ஞாயிறு, 7 ஜனவரி, 2018

பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா பிறந்த நாள் ஜனவரி 7 ,1976.



பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா பிறந்த நாள் ஜனவரி  7 ,1976.

ஹரிஷ் ராகவேந்திரா சென்னையைச் சேர்ந்த ஒரு தென்னிந்திய திரைப்படப் பாடகர் மற்றும் நடிகர். அவரது பாடல்கள் "தேவதையைக் கண்டேன்" (படம்:காதல் கொண்டேன்),"சக்கர நிலவே "(படம்:யூத்),"மெல்லினமே மெல்லினமே" (படம்:ஷாஜஹான்) வெற்றியைப் பெற்றுள்ளன. அவர் விகடன் என்ற திரைப்படத்தில் அருண்பாண்டியனுடன் நடித்துள்ளார்.
திருப்பதி திரைப்படத்தில் முதன்மை நாயகன் அஜித்திற்கு அண்ணன் வேடத்தில் நடித்துள்ளார்.

இயற்பெயர் ஹரிஸ் ராம் ஸ்ரீனிவாஸ் ராகவேந்திரன்
பிறப்பு 7 சனவரி 1976
(அகவை 42)
பிறப்பிடம் கோயம்புத்தூர் ,
தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்) பின்னணிப் பாடகர்
இசைத்துறையில் 1998–நடப்பு

வாழ்க்கை வரலாறு
ஹரிசின் இயற்பெயர் ஹரிஷ் ராம் ஸ்ரீனிவாசாகும். ஒளிப்படக் கலைஞர் பி.வி.ராகவேந்திரனின் மகனாவார். சொந்த ஊர் கோயம்புத்தூர் . அவரது முதல் பாடல் தெலுங்கு படமொன்றிற்கு அமைந்தது. அவர் கல்லூரியின் முதலாண்டில் இருக்கும்போது அரசியல் என்ற திரைப்படத்திற்கு "வா சகி" என்ற பாடல் பாடி வெற்றி யடைந்தது. ஆயினும் தனது கல்லூரிப் படிப்பைத் தொடர பல வாய்ப்புகளைத் துறந்தார்.விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் பட்டமும் பொதுத் தொடர்பு மற்றும் தாளியலில் மேற்படிப்பும் முடித்தார்.மென்பொருள் பொறியியலிலும் கல்வி கற்றார்.
மீண்டும் திரைப்பட இசையில் ஈடுபாடு கொண்டு இளையராஜா இசையில் பாரதி திரைப்படத்தில் "நிற்பதுவே நடப்பதுவே" என்ற பாடலைப் பாடினார்.இப்பாடல் பெருவெற்றி யடைந்ததுடன் மாநில அரசின் விருதினையும் அவருக்கு பெற்றுத் தந்தது. இந்நேரத்தில் தான் தனது பெயரை ஹரிஷ் ராகவேந்திரா என்று மாற்றிக் கொண்டார். தொடர்ந்து
தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
பாடிய பாடல்கள்
எண். பாடல் திரைப்படம்
1 மெல்லினமே ஷாஜகான்
2 சக்கரை நிலவே யூத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக