வியாழன், 1 மார்ச், 2018

நடிகை எம். எஸ். சுந்தரிபாய் பிறந்த தினம் மார்ச் 02.



நடிகை  எம். எஸ். சுந்தரிபாய் பிறந்த தினம் மார்ச் 02. 

சுந்தரிபாய் அல்லது எம். எஸ். சுந்தரிபாய் (M. S. Sundari Bai or Sundarabai) (1923 - 12 மார்ச்சு 2006) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி பின் கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர். சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை . இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவரது பெற்றோர்கள், முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுத் தந்தனர்.

திரைப்படங்கள்

1937இல் சுகுணசரசா என்ற படத்தில் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. ஜெமினி நிறுவனத்தின் முதல் படமான
மதனகாமராஜன் படத்தில் கொத்தமங்கலம் சுப்புவும் , சுந்தரிபாயும் நடித்தனர். பின் கொத்தமங்கலம் சுப்புவின் மூன்றாவது மனைவியானார் சுந்தரிபாய்.
1945இல் ஜெமினி நிறுவனத்தார் தயாரித்த
கண்ணம்மா என் காதலி  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம். கே. ராதா நடித்தார்.
1948இல் ஜெமினி நிறுவனத்தின் மிகப்பெரிய தயாரிப்பான சந்திரலேகா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
ஜெமினியின் வெற்றிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். வள்ளியின் செல்வன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

பிற திரைப்படங்கள்

ஆத்மி (1939) [2]
நந்தனார் (1942)
தாசி அபரஞ்சி (1944)
மிஸ் மாலினி (1947)
மூன்று பிள்ளைகள் (1952)
அவ்வையார் (1953)
பொம்மை கல்யாணம் (1958)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
தெய்வப்பிறவி (1960)
படிக்காத மேதை (1960)
அன்னை இல்லம் (1963)
மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)
செல்வம் (1966)
கணவன் (1968)
தேனும் பாலும் (1971)
அரங்கேற்றம் (1973)
நினைத்ததை முடிப்பவன் (1975)
சில நேரங்களில் சில மனிதர்கள் (1976)
மறைவு
உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய் 12 மார்ச்சு 2006இல் காலமானார்.



எம்.எஸ்.சுந்தரிபாய் -(M.S.Sundaribhai)
தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. 02.03.1923-இல் மதுரையில் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பார். பல படங்களில் பின்னணி பாடியுமுள்ளார். சுகுண சரஸா படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னை வந்தவர். 1939-இல் இப்படம் வெளியானது. ஜெமினி ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்தில் 18 வருடங்கள் வேலை செய்தார். 150 ரூபாய் மாதச்சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து 3 வருடங்கள் வேலை செய்தார். அதன் பின் ரூ-2000/- வரை சம்பளம் பெற்றார். அந்நேரத்தில் வெளிப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் அனுமதி பெற்று நடித்த முதல் படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஷ்வர ராவ் தயாரித்து நடித்த எங்க வீட்டு மகாலட்சுமி. ஜெமினியில் 15 படங்களும் வெளிப்படங்களில் ஏறத்தாழ 60 படங்களிலும் நடித்துள்ளார். 78 வயதுக்கு மேல் வாழந்துள்ளார். இவரது கணவர் தான் கொத்தமங்கலம் சுப்பு (தில்லானா மோகனாம்பாள் படத்திற்குக் கதை வசனம் எழுதியவர்). பழம்பெரும் நடிகர் வி.வி.சடகோபன் முதல் மு.க.முத்து வரை பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.


இவர் நடித்துள்ள திரைப்படங்களின் பட்டியல் பின் வருமாறு:-
1. தான சூர கர்ணா
2. சூரியபுத்திரி
3. மதன காமராஜன்
4. பக்த நாரதர் 1942
5. நந்தனார் 1942
6. தாஸி அபரஞ்சி 1944
7. கண்ணம்மா என் காதலி (கதாநாயகியாக)
8. மிஸ் மாலினி 1944
9. சந்திரலேகா 1944
10. சம்சாரம்
11. ஔவையார்
12. வள்ளியின் செல்வன் (கதாநாயகியாக)
13. மூன்று பிள்ளைகள்
14. மஞ்சள் மகிமை
15. நான் கண்ட சொர்க்கம்
16. தெய்வமே துணை
17. நான் வளர்த்த தங்கை
18. கொடுத்து வைத்தவள்
19. கணவன்
20. என் அண்ணன்
21. ஆண்டவன் கட்டளை
22. எல்லாம் உனக்காக
23. புனர் ஜென்மம்
24. பாலும் பழமும்
25. அன்னை இல்லம்
26. ஊட்டி வரை உறவு
27. செல்வம்
28. பேசும் தெய்வம்
29. தேனும் பாலும்
30. தெய்வப்பிறவி
31. என் தம்பி
32. கலாட்டா கல்யாணம்
33. தங்கைக்காக
34. திருடன்
35. வஞ்சிக்கோட்டை வாலிபன்
36. பனித்திரை
37. சின்னஞ்சிறு உலகம்
38. சித்தி
39. பணமா பாசமா
40. தபால்காரன் தங்கை
41. நான் அவனில்லை
42. மனிதன் மாறவில்லை
43. வாழ்க்கை வாழ்வதற்கே
44. குழந்தை உள்ளம்
45. சில நேரங்களில் சில மனிதர்கள்
46. பொன்னான வாழ்வு
47. வீட்டுக்கு ஒரு பிள்ளை
48. ஜீவனாம்சம்
49. அன்பு வழி
50. ராணி யார் குழந்தை
51. பெண்ணை வாழவிடுங்கள்
52. காதல் பறவை
53. குமுதம்
54. பூமாலை
55. தேடி வந்த திருமகள்
56. அனுபவம் புதுமை
57. இருளும் ஒளியும்
58. சுபதினம்
59. நம்ம வீட்டு தெய்வம்
60. ஏன்?
61. எங்களுக்கும் காலம் வரும்
62. உத்தரவின்றி உள்ளே வா
63. நூறாண்டு காலம் வாழ்க
64. தங்கதுரை
65. மணிப்பயல்
66. பிள்ளையோ பிள்ளை
67. பாதை தெரியுது பார்
68. குழந்தை உள்ளம்
69. தாய் பிறந்தாள்
70. தேனும் பாலும்
போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கையில் நிறைவாக வாழ்ந்தவர். பொறுப்புக்களைச் சுமந்தவர்.நல்ல இல்லத்தரசி, வெள்ளை மனம் கொண்டவர்.கபடு சூதற்ற குணம், யாவரையும் ஈர்க்கும் பேச்சு இவற்றுக்குச் சொந்தக்காரர் எம்.எஸ்.சுந்தரிபாய். இவரது மகள் சுந்தரிபாய் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
கதாநாயகி, வில்லி, நகைச்சுவை வேடங்களில் நடித்த சுந்தரிபாய்
பதிவு: பிப்ரவரி 28, 2017 22:16
நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.
சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1923-இல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். அப்போது, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த “சிந்தாமணி” படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சுந்தரிபாய்க்கு மனப்பாடம். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர்.
உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக, 1937-இல் “சுகுணசரசா” என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் சம்பளத்தில், மூன்று நாட்கள் நடித்தார்.
இதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்குச் சேர்ந்தார். இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.
ஜெமினியின் முதல் படமான “மதனகாமராஜன்” படத்தில், கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத்தொடர்ந்து, காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.
இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
“இது காதல் திருமணம் மட்டுமல்ல. கலப்பு திருமணமும்கூட. என் தாய் மொழி மராத்தி. அவர் தமிழர்.
இதன்பின், ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.
இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.1945-இல் ஜெமினி தயாரித்த “கண்ணம்மா என் காதலி” என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.”
1948-இல் ஜெமினியின் பிரமாண்டமான படமான “சந்திரலேகா” வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
கதாநாயகி ரி.ஆர்.ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, “இச்சைகளைத் தீர்க்கும் பச்சை மலைப்பாவை”யாக மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார்.
சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பளம் 150 ரூபாய். சந்திரலேகாவில் நடித்தபோது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.
ஜெமினியின் வெற்றிப்படமான “சம்சார”த்தில், வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
“வள்ளியின் செல்வன்” படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.
கே.பாலசந்தர் தயாரித்த “அரங்கேற்றம்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
300 படங்கள்
சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300. சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய், அண்மையில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக