சனி, 6 ஜனவரி, 2018

நடிகை பி. சரோஜாதேவி பிறந்த நாள் ஜனவரி 7, 1938.


நடிகை பி. சரோஜாதேவி பிறந்த நாள் ஜனவரி 7, 1938.

பி. சரோஜாதேவி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜா தேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார்; 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன் , பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.இவர்
வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர்.
தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
பெங்களூரைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி பைரப்பா, ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாகப் பிறந்த சரோஜா தேவி ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. கன்னடப் படத்தில், எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958).
இதன்பின் ஸ்ரீதரின் ' கல்யாணப் பரிசு ' 1959 படத்தில் நடித்து, நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.
அன்றைய கல்லூரி மாணவிகள், இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைப் பின்பற்றித் தங்களை சிங்காரித்துக்கொண்டார்கள். 1960–70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார். இவர் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் நடித்தார்.

பி. சரோஜாதேவி
பிறப்பு சனவரி 7, 1938
(அகவை 80)
கர்நாடகா, இந்தியா
தொழில் திரைப்படநடிகை
நடிப்புக் காலம் 1955-நடப்பு
துணைவர் ஸ்ரீ ஹர்ஷா

நடித்துள்ள திரைப்படங்கள்
தமிழ்
1. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)
2. பார்த்திபன் கனவு (1960)
3. இருவர் உள்ளம் (1963)
4. அஞ்சல் பெட்டி 520
5. அரச கட்டளை
6. அன்பளிப்பு
7. அன்பே வா
8. ஆசை முகம்
9. ஆதவன்
10. ஆலயமணி
11. இரும்புத்திரை
12. எங்க வீட்டுப் பிள்ளை
13. என் கடமை
14. ஒன்ஸ்மோர்
15. ஓடும் நதி
16. கண்மலர்
17. கல்யாண பரிசு
18. கல்யாணியின் கணவன்
19. கலங்கரை விளக்கம்
20. குடும்பத்தலைவன்
21. குலமகள் ராதை
22. குலவிளக்கு
23. கைராசி
24. சபாஷ் மீனா
25. சிநேகிதி
26. செங்கோட்டை சிங்கம்
27. தங்க மலர்
28. தர்மம் தலைகாக்கும்
29. தாய் சொல்லை தட்டாதே
30. தாயைக்காத்த தனயன்
31. தாலி பாக்கியம்
32. திருடாதே
33. தெய்வத்தாய்
34. நாடோடி
35. நாடோடி மன்னன்
36. நான் ஆணையிட்டால்
37. நீதிக்குப்பின் பாசம்
38. படகோட்டி
39. பணக்கார குடும்பம்
40. பணத்தோட்டம்
41. பணமா பாசமா
42. பறக்கும் பாவை
43. பனித்திரை
44. பாகப்பிரிவினை
45. பாசம்
46. பார்த்தால் பசி தீரும்
47. பாலும் பழமும்
48. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
49. புதிய பறவை
50. பெரிய இடத்துப் பெண்
51. பெற்றால்தான் பிள்ளையா
52. மாடப்புறா
53. யானைப்பாகன்
54. வளர் பிறை
55. வாழ்க்கை வாழ்வதற்கே
56. வாழவைத்த தெய்வம்
57. விடிவெள்ளி
தேசிய விருதுகள்
2008 வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருது
1992 பத்மபூஷன், இந்திய அரசின் தேசிய விருது
1969 பத்மஸ்ரீ இந்திய அரசின் தேசிய விருது
பிற விருதுகள்
2009 ஆந்திர அரசின் என் டி ஆர் தேசியவிருது
2009 கர்நாடக அரசின் ராஐகுமார் தேசியவிருது
2009 நாட்டிய கலாதர் - தமிழ் சினிமா by Bharat Kalachar Chennai
2007 என் டி ஆர் விருது for remarkable achievement by Karnataka Telugu Academy
2007 ரோட்டரி சிவாஜி விருது by the Charitable Trust and Rotary Club of Chennai
2006 பெங்களூர் பல்கலைக் கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம்
2003 தினகரன் சாதனையாளர் விருது
2001 ஆந்திர அரசின் என்டிஆர் தேசியவிருது 2001
1997 எம்.ஜி.ஆர். விருது - தமிழக அரசு
1997 சாதனையாளர் விருது - சினிமா எக்ஸ்பிரஸ் சென்னை
1997 Filmfare award for All-round Achievement
1989 கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது
1980 அபினண்டன -காஞ்சனா மாலா விருது by Karnataka State
1965 Honoured as a title "அபிநய சரஸ்வதி " - கர்நாடக அரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக