வெள்ளி, 23 டிசம்பர், 2016

நடிகை நக்மா பிறந்த நாள் டிசம்பர் 25


நடிகை நக்மா பிறந்த நாள் டிசம்பர் 25 
நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார். இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவர். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர். இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

அரசியல் அவதாரம்
2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதில் போட்டியிட்டார்.

நடித்துள்ள திரைப்படங்கள்.

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1994 காதலன் ஸ்ருதி தமிழ் பிலிம்பேர் விருது
1995 பாட்சா பிரியா தமிழ்
1995 ரகசியப் போலிஸ் தமிழ்
1995 வில்லாதி வில்லன் ஜானகி தமிழ்
1996 லவ் பேர்ட்ஸ் தமிழ்
1996 மேட்டுக்குடி தமிழ்
1997 ஜானகிராமன் இந்து தமிழ்
1997 பெரிய தம்பி செல்வி தமிழ்
1997 பிஸ்தா வெண்ணிலா தமிழ்
1997 அரவிந்தன் தமிழ்
1998 வேட்டிய மடிச்சு கட்டு தமிழ்
2001 சிட்டிசன் சிபிஐ அதிகாரி தமிழ்
2001 தீனா குத்துப்பாடல் நடனக்காரியாக தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக