வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பிறந்த நாளா ஜனவரி 26.




ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பிறந்த நாளா ஜனவரி 26.

பி. சி. ஸ்ரீராம் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஆவார். இவர், சென்னை திரைத்துறைப் பயிலகத்தின் மாணவர்களுள் ஒருவராவார். இவர் இயக்கிய ' குருதிப்புனல் ' எனும் திரைப்படம், ஆஸ்கார் விருதிற்காக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இயக்குனர்
மணிரத்னத்துடன் இணைந்து நாயகன் ,
அலைபாயுதே, மௌன ராகம் , அக்னி நட்சத்திரம் திரைப்படங்களில் பணியாற்றினார்.

வாழ்க்கையும், கல்வியும்

இவரின் பூர்வீகம் பாலக்காடு. பிறந்தது 1956 இல். படித்தது வளர்ந்தது சென்னையில். இவரது பெற்றோர்: சந்திரமௌலி - சாந்தா. சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்தார்.

பணிமுறை

இவரது ஒன்பது வயதில் இவரின் தாத்தா பரிசளித்த 'பிரெளனி' கேமராவில் ஆரம்பித்தது இவரது ஒளிப்பதிவு. விளம்பரப் படங்கள், போஸ்டர்கள் என்று இவருக்கு பிடித்தமாதிரியாக இவருடைய திறமையை பயன்படுத்தி வருபவர்.

ஒளிப்பதிவாளராக

பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்களின் பட்டியல்:
யாவரும் நலம் - 2009
கண்ட நாள் முதல் - 2005
வானம் வசப்படும் - 2004
குஷி - 2001
அலைபாயுதே – 2000
முகவரி - 2000
காதலர் தினம் - 1999
முகம் - 1999
குருதிப்புனல் - 1995
மே மாதம் – 1994
திருடா திருடா - 1993
தேவர் மகன் - 1992
மீரா - 1992
கோபுர வாசலிலே - 1991
கீதாஞ்சலி – 1989
அபூர்வ சகோதரர்கள்- 1989
அக்னி நட்சத்திரம் - 1988
தூரத்து பச்சை - 1987
நாயகன் - 1987
மௌன ராகம் - 1986
பூவே பூச்சூடவா - 1985
மீண்டும் ஒரு காதல் கதை – 1984
ஒரு வாரிசு உருவாகிறது - 1983
நன்றி மீண்டும் வருக - 1982
வா இந்தப் பக்கம் - 1982
தமிழ்த் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான ஜீவா , கே. வி. ஆனந்த் , கே. வி. குகன் ஆகியோர் பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.

இயக்குனராக

1992ஆம் ஆண்டில் 'மீரா' எனும் தமிழ்த் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.
தொடர்ந்து 'குருதிப்புனல்' எனும் திரைப்படம் (1995).
ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘வானம் வசப்படும்’ எனும் திரைப்படம் (2004)

விருதுகள்

1988 ஆம் ஆண்டு - சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய திரைத்துறை விருது - 'நாயகன்' திரைப்படத்திற்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக