைக்காட்சி நடிகரின் மோட்டார்பைக் எதிர்பாராது மோதியதில் அவர் சுய உணர்வில்லாத நிலைக்கு சென்று விட்டார், ஆனாலும் அவருக்கு மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை. ரியா தனது ஆண் நண்பரான அஷ்மித் படேலுடன் இணைந்து நடித்த சில்சிலே திரைப்படம் வெளியாவதற்கு கொஞ்சம் முன்னால்,
மல்டிமீடியா குறுஞ்செய்தி சேவையிலும் (MMS) இணையத்திலும், இருவரும் படுநெருக்கமாக இருக்கும் ஒரு 90 விநாடி வீடியோ கிளிப் ஒன்று புழங்கியது. கேமரா கைபேசிகளைப் பயன்படுத்தி பிரபலங்களை இதுபோன்ற சூழ்நிலைகளில் படம்பிடித்து வெளியான ஏராளமான சர்ச்சைகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. அந்த எம்எம்எஸ் வீடியோவில் இருப்பது தானல்ல என்று ரியா மறுத்த போதிலும், இந்த சம்பவத்திற்கு பிறகு, இருவரும் பிரிந்து விட்டனர். [81] இந்த வீடியோ செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு விளம்பர பல்டி என்று ஒரு விமர்சகர் கருத்து தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டில், சாக்கலேட் மயக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு பாங்காக்கில் அவர் ஒரு குறுகிய போதையகற்ற அமர்வை எடுத்துக் கொண்டார்.
பொது ஆளுமை
ரியாவின் திரைப்பட நடிப்பு அவரை இந்தியாவில் ஒரு பால் அடையாளமாகவும் (செக்ஸ் சிம்பல்) இளைஞர்களின் முன்னோடி உருவமாகவும் ஸ்தாபித்திருக்கிறது.
திரைப்படத் துறையில் நுழைந்தது முதல், ஷாதி நம்பர் 1 திரைப்படத்தில் நீச்சலுடையில் தோன்றியதற்காகவும், சில்சிலே திரைப்படத்தில் அஷ்மித் படேலுடனும்
ஸ்டைல் படத்தில் ஷர்மான் ஜோஷி உடனும் திரையில் முத்தக்காட்சியில் நடித்ததன் மூலம் அவர் கவனம் பெற்றிருக்கிறார். இந்திய சினிமா ஓரளவு பழமை கலாச்சாரத்தில் ஊறியது என்பதாலும், இது போன்ற காட்சிகள் குறித்த ரியாவின் சொந்த கருத்துகளாலும் இத்தகைய சம்பவங்கள் எல்லாம் கவனத்தை பெற்றன. சினிமா பிரபலமாகும் முன்பே, பார்ட்டிகளில் நிறைய கலந்து கொள்ளும் பெயர் அவருக்கு இருந்தது, இது அவரது பதினைந்தாம் வயதில் தொடங்கி விட்டது. ரியாவின் பொது ஆளுமை அவரது தாயார் மூன் மூன் சென் உடன் ஒப்பிடப்படுகிறது, அவரது காலத்தில் அவரும் பால் அடையாளமாகவே காணப்பட்டார், ரியாவின் சகோதரி ரெய்மா பெரும்பாலும் அவரது பாட்டியான சுசித்ராவுடன் ஒப்பிடப்படுகிறார்.
அவரது திரைத்துறை வாழ்க்கை இன்னும் பெரிய அளவிலான வெற்றிகளை சாதித்து விடவில்லை என்றாலும், ரியா பெருமளவில் ஊடக கவனம் பெற்றவராக இருக்கிறார். பெமினா பத்திரிகையின் செப்டம்பர் 2007 பதிப்பில் வெளியான
பெமினா 50 மிக அழகிய பெண்கள் பட்டியலில் ரியா ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். மிஸ்டர் இந்தியா போட்டியின் 2008 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அவரும் தீர்ப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார். ஹாத் ஸே ஹாத் மிலா , என்னும் எச்ஐவி/எயிட்ஸ் விழிப்புணர்வு இசை வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்களான வஹீதா ரஹ்மான்,
ஷில்பா ஷெட்டி , தியா மிர்ஸா , ரவீனா தாண்டன் , ஜாக்கி ஷெராப், நஸ்ருதீன் ஷா, தபு மற்றும் லாரா தத்தாவுடன் சேர்ந்து ரியாவும் தோன்றினார். 2003 ஆம் ஆண்டில் உலக குழந்தையர் வாரத்தின் போது (நவம்பர் 14-20) குழந்தைகள் கண் பாதுகாப்பிற்காக மெக்டொனால்டு இந்தியா நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெற்று உதவினார்.
திரைப்பட விவரம்
ஆண்டு திரைப்படம் இயக்குநர் ப
1991 விஷ்கன்யா ஜக் முந்த்ரா இ
1999
தாஜ் மஹால் பாரதிராஜா கத
குட்லக் மனோஜ் பட்னாகர் பி
2001 ஸ்டைல் என்.சந்திரா ஷீ
2002
தில் வில் பியார் வியார்
ஆனந்த் மஹாதேவன்
கவ ந
2003
சாஜீஸ் ரஜத் ரவய்ல் —
கயாமத் : சிட்டி அன்டர் த்ரட்
ஹாரி பவேஜா ஷீ
ஜான்கார் பீட்ஸ் சுஜாய் கோஷ் பி
2004
தில் னே ஜிஸே அப்னா கஹா
அதுல் அக்னிஹோத்ரி க
ப்ளான் ஹிரிடே ஷெட்டி ஷ
அரசாட்சி என்.மகாராஜன் இர வ
2005
ஆனந்தபத்ரம் சந்தோஷ் சிவன் ப
ஷாதி நம்பர் 1 டேவிட் தவான் ம
தும்... ஹோ நா!
என்.எஸ்.ராஜ் பரத் ரீம
ஜேம்ஸ் ரோகித் ஜூக்ராஜ் —
சில்சிலே காலீத் முகமது அ
இட் வாஸ் ரெய்னிங் தேட் நைட்
மகேஷ் மஞ்ச்ரேகர் —
2006
அப்னா அப்னா மணி மணி
சங்கீத் சிவன் ஷ
தி பேச்சலர் அஜய் சின்ஹா நி
ரோக்தா ரமேஷ் கோதார் —
லவ் யூ ஹமேஷா
கைலாஷ் சுரேந்திரநாத் ம
2007 ஹே பேபி சாஜித் கான் —
2008
நேனு மீகு தெலுசா....? அஜய் சாஸ்திரி —
ஹீரோஸ் —
ஜோர் லகா கே... ஹயா
கிரிஷ் கிரிஜா ஜோஷி
—
லவ் கிச்டி ஸ்ரீனிவாஸ் பாஷ்யம் —
2009 பேயிங் கெஸ்ட்ஸ்
பரிதோஷ் பெயிண்டர் ஆ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக