ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பாடகர் கண்டசாலா பிறந்த தினம் டிசம்பர் 4 .

பாடகர் கண்டசாலா பிறந்த தினம் டிசம்பர் 4 .

கண்டசாலா (Ghantasala Venkateswara
Rao, 4 டிசம்பர் 1922 – 11 பிப்ரவரி 1974)
தென்னிந்தியாவின் பிரபலமான
திரைப்படப் பின்னணிப்
பாடகர்களுள் ஒருவர். இவரது
முழுப்பெயர் கண்டசாலா
வேங்கடேஸ்வர ராவ். தெலுங்கு,
தமிழ் , கன்னடம் , மலையாளம், துளு
மற்றும் இந்தி மொழி
திரைப்படங்களில் பாடல்களைப்
பாடியுள்ளார். சில
திரைப்படங்களுக்கு
இசையமைத்திருக்கிறார்.
இளவயதுக் காலம்
1922-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ம் நாள்
கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா
தாலூக்காவிலுள்ள
சௌதப்பள்ளி என்னும் ஊரில்
கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ்
பிறந்தார். தந்தையார் பெயர்
சூரய்யா கண்டசாலா. தாயார்
பெயர் ரத்தம்மா.
தந்தையார் ஒரு பாடகர். நாராயண
தீர்த்தரின் தரங்கிணிகளைப்
பாடுவார். மிருதங்கமும்
வாசிப்பார். கண்டசாலா சிறு
பையனாக இருக்கும்போது
தந்தை மிருதங்கம் வாசிக்க, அந்தத்
தாளத்திற்கேற்ப நடனமாடுவார்.
இசைப் பயிற்சி
விசாகப்பட்டினத்தில் துவாரம்
வேங்கடசுவாமி நாயுடு
முதல்வராக இருந்த
இசைக்கல்லூரியில் இசை
பயின்றார். அங்கு ஆசிரியராக
இருந்த பி. சீதாராம சாஸ்திரி
அவருக்கு இசை
கற்றுக்கொடுத்தார். (இவர்
பின்னாளில் கண்டசாலா
திரைப்படங்களில் பாடிய
காலத்திலும் உதவியாக
இருந்தார்.) [2]
பாடகர்/
இசையமைப்பாளர்
அனைத்திந்திய வானொலியில்
இவர் பாடிவந்தார். பின்னர் ஹெச்.
எம். வி. இசைத்தட்டுக்
கம்பெனிக்காகச் சில பாடல்கள்
பாடினார். அதனையடுத்து 1944-
ஆம் ஆண்டு வெளியான சீதா ராம
ஜனனம் என்ற படத்தில் ஒரு சிறு
வேடத்தில் நடித்தார். அப்போது
இசையமைப்பாளர் சி. ஆர்.
சுப்பாராமன் போன்றோருடன்
தொடர்பு ஏற்பட்டது.
அதனையடுத்து திரைப்படங்களில்
பின்னணி பாடிவந்தார்.
முதன்முதலாக லக்ஸ்மம்மா என்ற
திரைப்படத்திற்கு
இசையமைத்தார்.
இசையமைத்த
தமிழ்த்
திரைப்படங்கள்
1. மாயக்குதிரை (1949)
தெலுங்கிலிருந்து தமிழுக்கு
மொழிமாற்றம் செய்யப்பட்டது.
2. பாதாள பைரவி (1951)
3. நிரபராதி (1951) இணை
இசையமைப்பாளர் ஹெச். ஆர்.
பத்மநாப சாஸ்திரி
4. கல்யாணம் பண்ணிப்பார் (1952)
இணை இசையமைப்பாளர் மாஸ்டர்
வேணு
5. பரோபகாரம் (1953)
6. சந்திரகாரம் (1954)
7. குணசுந்தரி (1955)
8. கள்வனின் காதலி (1955) இணை
இசையமைப்பாளர் ஜி.
கோவிந்தராஜுலு நாயுடு
9. அமரகீதம் (1956) (சிரஞ்சீவுலு
தெலுங்கு படத்தின் தமிழாக்கம்)
10. மாயா பஜார் (1957) இணை
இசையமைப்பாளர் எஸ்.
ராஜேஸ்வரராவ்
11. பாலநாகம்மா (1959)
தெலுங்கிலிருந்து தமிழுக்கு
மொழிமாற்றம் செய்யப்பட்டது.
12. சபாஷ் ராமு (1959)
தெலுங்கிலிருந்து தமிழுக்கு
மொழிமாற்றம் செய்யப்பட்டது.
13. வாழ்க்கை ஒப்பந்தம் (1959)
14. மனிதன் மாறவில்லை (1962)
15. லவ குசா (1963) (பின்னணி
வாத்திய இசை) (பாடல்கள் இசை:
கே. வி. மகாதேவன்
பாடல்கள்
இடம்பெற்ற தமிழ்த்
திரைப்படங்கள்
1. பாதாள பைரவி (1951)
2. காதல் (1952)
3. தேவதாஸ் (1953)
4. சண்டி ராணி (1953)
5. கல்யாணம் பண்ணியும்
பிரம்மசாரி (1954)
6. புது யுகம் (1954)
7. குண சுந்தரி (1955)
8. கள்வனின் காதலி (1955)
9. அனார்கலி (1955)
10. நாட்டிய தாரா (1955)
11. எல்லாம் இன்ப மயம் (1955)
12. அலிபாபாவும் 40
திருடர்களும் (1956)
13. தெனாலி ராமன் (1956)
14. சம்பூர்ண இராமாயணம் (1956)
15. பிரேம பாசம் (1956)
16. அமர தீபம் (1956)
17. யார் பையன் (1957)
18. மணமகன் தேவை (1957)
19. மகலநாட்டு மேரி (1957)
20. மணாளனே மங்கையின்
பாக்கியம் (1957)
21. மாயா பஜார் (1957)
22. எங்க வீட்டு மகாலட்சுமி (1957)
23. பலே ராமன் (1957)
24. கலைவாணன் (1959)
25. மஞ்சள் மகிமை (1959)
26. அன்பு சகோதர்கள் (1973)
பெற்ற
விருதுகளும்,
சிறப்புகளும்
மறைவு
கண்டசாலா 11 பிப்ரவரி 1974 அன்று
காலமானார் .
சென்னையிலுள்ள
மருத்துவமனை ஒன்றில்
மாரடைப்பால் காலமாவதற்கு
முதல்நாள், ஆவணப் படம்
ஒன்றிற்காக மருத்துவமனைப்
படுக்கையிலிருந்தபடியே அவர்
பாட, ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

***********************************

Interview With Ghantasala - Cine Play Back
Sing
வந்தாரை வாழ வைக்கும் நம்
தமிழகம் திறமை பெற்றவர்கள்
எங்கிருந்தாலும், எந்தத்துறையில்
இருந்தாலும் தேடிப்பிடித்து
அவர்களைப் புகழேணியின்
உச்சிக்குக் கொண்டு செல்வார்கள்
என்பதற்கு சரியான ஓர்
எடுத்துக்காட்டு “கண்டசாலா”
என்றழைக்கப்படும் கண்டசாலா
வெங்கடேஸ்வரராவ் ஆகும். நம் தமிழ்
மாநிலத்தின் அண்டை
மாநிலமாகிய ஆந்திரப்
பிரதேசத்தின் திரைப்படப் பின்னணி
வரலாற்றில் கொடிகட்டிப் பறந்த
கண்டசாலா அவர்கள் 1973 வரை தமிழ்,
தெலுங்கு, மலையாளம்,
கன்னடப்படங்களில் பின்னணி பாடி
ரசிகப்பெருமக்களை வெகுவாக
ஈர்த்திருக்கிறார்.
ஆந்திரா மாநிலத்திலுள்ள
குடிவாடா மாவட்டத்தில்
அமைந்திருக்கும் சௌட்டா பள்ளி
என்ற சிற்றூரில் வறுமை மிக்க
பிராமணக் குடும்பம் ஒன்றில்
04.12.1922 அன்று பிறந்தார். சிறு
வயதிலேயே தமது தந்தை சூரய்யா
அவர்களை இழந்த கண்டசாலாவுக்கு
அவரது தாய்மாமா ரய்யாளி பிச்சி
ராமய்யாவின் ஆதரவு கிடைத்தது.
தந்தை உயிருடன் இருக்கும் போதே
“தரங்கங்கள்“ என்று சொல்லக்கூடிய
ஒரு வகை இசையமைப்பில் நடனம்
ஆடியும் ஹரிகதா
காலட்சேபங்களில் அவருடன்
பங்கேற்றும், இருக்கிறார்.
பிற்காலத்தில் தான் ஒரு இசைக்
கலைஞனாக ஆகியே தீர வேண்டும்
என்ற வெறி இவரின் ஆழ் மனத்தில்
பதிந்து விட்டிருந்தபடியால்
யாருக்கும் தெரியாமல் பத்ரயானி
சீதாராம சாஸ்திரியிடம் இசை
கற்றுக் கொண்டது போக, மேலும்
தடங்கல்கள் பலவற்றைக் கடந்து
விஜயநகரம் சென்று
இசைக்கலையில் தேர்ந்து “சங்கீத
வித்வான்“ பட்டத்தைப் பெற்றார்.
1942-ல் “வெள்ளையனே
வெளியேறு“ (Q U IT IN D IA M O V E M
E N T) என்ற இந்திய சுதந்திரப்
போராட்டத்தில் கண்டசாலா அவர்கள்
ஈடுபட்டு 18 மாதகாலம் சிறைவாசம்
அனுபவித்திருக்கிறார்.
சிறையிலிருந்து வெளியேறிய
பின் சீனியர் சமுத்ராலா
ராகவாச்சார்யாவின் நட்பு
கிடைத்ததால் திரைப்படங்களில்
பின்னணி பாடும் வாய்ப்பைப் பெற
எண்ணினார். புகழ்பெற்ற
இசைத்தட்டு நிறுவனமாகிய
ஹெச்.எம்.வி. (H.. M .V ) முதலில்
இவரை நிராகரித்து விட்டது.
ஆனாலும் இவர் மனம் கோணாமல்
அகில இந்திய வானொலியில்
பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
பிறகு அதே ஹெச்.எம்.வி.
நிறுவனம், பெக்கட்டி சிவராம்
அவர்களைக் கொண்டு
கண்டசாலாவுக்குத் தனிப் பாடல்கள்
பாடும் வாய்ப்பை பெற்றார். பிரதீபா
பிலிம்ஸ் என்ற திரைப்பட
நிறுவனத்தில் சேர்ந்து சீதாராம
ஜனனம் படத்தில் "கோரஸ்" குழுவில்
பாடியது மட்டுமின்றி அப்படத்தில்
ஒரு சிறு பாத்திரம் ஏற்று
நடித்தார். (பிரபல கதாநாயகன் ஏ,
நாகேஸ்வரராவ் நடித்த படம்) இவர்
தனியாகப் பின்னணி பாடிய முதல்
பாடல் “சொர்க்க சீமா“ வாகும்.
இப்படத்திற்கு சித்தூர் வி. நாகய்யா
இசையமைத்திருந்தார். நாகய்யா
அவர்கள் ஒரு தலைசிறந்த பன்முகம்
கொண்ட குணச்சித்திர நடிகரும்
கூட.
கண்டசாலா அவர்கள் சுமார் நூறு
படங்களுக்கும் மேலாக
இசையமைத்திருக்கிறார்.
தெலுங்கு திரைப்பட
கதாநாயகர்கள் எல்லோருக்கும்
பின்னணி பாடிய பெருமையை
பெற்றவர் இவர் ஒருவரே.
தனிப்பாடல்கள் பாடியதில்
புகழ்பெற்ற இவர் தெய்வபக்தி
மிகுந்த பாடல்களையும் பாடி
மேலும் புகழ் அடைந்திருக்கிறார்.
கண்டசாலாவை போற்றும்
வகையில் அவர் அமெரிக்கா சென்ற
சமயம் தங்கத்தினாலான இசைத்தட்டு
(G o ld e n D isc) ஒன்று அவருக்குப்
பரிசாக வழங்கப்பட்டதை
அமெரிக்காவில் உள்ள கோயில்
ஒன்றிற்கு தானமாக
வழங்கிவிட்டார். அமெரிக்கா,
இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற
நாடுகளுக்கு விஜயம் செய்து
அங்கு இன்னிசை நிகழ்ச்சிகள்
நடத்தியது மட்டுமின்றி ஐக்கிய
நாடுகள் சபையில் பாடும் அரிய
வாய்ப்பினையும் கண்டசாலா
பெற்றிருக்கிறார்.
கண்டசாலா அவர்கள் 25 ஆண்டுகாலம்
திரைஇசை உலகத்திற்கு சேவை
செய்த்தற்காக ஆந்திர மாநிலம்
இவரை கௌரவித்திருக்கிறது.
1974-ல் கண்டசாலா அவர்கள் தான்
இறப்பதற்கு முன் பாடிய
“பகவத்கீதை” இவரை
அழியாப்புகழுக்கு உயர்த்திச்
சென்றுள்ளது எனலாம். இதுவே
அவர் ரசிகப் பெருமக்களுக்கு
அளித்த இசைப் பொக்கிஷம் என்றும்
கூறலாம்.
இந்திய அரசு கண்டசாலா
அவர்களை கௌரவிக்கும் வகையில்
மத்திய அரசின் உயரிய விருதான
“பத்மஸ்ரீ“ பட்டத்தை அளித்துள்ளது.
திருப்பதி - திருமலை
தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான
வித்வானாக கண்டசாலா அவர்கள்
கௌரவிக்கப்பட்டார். தெலுங்குத்
திரைப்பட இசை உலகில் முடிசூடா
மன்னராகத் திகழ்ந்த இவர் இந்திப் பட
உலகில் பிரசித்தி பெற்ற பாடகர்
முகம்மது ரஃபி யோடு
ஒப்பிடப்பட்டவர். கனத்த சாரீரம்
உடையவராயிருந்தும், தன் கவர்ச்சிக்
குரலால் யாவரையும்
கவர்ந்தவராகக் கருதப்பட்டார்.
தெலுங்கு திரைப்படக்
கதாநாயகனாகப் புகழ் பெற்ற ஏ.
நாகேஸ்வரராவ் அவர்கள் நடித்த
தேவதாஸ் படத்தின் பாடல்கள்
(தெலுங்கிலும், தமிழிலும்)
இவரால் பாடப்பட்டு இன்று வரை
மக்களால் சாகாவரம் பெற்று
கேட்கப்பட்டு வருகின்றது. அவர்
பாடிய சில சிரஞ்சீவித்துவம் பெற்ற
பாடல்களில் சிலவற்றை கீழே
காணலாம்.
வரிசை எண் பாடல்
பாடியோர்
1. அமைதியில்லாதென் மனமே
பாதாளபைரவி
2. சந்தோஷம் தரும் சவாரி
போவோம் தேவதாஸ்
3. துணிந்தபின் மனமே துயரங்
கொள்ளாதே தேவதாஸ்
4. கனவிதுதான் நிஜமிதுதான்
தேவதாஸ்
5. உறவுமில்லை
பகையுமில்லை
தேவதாஸ்
6. உலகே மாயம் வாழ்வே மாயம்
தேவதாஸ்
7. ஆஹா இன்பநிலாவினிலே
மாயாபஜார்
8. ஆகாய வீதியில் அழகான
வெண்ணிலா மஞ்சள் மகிமை
9. சுயநலம் பெரிதா பொது நலம்
பெரிதா பொது நலம் பெரிதா
யார் பையன்?
10. உல்லாச உலகம் உனக்கே
சொந்தம் அலிபாபவும்40
திருடர்களும்.
11. ஓ! தேவதாஸ் ஓ! பார்வதி
தேவதாஸ் (டூயட் பாட்டு)
12. குண்டு போட்ட ரிவால்வார்
படார் மாமியாரும் ஒரு
வீட்டு மருமகளே (சோலோ)
13. தேசுலாவதே தேன்
மலராலே மணாளனே
மங்கையின் பாக்கியம் டூயட் பாட்டு
14. முத்துக்கு முத்தாக
அன்புச் சகோதரர்கள்
(சோலோ)
15. என்ன தான் உன்
பிரேமையோ பாதாள
பைரவி (டூயட் பாட்டு)
16. காதலே தெய்வீகக் காதலே
பாதாள பைரவி (டூயட்
பாட்டு)
17. ஓஹோ வெண்ணிலாவே
பிரேமபாசம் (டூயட்
பாட்டு)
18. வான் மீதிலே இன்பத்தேன்
வந்து பாயுதே சண்டி ராணி
(டூயட் பாட்டு)
19. மதன மனோகர….. ராஜசேகரா
மோடி செய்யலாகுமா அனார்கலி
(டூயட் பாட்டு)
20. கனிந்த….காதல்யுவ
அனார்கலி அனார்கலி
21. நீதானா என்னை அழைத்தது
மாயாபஜார் (டூயட்
பாட்டு)
22. ஆஹா இன்பநிலாவினிலே
மாயாபஜார் (டூயட்
பாட்டு)
பிரபல (பன்மொழி) திரைப்படத்
தயாரிப்பாளர்களான பி.
நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோர்
தயாரித்து கே.வி. ரெட்டி இயக்கிய
பாதாள பைரவி என்ற திரைப்படம்
இவரைப் புகழின் உச்சிக்கு
கொண்டு சென்றது. கண்டசாலா
அவர்கள் லவகுசா திரைப்படத்திற்கு
இசையமைத்ததே ஒரு தனிக்கதை.
இதில் சுவையான விஷயம்
என்னவென்றால் முதன் முதலில்
லவகுசா திரைப்படத்திற்கு
இசையமைப்பதற்கு ஒப்புக்
கொண்டவர் இசையமைப்பாளர்
"பெண்டியாலா" நாகேஸ்வரராவ்
ஆவார். அவர் லவகுசா
திரைப்படத்திற்காக கேட்ட சம்பளத்
தொகை மிக அதிகமாக இருக்கவே
அந்த வாய்ப்பை லவகுசா திரைப்பட
தயாரிப்பாளர்கள் கண்டசாலாவுக்கு
வழங்கினார்கள். லவகுசாவின்
பாடல்கள் பிரபலமான பிறகு
அவ்வெற்றியைப்பற்றிக் கேள்விப்
பட்ட பெண்டியாலா மிகவும்
பெருந்தன்மையுடன்
கண்டசாவுக்கு தான் நிகரல்ல என்று
ஒப்புக் கொண்டு கூறியது
மட்டுமின்றி அப்படத்தின் பாடல்களில்
"தெய்வீகத்தன்மை" உணரப்பட்டதாக
பெருந்தன்மையுடன் கூறினார்.
திரைப்படங்களுக்கு
இசையமைத்தது மட்டுமில்லாமல்
பகவத்கீதை, புஷ்ப விலபம், குண்ட்டி
குமாரி, கோகோஷா மற்றும்
திருவேங்கடமுடையானைப் பற்றிய
நிறைய தெய்வபக்திப்
பாடல்களுக்கு இசையமைத்தும்
தேசபக்திப் பாடல்கள்,
இந்தியவிடுதலை இயக்கத்திற்கான
பாடல்களுக்கும்
இசையமைத்துள்ளார்.
சிறந்த திரைப்பட
இசையமைப்பாளர்களாக
கருதப்பெற்ற பெண்டியாலா
நாகேஸ்வரராவ், எஸ்.
ராஜேஸ்வரராவ், நௌஷாத், எஸ்.டி.
பர்மன் போன்றோருக்கு இணையாக
கண்டசாலா அவர்கள் பேசப்பட்டார்.
தனிப்பாடல்களில் அவர் பாடிய “ஏடு
கொண்டலவாடா“, காளஹஸ்தி
மஹாத்மியப் படத்தில் "மகேச
பாபவினாஸ" என்ற பாடலும்
பூகைலாஸ் என்ற படத்தில் வரும்
பாடல்களான "தகுணா", "வரமீயா"
போன்றவற்றை யாரால் இன்று மறக்க
இயலும்?. மறுக்க இயலும்?
"ஜெகதேக வீருனா கதா" படத்தில்
இடம் பெற்ற "சிவசங்கரி சிவானந்த
லஹரி" என்ற பாடல், ஜெயபேரி
படத்தில் வரும் "ரஸிகராஜ" என்ற
பாடலும், பக்த ஜெயதேவா படத்தில்
இடம் பெற்றுள்ள "அஷ்டபதி"
பாடல்களும் பிரசித்தி
பெற்றவையாகும்.
பிரபல பெண் பாடகி
"கோகிலாவாணி" திருமதி பி.
சுசிலாவுடன் அவர் பாடிய
பாடல்களான உய்யால ஜம்பால என்ற
படத்தில் வரும் "கொண்டகாலி
திரிகிந்தி ", இடுஜோரு என்ற
படத்தில் வரும் பாடல்களான "இதேமி
லாஹிரி இதேமி காரதி", மாங்கல்ய
பலம் படத்தில் "வாடினபுலே
விகாசிஞ்சலே" என்ற பாடலும்,
பார்யா பர்த்தலு படத்தில் "மதுரம்
மதுரம் ஈ சமயம்" போன்ற பாடல்கள்
என்றும் கண்டசாலாவின் புகழைக்
கூறிக்கொண்டேயிருக்கும் தென்
இந்திய திரைப்படப் பின்னணிப்
பாடகர்களில் ஏ.எம். ராஜா, டி.எம்.
சவுந்திரராஜன், பீ.பி. சீனிவாஸ்,
யேசுதாஸ், எஸ். பி.
பாலசுப்பிரமண்யம் ஆகியோரும்
ஹிந்தி திரைப்பட உலகின் பிரபல
திரைப்பட பின்னணிப் பாடகர்களான
ஸைகால், மன்னாடே, தலத்
முகம்மது, ஹேமந்த் குமார்,
முகம்மது ரஃபி, முகேஷ்,
கிஷோர்குமார், போன்றோர் தன்
பாணியில் ஓர் தனி இடத்தைப்
பெற்றிருந்தாலும் கண்டசாலா
அவர்களின் குரலுக்கு
ஒப்பிடும்போது நிச்சயம்
அவரைப்போல் ஆக முடியாது
என்று அடித்துச் சொல்லலாம். அந்த
அளவுக்குக் குரல் வளம், சாரீரம்,
வேண்டிய சமயத்தில்
மென்மையானக் குரலை (Melody)
வெளிப்படுத்தும் திறமை
ஆகியவற்றைப் பெற்ற சிறந்த
பாடகராகத் திகழ்ந்தார் எனலாம்.
இவர்களில் ஹேமந்த் குமார், ஏ.எம்.
ராஜா, எஸ்.பி.பாலசுப்ரமண்யம், சில
படங்களுக்கு
இசையமைத்திருந்தாலும்
கண்டசாலா அவர்களின்
இசையமைப்பிற்கு எதுவும்
ஈடாகாது என்று உறுதியாகச்
கொள்ளலாம்.
ஆந்திர மாநிலம் கண்டசாலாவைப்
போற்றும் வகையில் அவர் பிறந்த
நாளான்று அவர் தபால் தலையை
மத்திய அரசு மூலம் 11-02-2003 அன்று
வெளியிட்டது. இசைப்போட்டிகள்
அவர் பெயரால் ஒவ்வொரு ஆண்டும்
அங்கு நடத்தப்பட்டு அதன் மூலம்
இசைக்கலைஞர்கள் புதிதாக
அறிமுகம் செய்யப்பட்டு
வருகின்றனர். ஒவ்வொரு வருடமும்
டிசம்பர் நான்காம் தேதி முதல்
பிப்ரவரி பதினொன்றாம் தேதி
வரை ஆந்திராவில் உள்ள அனைத்து
வானொலி நிலையங்களும்
தொலைக்காட்சியும் இந்த இரு
நாட்களுக்கு அவர் பாடிய
பாடல்களை மட்டும் ஒலிபரப்பியும்,
ஒளிபரப்பியும் வந்தன. சமீபத்தில்
ஆந்திரா வானொலி நிலையம் அவர்
பாடிய பாடல்கள் ஒலிபரப்புவதை
நிறுத்தி வைத்திருக்கிறது, இது
ஏனோ தெரியவில்லை! திரைப்படப்
பின்னணிப் பாடகர் எஸ்.பி.
பாலசுப்பிரமணியம்
கண்டசாலாவின் பெருமையை உலக
மக்கள் யாவரும் அறியும் வண்ணம்
அவரின் வெண்கலச்சிலை ஒன்றை
ஹைதராபாத்தில் உள்ள
ரவிந்திரபாரதி என்ற இடத்தில் தனது
25 வயது திரைஇசைஉலகப்
பிரவேசத்தைச் குறிக்கும்
வகையில் நிறுவியுள்ளார் என்பது
விசேஷமாக குறிப்பிட வேண்டிய
ஒன்று.
குடும்பம்:
கண்டசாலா அவர்களுக்கு
சாவித்திரி, சரளா தேவி என்ற இரு
மனைவிகள் உண்டு. குழந்தைகள்
எட்டு பேர். அவர்களில் முறையே:
(ஆண்கள்): விஜயகுமார், ரவி குமார்
( தன் தந்தை கண்டசாலாவைப் பற்றி
மேற்கண்ட விவரங்களையளித்தவர்),
சங்கர் குமார், ரத்ன குமார்.
(பெண்கள்):மீரா, சியாமளா,
சுகுணா,சாரதா ஆகியோர் ஆவர்.
இவர்களில் மூத்தவரான
விஜயகுமார் தற்போது உயிருடன்
இல்லை. ரவிகுமார் ஒலிப்பதிவு
பொறியாளராக இருக்கிறார்.
சங்கர்குமார் சமையற்கலையில் பட்டம்
பெற்று (CATERING TECHNOLOGY)
தற்போது அமெரிக்காவில் பணி
புரிந்து வருகிறார். ரத்னகுமார்
சென்னை திரைப்படக் கல்லூரியில்
படித்து திரைப்படங்களுக்கு
“டப்பிங்“ பேசும் கலைஞராகப் பணி
புரிந்து வருகிறார். இவர் ஆந்திரா
மாநில அரசின் உயரிய விருதான
“நந்தி“ விருதினைப்
பெற்றவராவார்.
பத்திரிகைகளின் பாராட்டு:
"ஹிந்து" பத்திரிகை நாளிதழ்,
கண்டசாலாவின் பெருமைகளைக்
கூறும் வகையில் 11-02-2003 அன்று
ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அதில் அவருடைய இசை
மேதைத்திறன், அவரின் மிடுக்கான
குரல்வளம் மற்றவர்களின் பார்வை
இவர் மேல் விழும் அளவுக்கு
உயர்ந்திருந்தது. சுமார் 30
ஆண்டுகளுக்கும் மேலாக
தெலுங்கு மற்றும் இதர
மொழிப்படங்களில் கோலோச்சிய
ஒரே நபர் கண்டசாலா அவர்தான்
என்று புகழாரம் செய்ததுள்ளது.
பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த
இசையமைப்பாளரான
கண்டசாலாவின் தபால் தலை 2003ம்
ஆண்டில் வெளியிடப்பட்டது.
“இந்தியன் எக்ஸ்பிரஸ்“ பத்திரிகை
நாளிதழ் 14-02-1974 –ல் வெளியிட்ட
செய்தியில் கண்டசாலா சிறந்த
பாடகர் மட்டுமல்ல; ஒர் அருமையான
உண்மைக் கவிஞராகும் என்று
அவரைப்
பெருமைப்படுத்தியுள்ளது,
காதலின் ஆழ்ந்த உணர்வுகள்,
கருணை, இரக்கம், சந்தோஷம், கவலை,
சாதுத்தன்மை போன்றவற்றை மிக
லாவகமாகத் தான் பாடிய
பாடல்களின் மூலம் வெளிக்காட்டும்
திறமை படைத்தவர் என்று
பாராட்டியுள்ளது.
கண்டசாலா இசையமைத்த
படங்களின் பட்டியல்
அலிபாபா 40 தொங்கலு 1970
தல்லி தன்றுலு 1970
ரகஸ்யம் 1967
பரமானந்தய்ய சிஷ்யலு கதா 1966
C..I.D 1965
குடிகொண்டலு 1965
பாண்டவ வன வாசம் 1965
வீர கேசரி 1963
லவ-குசா 1963
ரக்த சம்பந்தம் 1962
குண்டம்மா கதா 1962
சதி சுலோச்சனா 1961
சபாஷ் ராஜா 1961
பக்த ரகுநாத் 1960
தீபாவளி 1960
சாந்தி நிவாஸம் 1960
பெள்ளி சந்தடி 1959
சபாஷ் ராமுடு 1959
மஞ்சி மனசுகு மஞ்சி ரோஜீலு
1958
பெள்ளி நாட்டி பிரமானாலு 1958
மாயா பஜார் 1957
பலே பாவா 1957
சாரங்கதாரா 1957
விநாயக சதுர்த்தி 1957
சிரஞ்சீவுலு 1956
ஜெயம் மனதே 1956
கனகதாரா 1956
கன்யாசுல்கம் 1955
வதினகாரி காஜுலு 1955
சந்திர ஹாரம் 1954
ப்ரதுகு தீரெவு 1953
பள்ளுளட்டுரு 1952
பெள்ளி சேஸி சூடு 1952
பாதாள பைரவி 1951
நிர்தோஷி 1951
சௌகார் 1950
வாலி சூக்ரீவா 1950
மன தேஸம் 1949
கீலு குர்ரம் 1949
கண்டசாலா அவர்கள் பின்னணி
பாடியதில் பிரபலமான
திரைப்படங்கள்:
தேவதாஸீ
ஆத்மபலம்
பங்காரு பாபு 1973
பக்த துக்காராம் 1973
படிபந்துலு 1972
ஜீவித சக்ரம் 1971
பிரேம நகர் 1971
பாந்தவ்யாலு 1968
மஞ்சி குடும்பம் 1965
ஸ்ரீசிம்ஹாசல ஷேத்ர மஹிமா 1965
டாக்டர் சக்ரவர்த்தி 1964
தேவதா 1964
மூகமனசுலு 1963
ஆராதனா 1962
பீஷ்மா 1962
மஞ்சி மனசுலு 1963
பக்த ஜெய தேவா 1961
இத்தரு மித்ரலு 1961
ஜெக தெக வீருனி கதா 1961
மஹாகவி காளிதாசு 1960
ஸ்ரீவெங்கடேஸ்வர மஹாத்மியம் 1960
இல்லரீகம் 1959
ஜெயபேரி 1959
அப்புசேஸி பப்பு கூடு 1958
பாண்டுரங்க மஹாத்யமம் 1957
தோடி கோடல்லு 1957
கன்யா சுல்கம் 1955
தொங்க ராமுடு 1955
தனி ஆல்பங்களில் பாடியது
கண்டசாலா அவர்கள் தனிப்பாடல்கள்
பாடி இசைத் தொகுப்பாக வெளி
வந்ததில்
1. புஷ்ப விலபம்
2. தேசப்பற்றுப் பாடல்கள்
3. பகவத் கீதா
4. தெய்வ பக்திப் பாடல்கள்
ஆகியவை அடங்கும்.
கண்டசாலா அவர்கள் தென்னிந்திய
திரைப்பட இசைக் கலைஞர்களுக்கு
உதவும் வகையில் பிரபல
(பன்மொழி) திரைப்பட
இசையமைப்பாளர் அமரர் எம்.பி.
சீனிவாசன் அவர்களோடு சேர்ந்து
திரைப்பட இசைக்கலைஞர்கள்
சங்கத்தைத் தோற்றுவிப்பதற்கு
முக்கிய காரணமாய் விளங்கினார்.
கண்டசாலா அவர்கள் அச்சங்கத்தின்
முதல் தலைவராக இருந்தார். எம்.பி.
சீனிவாசன் அவர்கள் அச்சங்கத்தின்
முதல் செயலாளராகப்
பணியாற்றினார்.
கண்டசாலா அவர்கள் தான் தயாரித்த
மூன்று திரைப்படங்களில் “பக்த
ரகுநாத்” அவருக்கு நிறைய
புகழையும், செல்வங்களையும்
அள்ளித்தந்தது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம்
இவரைக் கௌரவித்து “ஆஸ்தான
வித்வானாக” ஆக்கியது.
தான் ஒரு சிறந்த பாடகராக
இருந்தாலும் தனக்குப் பிடித்த
பாடகர்களாக பிரபைல கர்நாடக
இசைக் கலைஞர்கள் எம்.
பாலமுரளிகிருஷ்ணா, கே.ஜே.
யேசுதாஸ் ஆகியோரைக்
குறிப்பிட்டிருக்கிறார். இளைய
தலைமுறைப் பின்னணிப்
பாடகர்களை ஆதரித்தது
மட்டுமில்லாமல் அவர்களை
உற்சாகப்படுத்தும் வகையில்
மேலும் ஊக்குவித்திருக்கிறார்..
கண்டசாலா அவர்கள் தமது 52-ம்
வயதில் 11-02-1974 அன்று
காலமானார். அன்னாரது
பூதவுடல் ஒரு பெரிய லாரியில்
ஏற்றப்பட்டு கண்ணம்மாபேட்டை
மயானத்திற்குக் கொண்டு
செல்லப்பட்டது. அவர் குரல்
வளத்திற்கு மயங்கிய ரசிகப் பெரு
மக்களின் கூட்டம் அலை
மோதியதால் இந்த ஏற்பாடு. அவர்
வாழ்ந்த தியாகராயநகர் பகுதியில்
அமைந்திருக்கும் வடக்கு உஸ்மான்
சாலையிலிருந்து திரண்ட
பல்லாயிரக்கணக்கான மக்களின்
எண்ணிக்கை மயானம் வரைக்கும்
அவருக்கு மரியாதை செலுத்தும்
வகையில் சென்று அஞ்சலி
செலுத்தியதைக் கருத்தில்
கொண்டால் “தோன்றிற் புகழோடு
தோன்றுக“ என்று வள்ளுவப்
பெருமானின் குறளுக்கேற்ப
வாழ்ந்து மறைந்து ஒரு தனி
சரித்திரம் படைத்தார் என்று
கண்டசாலாவக் கூறலாம்.
குறிப்பு இசைத்தட்டு வடிவில்
“தங்கத்தட்டு“ (Golden Disc) பரிசாகப்
பெறுபவர்களுக்கு “ராயல்டி“
தொகை உரிய முறையில்
தரப்படுவது வழக்கம். கண்டசாலா
அவர்கள் அத்தகைய பெருமையைப்
பெற்றவராவார் என்பது
குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக