சனி, 10 டிசம்பர், 2016

நடிகர் மிர்ச்சி சிவா பிறந்த நாள் 10 டிசம்பர் 1982.

நடிகர் மிர்ச்சி சிவா பிறந்த நாள் 10 டிசம்பர் 1982.

திரைபடங்களில்
நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி
அறிவிப்பாளராக பணியாற்றினார்.
காமெடி திரைப்படங்களில் இவர்
நடித்திருந்தாலும் வெங்கட் பிரபு வின்
சென்னை 600028 திரைப்படமும் சரோஜா
திரைப்படமும் இவரை பிரபலபடுத்தியது. தமிழ்
படம் த்திலும் இவர் நடித்திருந்தார்.
திரைப்பட வாழ்க்கை
மிர்ச்சி சிவா 12B படத்தில் சிறு வேடத்தில்
நடித்திருந்தார். வெங்கட் பிரபு 2007ம்
ஆண்டு இய்க்கிய விளையாட்டை மையமாக்
கொண்ட காமெடி
திரைப்படமான சென்னை 600028 ல்
நடித்த 10 அறிமுக கதாநாயகர்களுல்
ஒருவராக நடித்திருந்தார். மறுபடியும்
வெங்கட் பிரபு வின் அடுத்த த்ரில்லர்
படமான சரோஜா வில் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு
படங்களும் வியாபார ரீதியில் மிக
பெரிய வெற்றியை பெற்றது.
அடுத்து மிர்ச்சி சிவா நடித்தது சமகால
தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்து
வெளியான தமிழ் படம் . 2010ல்
வெளிவந்த வா குவார்ட்டர் கட்டிங்
சராசரி வசுலைப் பெற்றது. சிவா
நடித்து நீண்ட தாமததிற்கு பின்
வெளியான காதலை மையமாக
கொண்ட பதினாறு படம் 2011 ல்
வெளியானது. இந்த காலகட்டத்தில்
சிவா நடித்து ராம நாராயணன்
இயக்கிய முழு நீள காமெடி
திரைப்படமான சிவ பூஜையில் கரடி படம்
என்று பெயரிடப்பட்டு முழுமையடைந்து
திரைக்கு வராமலே இருக்கிறது.  2012ல்
விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில்
நடித்த கலகலப்பு திரைப்படம் நல்ல
விமர்சனத்தை பெற்று வணிக ரீதியுலும்
மிகப் பெரிய வெற்றியடைந்தது.
இந்த படத்தில் சிவாவின்
கதாபாத்திரமான சிறிய திருட்டுகளை
செய்யும் ரகு கதாபாத்திரம் பழைய
படங்களில் நடித்ததேயே நியாபக
படுத்துவதாக விமர்சகர்கள்
கருதினார்கள். முந்தைய படங்களின்
தொடர் வெற்றியால் 2013ம்
ஆண்டு புது கதையம்சம் கொண்ட 4
புதுபடங்களில் சிவா ஒப்பந்தம் ஆனார்.
ஏற்கனவே 1981ம் ஆண்டு ரஜினிகாந்த்
நடித்து வெற்றிபடமான தில்லுமுல்லு
மறுபதிப்பில் சிவாவுடன் ஈஷா தல்வார்
ஜோடி சேர பிரகாஷ் ராஜ் நடித்த
தில்லுமுல்லு 2013 ம் ஆண்டு முதல் படமாக
அமைந்தது. இதில் சிவா மட்டுமே முழு
படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு
தன் முழு திறமையையும்
வெளிபடுத்தியிருந்தார் என
அனைவராலும் பாராட்டபட்டார்.
சரியான நேரத்தில் ஒரு வார்த்தையில்
நகைச்சுவை செய்வது சிவாவின் சிறப்பு.
இதே ஆண்டு வெளியான
சொன்னா புரியாது
திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக
நடித்திருந்தார். தி ஹிந்து பத்திரிக்கையில்
சுதிஷ் காம்நாத் இறுகிய முகத்தை வைத்து
கொண்டு இவ்வளவு அழகாக
காமெடி செய்வதில் சிவாவை
மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு
வேடிக்கையான மனிதர் அதை தவிர
வேறொன்றும் முக்கியமில்லை என
குறிப்பிட்டிருந்தார்.  சிவாவின் அடுத்த
வெளியீடான யா யா வில்
சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார். சிவாவின் அடுத்த
படமான வணக்கம் சென்னையில்
பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா
உதயநிதி இயக்கியிருந்தார். இந்த படம்
கலவையான விமர்சனங்களை
பெற்றாலும் வணிக ரீதியாக
வெற்றிப் பெற்றது. அடுத்து ஒரு
வருடம் கழித்து பாபி சிம்ஹா வுடன்
இணைந்து நடித்து வெளிவந்த
மசாலாபடத்திற்கு நேர்மறை விமர்சனமும்,
சிவா நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது.
2007 ல் மிகப்பெரிய வெற்றியடைந்த
சென்னை 6000028 ன் இரண்டாம்
பாகத்திலும் சிவா நடிப்பது
உறுதியாகியுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை
பூப்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான்
வீராங்கனை ப்ரியா வை 15 நவம்பர் 2012 ம்
ஆண்டு காதலித்து மணம் முடித்து
கொண்டார். [14]
நடிகராக
Year Film Role
2001 12B
2003 விசில்
2007 சென்னை 600028 கார்த்திக்
2008 சரோஜா (film) அஜய் ராஜ்
2010
தமிழ் படம் சிவா
வ குவார்ட்டர்
கட்டிங் சுந்தர்ராஜன்
(சுறா)
2011
பதினாறு சிவா
கோ சிவாவாக
2012 கலகலப்பு ரகு
2013
தில்லுமுல்லு 2 பசுபதி (கங்கு
கந்தன்)
சொன்னா
புரியாது சிவா
யா யா ராமராஜன்
(தோனி)
வணக்கம்
சென்னை அஜய்
(மாடசுவா
2015 மசாலா படம் மணி
144 தெசு
2016
அட்ரா மச்சான்
விசிலு சேகர்
சென்னை 600028
II: Second Innings கார்த்திக்
பின் லேடன்
பாடலாசிரியராக
""சொளதி பாஷா"" ( வா
குவார்ட்டர் கட்டிங்)
""ரோசா ஹ்ய்"" ( சொன்னா
புரியாது)
பாடகராக
""ரோசா ஹ்ய்"" ( சொன்னா
புரியாது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக