நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாள் டிசம்பர் 2.
சில்க் ஸ்மிதா ( தெலுங்கு: 'సిల్క్' స్మిత
(2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996)
என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை
ஆவார். 1970களில் ஒரு ஒப்பனைக்
கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத்
தொடங்கினார். சில்க் ஸ்மிதா
தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால்
வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில்
சிலுக்கு என்கிற சாராயக்கடையில்
பணிபுரியும் பெண்
கதாபாத்திரத்தில் முதன்முறையாக
நடித்தார். அந்தப் பெயரே இவருக்கு
சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட
சினிமா வாழ்க்கையில் தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில்
450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
நடித்தார்.
வாழ்க்கை வரலாறு
இந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு
என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி.
பிறப்பால் ஆந்திரமாநிலத்தை
சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ்
நாட்டின் கரூர் ஆகும். இவர் வறுமையின்
காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம்
வகுப்போடு நிறுத்திக்கொள்ள
வேண்டியதாயிற்று. இவரது வசீகர
தோற்றத்தின் காரணமாக பலரது
தொல்லைகளுக்கு ஆளானார்.
இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு
சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர்.
இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட
துன்பத்தின் காரணமாக இவர்
சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது
வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது
உறவினர் வீட்டில் தங்கினார்.
திரைத்துறை வாழ்க்கை
இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை
இரண்டாம் நிலை நடிக நடிகைகளுக்கான
ஒப்பனை கலைஞராக
தொடங்கினார். பின் தமிழ்
நடிகரும் இயக்குனருமான
வினுச்சக்ரவர்த்தியின் மூலம்
வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ்
திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு
கதாபாத்திரத்தில் நடிக்க
ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் இவரை
ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில்
அறிமுகப்படுத்தினார்.
வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு
ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில்
சில்க் வேறு ஒருவரிடம் நடனமும்
கற்றுகொண்டார்.
வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது
கதாபாத்திரமான சில்க் என்கிற
பெயரும் ஸ்மிதா என்கிற
பெயரும் இணைந்து இவரது அடையாளம்
ஆயின.
பின்னர், ஸ்மிதா "இணையே தேடி" என்கிற
திரைப்படம் மூலம் 1979இல் மலையாள
திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.
வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் கிடைத்த
வெற்றியினால் ஸ்மிதா புகழின்
உச்சத்துக்கே சென்றார். அந்த
படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின்
தாக்கத்தின் காரணமாக அவரால்
வேறு விதமான வித்தியாசமான
கதாபாத்திரங்களை எளிதாகப்
பெறமுடியவில்லை. பின்னர்
தெலுங்கு, மலையாளம், கன்னடம்
மற்றும் சில இந்தி திரைப்படங்களிலும்
நடித்தார். இவரது கவர்ச்சியான
தோற்றத்திற்கும் மூன்று முகம் திரைப்படத்தில்
அவர் ஏற்றிருந்த துணிவான
கதாபாத்திரத்தினாலும் இவர் தமிழ்
தவிர தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் , இந்தி ஆகிய துறைகளிலும்
புகழ்பெற்றார். இவரது கவர்ச்சி
நடனம் மட்டுமே இடம்பெற்ற அமரன்
போன்ற படங்கள் பெரிய அளவில்
வெற்றியை ஈட்டின. 1980களில் இவரது
நடனம் இடம்பெறாத தமிழ்
திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு
உயர்ந்தார்.
இவர் நடிப்பில் பல பரிமாணங்கள்
கடந்திருந்தாலும் இவரை நாளிதழ்களும்
சில திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே
அடையாளப்படுத்தின. இருப்பினும், அலைகள்
ஓய்வதில்லை(1981) , நீங்கள் கேட்டவை,
தாலாட்டு கேக்குதம்மா போன்ற
திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல
கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி
மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின்
பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார்.
லயனம்(1989) என்கிற திரைப்படத்தில் இவர்
நடித்த கதாபாத்திரம் இவரது
மற்றொரு வித்தியாசமான
பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து
காட்டியது. இந்தப்படம் பல
மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு
நல்ல படமான பாலு மகேந்திராவின்
மூன்றாம் பிறை மிகப்பெரிய
வெற்றியை பெற்றது.
கமலஹாசன் , ஸ்ரீதேவியுடன் இணைந்து
இவர் நடித்த இந்தப் படம் இந்தியிலும்
சத்மா என்கிற பெயரில் மீண்டும்
படமாக்கப்பட்டது.
மறைவு
1996இல், ஸ்மிதா சென்னையில்
அவருக்கு சொந்தமான
அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக
கண்டுபிடிக்கப்பட்டார். ஸ்மிதா தூக்கிட்டு
தற்கொலை செய்து
கொண்டதாக செய்தி
வெளியானது. இந்த நிகழ்விற்கு
முன்பு இவர் திரைப்படத்
தயாரிப்பாளராக முயற்சித்து
வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும்,
மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட
குடிப்பழக்கத்தினாலும், மன இறுக்கத்திற்கு
ஆளானதாக நம்பப்படுகிறது.
ஆனாலும் இவரது மரணத்தினைச் சுற்றி பல
சர்ச்சைகள் இருந்து வருகின்றன.
நவீன கலையில்
முதன்மை கட்டுரை: தி டர்டி பிக்சர்
இவரது வாழ்க்கையை மையமாக வைத்து
2011ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் என்ற
திரைப்படம் வெளியானது.
இத்திரைப்படம் இந்தியாவில் பல
மொழிகளில்
வெளியிடப்பட்டது. இப்படம் இவரது
பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று
வெளியானது.
நடித்ததில் சிறந்த
படங்கள்
வருடம் படம் கதா
1979 இணையே தேடி
1979 வண்டி சக்கரம் சில்க்
1981 அலைகள் ஓய்வதில்லை
1981 சீதகொக சிலுக
(1981 film)
1982 எமகின்கருது
1982 மூன்றாம் பிறை தலைமை
மனைவி
1982 சகல கலா வல்லவன்
1982 பட்டணத்து ராஜாக்கள்
1982 தீர்ப்பு
1982 தனிக்காட்டு ராஜா
1982 ரங்கா
1982 சிவந்த கண்கள்
1982 பார்வையின் மறுபக்கம்
1983 மூன்று முகம்
1983 பாயும் புலி
1983 துடிக்கும் கரங்கள்
1983 சத்மா சோனி
1983 தாய் வீடு
1983 பிரதிக்னா
1983 தங்க மகன்
1983 கைதி
1983 ஜீத் ஹமாரி சோனி
1983 ஜானி தோஸ்த் லைலா
1983 ஆட்டக்கலசம்
1983 ஈட்டப்புளி ரா
1983 சில்க் சில்க் சில்க்
1983 சூரகோட்டை சிங்கக்குட்டி
1983 குடசாரி No.1
1983 ரோஷகடு
1984 சேலஞ்ச் ப்ரியம்
1984 ருஸ்தும்
1984 நீங்கள் கேட்டவை
1984 வாழ்க்கை
1984 பிரசண்ட குள்ள
1985 ஒட்டயம் பாக்
1985 ரிவேஞ்ச் Geetha
1985 சட்டம்தோ போராட்டம்
1985 ஸ்ரீ தத்தா தர்ஷனம்
1986 ராக்ஷசுடு
1987 ஆளப்பிறந்தவன்
1989 மிஸ் பமீலா
1989 லயனம்
1989 அன்று பெய்த
மழையில்
1989 அதர்வம் ப
1989 பிக் பாக்கெட்
1989 சொந்தக்காரன் Sudha
1990 அவசர போலீஸ் 100
1990 சண்டே 7 PM
1990 பம்ம மாட்ட பங்காரு
பாட்ட
1991 ஆதித்யா 369 ராஜ
நந்தி
1991 தாலாட்டு கேட்குதம்மா
1991 சைதன்யா
1991 தம்பிக்கு ஒரு பாட்டு
1991 இதயம்
1992 நாடோடி
1992 ஹள்ளி மேஷ்ற்று
1992 அந்தம்
1993 சபாஷ் பாபு
1993 பாவ பவமரிடி
1993 மாபியா
1993 உள்ளே வெளியே
1993 அளிமைய
1993 ரக்ஷனா
1993 முட மேஸ்த்ரி
1994 ஒரு வசந்த கீதம்
1994 விஜய்பாத்
1994 பல்னடி பௌருஷம்
1994 மரோ கூட் இந்தியா
1995 ஸ்படிகம் லைலா
1995 தும்போலி கடப்புரம்
1996 லக்கி மேன்
1996 கோயம்புத்தூர் மாப்பிள்ளை
************************************
பொற்கோவிலுக்குள் ராணுவத்தை
அனுப்பி, கடும் நெருக்கடியை பிரதமர்
இந்திரா காந்தி, சந்தித்துக்
கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில்
கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக்
கொண்டிருக்கிறார். அந்த
புத்தகத்தில் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரை
இடம் பெற்றிருக்கிறது. புத்தகத்தில் இருந்து
தலையை எடுத்த இந்திரா காந்தி “Who is this
‘Silk’!?” என பக்கத்தில் உள்ளவரிடம்
குறுநகையுடன் கேட்கிறார். இந்தியாவின்
மிகச்சிறந்த ஆளுமை, ஒரு நடிகையை பற்றி
கேட்கிறார் என்றால் அந்த நடிகையின்
தாக்கம் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்க
வேண்டும்.
Advertisement
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி
மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற
கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி,
நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு
போட்டு விட்டார். சென்னையில் உள்ள
உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை
பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்தி தனது
'வண்டிச்சக்கரம்' படத்தில்
அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக
'சில்க் ஸ்மிதா' என பெயர்
மாற்றப்பட்டது.
உதிரி உதிரியாய் வந்த கவர்ச்சி நடிகைகளுக்கு
மத்தியில் சில்க் ஸ்மிதா ஒரு மின் மினி பூச்சி.
கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு
நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள்
என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக்
காட்டியவர் சில்க் ஸ்மிதா.
பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை'
சில்க் ஸ்மிதாவை மிகச் சிறந்த குணச்சித்திர
நடிகையாக காட்டியது. அசோக்குமாரின்
'அன்று பெய்த மழை' பன்முகத் திறமை
கொண்ட நடிகையாக்கியது. சில்க்
ஸ்மிதாவின் நடனத்திறமைக்கு விளக்கமேத்
தேவையில்லை.
1980களில் ஸ்மிதா இடம் பெறாத
படங்களே இல்லை எனலாம். ரஜினி, கமல்
போன்றவர்கள் கூட படத்தில் ஸ்மிதாவுக்கு
கேரக்டர் இருக்கிறதா? என்று
கேட்பார்களாம். சில சமயங்களில் அவரது
கால்ஷீட்டிற்கு முன்னணி கதாநாயகர்களே
காத்திருந்தது உண்டு. தயாரிப்பாளர்களோ
கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்யும்
முன் ஸ்மிதாவிடம் கால்ஷீட் கிடைக்குமா?
என்று பார்த்து விட்டுதான் தயாரிப்பு
பணியையே தொடங்குவார்கள்.
Advertisement
புகழின் உச்சியில் இருந்த ஸ்மிதாவிடம்
பணமும் குவியத் தொடங்கியது. அந்த
கால கதாநாயகிகளுக்கு இணையாக
ஸ்மிதா சம்பளமும் வாங்கினார். பணம்
குவிந்தாலும் இயற்கையாகவே ஸ்மிதாவிடம்
இருந்த இரக்க குணம் மட்டும் போகவே இல்லை.
செனனை வடபழனி குமரன் காலனியில்
வசித்து வந்த சில்க் ஸ்மிதா, தெருவில்
வரும் சிறுவர்களை பார்த்தால் அவர்களுக்கு
சாக்லேட் கொடுப்பது, 'ஸ்கூலுக்கு
போங்கடா ஒழுங்கா..!' என்றெல்லாம்
அறிவுரை கூறுவாராம்.தெருவில்
கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், சில்க்
ஸ்மிதாவின் வீட்டுக்குள் பந்தை அடித்தால்
கூட, உள்ளேயிருந்து அடுத்த நிமிடம் பந்து
வெளியே வீசப்பட்டு விடுமாம்.
அதுமட்டுமல்ல, தான் சம்பாதித்த பணத்தை
நல்ல காரியங்களுக்கும் சில்க் ஸ்மிதா
செலவழித்து வந்துள்ளார். சில்க்கின்
சினிமா முகம் தாண்டியும்
அவரின் இன்னொரு முகம்
அறிந்த பிரபலங்கள் அதை பற்றி, முன்பு
விகடனிலும் பகிர்ந்திருந்தனர்.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள்
சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த
அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில்
தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி
இன்னும் பல சூழ்நிலைகள் அவருடைய
இறப்பிற்குக் காரணமாக
சொல்லப்படுகிறது. தமிழ்நாடு
மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த
தற்கொலை சம்பவத்தால் அதிர்ந்து
போனது. '' தன்னோட தேவை என்னவென்று கடைசி
வரை புரிந்து கொள்ள முடியாத
அப்பாவி பெண்'' என சக நடிகைகள்
கண்ணீர் விட்டனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஸ்மிதாவின்
வாழ்க்கையை மையப்படுத்தி “தி டர்டி பிக்சர்” என்ற
பெயரில் மிலன் லூத்ரியா இயக்கத்தில்
ஹிந்தி திரைப்படம் வெளியானது.
இத்திரைப்படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில்
வித்யா பாலன் நடித்திருப்பார். இந்த படம்
சக்கைப் போடு போட்டது.
அபார நடனத்திறமையாலும் , கண்களின்
வசீகரத்தாலும் குணச்சித்திர
வேடங்களாலும் தமிழ் திரையுலகை
மட்டுமல்லாமல், தென்னகத் திரைப்பட
உலகையே சில்க் ஸ்மிதா பல ஆண்டு காலம்
கட்டிப் போட்டிருந்தார்.
சில்க் ஸ்மிதா இறந்து இன்றுடன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போதும் அவரது பிறந்த
நாளிலும் நினைவு நாளிலும் ஒட்டப்படும்
போஸ்டர்கள் வழியாக அந்த வசீகர கண்கள்
தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக்
கொண்டுதான் இருக்கின்றன.
************************************
ஒப்பனை கலைஞராக தனது சினிமா
வாழ்க்கையை தொடங்கி பல கோடி
நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை
கொள்ளை கொண்ட
விஜயலட்சுமி என்ற அறியப்படாத
சொந்தப்பெயரையும் "சில்க்
ஸ்மிதா" என்று யாவராலும் அறியப்பட்ட
ஒப்பற்ற சினிமா கனவுக்கன்னி 1960 ஆம்
ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்து 23
செம்படம்பர் 1996 இல் வாழ்க்கையை
முடித்துக்கொண்டார்!தமிழ் நடிகர்
வினுசக்கரவர்த்தி அவர்களால்
வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு
என்கிற சாராயக்கடையில் பணிபுரியும்
பெண் கதாபாத்திரத்தில் முதன்
முறையாக நடித்தார் அந்த பெயரே
இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது
17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம்
மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள்
அனைத்திலும் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
சில்க் ஸ்மிதா நடித்துள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூரு
என்ற இடத்தில் பிறந்த விஜயலட்சுமி
(பின்னாளில் சில்க் ஸ்மிதா).
பிறப்பால் ஆந்திரமாநிலத்தை
சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம்
தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர்
வறுமையின் காரணமாக
பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு
நிறுத்திக்கொள்ள
வேண்டியதாயிற்று. இவரது வசீகர
தோற்றத்தின் காரணமாக பலரது
தொல்லைகளுக்கு
ஆளானார். இதனால் இவரது
குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே
திருமணம் முடித்துவைத்தனர். இவரது
குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட
துன்பத்தின் காரணமாக இவர்
சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது
வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது
உறவினர் வீட்டில் தங்கினார்.
இவர் தனது திரைப்பட வாழ்க்கையை
இரண்டாம் நிலை நடிக நடிகைகளுக்கான
ஒப்பனை கலைஞராக ஆரம்பித்தார், பின்
தமிழ் நடிகரும் இயக்குனருமான
வினுச்சக்ரவர்த்தியின் மூலம் ஒரு
வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ்
திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு
கதாபாத்திரத்தில் நடிக்க
ஒப்பந்தமானார். இந்த படத்தில் இவரை
ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில்
அறிமுகபடுத்தினார். வினுச்சக்கரவர்த்தியின்
மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார்.
அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும்
கற்றுகொண்டார்.
வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது
கதாபாத்திரமான சில்க் என்கிற
பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும்
இணைந்து இவரது அடையாளம் ஆனது.
பின்னர் ஸ்மிதா "இணையே தேடி" என்கிற
திரைப்படம் மூலம் 1979இல் மலையாள திரைப்பட
உலகிற்கு அறிமுகம் ஆனார்.
வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் கிடைத்த
வெற்றியினால் ஸ்மிதா புகழின்
உச்சத்துக்கே சென்றார். அந்த படத்தின்
அவர் ஏற்ற கதாபாத்திரத்தின்
தாக்கத்தின் காரணமாக அவரால் வேறு
விதமான வித்தியாசமான
கதாபாத்திரங்கள எளிதாக
பெறமுடியவில்லை. இவர் பின்னர்
தெலுங்கு, மலையாளம், கன்னடம்
மற்றும் சில ஹிந்தி சினிமாக்களிலும்
நடித்தார். இவரது கவர்ச்சியான
தோற்றத்திற்கும் மூன்று முகம் திரைப்படத்தில்
அவர் ஏற்றிருந்த துணிவான
கதாபாத்திரதினாலும் இவர் தமிழ் தவிர
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி
ஆகிய துறைகளிலும் புகழ்பெற்றார்.
இவரது கவர்ச்சி நடனம் மட்டுமே
இடம்பெற்ற அமரன் போன்ற படங்கள்
பெரிய அளவில் வெற்றியை ஈட்டின.
1980களில் இவரது நடனம்
இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே
இல்லை என்கிற அளவிற்கு
உயர்ந்தார்.கிறங்கவைக்கும் உடல்
வனப்புக்கும் மயக்கம் தரும் பார்வைக்கும்
சொந்தக்காரியாக விளங்கிய
சில்க் கொஞ்சம்
கொஞ்சமாக தென்னிந்தியத்
திரையுலகின் கவர்ச்சி ராணியாக
உருவெடுத்தார்.படம் வெற்றி
பெற வேண்டுமானால் சில்க் ஸ்மிதா
திரையில் தோன்றுவது அவசியம் என்ற ஒரு
காலகட்டம் தென்னிந்திய சினிமாவில்
இருந்தது.
இவர் நடிப்பில் பல பரிமாணங்கள்
கடந்திருந்தாலும் இவரை பத்திரிக்கைகளும் சில
சினிமாவும் கவர்ச்சி நடிகையாகவே
அடையாளபடுத்தின. ஆனாலும் இவர்
அலைகள் ஓய்வதில்லை(1981), நீங்கள் கேட்டவை,
தாலாட்டு கேக்குதம்மா போன்ற
திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த சில நல்ல
கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி
மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின்
பரிணாமங்களும் வரும் என
ஆணித்தரமாக நிரூபித்தார். லயனம்(1989)
என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த
கதாபாத்திரம் இவரது மற்ற்றொரு
வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு
எடுத்து காட்டியது. இந்தப்படம் பல
மொழிகளில்
மொழிபெயர்க்கபட்டது
குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு
நல்ல படமான பாலு மகேந்திராவின்
மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை
பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன்
இணைந்து இவர் நடித்த இந்த படம்
ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில்
மீண்டும் படமாக்கப்பட்டது.
1996இல், ஸ்மிதா சென்னையில்
அவருக்கு சொந்தமான அடுக்கு
மாடி குடியிருப்பில் பிணமாக
கண்டுபிடிக்கபட்டார். ஸ்மிதா தூக்கிட்டு
தற்கொலை செய்து
கொண்டதாக அறியப்பட்டார்.
இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத்
தயாரிப்பாளராக முயற்சித்து
வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும்,
மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட
குடிபழக்கதினால் இவர் மன இறுக்கத்திற்கு
ஆளானதாக நம்பப்படுகிறது. ஆனாலும்
இவரது மரணத்தினை சுற்றி பல சர்ச்சைகள்
இன்றும் இருந்து வருகின்றன.
நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை
செய்து கொண்டிருக்க
வாய்ப்பில்லை. அவர் கொலைதான்
செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சில்க்
ஸ்மிதாவின் முதல் படத்தையும், கடைசிப்
படத்தையும் இயக்கியவரான திருப்பதி
ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில்
சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர்
ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும்
கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச்
சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும்
வரவிலலை என்பது திரையுலகின் தீர்ப்பு. மறக்க
முடியாத பல படங்களிலும், கிளாமர்
வேடங்களிலும், பாடல் காட்சிகளிலும்,
நடனங்களிலும் கலக்கியவர் சில்க். பத்து
ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு
நாள் தூக்கில் தொங்கினார் சில்க்.
ரசிகர்களின் மனதில் சோகம் தங்கியது,
திரையுலகம் இனி இப்படி ஒரு நடிகையை எப்போது
பெறப் போகிறோம் என்று ஏங்கியது. சில்க்
ஸ்மிதாவும், வதந்திகள், சர்ச்சைகளும் கூடப்
பிறந்தவை போல. சில்க் உயிருடன் இருந்தபோதும்
பல்வேறு வதந்திகள், சர்ச்சைகளில் சிக்கினார்.
அவருடன் நிழல் போல இருந்த தாடிக்காரர்
குறித்து செய்தி போடாத இதழ்களே
கிடையாது. இப்போது சில்க் மறைந்து இத்தனை
காலத்திற்குப் பிறகு புது சர்ச்சை ஒன்று
கிளம்பியுள்ளது. அது திடுக்கிடும்
செய்தியாக இருப்பதுதான்
முக்கியமானது.
சில்க் குறித்து ஒரு சர்ச்சை புத்தகத்தை
எழுதியுள்ளார் திருப்பதி ராஜா. அதில்
சில்க் குறித்தும், அவரது மரணம் குறித்தும்
எழுதியுள்ளார் திருப்பதி ராஜா.சில்க்கின்
முதல் தமிழ்ப் படம் வண்டிச்சக்கரம்
இல்லையாம். திருப்பதி ராஜா இயக்கிய
வீணையும், நாதமும் என்ற படம்தான் முதல்
படமாம். அதை அவரேதான்
தயாரித்துள்ளார். விஜயலட்சுமி என்ற
இயற் பெயர் கொண்ட சில்க்கை,
விஜயலட்சுமி என்ற பெயரிலேயே அந்தப்
படத்தில் நடிக்க வைத்தாராம்
திருப்பதிராஜா.
எனக்கும், சில்க்குக்கும் இடையே நெருங்கிய
தொடர்பு உண்டு.
அந்தரங்கமாகவும் தொடர்பு
இருந்தது. ஆனால் தாடிக்கார
டாக்டர்தான் என்னை சில்க்கிடமிருந்து பிரித்து
விட்டார். சில்க்கை தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்தார்.நான் முதன் முதலில் சில்க்கை
நடிக்க வைத்தபோது அவருக்கு கொடுத்த
அட்வான்ஸ் ரூ. 16,000 தான். ஆனால்
கடைசி காலத்தில் சில்க் கோடி வரை சம்பளம்
வாங்கினார். அவரிடம் நான் 1995ம்
ஆண்டு நான் சிரமத்தில் இருப்பதாக கூறி
நடிக்குமாறு கோரினேன். அவரும் ஒத்துக்
கொண்டார். அதுதான்
தங்கத்தாமரை. ஆனால் படம்
முடிவதற்குள்ளாகவே இறந்து
விட்டார்.ஆனால் தற்கொலை
செய்து கொள்ளும் அளவுக்கு
மோசமான நிலையில் அவர் இல்லை. அவர்
கொலைதான் செய்யப்பட்டிருக்க
வேண்டும். எனக்கு சில்க் ஸ்மிதாவின்
கடைசிக்காலம் நன்றாகவே தெரியும்
என்று கூறி இருக்கிறார் அவர்.
இதேவேளை சில்க்கின் ஒரே தம்பியான நாகவர
பிரசாத் கூட சில்க்கின் மரணம் ஒரு
கொலை என்றேு மீண்டும்
கூறியுள்ளார்.இதைப்பற்றி அவர்
பத்திரிகைகளுக்கு சில நாட்களுக்கு முன்னர்
அளித்த பேட்டியின் சாராம்சம்:
"குடும்பப் பாங்காக நடிக்க விரும்பிய என்
அக்கா ஸ்மிதாவை சொத்துக்காக
சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி
நடிகையாக்கிவிட்டனர். அவர் இறந்தது
தற்கொலை அல்ல, சாவில் மர்மம்
இருக்கிறது," "நானும், சில்க் ஸ்மிதாவும்
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தோம். அப்பா
எங்கோ ஓடிப்போய்விட்டார். சாப்பாட்டுக்கே
கஷ்டம். சில்க் ஸ்மிதாவுக்கு 17 வயது
இருக்கும்போது அன்னபூர்னம் என்ற பெண்
சென்னைக்கு அழைத்து போய் சினிமாவில்
நடிக்க வைத்தார்.சில்க் ஸ்மிதாவுக்கு சிறு
வயதிலேயே திருமணம் நடந்தது, கணவன்
ஓடிவிட்டான் என்றெல்லாம் அப்போது
வதந்திகள் வந்தன. அவை எதுவும் உண்மை
கிடையாது. சில்க் ஸ்மிதா முன்னணி
நடிகையாக இருந்தபோது திருமணமாகி
குழந்தைகளுடன் இருந்த ஒரு தாடிக்காரன்
திடீரென வந்து
ஒட்டிக்கொண்டார். கால்ஷீட்
உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா
வேலைகளையும் அந்த நபர்தான் கவனித்தார்.
அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப
நம்பினார்.
ஒருநாள் வீடு ஒன்றை விலை பேசினார். அந்த
வீட்டை தனது பெயரில் வாங்க
அக்காள் விரும்பினார். ஆனால் கூட
இருந்த நபர் தனது பெயரில்
வாங்கும்படி நிர்ப்பந்தித்தார். இதனால்
இருவருக்கும் தகராறு மூண்டது. சாவதற்கு
சில நாட்களுக்கு முன் எனது தாய்
சென்னை சென்று சில்க்
ஸ்மிதாவுடன் தங்கிவிட்டு வந்தார். அவர்
வந்த மூன்றாவது நாள் சில்க் ஸ்மிதா
மின்விசிறியில் தொங்கி
தற்கொலை செய்து
கொண்டதாக தகவல்
வந்தது.நாங்கள் அலறியடித்து ஓடினோம்.
எங்களிடம் என் வாழ்க்கையில் நிறையபேர்
விளையாடிவிட்டனர். வாழ்க்கையே
நாசமாகிவிட்டது என்று சில்க் ஸ்மிதா
எழுதியது போன்ற ஒரு கடிதம்
கொடுத்தனர். அதில் இருந்தது
சில்க்ஸ்மிதா கையெழுத்து இல்லை.
ஆதாரங்களை அழித்துவிட்டனர். ஸ்மிதா
சாவில் மர்மம் இருக்கிறது.
அலைகள் ஓய்வதில்லை போன்று குடும்ப
பாங்கான வேடங்களில் நடிக்கத்தான்
விரும்பினார். ஆனால் காசுக்காக அவரை
கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர். அவரை வைத்து
மற்றவர்கள் சம்பாதித்தனர். இப்போதும்
அதுதான் நடக்கிறது. செத்த பிறகும்
அவரை மோசமாக சித்தரித்து பணம்
பார்க்கிறார்கள். பாவம் என் அக்கா,
பரிதாபமாக உயிரை விட்டதுதான் மிச்சம்,"
என்றார்.
இவரது வாழ்க்கையை மையமாக வைத்து
2011ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் என்ற
திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம்
இந்தியாவில் பல மொழிகளில்
வெளியிடப்பட்டது. இப்படம் இவரது
பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று
வெளியானது.இதில் நடித்த
வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது
ஞாபகமிருக்கலாம்!
சில்க் ஸ்மிதாவை ஒரு
போகப்பொருளாக,கவர்ச்சி
ஐக்கான்'ஆக ஒரு ஜடமாக தான்
மக்களும் ஊடகங்களும் பார்த்தன
பாவித்தன என்று இந்த கட்டுரை ஆசிரியல்
பால் ஷச்சாரியா
குறிப்பிடுகிறார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக