வெள்ளி, 30 டிசம்பர், 2016

நடிகை வித்யா பாலன் பிறந்த நாள் ஜனவரி 1, 1978 .



நடிகை வித்யா பாலன் பிறந்த நாள் ஜனவரி 1, 1978 .
வித்யா பாலன் (பிறப்பு ஜனவரி 1, 1978) பாலிவுட் திரைப்படங்களில் மற்றும் விளம்பரப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். சமூகவியல் பட்டபடிப்பு முடித்தவுடன், வித்யா பாலன், தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், சவற்கார விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் தொடங்கி, பாலோ தேகோ (2003) என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்குள் நுழைந்தார். பிறகு இவர் இந்தி திரைப்படமான பரிநீத்தா (2005) என்பதில் அறிமுகமாகி, பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார் மேலும் தனது முதல் வணிக வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் (2006) படத்தின் மூலம் பெற்றார் அதைத் தொடர்ந்து ஹே பேபி (2008) மற்றும் பூல் பூலையா (2008) ஆகிய படங்களில் நடித்தார். அதில் பூல் பூலையாவில் தனது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேரின் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2009 இல் ஆர். பால்கியின் திரைப்படமான பாவுக்கு, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். 59வது தேசியத் திரைப்பட விருதுகளில் டர்ட்டி பிக்சர் என்ற இந்தித் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.

ஆரம்பக்கால வாழ்க்கையும் பின்னணியும்

வித்யா பாலன் கேரளாவின், பாலக்காட்டில் உள்ள ஒரு தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தில், பி.ஆர். பாலன் (இ.டி.சி சேனலின் துணைத்தலைவர்) என்பவருக்கும் இல்லத்தரசியான சரசுவதி பாலனுக்கும் பிறந்தார். வித்யாவிற்கு பிரியா என்னும் மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார். ஒரு காணொளி நேர்காணலில், இவர் தன்னை ”மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைவர்” என்றும், தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவில் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வித்யா பாலன் தன் பள்ளிப்படிப்பை புனித அந்தோணி பள்ளியிலும் அதன் பிறகு தனது சமூகவியல் பட்டப் படிப்பை புனித சேவியர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பைப் படிக்கும் பொழுது, தனது முதல் திரைப்பட வாய்ப்பைப் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
ஆரம்பக்கால திரைத்துறை வாழ்க்கை
முதன் முதலாக இவர் மோகன்லாலுடன் இணைந்து "சக்கரம்" என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆனால் அப்படம் தள்ளி வைக்கப் பெற்றது. அதன்பிறகு இவர் தமிழ் திரைப்படமான ரன் திரைப்படத்தில் நடிக்க கையொப்பமிட்டார், ஆனால் காரணங்கள் வெளியிடாமல் முதல்கட்ட படப்பிடிப்பிற்குப் பிறகு நீக்கப் பெற்றார். அவருக்கு பதிலாக மீரா ஜாஸ்மீன் அவ்வேடத்தில் நடித்தார். மீண்டும் சக்கரம் படம் பிருதிவிராஜை முதன்மையாகக் கொண்டு துவங்கிய பொழுது, வித்யா பாலனுக்கு பதிலாக மீரா ஜாஸ்மீனே நடித்தார். இவர் ஸ்ரீகாந்த்துடன் நடிக்கவிருந்த இரண்டாவது தமிழ் திரைப்படமான மனசெல்லாம் படத்திலிருந்தும் ’செயல்திறமற்றவர்’ என்கிற அடிப்படையில் நீக்கப் பெற்றார் மற்றும் இவருக்கு பதிலாக திரிஷா கிருஷ்ணன் அதில் நடித்தார்.

அதன்பிறகு இவர் தன்னை தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் திசைதிருப்பிக் கொண்டார். 1998 முதல், இவர் எண்ணற்ற தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் தோன்றினார், அவற்றில் பலவற்றை பிரதீப் சர்க்கார் இயக்கினார். இவர் இசைக் காணொளிகளின் துணை பாத்திரங்களையும் ஏற்று, இயுஃபோரியா, சுபா முத்கல் மற்றும் பங்கஜ் உதாஸ் போன்ற இசைக்கலைஞர்களின் பாடகர்கள் மற்றும் இசைக்குழுவினருடனும் தோன்றினார். வித்யா பாலன் ஹம் பாஞ்ச் என்ற தொலைக்காட்சி தொடரின் முதல் பருவத்தின் சில பகுதிகளில் ராதிகா மாதூர் என்னும் கதாபாத்திரத்தில் தோன்றினார், ஆனால் முதல் பருவத்தின் இறுதியில் இவருக்கு பதிலாக அமிதா நங்கியா என்பவர் நடித்தார்.

திருப்புமுனை, 2003-தற்காலம்
2003 இல், இவர் வங்காளித் திரைப்படமான பாலோ தேகோ வில் தோன்றியதன் மூலம், கொல்கத்தாவின் அனந்தலாக் புரஸ்கார் சிறந்த நடிகை விருதினை வென்றார். வித்யா பாலன் அடுத்து அறிமுகமான இந்தி திரைப்படமான பரிநீத்தா மிகுந்த விமர்சனரீதியிலான வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் அவரது செயல்திறம் விமர்சகர்களால் வரவேற்கப்பெற்று, அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுகநடிகைக்கான விருதினையும் மற்றும் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கான முன்மொழியும் வாய்ப்பினையும் பெற்றுத்தந்தது. இவரது முதல் இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, மனசெல்லாம் படத்திலிருந்து தன்னை நீக்கிய அதே தயாரிப்பாளரால் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுக்கு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிடும்படி ஆர்வமுடன் அழைக்கப்பெற்றார், ஆனால் இவர் அந்த வாய்ப்பை மறுத்தார் மற்றும் இவருக்கு பதிலாக இப்படத்தில் அசின் தொட்டும்கல் கையொப்பமிட்டார். 2006 இல், இவர் மிகப்பெரிய வெற்றிப்படமான லகே ரஹோ முன்னாபாய் படத்தில் சஞ்சய் தத்துக்கு மாறான பாத்திரத்தில் தோன்றினார். மீண்டும் ஒருமுறை இவரது செயல்திறம் விமர்சகர்களால் மிகுந்த வரவேற்பைப் பெற்றது[6] மற்றும் இப்படம் அவ்வாண்டின் மிகுந்த மொத்தவருமானம் ஈட்டிய இரண்டாவது திரைப்படமாகத் திகழ்ந்தது.

மணிரத்னம் அவர்களின் சிறந்த விமர்சன வரவேற்பைப் பெற்ற குரு திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் படமாக வித்யா பாலனுக்கு அமைந்தது, இதில் இவர் தண்டுவட மரப்பு நோயால் அவதிப்படும் பெண்ணாக நடித்தார். இத்திரைப்படம் மிகச்சிறந்த வசூலைப் பெற்றது[8] மற்றும் இவரது பாத்திரமும் வெகுவாக பாராட்டைப் பெற்றது. இவர் நடித்து அடுத்து வெளியான இரண்டு படங்களான, சலாமே இஷ்க்(Salaam-e-Ishq: A Tribute To Love) (2007) மற்றும் ஏக்லவ்யா - Eklavya: The Royal Guard (2007) ஆகிய படங்கள் வெற்றி பெறமால் தோல்வியடைந்தன[8] ஆனால் ஏக்லவ்யா படம் 80 வது அகாடமி விருதுகளுக்கான ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பட்டியலில் தேர்ந்தெடுக்கப் பெற்றது.அவ்வாண்டிலேயே வித்யா பாலன் நடித்து இறுதியாக வெளியான இரு படங்களான, ஹேய் பேபி (2007) மற்றும் பூல் புலைய்யா (2007) ஆகியவை மிகச்சிறந்த வசூலைக்குவித்த படங்களாக அமைந்தன.

2009 இல், பாலன் பா எனும் திரைப்படத்தில் இளம் மகளிர் மருத்துவராகவும் அதே சமயம் முதிரா முதுமையுடைய 12 வயது மகனுக்கு தாயாகவும் நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் பாலனின் மகன் ஆரோவாக நடித்தார். இப்படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் பாலனின் நடிப்புத்திறனை வெகுவாகப் பாராட்டினர். ரெடிப்பின் சுகன்யா வர்மா எழுதியதாவது, " வித்யா பாலன் மிக கச்சிதமாக தனது தாய் கதாப்பாத்திரத்தில் பொருந்தியுள்ளார் மேலும் மற்ற பாலிவுட் படங்களில் தாய் காதப்பாத்திரத்தில் வரும் நடிகைகள் போல் அல்லாமல் நன்றாக நடித்துள்ளார். 1980களில் நல்லதொரு நடிகையான கடுமையான, நேர்த்தியான கதாப்பாத்திரத்தில் நடித்த டிம்புள் கப்பாடியவை நினைவுப்படுத்துகிறார்." தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிக்காட் காஸ்மி "பாலன் தனது நடிப்பாற்றல் மூலமாக பாலிவுட் தாய்களுக்கு நல்லதொரு கண்ணியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது அமைதிப்பாங்கான நடிப்புடன் அவரது உணர்ச்சி வெளிப்பாடுகளால், இவர் தைரிய மிகு தாயாக உருமாறியிருந்தார்". இவருடைய சித்தரிப்பு, இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருதையும் பெற்றுத்தந்தது.

இவர் தற்பொழுது பிளாக் திரைப்படத்தின் கதையை எழுதிய பவானி ஐயர் எழுதும் மற்றும் விபு பூரி இயக்கும் திரைப்படமான செனாப் காந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். காதலுக்கு அப்பாற்பட்ட பாடல்களற்ற இத்திரைப்படம் அமிதாப் பச்சன், ராஜீவ் காண்டெல்வால் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் ஏற்று நடித்துள்ள மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றியும் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வீரரான எல்லை காந்தி என்றறியப்படும் கான் அப்துல் கஃபர் கான் அவர்களை மையமாகக் கொண்டும் அமைந்துள்ளது.

இயக்குநர் நிகில் அத்வானி கடந்த ஜனவரி 2009 இல் தாம் வித்யா பாலனுடன் பணியாற்ற இருப்பதாக அறிவித்தார். சந்த் பாய் என்று பெயரிட்ட இத்திரைப்படத்தில் அக்‌ஷய் குமார் அவர்களுடன் நடிப்பார். இத்திரைப்படம் கடமை தவறும் இளையோரை அடிப்படையாகக் கொண்டது. வித்யா பாலன் UTV ஸ்பாட்பாய்ஸ் நிறுவன தயாரிப்பில் நோ ஒன் கில்டு ஜெஸிக்கா திரைப்படத்தில் ராணி முகர்ஜியுடன் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளார்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

பிலிம்பேர் விருதுகள்
வெற்றி பெற்றது

    2006: பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருது, பரிநீத்தா
    2006: ஆண்டின் பிலிம்பேர் முகம், பரிநீத்தா

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்
வெற்றி பெற்றது

    2006: மிகச்சிறப்பான எதிர்காலமுடைய புதுமுகத்திற்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது - பெண், பரிநீத்தா
    2010: சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது - பா

ஜீ சினி விருதுகள்

வெற்றி பெற்றது

    2006: சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ சினி விருது, பரிநீத்தா

சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி விருதுகள்

வெற்றி பெற்றது

    2006: IIFA வின் சிறந்த அறிமுக நடிகை, பரிநீத்தா

ஸ்டார் டஸ்ட் விருதுகள்

வெற்றி பெற்றது

    2006: ஸ்டார் டஸ்டின் நாளைய சிறந்த நட்சத்திரம் - பெண், பரிநீத்தா

மற்ற விருதுகள்

    2004: அனந்தலாக் புரஸ்கார் விருதுகள், சிறந்த நடிகை , பாலோ தேகோ
    2005: மிகச்சிறந்த அறிமுகத்திற்கான அப்சரா புரொட்யூசர்ஸ் கியூல்ட் விருதுகள், பரிநீத்தா
    2006: ஸ்டாரின் சப்சே ஃபேவரைட் நயி ஹீரோயின் , பரிநீத்தா
    2007: அனந்தலாக் புரஸ்கார் விருதுகள், சிறந்த நடிகை (இந்தி) , பூல் புலைய்யா
    2010: லயன்ஸ் கோல்டு விருதுகள், சிறந்த நடிகை , பா
    பத்மசிறீ விருது (2014)

திரைப்படப் பட்டியல்
ஆண்டு     திரைப்படம்     பாத்திரம்     குறிப்புகள்
2003     பாலோ தேகோ     ஆனந்தி     வங்காளி திரைப்படம்
2005     பரிநீத்தா     லலிதா     இரட்டை-வெற்றிகள் , பிலிம்பேர் சிறந்த பெண் அறிமுக தோற்றம் விருது மற்றும்;
அவ்வாண்டின் பிலிம்பேர் முகத்திற்கான விருது
பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு, முன்மொழியப்பெற்றார்.
2006     லகே ரஹோ முன்னா பாய்     ஜான்வி    
2007     குரு     மீனு சக்ஸேனா    
Salaam-e-Ishq: A Tribute To Love     தேஸிப் ரெய்னா    
Eklavya: The Royal Guard     ராஜேஸ்வரி     ஆஸ்காருக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவு
ஹேய் பேபி     இஷா    
பூல் புலைய்யா     அவ்னி/மஞ்சுலிகா     பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓம் சாந்தி ஓம்     அவராகவே     தீவான்ஜி தீவான்ஜி பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றம்
2008     ஹல்லா போல்     ஸ்நேகா    
கிஸ்மத் கன்னக்ஷன்     பிரியா    
2009     பா     வித்யா    
2010     இஷ்க்யுயா     கிருஷ்ணா     29 ஜனவரி, 2010 இல் திரையிடப்பட உள்ளது
முக்தி     ஹாஷி     படப்பிடிப்பு
2011     நோ ஒன் கில்டு ஜெஸிக்கா     சப்ரினா லால்    
2011     உருமி     மக்கோம் / சிறப்புத் தோற்றம்     மலையாளத் திரைப்படம்
2011     'தேங்க் யூ     கிசனின் மனைவி / சிறப்புத் தோற்றம்    
2011     தம் மாரோ தம்     திருமதி. கமத் / சிறப்புத் தோற்றம்    
2011     தி டர்டி பிக்சர்     சில்க் ஸ்மிதா     சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது

2012     கஹானி     வித்யா பாக்‌ஷி

நடிகர் இளைய திலகம் பிறந்த நாள் டிசம்பர் 31 .




நடிகர் இளைய திலகம் பிறந்த நாள் டிசம்பர் 31 .
பிரபு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார். கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.

நடிப்பு

பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது மாமா வி. சி. சண்முகம் தயாரித்த திரைப்படங்களில் அவருடன் இணைந்து நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்தமுறையில் கற்றார். படப்பிடிப்பின்போது கலைஞர்கள் அமர நாற்காலிகள் எடுத்துபோடுவது வரையான அனைத்து வேலைகளையும் இவர் செய்தார். பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.
வாழ்க்கைக் குறிப்பு

பிரபுவின் பெற்றோர் நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆவார்கள்.இவரது மூத்த சகோதரர் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார். இவருக்கு சாந்தி மற்றும் தேன்மொழி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார்.
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
    சின்ன தம்பி
    குரு சிஷ்யன் 1988
    சந்திரமுகி
    வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
    சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
    அக்னி நட்சத்திரம்
    அஞ்சலி
    பந்தா பரமசிவம்
    தாமிரபரணி
    பில்லா 2007
    அரங்கேற்ற வேளை
    ராவணன்
    அயன்
    சிலம்பாட்டம்
    3

நடித்த திரைப்படங்கள்
1982 முதல் 1989 வரை

ஆண்டு     எண்     திரைப்படம்     கதாபாத்திரம்     மொழி     குறிப்புகள்
1982     1     சங்கிலி         தமிழ்    
2     அதிசய பிறவிகள்         தமிழ்    
3     லாட்டரி டிக்கெட்         தமிழ்    
4     கோழி கூவுது         தமிழ்    
5     நலந்தானா         தமிழ்    
1983     6     சூரப்புலி         தமிழ்    
7     ராகங்கள் மாறுவதில்லை         தமிழ்    
8     முத்து எங்கள் சொத்து         தமிழ்    
9     வெள்ளை ரோஜா         தமிழ்    
10     மிருதங்க சக்கரவர்த்தி         தமிழ்    
11     கே         தமிழ்    
    கைராசிக்காரன்     ராதா     தமிழ்    
    சந்திப்பு         தமிழ்    
    சூரக்கோட்டை சிங்கக்குட்டி         தமிழ்    
    நீதிபதி         தமிழ்    
1984         எழுதாத சட்டங்கள்         தமிழ்    
    சரித்திர நாயகன்         தமிழ்    
    தராசு         தமிழ்    
    உங்க வீட்டு பிள்ளை         தமிழ்    
    நியாயம்         தமிழ்    
    பொழுது விடிஞ்சாச்சு         தமிழ்    
    புதிய சங்கமம்         தமிழ்    
    பிரியமுடன் பிரபு         தமிழ்    
    ராஜா வீட்டு கண்ணுக்குட்டி         தமிழ்    
    திருப்பம்         தமிழ்    
    சிம்ம சொப்பனம்         தமிழ்    
    இருமேதைகள்         தமிழ்    
1985         கன்னிராசி     லட்சுமிபதி     தமிழ்    
    அடுத்தது ஆல்பர்ட்     ஆல்பர்ட்     தமிழ்    
    நீதியின் நிழல்         தமிழ்    
    நம்பினார் கெடுவதில்லை         தமிழ்    
    ராஜ ரிசி         தமிழ்    
    நேர்மை         தமிழ்    
1986         சாதனை         தமிழ்    
    ராஜா நீ வாழ்க         தமிழ்    
    பாலைவன ரோஜாக்கள்         தமிழ்    
    அறுவடை நாள்     முத்துவேல்     தமிழ்    
    நாளெல்லாம் பௌர்ணமி         தமிழ்    
1987         சின்னபூவே மெல்லப்பேசு     டேவிட்     தமிழ்    
    சின்னத்தம்பி பெரியதம்பி     சின்னத்தம்பி     தமிழ்    
    காவலன் அவன் கோவலன்         தமிழ்    
    ஆனந்த்     ஆனந்த்     தமிழ்    
    பூப்பூவா பூத்திருக்கு         தமிழ்    
    மேகம் கறுத்திருக்கு         தமிழ்    
    வைராக்கியம்         தமிழ்    
    இவர்கள் வருங்காலத் தூண்கள்         தமிழ்    
    முப்பெரும் தேவியர்         தமிழ்    
    அஞ்சாத சிங்கம்         தமிழ்    
1988         அண்ணாநகர் முதல் தெரு         தமிழ்     சிறப்புத் தோற்றம்
    குரு சிஷ்யன்     பாபு     தமிழ்     ரஜினிகாந்த் உடன் முதல் திரைப்படம்
    உரிமை கீதம்     தியாகு     தமிழ்    
    என் உயிர் கண்ணம்மா         தமிழ்    
    என் தங்கச்சி படிச்சவ         தமிழ்    
    மனசுக்குள் மத்தாப்பூ     சேகர்     தமிழ்     தாலவட்டம் மலையாளப் படத்தின் மறுஆக்கம்
    தர்மத்தின் தலைவன்     ராஜு     தமிழ்    
    அக்னி நட்சத்திரம்     கௌதம்     தமிழ்    
    ரத்த தானம்         தமிழ்    
    மணமகளே வா         தமிழ்    
    பூவிலி ராஜா     ராஜா     தமிழ்    
    ஒருவர் வாழும் ஆலயம்         தமிழ்    
    கலியுகம்         தமிழ்    
1989         நாளைய மனிதன்         தமிழ்    
    வெற்றி விழா     விஜய்     தமிழ்    
    பொண்ணு பாக்க போறேன்         தமிழ்    
    நினைவுச் சின்னம்     முத்திகல் ராசு     தமிழ்    
    வரம்         தமிழ்    
    பிள்ளைக்காக         தமிழ்    
    வெற்றிமேல் வெற்றி         தமிழ்    
    உத்தம புருஷன்     ரகு     தமிழ்    
    மூடு மந்திரம்         தமிழ்    
1990களில்
ஆண்டு     எண்     திரைப்படம்     கதாபாத்திரம்     மொழி     குறிப்புகள்
1990         காவலுக்குக் கெட்டிக்காரன்     திலீப்     தமிழ்    
    ராஜா கைய வைச்சா     ராஜா     தமிழ்    
    மை டியர் மார்த்தாண்டன்     மார்த்தாண்டன்     தமிழ்    
    அரங்கேற்ற வேளை     சிவராம கிருஷ்ணன்     தமிழ்    
    நல்ல காலம் பொறந்தாச்சு         தமிழ்    
    உறுதிமொழி         தமிழ்    
    சத்தியவாக்கு         தமிழ்    
    அஞ்சலி         தமிழ்     சிறப்புத் தோற்றம்
1991         தாலாட்டு கேக்குதம்மா     ராசைய்யா     தமிழ்    
    கும்பக்கரை தங்கய்யா     தங்கையா     தமிழ்    
    ஆயுள் கைதி     சேகர்     தமிழ்    
    வெற்றிக் கரங்கள்         தமிழ்    
    சின்னத் தம்பி     சின்னத் தம்பி     தமிழ்     தமிழக அரசின் திரைப்பட விருது - சிறந்த நடிகர்
    கிழக்குக் கரை     முரளி     தமிழ்    
    இரும்பு பூக்கள்         தமிழ்     சிறப்புத் தோற்றம்
1992         மன்னன்     அவராகவே     தமிழ்     சிறப்புத் தோற்றம்
    பாண்டித்துரை     பாண்டித்துரை     தமிழ்    
    நாங்கள்     கீர்த்தி     தமிழ்    
    சின்னவர்     முத்து     தமிழ்    
    நாளைய செய்தி         தமிழ்    
    செந்தமிழ்நாட்டு தமிழச்சி     முத்து     தமிழ்    
1993         சின்ன மாப்ளே     தங்கவேலு     தமிழ்    
    உத்தமராசா         தமிழ்    
97     மறவன்         தமிழ்    
98     தர்மசீலன்     தமிழ் செல்வன்,
தர்மசீலன்     தமிழ்    
99     உழவன்         தமிழ்    
1994     100     ராஜகுமாரன்     ராஜகுமாரன்     தமிழ்     100வது திரைப்படம்
    டூயட்     குணா     தமிழ்    
    பிரியங்கா     அர்ஜுன்     தமிழ்    
    வியட்நாம் காலனி     வெங்கடகிருஷ்ணன்     தமிழ்     வியட்நாம் காலனி மலையாள

திரைப்படத்தின் மறுஆக்கம்
    தலைவனின் அருள் உள்ளம்         தமிழ்    
    ஜல்லிக்கட்டுக்காளை     கோபாலகிருஷ்ணன்     தமிழ்    
1995         கட்டுமரக்காரன்     முத்தழகு     தமிழ்    
    பசும்பொன்     தங்கபாண்டி     தமிழ்    
    சின்ன வாத்தியார்     சந்திரமௌலி/அரவிந்த்     தமிழ்    
    பெரிய குடும்பம்         தமிழ்    
    மிஸ்டர். மெட்ராஸ்     முருகன்     தமிழ்    
    சீதனம்     முத்து மாணிக்கம்     தமிழ்    
1996         பரம்பரை     பரமசிவம்     தமிழ்    
    காலாபானி     முகுந்த் ஐயங்கார்     மலையாளம்    
    சிவசக்தி     சிவா     தமிழ்    
    பாஞ்சாலங்குறிச்சி     கிச்சா     தமிழ்    
1997         மாப்பிள்ளை கவுண்டர்         தமிழ்    
    தேடினேன் வந்தது     வேலுமணி /கோபாலகிருஷ்ணன்     தமிழ்    
    பெரியதம்பி     சிவா     தமிழ்    
1998         பொன்மனம்     ஆனந்தன்     தமிழ்    
    என் உயிர் நீதானே         தமிழ்    
    இனியவளே     பிரபாகர்     தமிழ்    
1999         கும்மிப்பாட்டு         தமிழ்    
    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா     வெங்கடேசன்     தமிழ்    
    சுயம்வரம்     ஆவுடையப்பன்     தமிழ்    
    மனம் விரும்புதே உன்னை     சண்முகம்     தமிழ்    
2000 முதல் 2009 வரை

ஆண்டு     எண்     திரைப்படம்     கதாபாத்திரம்     மொழி     குறிப்புகள்
2000         திருநெல்வேலி     துளசி     தமிழ்    
    தை பொறந்தாச்சு     கிரி     தமிழ்    
    கந்தா கடம்பா கதிர்வேலா     கந்தா     தமிழ்    
    பட்ஜெட் பத்மநாபன்     பத்மநாபன்     தமிழ்    
    வண்ணத் தமிழ்ப்பாட்டு     பூபதி, ரத்னவேல் ராஜா     தமிழ்    
2001         தாலிகாத்த காளியம்மன்     சந்திரபோஸ்     தமிழ்    
    மிடில் கிளாஸ் மாதவன்     மாதவன்     தமிழ்    
    சூப்பர் குடும்பம்     அருண்     தமிழ்    
    மிட்டா மிராசு     செல்லையா     தமிழ்    
2002         மலையாளி மாமனு வணக்கம்     பெரியகுளம் கண்ணையா     மலையாளம்     கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை என தமிழில் மறுஆக்கம்
    சார்லி சாப்ளின்     ராமகிருஷ்ணன்     தமிழ்     சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
2003         வார் அன் லவ்     சரத்சந்திரன்     மலையாளம்     காலம் என தமிழில் மொழிமாற்றம்
    எஸ் மேடம்     சிவராமகிருஷ்ணன்     தமிழ்    
    பந்தா பரமசிவம்     பரமன்     தமிழ்    
2004         கண்ணிணும் கண்ணடிக்கும்     அவராகவே     மலையாளம்     சிறப்புத் தோற்றம்
    வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்     வத்தி     தமிழ்    
2005         சந்திரமுகி     செந்தில்நாதன்     தமிழ்    
2006         பாசக் கிளிகள்     சேதுபதி     தமிழ்    
    குஸ்தி     ஜீவநாதன்     தமிழ்    
    உனக்கும் எனக்கும்     முத்துபாண்டி     தமிழ்    
2007         தாமிரபரணி     சரவண பெருமாள்     தமிழ்    
    வேகம்         தமிழ்    
    பில்லா     ஜெயபிரகாஷ் டிஜிபி     தமிழ்    
2008         குசேலன்     செந்தில்நாதன்     தமிழ்     சிறப்புத் தோற்றம்
    சிலம்பாட்டம்     முத்துவேல்     தமிழ்    
2009         அ ஆ இ ஈ     சுப்ரமணியம்     தமிழ்    
    அயன்     தாஸ்     தமிழ்     பரிந்துரை - சிறந்த துணை நடிகருக்கான

பிலிம்பேர் விருது – தமிழ்
    மலை மலை     பழனிவேல்     தமிழ்    
    கந்தசாமி     பரந்தாமன்     தமிழ்    
2010 முதல் தற்போது வரை
ஆண்டு     எண்,     திரைப்படம்     கதாபாத்திரம்     மொழி     குறிப்புகள்
2010         அசல்     மிராசி     தமிழ்    
    தம்பிக்கு எந்த ஊரு     குமாரசாமி     தமிழ்    
    ப்ரமணி     வர்க்கிசான் ஜோசப்     மலையாளம்     சிறப்புத் தோற்றம்
    டார்லிங்     ஹனுமந்த ராவ்     தெலுங்கு    
    மாஞ்சா வேலு     கௌதம் கணேஷ்     தமிழ்     சிறப்புத் தோற்றம்
    மகனே என் மருமகனே     அவராகவே     தமிழ்     சிறப்புத் தோற்றம்
    ராவணன்     சிங்கரசன்     தமிழ்    
    தில்லாலங்கடி     கிருஷ்ணாவின் அப்பாவாக     தமிழ்    
    பெஸ்ட் ஆப் லக்     விநாயக நாயக்கர்     மலையாளம்    
    ஆரஞ்சு     ஜானுவின் அப்பாவாக     தெலுங்கு    
2011         பாஸ்     சேதுநாதன் ஐயர்     கன்னடம்    
    தம்பிக்கோட்டை     சண்முகம்     தமிழ்    
    ஆடுபுலி     பாக்யநாதன்     தமிழ்    
    பொன்னர் சங்கர்     சோழ மன்னன்     தமிழ்    
    சக்தி     மகாதேவராயர்     தெலுங்கு    
    சங்கரன் கோயில்         தமிழ்    
    பெஜவாடா     காளி பிரசாத்     தெலுங்கு    
2012         3     ராமுவின் அப்பாவாக     தமிழ்    
    தருவு     யமா     தெலுங்கு    
    ஊ கொடத்தாரா? உலிக்கி படத்தாரா?     ராயுடு     தெலுங்கு    
    மிரட்டல்     சங்கர் தாதா     தமிழ்    
    தூனீகா தூனீகா     ராமசாமி     தெலுங்கு    
    தேனிகைனா ரெடி     வீர நரசிம்ம நாயுடு     தெலுங்கு    
2013         ஓங்கோல் கீதா     நாராயணா     தெலுங்கு    
    ஷேடோ         தெலுங்கு    
    டிராகுலா 2012         மலையாளம்    
    ஆல் இன் ஆல் அழகு ராஜா     முத்துகிருஷ்ணன்     தமிழ்    
2014         என்னமோ நடக்குது     பார்த்திபன்     தமிழ்    
    என்னமோ ஏதோ     சக்கரவர்த்தி     தமிழ்    
    உயிருக்கு உயிராக     ரங்கசாமி     தமிழ்    
    திரிஷ்யா     பண்ணீ ராவ்     கன்னடம்    
    கத்தி         தமிழ்        
    கயல்         தமிழ்        
    பவர்         கன்னடம்     படப்பிடிப்பில்    
2015         காசு பணம் துட்டு         தமிழ்    
    ஆம்பள         தமிழ்    
    காக்கி சட்டை         தமிழ்    
    எதிரி எண் 3         தமிழ்    
    புலி         தமிழ்     படப்பிடிப்பில்
    அப்படக்கரு         தமிழ்    
    தானா         தமிழ்    

திங்கள், 26 டிசம்பர், 2016

திரைப்பட தயாரிப்பாளர் எஸ். பாலசுப்ரமணியன் பிறந்த தினம் டிசம்பர் 28 .


திரைப்பட தயாரிப்பாளர் எஸ். பாலசுப்ரமணியன் பிறந்த தினம் டிசம்பர் 28 .
எஸ் எஸ் பாலன் என அறியப்படும் எஸ். பாலசுப்ரமணியன் (S. Balasubramanyan, டிசம்பர் 28, 1936 - டிசம்பர் 19, 2014) திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், விகடன் குழுமத்தின் உரிமையாளரும் ஆவார்.

ஜெமினி ஸ்டுடியோஸ், விகடன் குழுமம் ஆகியவற்றின் நிறுவனர் எஸ். எஸ். வாசனின் மகனான இவர் சென்னையில் பிறந்தவர். லயோலா கல்லூரியில் படித்து இளங்கலைப் (பி.காம்) பட்டம் பெற்றார். விகடன் குழுமத்தில், 1956 ஆம் ஆண்டில் இணைந்த இவர் தந்தையின் மரணத்திற்கு பின் ஜெமினி, விகடன் குழுமத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

திரைப்படத் துறை பங்களிப்புகள்
தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். சிரித்து வாழ வேண்டும், எல்லோரும் நல்லவரே போன்றவை இவர் இயக்கிய சில திரைப்படங்களாகும்.

பத்திரிகைத் துறை பங்களிப்புகள்
1987ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர் அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார்.

குடும்பம்

இவருக்கு ஆறு பெண்களும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இவரின் மகன் பா. சீனிவாசன் தற்போது விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார்.

மறைவு
19 டிசம்பர் 2014 அன்று சென்னையில் மாரடைப்பினால் காலமானார்.

நடிகர் சல்மான் கான் பிறந்த நாள் டிசம்பர் 27, 1965 .



நடிகர் சல்மான் கான் பிறந்த நாள்  டிசம்பர் 27, 1965 .

சல்மான் கான் (Salman Khan, இந்தி: सलमान ख़ान, பிறப்பு: டிசம்பர் 27, 1965) ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகரும், பாலிவுட் நடிகருமாவார்.

பீவி ஹோ தோ ஐசி (1988) என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா (1989) மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். சாஜன் (1991), ஹம் ஆப்கே ஹே கோன் (1994), பீவி நம்பர் 1 (1999) போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றி படங்களும் அவரை இந்திய திரைப்படத்துறையில் நிலைநிறுத்தி உள்ளன.

1999ல், குச் குச் ஹோதா ஹே (1998) திரைப்படத்தில் தம் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை பெற்ற கான், அப்போதிருந்து ஹம் தில் தே சுக்கே சனம் (1999), தேரே நாம் (2003), நோ என்ட்ரி (2005) மற்றும் பார்ட்னர் (2007) உள்பட பல சிறந்த மற்றும் வர்த்தகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிகள் சல்மான் கானை இந்தி சினிமாவின் மிக புகழ்வாய்ந்த முன்னனி நடிகர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.

வாழ்க்கை வரலாறு[தொகு]
தொழில்வாழ்க்கை[தொகு]
சல்மான் கான், 1988ல் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் அவர் ஒரு துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப்படமான மைனே பியார் கியா (1989) திரைப்படத்தில் தான் அவர் முதன்முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் வர்த்தரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது.

1990ல், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான நக்மாவுடன் அவர் இணைந்து நடித்த பாக்ஹி|பாக்ஹி என்ற ஒரேயொரு திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்த படமும் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டில், பத்தர் கே பூல் , சனம் பேவஃபா மற்றும் சாஜன் ஆகிய மூன்று வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார். இந்த மாபெரும் ஆரம்ப பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் இருந்த போதினும், அவரின் 1992-1993-ல் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வி அடைந்தன.

1994ல், மாதுரி தீட்சித்துடன் அவர் இணைந்து நடித்த ஹம் ஆப்கே ஹே கோன் திரைப்படத்தில் (சூரஜ் பர்ஜத்யாவுடனான அவரின் இரண்டாவது கூட்டணியில்) மீண்டும் வெற்றி நாயனாக மாறினார். அந்த படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் அதுவரை பாலிவுட்டின் மிகப் பெரிய வசூல் சாதனை அளித்த திரைப்படங்களில் ஒன்றாகவும் அது மாறியது. அதுவரையிலான காலத்தில், மிக அதிக வசூல் அளித்த திரைப்படங்களில் இந்த படம் நான்காவது இடத்தைப் பிடித்தது.
 ஒரு வர்த்தகரீதியான வெற்றிப்படமாக மட்டுமில்லாமல், சல்மான்கான் அவரின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். இது சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரையிலும் அவரை இரண்டாவது முறையாக கொண்டு சேர்த்தது. கான் நடித்த மூன்று திரைப்படங்கள் அந்த ஆண்டிலேயே வெளியாயின. ஆனால் அவரின் முந்தைய படங்களைப் போன்று அவற்றில் ஒன்று கூட பாக்ஸ் ஆபீசில் வெற்றியைக் காட்டவில்லை. எவ்வாறிருப்பினும், அமீர்கானுடன் அவர் இணைந்து நடித்த அண்தாஜ் அப்னா அப்னா திரைப்படத்தில் அவர் நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார். 1995ல், அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, ராகேஷ் ரோஷனின் கரண் அர்ஜூன் வெற்றிப்படத்தில் மீண்டும் தம்மை நிலைநிறுத்தி கொண்டார்.அந்த திரைப்படம் அவ்வாண்டின் இரண்டாவது மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கரண் என்ற அவரின் கதாபாத்திரம் அவரை மீண்டும் ஒருமுறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கு கொண்டு சென்றது. ஆனால் தவிர்க்க முடியாமல் கரண் அர்ஜீனில் அவருடன் இணைந்து நடித்த ஷாருக்கான் அம்முறை விருதை வென்றார்.

1996-ஆம் ஆண்டு சல்மான் கானின் இரண்டு படங்கள் வெளியாயின. ஒன்று, அறிமுக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியால் இயக்கப்பட்டு மனிஷா கொய்ராலா, நானா பாட்டேக்கர் மற்றும் சீமா பிஸ்வாஸ் ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த காமோஷி: தி மியூசிக்கல் என்ற படமாகும். பாக்ஸ் ஆபீஸ் அளவில் இது தோல்விப்படமாக இருந்த போதினும், இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது. அடுத்ததாக அவரும், சன்னி தியோல் மற்றும் கரிஷ்மா கபூரும் இணைந்து நடித்த ராஜ் கன்வரின் அதிரடி படமான ஜீத்" வெளியாகி இருந்தது.

1997ல், ஜூடுவா மற்றும் அவ்ஜார் ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. முந்தையது கரிஷ்மா கபூருடன் இணைந்து, டேவிட் தாவனினால் இயக்கப்பட்ட நகைச்சுவை படம். இதில் அவர் பிறந்த போதே பிரிக்கப்பட்ட இரட்டையர்களின் கதாபாத்திரத்தை ஏற்று இரட்டை வேடத்தில் நடித்தார். அப்படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இரண்டாவது படம் பெயரளவிற்கே பிரபலப்பட்டது.

1998-ஆம் ஆண்டு சல்மான் கான் நடித்த ஐந்து வித்தியாசமான திரைப்படங்கள் வெளியாயின. கஜோலுடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை படமான பியார் கியா தோ டர்னா கியா திரைப்படம் அவருக்கு அவ்வாண்டின் முதல் படமாக அமைந்தது. அது அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இதை தொடர்ந்து வெளியான ஜப் பியார் கிசிசே ஹோதா ஹே]] திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கானின் நடிப்பு அவருக்கு பல நல்ல பாராட்டுக்களைப் பெற்று தந்தது என்பதுடன் விமர்சகர்களிடம் இருந்தும் ஆதரவான விமர்சனங்களை அளித்தது. அவர் அதே ஆண்டில் அறிமுக இயக்குனரான கரண் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஷாருக்கான் மற்றும் கஜோலுடன் இணைந்து நடத்த இப்படத்தில், அவர் அமன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் பின்பகுதியில் சிறிய காட்சியில் மட்டுமே தோன்றி இருந்தார். எவ்வாறிருப்பினும், அதுவும் அவருக்கு பாராட்டைப் பெற்று தந்தது.

1999ல், கான் மூன்று வெற்றிப்படங்களில் நடித்தார்: ஹம் சாத் சாத் ஹே: வீ ஸ்டேண்ட் யுனெடட் என்ற படம் சூரஜ் பர்ஜத்யாவுடன் அவரை மூன்றாவது முறையாக அணி சேர்த்தது; பீவி நம்பர் 1, இது அந்த ஆண்டில் அதிக வசூலீட்டிய திரைப்படமாக அமைந்தது; ஹம் தில் தே சுக்கே சனம், இது ஒரு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன், அவரை மற்றொரு முறை மீண்டும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கான பரிந்துரையிலும் கொண்டு வந்து சேர்த்தது.

2000-ஆம் ஆண்டு, கான் ஆறு படங்களில் நடித்திருந்தார். இவற்றில் சுமாரான வெற்றியைப் பெற்ற ஹர் தில் ஜோ பியார் கரேன்கா மற்றும் சோரி சோரி சுப்கே சுப்கே ஆகிய இரண்டு படங்களைத் தவிர பெரும்பாலானவை படுமோசமாகவும், வர்த்தகரீதியாகவும் தோல்வி அடைந்தன. அந்த இரண்டு படங்களிலும் முறையே ராணி முகர்ஜி மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். 2001 வரை தாமதமாகி வெளியான சோரி சோரி சுப்கே சுப்கே திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் கான் ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் கதாபாத்திரத்தைக் கையாண்டிருந்தார்.

2002-ஆம் ஆண்டு வெளியான ஹம் தும்ஹாரே ஹே சனம் படத்திலும் இவர் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபிஸில் ஓரளவிற்கு வெற்றி பெற்றது.

2003-ஆம் ஆண்டு வெளியான தேரே நாம் படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்யும் வரை கானின் தொடர்ச்சியான படங்கள் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தன. இந்த படம் நல்ல வசூலை எட்டியது. அத்துடன் அவரின் நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. "சல்மான் கான் அந்த T கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக பொருந்துகிறார். சிரமமான காட்சிகளிலும் அவர் அற்புதமாக நடிக்கிறார்." என்று திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து முஜ்சே ஷாதி கரோகி (2004) மற்றும் நோ என்ட்ரி (2005) ஆகிய நகைச்சுவை படங்களுடன் பாக்ஸ் ஆபீசில் தமது வெற்றியைத் தொடர்ந்தார். ஜானே மன் மற்றும் பாபுல் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் சரியாக வெற்றியடையாததால் 2006ஆம் ஆண்டு அவருக்கு ஒரு தோல்விகரமான ஆண்டாக அமைந்தது.

2007ஆம் ஆண்டை, சல்மான் கான் சலாம் ஈ இஸ்க் படத்துடன் தொடங்கினார். அதுவும் பாக்ஸ் ஆபிசில் வெற்றியைக் காட்டவில்லை. அவரின் அடுத்த படமான பார்ட்னர் பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றி பெற்றது,[8] அடுத்ததாக அவர் தம் முதல் ஹாலிவுட் திரைப்படமான மேரிகோல்டு: அட்வன்சர் இன் இந்தியா என்ற படத்தில் அமெரிக்க நடிகை அலி லார்டெருடன் நடித்தார். ஓர் இந்திய ஆணுக்கும், ஓர் அமெரிக்க பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சொல்லும் இப்படம் வர்த்தகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.

2008 முழுவதும் கான் மூன்று படங்களில் நடித்தார், அவை அனைத்துமே தோல்வி அடைந்தன. ஜிம் கேரியின் ஹாலிவுட் வெற்றிப்படமான புரூஸ் ஆல்மைட்டி என்பதை தழுவி காட் துஸ்சே கிரேட் ஹோ என்ற படம் என்பது உருவாக்கப்பட்டது. இந்த படம் படுமோசமான தோல்வியைத் தழுவியது.[9] அந்த ஆண்டின் இரண்டாவது படமான ஹீரோஸ், விமர்சகர்களிடம் இருந்து பாராட்டைப் பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக வெற்றியடையவில்லை என்று கூறப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை
கான், புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான சலீம் கான் மற்றும் அவர் முதல் மனைவி சல்மா கானுக்கு (மணமாவதற்கு முன்னிருந்த பெயர் சுசீலா சரக்) பிறந்த மூத்த மகனாவார். சல்மான் கானுக்கு, அர்பாஜ் கான் மற்றும் சோஹேல் கான் என்ற இரண்டு சகோதரர்களும், அல்விரா மற்றும் அர்பிதா எனும் இரண்டு சகோதரிகளும் உண்டு.

தீவிர உடற்பயிற்சி செய்வதில் சல்மான் கான் மிகவும் ஆர்வம் கொண்டவர். 2004ல், உலகின் அழகான ஆண்களில் 7வது இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அமெரிக்காவின் பீப்பிள் இதழாலும் இந்தியாவில் அழகான ஆண்மகன் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.சல்மான் கான் பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய், சோமி அலி மற்றும் சங்கீதா பிஜ்லானி போன்ற நடிகைகளுடன் சல்மான் கான் தொடர்புபடுத்தப்பட்டார். 2003-ஆம் ஆண்டு டேட்டிங் மாடல் மற்றும் நடிகையான கேத்ரீனா கெய்ப் உடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டார்.

2007, அக்டோபர் 11ல், இலண்டனில் உள்ள மேடம் துஷ்சாட்ஸ் மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில் அவரின் மெழுகு பொம்மையை வைக்க சல்மான் கான் சம்மதம் தெரிவித்தார். அந்த அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட நான்காவது இந்திய திரைப்பட கலைஞரின் மெழுகு பொம்மை என்ற பெருமையுடன், 2008, ஜனவரி 15ல், இறுதியாக அவரின் ஆள் உயர மெழுகு பொம்மை அங்கு நிறுவப்பட்டது.

வழக்கு
2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

சர்ச்சைகள்.
சட்டரீதியான பிரச்சனைகள்
2002, செப்டம்பர் 28ல், வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காக சல்மான் கைது செய்யப்பட்டார். அவர் கார் மும்பையில் உள்ள ஒரு பேக்கரியின் மீது மோதியது; பேக்கரியின் வெளியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ஒருவர் அதில் இறந்தார் என்பதுடன் அந்த சம்பவத்தில் மேலும் மூன்று நபர்கள் காயப்பட்டார்கள்.அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டன. எவ்வாறிருப்பினும், அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அவர் தொடர்ந்து வழக்குகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.

2006, பிப்ரவரி 17ல், அழிந்து வரும் உயிரினமான சின்காராவை வேட்டையாடியதற்காக கான் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை மேல்முறையீடின் போது உயர் நீதி மன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.2006, ஏப்ரல் 10ல், அழிந்து வரும் சின்காராவை வேட்டை ஆடியதற்காக சல்மானுக்கு ஐந்தாண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிணையம் வழங்கப்படும் வரை அவர் அங்கு ஏப்ரல் 13 வரை சிறையில் இருந்தார்.2007, ஆகஸ்டு 24ல், சின்காரா வேட்டையாடிய வழக்கில், அவரின் மேல்முறையீட்டின் 2006 தீர்ப்பிற்கு எதிராக, ஜோத்பூர் வரைவு நீதிமன்றம் அவரை ஐந்து ஆண்டு கால சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டது. அப்போது, அவர் வேறெங்கோ படப்பிடிப்பில் இருந்தார் என்பதால் அவர் சகோதரி அந்த வழக்குகளில் நேரில் ஆஜரானார்.அதற்கடுத்த நாள், வேட்டையாடியதற்காக அவருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவர் ஜோத்பூரில் போலீஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டார். 2007, ஆகஸ்ட் 31ல், ஆறு நாட்கள் சிறையில் கழித்த பின்னர், ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து கான் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புகளுடனான பிரச்சனைகள்.

ஐஸ்வர்யா ராயுடனான அவரின் நெருங்கிய உறவு இந்திய ஊடகத்தில் அதிகமாக வெளியான ஒரு விஷயமாகும். மேலும் அது தொடர்ந்து வதந்திகளை எழுப்பி வந்தது. 2002 மார்ச்சில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னர், தம்மை அவர் தொந்தரவு செய்வதாக ராய் குற்றஞ்சாட்டினார். தங்களின் உறவு முறிவு குறித்த விஷயத்தில் சல்மான் கான் உடன்படாமல், தன்னை தொடர்ந்து துரத்திக் கொண்டிருப்பதாக ராய் அறிவித்தார்; ராயின் பெற்றோர்கள் கானுக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்கள்.

2001-ஆம் ஆண்டு, மும்பை போலீஸால் இரகசியமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் அழைப்பு என்று கூறப்பட்டதை 2005ல் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. மும்பை சட்டவிரோத பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்படும் சமூக நிகழ்வுகளில் தோன்ற ராயைக் கட்டாயப்படுத்தும் ஒரு முயற்சியில், அவர் ஐஸ்வர்யா ராயை அச்சுறுத்த செய்யப்பட்ட அழைப்பாக அது தோன்றியது. இந்த அழைப்பு, பிற நடிகர்களின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் தீய கருத்துக்களுடனான தொடர்புகளையும் எடுத்துக்காட்டியது. எவ்வாறிருப்பினும், சண்டிகர்|சண்டிகரில் உள்ள இந்திய அரசின் தடயவியல் ஆய்வகத்தில் அந்த சந்தேகத்திற்கிடமான ஒலிநாடா பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அது போலியானது என்று தீர்மானிக்கப்பட்டது.

சல்மானுக்கு எதிரான ஃபாத்வா.

2007, செப்டம்பரில், ஒரு விநாயகர் பூஜையில் கலந்து கொண்டதற்காக கானுக்கு எதிராக ஒரு முஸ்லீம் அமைப்ப பாத்வாவை வெளியிட்டது. உருவ வழிபாடு இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, கான் கல்மாஸ் (சத்தியம் பிரகடனம்) படித்தால் ஒழிய, அவர் மீண்டும் ஒரு முஸ்லீமாக சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என்று அந்த அமைப்பு அறிவித்தது. ஆனால், பாந்த்ராவில் கான் அவர் குடும்பத்துடன் விநாயகர் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த விழாவில் நடனம் ஆடியவர்களில் கானும் ஒருவராக இருந்தார். அவர் தந்தை, சல்மான் எதுவும் தவறாக செய்துவிடவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார்.

கான் தமது உருவ மெழுகு பொம்மையை உருவாக்க இலண்டனின் மேடம் துஷ்சாஷ்ட்ஸிற்கு அனுமதி அளித்ததற்காக, இந்தியாவின் ஒரு முஸ்லீம் பிரிவான முப்தி சலீம் அஹ்மத் காஸ்மியால் மற்றொரு பாத்வா அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த பொம்மை சட்டவிரோதமானது என்று முப்தி குறிப்பிட்டது. அதே அருங்காட்சியகத்தில் ஷாருக்கானின் மெழுகு பொம்மை வைக்கப்பட்டிருக்கும் போது, உடன் முஸ்லீமான அவருக்கு எதிராக எவ்வித பாத்வாவும் வெளியிடாத நிலையில், இது பத்திரிக்கைகளில் பல்வேறு ஊகங்களை எதிரொலித்தது. "இந்த பாத்வாக்கள் ஒரு நகைச்சுவை விஷயமாகி வருகின்றன" என்று சல்மான் கான் கூறினார்.

விநாயக சதுர்த்தி கான் தம் வீட்டில் அவர்தம் குடும்பத்துடன் கொண்டாடியதற்காக, செப்டம்பர் 2008ல் மீண்டும் சல்மான் கான் மீது பாத்வா எழுப்பப்பட்டது. புது டெல்லியில் உள்ள ஆலோசனை குழு உறுப்பினரால் அந்த பாத்வா எழுப்பப்பட்டது. அந்த விழாவில், அவர் தந்தை சலீம் மீண்டும் பாத்வா மீது கேள்வி எழுப்பினார், அத்துடன் அதை எழுப்பியவர்களையும் விமர்சித்தார்.

விருதுகளும் தேர்ந்தெடுப்புகளும்.
பிலிம்பேர் விருதுகள்.
வெற்றியாளர்.
1990: மைனே பியார் கியா படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
1999: குச் குச் ஹோதா ஹே படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரைக்கப்பட்டவை
1990: மைனே பியார் கியா படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
1995: ஹம் ஆப்கே ஹே கோன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
1996: கரண் அர்ஜூன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
1997: ஜீத் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
1999: பியார் கியா தோ டர்னா கியா திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
2000: ஹம் தில் தே சுக்கே சனம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது
2000: பீவி நம்பர் 1 படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
2004: தேரே நாம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
2004: பக்ஹ்பன் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
2006: நோ என்ட்ரி படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது

ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள்

பரிந்துரைக்கப்பட்டவை
2004: தேரே நாம் படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருது
2005: கர்வ்: பிரைட் அண்டு ஹானர் என்ற படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருது
ஜி சினி விருதுகள்

பரிந்துரைக்கப்பட்டவை
2004: தேரே நாம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஜீ சினி விருது
2005: முஜ்சே ஷாதி கரோகி படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஜீ சினி விருது
2006: நோ என்ட்ரி படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஜீ சினி விருது

பாலிவுட் திரைப்பட விருதுகள்

வெற்றியாளர்
2002: பாலிவுட் திரைப்பட விருது - சிறந்த உணர்வுப்பூர்வமான நடிகர், சோரி சோரி சுப்கே சுப்கே

தேசிய விருதுகள்

2007: பொழுதுபோக்கில் அவரின் நிகரற்ற சாதனைக்காக ராஜீவ் காந்தி விருது

இந்திய தொலைக்காட்சி விருதுகள்

2008: சிறந்த நிகழ்ச்சியாளர் , தஸ் கா தம்

நடித்த திரைப்படங்கள்

2010

வருடம் தலைப்பு கதாபாத்திரம் மற்ற குறிப்புகள்
1988 பீவி ஹோ தோ ஐசி விக்கி பண்டாரி
1989 மைனே பியார் கியா பிரேம் சௌத்ரி சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றார்
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
1990 பாக்ஹி: எ ரிபல் பார் லவ் சாஜன் சூத்
1991 சனம் பேவஃபா சல்மான் கான்
பத்தர் கே பூல் இன்ஸ்பெக்டர்சூரஜ்
குர்பான் ஆகாஷ் சிங்
லவ் ப்ரித்வி
சாஜன் ஆகாஷ் வர்மா
1992 சூர்யவன்ஷி விக்கி/சூர்யவன்ஷி விக்ரம் சிங்
ஏக் லட்கா ஏக் லட்கி ராஜா
ஜாக்ருதி ஜக்னு
நிஷ்ச்சய் ரோஹன் யாதவ்/வாசுதேவ் குஜ்ரால்
1993 சந்திரமுகி ராஜா ராய்
தில் தேரே ஆஷிக் விஜய்
1994 அண்தாஜ் அப்னா அப்னா பிரேம் போபாலி
ஹம் ஆப்கே ஹே கோன்...! பிரேம் நிவாஸ்
சாந்த் கா துக்கடா ஷ்யாம் மல்ஹோத்ரா
சங்தில் சனம் கிஷன்
1995 கரண் அர்ஜூன் கரண் சிங்/அஜய் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
வீர்கதி அஜய்
1996 மஜ்ஹ்தார் கோபால்
காமோஷி: தி மியூசிக்கல் ராஜ்
ஜீத் ராஜூ சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டார்
துஷ்மன் துனியா கா சிறப்பு தோற்றம்
1997) ஜூடுவா ராஜா/பிரேம் மல்ஹோத்ரா இரட்டை வேடம்
அவ்ஜார் இன்ஸ்பெக்டர் சூரஜ் பிரகாஷ்
தஸ் கேப்டன் ஜீத் சர்மா படம் முடிக்கப்படவில்லை
திவானா மஸ்தானா பிரேம் குமார் சிறப்பு தோற்றம்
1998 பியார் கியா தோ டர்னா கியா சூரஜ் கன்னா சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ஜப் பியார் கிசிசே ஹோத்தா ஹே சூரஜ் தன்ராஜ்கிர்
சர் உட்டாக்கே ஜீயோ சிறப்பு தோற்றம்
பண்ந்தன் ராஜூ
குச் குச் ஹோதா ஹே அமன் மெஹ்ரா சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றார்
சிறப்பு தோற்றம்
1999) ஜானம் சம்ஹா கரோ ராகுல்
பீவி நம்பர் 1 பிரேம் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டார்
செர்ப் தும் பிரேம் சிறப்பு தோற்றம்
ஹம் தில் தே சுகே சனம் சமீர் ரப்பீல்லினி சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ஹலோ பிரதர் ஹீரோ
ஹம் சாத்-சாத் ஹே: வீ ஸ்டேண்டு யுனேட்டெட் பிரேம்
2000 துல்ஹன் ஹம் லே ஜாயேன்கே ராஜா ஓபராய்
சல் மேரே பாய் பிரேம் ஓபராய்
ஹர் தில் ஜோ பியார் கரேகா ராஜ்/ரோமி
தாய் அக்‌ஷர் ப்ரேம் கே நட்புரீதியில் தோற்றம்
கஹி பியார் ந ஹோ ஜாயே பிரேம் கபூர்
2001 சோரி சோரி சுப்கே சுப்கே ராஜ் மல்ஹோத்ரா
2002 தும்கோ ந பூல் பாயேன்கே வீர் சிங் தாக்கூர்/அலி
ஹம் துமாரே ஹேன் சனம் சூரஜ்
யே ஹே ஜல்வா ராஜ் 'ராஜ்' சக்சேனா/ராஜ் மிட்டல்
2003 லவ் அட் டைம்ஸ் ஸ்குவயர் பாடல் காட்சியில் மட்டும் சிறப்பு தோற்றம்
ஸ்டம்ப்டு பாடல் காட்சியில் மட்டும் சிறப்பு தோற்றம்
தேரே நாம் ராதே மோஹன் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
பக்ஹ்பன் அலோக் ராஜ் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டார்
சிறப்பு தோற்றம்
2004 கர்வ்: பிரைட் அண்டு ஹானர் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் ரனாவத்
முஜ்சே ஷாதி கரோகி சமீர் மல்ஹோத்ரா
பீர் மிலேங்கே ரோஹித் மன்சண்ந்தா
தில் நே ஜிசே அப்னா கஹா ரிஷாபத்
2005 லக்கி: நோ டைம் பார் லவ் ஆதித்யா
மைனே பியார் கியூங் கியா? டாக்டர். சமீர் மல்ஹோத்ரா
நோ என்ட்ரி பிரேம் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
கியூங் கி ஆனந்த்
2006 சாவன்: தி லவ் ஸ்டோரி
ஷாதி கர்கே பஸ் கயா யார் அயன்
ஜானே மன் சுஹன்
பாபுல் அவினாஷ் கபூர்
2007 சலாம் ஈ இஸ்க்: எ டிரீப்யூட் டூ லவ் ராகுல்
பார்ட்னர் பிரேம்
மேரிகோல்டு: அட்வன்சர் இன் இந்தியா பிரேம்
ஓம் ஷாந்தி ஓம் அவரே தீவான்கி தீவான்கி பாடலில் மட்டும் சிறப்பு தோற்றம்
சாவரியா இமான்
2008 காட் துசி கிரேட் ஹோ அருண் பிரஜாபதி
ஹலோ அவரே சிறப்பு தோற்றம்
ஹீரோஸ் பல்கார் சிங்/ஜஸ்விந்தர் சிங்
யுவ்ராஜ் தேவன் யுவ்ராஜ்
2009 வாண்டட் டெட் அண்டு அலைவ் செப்டம்பர் 18, 2009ல் வெளியாகிறது
மை அவுர் மிசஸ். கன்னா சமீர் கன்னா October 16, 2009ல் வெளியாகிறது
இலண்டன் ட்ரீம்ஸ் October 30, 2009ல் வெளியாகிறது
வீர்

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

நடிகர் எஸ். வி. சேகர் பிறந்த தினம் டிசம்பர் 26 .



 நடிகர் எஸ். வி. சேகர் பிறந்த தினம் டிசம்பர் 26 .


எஸ். வி. சேகர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மேடைநாடகக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். நாடகத்துறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கிய இவர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து, கிட்டத்தட்ட 5000 முறைக்கும் மேலாக நாடகங்களை மேடையில் அரங்கேற்றி உள்ளார். இவருடைய நாடக வசனங்கள் பெரும்பாலும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டவைகள் ஆகும். ‘அருக்கானி’, ‘பெரியதம்பி’, ‘வால் பையன்’, ‘சிரிப்பு உங்கள் சாய்ஸ்’ போன்ற நாடகங்கள் எஸ். வி. சேகரின் சிறந்த நாடகப் படைப்புகளாகும். அதுமட்டுமல்லாமல், 1979 ஆம் ஆண்டு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற திரைப்படத்தில், ஒரு சிறு கதாபத்திரத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர், சுமார் 90-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘ஸ்பரிசம்’, ‘சுபமுகூர்த்தம்’, ‘பூவே பூச்சுடவா’, ‘சிதம்பர ரகசியம்’, ‘சகாதேவன் மகாதேவன்’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘வேடிக்கை என் வாடிக்கை’, ‘ஜீன்ஸ்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘தங்கமணி ரங்கமணி’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘மணந்தால் மகாதேவன்’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘சிங்கமணி ரங்கமணி’ போன்றவை இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் ஆகும். மேலும், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். ஒலிப்பதிவு, நிகழ்ச்சி தயாரிப்பு, நிழல்படம் எடுப்பது, தொகுத்தல், இயக்குதல், அரசியல், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக விளங்கிய எஸ். வி. சேகர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 26, 1950
இடம்: தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி  
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு 
எஸ். வி. சேகர் என அறியப்படும் சட்டநாதபுரம் வெங்கட்டராமன் சேகர் அவர்கள், 1950  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் என்ற இடத்தில் எஸ். வெங்கடராமன் என்பவருக்கு மகனாக, ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய ஆரம்பக் கல்வியை தஞ்சாவூரில் உள்ள தொடக்கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு வரை படித்த அவர், பிறகு திருவல்லிக்கேணியிலுள்ள இந்து மேல்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியில் படிக்கும் பொழுதே, நாடகக்கலையில் ஈடுப்பாடு கொண்டவராக விளங்கிய அவர், தன் தந்தையுடன் இணைந்து அவ்வப்போது ஒரு சில நாடகப் பணிகளையும் செய்துவந்தார். நாடகப் கலையோடு படிப்பையும் தொடர்ந்த அவர், விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். அதன் பிறகு, இயந்திரவியல் துறையில் பட்டயப்படிப்பையும், காற்றுப் பதனாக்க கருவி மற்றும் குளிர்சாதனப் பெட்டி சரிசெய்தல் போன்றவற்றில் பட்டயப்படிப்பையும் முடித்தார்.
ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்
ஆரம்பத்தில் ஒரு ஒலிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அதன் பிறகு, நாடகக் கலையில் ஏற்பட்ட ஈடுபாட்டால், தன்னுடைய தந்தை நடத்திவந்த ‘கற்பகம் கலாமந்திர்’ என்ற நாடக நிறுவனத்தில் மேடை உதவியாளராகப் பணிபுரிய தொடங்கினார். பின்னர், புகைப்டக் கலையிலும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கிய அவர், ஒலிப்பதிவிலும் புதுமைகள் செய்தார். அவர், இலங்கை வானொலிக்காக சுமார் 275 – க்கும் மேற்பட்ட ஒலித்சித்திரங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிப்பதிவு, நிகழ்ச்சித் தயாரிப்பு, நிழல்படம் எடுப்பது, தொகுத்தல், இயக்குதல், எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவந்த அவர், ‘நாரதர்’ என்ற தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

நாடகத்துறையில் அவரின் பயணம்       

1974 ஆம் ஆண்டு ‘நாடகப்ரிய’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை தொடங்கிய அவர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து, கிட்டத்தட்ட 5000 முறைக்கும் மேலாக மேடையில் அரங்கேற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக் என வெளிநாடுகளிலும் தன்னுடைய நாடகத்தினை மேடையேற்றி உள்ளார். ‘அருக்கானி’, ‘பெரியதம்பி’, ‘வால் பையன்’, போன்ற நாடகங்கள் எஸ். வி. சேகரின் சிறந்த நாடகப் படைப்புகளாகும். நாடகக்கலையில் சிறந்து விளங்கிய எஸ். வி. சேகர் அவர்கள், ‘நாடக சூப்பர்ஸ்டார்’, ‘காமெடி கிங்’, ‘சிரிப்பலை சிற்பி’, ‘நாடக வசூல் சக்ரவர்த்தி’, ‘நகைச்சுவை தென்றல்’, ‘நகைச்சுவை இளவரசர்’, ‘நகைச்சுவை நாயகன்’, ‘சிரிப்பு செல்வன்’, ‘நகைச்சுவை வேதநாயகன்’, ‘நாடகரத்னா’ எனப் பல சிறப்பு பெயர்கள் நாடக சபாக்களாலும், நிறுவனங்களாலும் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், மைலாப்பூர் அகாதமி இவரை மூன்று வருடம் ‘சிறந்த சிரிப்பு நடிகராக’ தேர்தெடுத்தது. 1990 ஆம் ஆண்டு ‘விஸ்டம்’ என்ற பத்திரிக்கை, ‘சிறந்த சிரிப்பு நடிகர்’ என்ற பட்டத்தை அளித்தது. இதைத் தவிர்த்து, ‘கலைமாமணி’, ‘கலைவாணர்’ போன்ற சிறந்த விருதுகளையும் பெற்றுள்ளார்.
சினிமாவில் அவருடைய பயணம்
நடிப்பையும், படிப்பையும் ஒருங்கே செய்துகொண்டிருந்த எஸ். வி. சேகர் அவர்ளுக்கு, கே. பாலச்சந்தர் மூலமாக ‘நிழல்கள் நிஜமாகிறது’ என்ற படத்திலும், எஸ். பி. முத்துராமன் மூலமாக ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ என்ற படத்திலும் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால், எஸ். வி. சேகர் அவர்கள், ‘நான் இப்பொழுதுதான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன், சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை’ எனக் கூறி மறுத்த அவர், 1979 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடிகராகத் தன்னுடைய பெயரைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, பல படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சுமார் 90 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, ஒரு பன்முக நடிகராகவும் வலம்வந்தார்.
அவர் இயக்கிய புகழ்பெற்ற நாடகங்கள்
‘வால்பையன்’, ‘பெரியப்பா’, ‘காட்டுல மாலை’, ‘காதுல பூ, அதிர்ஷ்டக்காரன்’, ‘அல்வா’, ‘ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘சின்னமாப்ளே பெரியமாப்ளே’, ‘அன்னம்மா பொன்னம்மா’, ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’, ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது’, ‘யாமிருக்க பயமேன்’, ‘பெரிய தம்பி’, ‘இது ஆம்பளைங்க சமாச்சாரம்’, ‘மனைவிகள் ஜாக்கிரத்தை’, ‘சிரிப்பு உங்கள் சாய்ஸ்’, ‘குழந்தை சாமி’, ‘வண்ணக் கோலங்கள்’, ‘எப்பவும் நீ ராஜா’, ‘சாதல் இல்லையேல் காதல்’, ‘மகாபாரதத்தில் மங்காத்தா’, ‘அமெரிக்காவில் அருக்காணி’, ‘எல்லோரும் வாங்க’, ‘எல்லாமே தமாஸ் தான்’, ‘நம் குடும்பம்’, ‘காட்டுல மழை’, ‘காதுல பூ’.
அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘நினைத்தாலே இனிக்கும்’ (1979), ‘வறுமையின் நிறம் சிவப்பு’ (1980), ‘குடும்பம் ஒரு கதம்பம்’ (1981), ‘மிஸ்டர் பாரத்’ (1986), ‘மணல்கயிறு’ (1982), ‘ஸ்பரிசம்’ (1982), ‘சுபமுகூர்த்தம்’ (1983), ‘பிரம்மச்சாரிகள்’ (1983), ‘பூவே பூச்சுடவா’(1985), ‘நாம்’ (1985), ‘சிதம்பர ரகசியம்’ (1986), ‘சகாதேவன் மகாதேவன்’ (1988), ‘டௌரி கல்யாணம்’ (1983), ‘சிம்லா ஸ்பெஷல்’ (1982), ‘சர்வம் சக்திமயம்’ (1986),  ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ (1986), ‘அடுத்த வீடு’ (1986), ‘பயணங்கள் முடிவதில்லை’ (1982), ‘திருமதி ஒரு வெகுமதி’ (1987), ‘எங்கவீட்டு ராமாயாணம்’ (1987), ‘கதாநாயகன்’ (1988), ‘வீடு மனைவி மக்கள்’ (1988), ‘தங்கமான புருஷன்’ (1989), ‘தங்கமணி ரங்கமணி’ (1989), ‘‘மணந்தால் மகாதேவன்’ (1989), வேடிக்கை என் வாடிக்கை’ (1990), ‘பொண்டாட்டியே தெய்வம்’ (1994), ‘ஜீன்ஸ்’(1998), ‘கந்தா கடம்பா கதிரவேலா’ (2000), ‘‘கிருஷ்ணா கிருஷ்ணா’ (2001), சிங்கமணி ரங்கமணி’ (2001) ‘வல்லவன்’ (2006), ‘ஜித்தன்’ (2005), ‘வேகம்’ (2007)

தனிப்பட்ட வாழ்க்கை
எஸ். வி. சேகர் அவர்கள், உமா என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் என்பவரின் மகள் ஆவார். இவர்களுக்கு, அனுராதா என்கிற மகளும், அஷ்வின் என்கிற மகனும் உள்ளனர். இவர்களில் அஷ்வின் தனது தந்தையின் தயாரிப்பில் ‘வேகம்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

விருதுகளும் மரியாதைகளும்

1991 – ‘கலைவாணர்’ பதக்கம்.
1993 – ‘கலைமாமணி’ பட்டம்.
மைலாப்பூர் அகாதமி மூலம் ‘சிறந்த நகைச்சுவையாளர்’ விருது.
விஸ்டன் பத்திரிக்கையின் மூலம் ‘சிறந்த நகைச்சுவையாளர்’ விருது.
நான்கு முறை ‘சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர்’ விருதை வென்றுள்ளார்.

அரசியல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதலால் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் நாள் அ.தி.மு.க-விலிருந்துவெளியேற்றப்பட்டார்.
பொதுவாக நாடகத்தில் இருந்து சினிமா துறைக்கு போகிறவர்கள், நாடகங்கள் நடிப்பதை குறைத்துக்கொள்வார்கள், ஆனால் இவர், சினிமாவில் நடித்தாலும், இடைவிடாமல் நாடகங்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சொல்லப்போனால், நாடகம் அவரைக் கலையுலகில் நிலைப்படுத்தியது எனலாம், சினிமா அவரை பெருமைப்படுத்தியது எனலாம். நாடகமாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, ரசிகர்களின் நகைச்சுவை ரசனையைப் புரிந்து, தன்னுடைய நடிப்பிலும், நாடகங்களிலும் அதை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

நன்றி -விக்கிபீடியா

வெள்ளி, 23 டிசம்பர், 2016

நடிகை நக்மா பிறந்த நாள் டிசம்பர் 25


நடிகை நக்மா பிறந்த நாள் டிசம்பர் 25 
நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார். இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவர். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர். இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

அரசியல் அவதாரம்
2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதில் போட்டியிட்டார்.

நடித்துள்ள திரைப்படங்கள்.

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1994 காதலன் ஸ்ருதி தமிழ் பிலிம்பேர் விருது
1995 பாட்சா பிரியா தமிழ்
1995 ரகசியப் போலிஸ் தமிழ்
1995 வில்லாதி வில்லன் ஜானகி தமிழ்
1996 லவ் பேர்ட்ஸ் தமிழ்
1996 மேட்டுக்குடி தமிழ்
1997 ஜானகிராமன் இந்து தமிழ்
1997 பெரிய தம்பி செல்வி தமிழ்
1997 பிஸ்தா வெண்ணிலா தமிழ்
1997 அரவிந்தன் தமிழ்
1998 வேட்டிய மடிச்சு கட்டு தமிழ்
2001 சிட்டிசன் சிபிஐ அதிகாரி தமிழ்
2001 தீனா குத்துப்பாடல் நடனக்காரியாக தமிழ்

வியாழன், 22 டிசம்பர், 2016

நடிகர் பி. ஜி. வெங்கடேசன் நினைவு தினம் டிசம்பர் 24, 1950 .


நடிகர் பி. ஜி. வெங்கடேசன் நினைவு தினம் டிசம்பர் 24, 1950 .

பி. ஜி. வெங்கடேசன் (அண். 1910 - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார். தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் (1931) கதாநாயகனாக நடித்தவர்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன். பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" எனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.

நடித்த திரைப்படங்கள்
காளிதாஸ் (1931)
பட்டினத்தார் (1936)
அம்பிகாபதி (1937)
தாயுமானவர் (1938)
ஜோதி (1939)
சகுந்தலை (1940)
சதி முரளி (திரைப்படம்) (1940)
திலோத்தமா (1940)
பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) (1940)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
வேதவதி (சீதா ஜனனம்) (1941)
சன்யாசி (1942)
மாயஜோதி (1942)
கங்காவதார் (1942)
பொன்னருவி (1947)
கங்கணம் (1947)
ஜம்பம் (1948)
ஞானசௌந்தரி (1948)
பிழைக்கும் வழி (1948)
கலியுகம் (1952)

பாடல்கள்

1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் விபவசுகுண தேவா, பிரம்மன் எழுத்தினால்,அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆகிய பாடல்களைப் பாடினார்.
1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே என்ற பாடலைப் பாடினார்.

மறைவு

பி. ஜி. வெங்கடேசன் தனது 40 ஆவது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்

நடிகை  பி.பானுமதி நினைவு தினம் டிசம்பர் 24 .

பி. பானுமதி (Paluvayi Bhanumathi Ramakrishna, பானுமதி இராமகிருஷ்ணா, 7 செப்டம்பர் 1925 – 24 டிசம்பர் 2005) பல மொழிகளில் நடித்த ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரின் பெரும்பாலான திரைப்படப் பங்களிப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அமைந்திருந்தன. திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக 2003ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார்.

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை
7 செம்படம்பர் 1925 அன்று ஆந்திராவில் உள்ள தோடவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் பானுமதி. அவர் சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன் முதல் படத்திலேயே தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.

திருமணம்
1943 ஆம் ஆண்டு கிருஷ்ண பிரேமா படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர், அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ. ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திரைப்படத் துறை
திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடிவெடுத்திருந்த நிலையில், பி. என். ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி. யூ. சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார். 1947இல் வெளிவந்த ரத்னமாலா பானுமதியும் அவர் கணவரும் இணைந்து தயாரித்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.[1] 1992 ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி', தமிழில் அவரது கடைசிப் படம்.

நடித்த திரைப்படங்கள்

சித்ரபகாவலி (1947)
தேவமனோகரி (1949)
நல்ல தம்பி (1949)
அபூர்வ சகோதரர்கள் (1949)
ரத்னகுமார் (1949)
காதல் (1952)
சண்டிராணி (1953)
மலைக்கள்ளன் (1954)
கள்வனின் காதலி (1955)
ரம்பையின் காதல் (1956)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
சதாரம் (1956)
தாய்க்குப்பின் தாரம் (1956)
ரங்கோன் ராதா (1956)
மக்களைப்பெற்ற மகராசி (1957)
அம்பிகாபதி (1957)
மணமகன் தேவை (1957)
மக்களைப்பெற்ற மகராசி (1957)
ராணி லலிதாங்கி (1957)
சாரங்கதாரா (1958)
நாடோடி மன்னன் (1958)
ராஜா தேசிங்கு (1960)
கானல் நீர் (1961)
அன்னை (1962)
அறிவாளி (1963)
கலை அரசி (1963)
சரசா பி.ஏ (1965)
பட்டத்து ராணி (1967)
பூவும் மொட்டும் (1968)
தாய் பிறந்தாள் (1974)
பத்து மாத பந்தம் (1974)
இப்படியும் ஒரு பெண் (1975)
மனமார வாழ்த்துங்கள் (1976)
கண்ணுக்கு மை எழுது (1986)
விருதுகள்[தொகு]
பத்மஸ்ரீ, 1966
பத்ம பூசண், 2003
தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

பெற்ற சிறப்புகள்

தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
இறப்பு
பானுமதி 2005 டிசம்பர் 24 சனிக்கிழமை இரவு காலமானார்.

நடிகர் வி. கே. ராமசாமி நினைவு தினம் டிசம்பர் 24, 2002.


நடிகர் வி. கே. ராமசாமி நினைவு தினம் டிசம்பர் 24, 2002.
வி. கே. ராமசாமி (பிறப்பு:1926 - இறப்பு: திசம்பர் 24, 2002) ஓர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவனாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.

1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த டி. ஆர். மகாலிங்கம், எம்.ஜி.யார், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், முத்துராமன்,கமலஹாசன், இரஜனிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். அவருடைய வாக்குநடை, அவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து அவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

பின்னாட்களில் 15 திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவரது கடைசிப் படம் டும் டும் டும் ஆகும்.

குடும்பம்
அவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.

விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது, 1970

நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
2001 டும் டும் டும் தமிழ் கங்காவின் தாத்தா
1997 அருணாச்சலம் தமிழ் கலியபெருமாள்
1997 மின்சார கனவு தமிழ்
1992 மன்னன் தமிழ் குஷ்புவின் தந்தை
1991 கோபுர வாசலிலே தமிழ்
1990 அதிசயப் பிறவி தமிழ் சித்ர குப்தா
1990 அஞ்சலி தமிழ்
1990 அரங்கேற்ற வேளை தமிழ் நம்பி அண்ணா
1989 புதிய பாதை தமிழ்
1989 ௭ன் புருஷன் தான் ௭னக்குமட்டுந்தான் தமிழ்
1989 வருஷம் 16 தமிழ் சின்ன தாத்தா
1988 தர்மத்தின் தலைவன் தமிழ்
1988 உன்னால் முடியும் தம்பி தமிழ்
1988 அக்னி நட்சத்திரம் தமிழ்
1987 வேலைக்காரன் தமிழ் வளையபதி
1987 ரெட்டை வால் குருவி தமிழ் மார்க்க பந்து
1987 அய்தம் மலையாளம்
1986 மௌன ராகம் தமிழ் சந்திரகுமாரின் பாஸ்
1985 ஆண்பாவம் தமிழ் ராமசாமி அண்ணன்
1985 பூவே பூச்சூடவா தமிழ் விஸ்வநாதன்
1985 உயர்ந்த உள்ளம் தமிழ் நாகபிள்ளை
1984 ௭னக்குள் ஒருவன் தமிழ் உலகநாத்
1984 ஜப்பானில் கல்யாண ராமன் தமிழ் சாமிக்கண்ணு
1982 ஆட்டோ ராஜா தமிழ்
1981 டிக் டிக் டிக் தமிழ் சாரதாவின் தந்தை
1979 அலாவுதீனும் அற்புத விளக்கும் தமிழ்
1979 கல்யாணராமன் தமிழ் கல்யாணம்
1978 ருத்ர தாண்டவம் தமிழ் கடவுள் சிவா
1977 மீனவ நண்பன் தமிழ் நாகராஜ்
1974 உரிமைக்குரல் தமிழ்
1974 ஜீசஸ் மலையாளம்
1972 பிள்ளையோ பிள்ளை தமிழ்
1972 சங்கே முழங்கு தமிழ் வரகசாமி
1972 வசந்த மாளிகை தமிழ்
1972 ராமன் தேடிய சீதை தமிழ் சிவசங்கர்
1972 திக்கு தெரியாத காட்டில் தமிழ் காவலர்
1971 சபதம் தமிழ் ரங்கயா
1971 குமரிக் கோட்டம் தமிழ் சோமு
1970 மாட்டுக்கார வேலன் தமிழ்
1968 டெல்லி மாப்பிள்ளை தமிழ் கடவுள் சிவா
1968 குடியிருந்த கோயில் தமிழ் ஜெயாவின் தந்தை ராவ் பாகவதர் சிங்காரம்
1967 ஊட்டி வரை உறவு தமிழ் சுந்தரத்தின் தந்தை
1967 பட்டணத்தில் பூதம் தமிழ் தங்கவேல்
1967 காவல்காரன் தமிழ் வைத்தியலிங்கம்
1964 புதிய பறவை தமிழ் ராமதுரை
1959 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தமிழ்
1959 வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் ௭ட்டயப்பன்
1959 நல்ல இடத்து சம்பந்தம்
1959 வாழவைத்த தெய்வம் தமிழ்
1958 பெரிய கோவில் தமிழ்
1958 தேடி வந்த செல்வம் தமிழ்
1956 வாழ்விலே ஒரு நாள் தமிழ்
1956 பாசவலை தமிழ்
1955 நல்லவன் தமிழ்
1952 மாப்பிள்ளை தமிழ்
1952 பணம் தமிழ் ௭ன் ௭ஸ் கிருஷ்ணன்
1952 பராசக்தி தமிழ் நாராயணன் பிள்ளை
1952 சின்ன துரை தமிழ்
1951 சர்வாதிகாரி தமிழ்
1951 சிங்காரி தமிழ்
1950 திகாம்பர சாமியார் தமிழ் வேலாயுத பிள்ளை
1949 நல்லதம்பி தமிழ்
1947 நாம் இருவர் தமிழ்