செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

கவிஞர் பஞ்சு அருணாசலம் நினைவு தினம் - ஆகத்து 9, 2016.



கவிஞர்  பஞ்சு அருணாசலம் நினைவு தினம் - ஆகத்து 9, 2016.

பஞ்சு அருணாசலம் (சூன் 18, 1941 - ஆகத்து 9, 2016) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின. பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம்.மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு நடிகர் சுப்பு ஆவார்.

ஆரம்ப காலம்

ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.

பணி
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராசாவை அறிமுகப்படுத்தினார். சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அவர்கள்தான் திரைக்கதை, வசனம் எழுதினார்.  விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும் . இவர் கதை - வசனம் எழுதி தயா ரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு சிறந்தப் படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத் துள்ளது. தமிழக அரசின் கலை மாமணி விருதை அவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு .

இயற்றிய சில பாடல்கள்
வரிசை எண் ஆண்டு திரைப்படம் பா
1 1965 கலங்கரை விளக்கம்
பொன்ன பூத்தத
2 நானும் ஒரு பெண்
பூப்ப பூப்ப பிறக்கு
3 1979
ஆறிலிருந்து அறுபது வரை
கண்மண காதல் எ
4 1984 தம்பிக்கு எந்த ஊரு
காதலி தீபமொ ஏற்றின
5 ஏழை பங்காளன்
தாயாக மாறவா
6 1989 மாப்பிள்ளை
மானின் கண்கள் மானே
7 காற்றினிலே வரும் கீதம்
ஒருவா போலே
8 1976 அன்னக்கிளி
திரைப் அனைத் பாடல்க
இயக்கிய திரைப்படங்கள்
இளைய தலைமுறை (1977)
என்ன தவம் செய்தேன் (1977)
சொன்னதை செய்வேன் (1977)
நாடகமே உலகம் (1979)
மணமகளே வா (1988)
புதுப்பாட்டு (1990)
கலிகாலம் (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
தயாரித்த திரைப்படங்கள்
ஆறிலிருந்து அறுபது வரை (1979)
கல்யாணராமன் (1979)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
ஆனந்த ராகம் (1982)
ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
குரு சிஷ்யன் (1988)
மைக்கேல் மதன காமராஜன் (1991)
ராசுக்குட்டி (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
வீரா (1994)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
ரிஷி (2001)
சொல்ல மறந்த கதை (2002)
மாயக் கண்ணாடி (2007)
காதல் சாம்ராஜ்ஜியம் (வெளிவரவில்லை)
எழுத்தாளர் என்ற வகையில்
ரிஷி (2001)
மாயா பஜார் 1995 (1995)
தொட்டில் குழந்தை (1995)
சிங்கார வேலன் (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
எங்கிட்ட மோதாதே (1990)
புதுப்பாட்டு (1990)
அபூர்வ சகோதரர்கள் (1989)
ராஜா சின்ன ரோஜா (1989)
மணமகளே வா (1988)
குரு சிஷ்யன் (1988)
என் ஜீவன் பாடுது (1988)
தர்மத்தின் தலைவன் (1988)
நீதானா அந்தக்குயில் (1986)
உயர்ந்த உள்ளம் (1985)
ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
தம்பிக்கு எந்த ஊரு (1984)
குவா குவா வாத்துகள் (1984)
வாழ்க்கை (1984)
தூங்காதே தம்பி தூங்காதே (1983)
மண்வாசனை (1983)
பாயும் புலி (1983)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
சகலகலா வல்லவன் (1982)
மகனே மகனே (1982)
எல்லாம் இன்பமயம் (1981)
மீண்டும் கோகிலா (1981)
கடல் மீன்கள் (1981)
முரட்டுக் காளை (1980)
உல்லாசப்பறவைகள் (1980)
ஆறிலிருந்து அறுபது வரை (1979)
கல்யாணராமன் (1979)
கௌரிமான் (1979)
வெற்றிக்கு ஒருவன் (1979)
வட்டத்துக்குள் சதுரம் (1978)
புவனா ஒரு கேள்விக்குறி (1977)
துணிவே துணை (1976)
மயங்குகிறாள் ஒரு மாது (1975)
பாடலாசிரியர் பணி
1960களில்
1960- தெய்வ பிறவி
1963- ஆசை அலைகள்
1965- கலங்கரை விளக்கம்
1970களில்
1975- மயங்குகிறாள் ஒரு மாது
1976- அன்னக்கிளி
1977- புவனா ஒரு கேள்விக்குறி
1977- காயத்ரி
1977- ஆடு புலியாட்டம்
1978- முள்ளும் மலரும்
1978- வட்டத்துக்குள் சதுரம்
1978- பிரியா
1979- கௌரிமான்
1979- வெற்றிக்கு ஒருவன்
1979- ஆறிலிருந்து அறுபதுவரை
1979- கவிக்குயில்
1979- பூந்தளிர்
1980களில்
1980- குரு
1980- உல்லாசப் பறவைகள்
1980- முரட்டுக்காளை
1980- நெஞ்சத்தைக் கிள்ளாதே
1980- அன்புக்கு நான் அடிமை
1981- அலைகள் ஓய்வதில்லை
1981- கர்ஜனை
1981- கழுகு
1981- சங்கர்லால்
1981- எல்லாம் இன்பமயம்
1981- கடல்மீன்கள்
1981- மீண்டும் கோகிலா
1982- கோபுரங்கள் சாய்வதில்லை
1982- ராணி தேனி
1982- எங்கேயோ கேட்ட குரல்
1983- கோழி கூவுது
1983- ஆனந்தக்கும்மி
1983- அடுத்த வாரிசு
1983- மண்வாசனை
1984- அம்பிகை நேரில் வந்தாள்
1984- தம்பிக்கு எந்த ஊரு
1984- வைதேகி காத்திருந்தாள்
1984- வாழ்க்கை
1985- புதிய தீர்ப்பு
1985- மனக்கணக்கு
1986- நீதானா அந்தக்குயில்
1987- உள்ளம் கவர்ந்த கள்வன்
1988- மணமகளே வா
1988- தர்மத்தின் தலைவன்
1989- மாப்பிள்ளை
1990களில்
1990- புதுப்பாட்டு
1991- தர்மதுரை
1993- சின்ன கண்ணம்மா
1994- வியட்நாம் காலணி
1995- மாயா பஜார் 1995
2000த்தில்
2001- ரிஷி
கவியரசர் கண்ணதாசனுக்கு பாடல் உதவி
1. புன்னகை
2. தேனும் பாலும்
3. ஆண்டவன் கட்டளை
4. சங்கே முழங்கு
5. பெரிய இடத்துப் பெண்
6. தாயைக்காத்த தனயன்
7. பழனி
8. சபதம்
9. மணி ஓசை
10. காவியத் தலைவி
மறைவு
பஞ்சு அருணாசலம் தனது 75 வது அகவையில் சென்னையில் 2016 ஆகத்து 9 அன்று காலமானார்.


சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
மேலும் 'இளையதலைமுறை', 'மணமகளே வா', 'புதுப்பாட்டு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாண ராமன்,எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, ராசுக்குட்டி உள்ளிட்ட பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* கவிஞர் கண்ணதாசனின் உறவினரான பஞ்சு அருணாசலம் அவருக்கு உதவியாளராக பணியாற்றியவர்
* அன்னக்கிளி படத்தின்மூலம் 1976ல் இளையராஜாவை அறிமுகம் செய்தவர்
* ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு
* ரஜினிக்கு திருப்புமுனையாக இருந்த ஆறில் இருந்து அறுபதுவரை படத்துக்கு கதைவசனம் எழுதியவர்.


தமிழ் திரையுலகில் தனித்து வென்ற ஜாம்பவான் பஞ்சு அருணாசலம்

1941ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் பஞ்சு அருணாசலம்.
தங்களது முன்னோர்களால் திரையுலகில் நுழைந்த எல்லோரும் ஜெயித்த வரலாறு கிடையாது. தனித் திறைமை கொண்ட சிலர் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் பஞ்சு அருணாசலம் அவர்கள் தனது பன்முகத் திறமையால் தனது இறுதி காலம் வரை திரைத்துறையில் தனித்து அறியப்பட்டவர்.
கண்ணதாசன் மறைவிற்கு பின்னர், அவரே பல திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியும் உள்ளார். முதன் முதலில் கலங்கரை விளக்கம் படத்தில் ‘‘பொன்னெழில் பூத்தது’’ என்ற பாடலை இயற்றினார். பின்னர், 'சாரதா' படத்தில் வரும் 'மணமகளே, மருமகளே வா, வா’ என்ற பாடலின் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.
தொடர்ந்து, ’என்னை மறந்ததேன் தேன்றலே’, ’என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை’, ’முத்தமிழ் கவியே.. முக்கனி சுவையும் தருக...’, ‘ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்’, ’புத்தும் புது காலை’, ’காதலின் தீபமொன்று’, ’கண்மணியே காதல் என்பது’, ’பருவமே புதிய பாடல் பாடு’, ’வா பொன் மயிலே’, ’எந்த பூவிலும் வாசம் வரும்’, ‘மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி’, ‘அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ போன்ற அற்புதமான பல பாடல்களை இயற்றியுள்ளார்.
இது தவிர அன்னக்கிளி, பிரியா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு முழுப் பாடல்களையும் எழுதியுள்ளார். முக்கியமாக பலரின் மறுப்பிற்கு பின்னரும் இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்தி, தமிழ் திரையுலகில் ஓர் அரிதான வரலாற்று நிகழ்வை ஏற்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலம் அவர்களையே சாரும். இது குறித்து ஒருமுறை இளையராஜாவை அறிமுகப்படுத்தியது பற்றி கூறுகையில், “கதாசிரியர் ஆர்.செல்வராஜ் அப்போது என் உதவியாளராக இருந்தார். புதியவர்களை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அவர், 'இளையராஜா என்று ஒரு இளைஞர் இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் துணை இசை அமைப்பாளராக பணியாற்றுகிறார். அவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தலாம்' என்று என்னிடம் கூறினார்.
ஜி.வெங்கடேஷ் அப்போது கன்னடப்பட உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். தமிழில் அவர் அதிகப்படங்கள் பண்ணவில்லை. அவரது இசைக்குழுவில் ராஜாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் திறமை பற்றி எனக்குத் தெரியாது.
தொடர்ந்து செல்வராஜ் என்னிடம், 'இளையராஜாவிடம் 15 அற்புதமான டியூன்கள் இருக்கின்றன. சரியான வாய்ப்பு அமைந்தால் இசையில் நிச்சயம் சாதிப்பார்' என்றார்.
இளையராஜாவை வரவழைத்தேன். இசைக் கருவிகள் எதுவும் எடுத்து வராமல் சும்மா வந்திருந்தார். 'நாளைக்கு இசைக் கருவிகள் எடுத்து வந்து உங்கள் டியூன்களை வாசித்துக் காட்டுங்கள்' என்றேன்.
இளையராஜாவோ, 'வேண்டுமானால் இப்போதே பாடிக்காட்டுகிறேன்' என்றார். 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே', 'மச்சானப் பார்த்தீங்களா', 'வாங்கோனா' ஆகிய பாடல்களை தாளம் போட்டு பாடிக்காட்டினார். இசைக்கேற்றபடி அவருக்குத் தோன்றிய வார்த்தைகளை பொருத்தமாக போட்டுக்கொண்டு பாடினார்.
படம் தயாராகி முடிந்ததும், ரிலீஸ் செய்ய ரொம்ப சிரமப்பட்டேன். ஏற்கனவே என் படங்களை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த வினியோகஸ்தர்கள் யாரும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை. புதிதாக வந்த வினியோகஸ்தர்கள்தான் வாங்கி திரையிட்டார்கள்.
படத்தின் ஆரம்ப ரிசல்ட் அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. ஆனால் சில நாட்கள் ஆனதும், படம் பிரமாதமாக ஓடியது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது இளையராஜாவின் இசைதான்” என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஏற்றவாறு கதை எழுதி பல வெற்றி பாடங்களை தந்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
'இளைய தலைமுறை', 'என்ன தவம் செய்தேன்' 'சொன்னதை செய்வேன்', 'நாடகமே உலகம்', 'மணமகளே வா' ,'புதுப்பாட்டு', 'கலிகாலம்', 'தம்பி பொண்டாட்டி' ஆகிய படங்களை இயக்கியவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் பல வெற்றிப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆசிரியர் பஞ்சு அருணாசலம். நகைச்சுவைப் படமாக இருந்தாலும், கிளாசிக் வகை திரைப்படமாக இருந்தாலும் திரைக்கதையில் தனி முத்திரைப் பதித்தவர் பஞ்சு அருணாசலம்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, தர்மத்தின் தலைவன், மனிதன், தம்பிக்கு எந்த ஊரு, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
அதேபோல, நடிகர் கமல்ஹாசனின், உல்லாச பறவைகள், கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா, சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, அபூர்வ சகோதரர்கள், சிங்கார வேலன் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
இளையராஜா - பஞ்சு அருணாச்சலம் கூட்டணியில் எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளன. ஆனால் பஞ்சு அருணாச்சலம் உடல் நிலை அவரை தொடர்ந்து எழுத விடாமல் செய்துவிட்டது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் இளையராஜா இசையில் பாடல் எழுதியுள்ளார். அதுதான் முத்துராமலிங்கம் படம்.


இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர். 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
பல வெற்றிப் படங்களை தமிழ்த் திரையுலகிற்கு தந்த படஅதிபர் ஏ.எல்.சீனிவாசன், புகழ்ப் பெற்ற பல பாடல்களை தந்து தமிழ்த் திரையுலகின் முன்னோடியாக விளங்கும் கவிஞர் கண்ணதாசன் ஆகிய இருவரும் இவரது சித்தப்பாக்கள்.
பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்களை விரும்பிப் படிப்பது, பாடல்களை ரசித்துப் பாடுவது என கலைகளில் ஆர்வம் உள்ளவராக இருந்த இவர், பியூசி முடித்தவுடன் சென்னைக்கு வந்தார்.
பெரிய சித்தப்பாவான பட அதிபர் ஏ.எல்.சீனிவாசனிடம், தனது கதை எழுதும் ஆர்வத்தை சொல்லி, பத்திரிகையில் சேர விரும்புவதை தெரிவித்திருக்கிறார். முதலில் நமது ஸ்டுடியோவில் வேலை பார். பிறகு கதை எழுத போகலாம் என்று, அப்போது அவர் குத்தகைக்கு நடத்தி வந்த பரணி ஸ்டூடியோவுக்கு இவரை அனுப்பி வைத்தார்.
இவரின் திரையுலக வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது அங்குதான்.
பெரிய சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனின் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்த பஞ்சு அருணாசலம், சின்ன சித்தப்பா கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு நாள் சென்றார்.
இலக்கிய ஆர்வமும், கதை எழுதும் தாகமும் கொண்ட இவருக்கு அந்த பத்திரிகை சூழ்நிலை பிடித்திருந்தது. சித்தப்பா கண்ணதாசனிடம் தனது ஆர்வத்தை சொல்ல, இவரை தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார், கண்ணதாசன்.
அதன் பிறகு கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு உதவியாளராக இருந்தார். பனிரெண்டு ஆண்டுகள் அவரிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலம், 1962-ல் வெளியான ‘சாரதா’ படத்துக்கு பாடல் எழுதினார். ‘மணமகளே மருமகளே வா வா’ என்ற பாடல் இவருக்கு பெரிய புகழைப் பெற்று தந்தது. அதன் பிறகு கண்ணதாசனின் வாழ்த்துக்களுடன் பாடல்கள் எழுதினார்.
பட அதிபர் ‘சித்ரமகால்’ கிருஷ்ணமூர்த்தி தயாரித்த ‘ஹலோ பார்ட்னர்’ என்கிற படத்திற்கு கதை எழுதினார். கதாநாயகனாக நாகேஷ் நடித்தார். மீண்டும் ‘சித்ரமகால்’ கிருஷ்ணமூர்த்தி தயாரித்த ‘கல்யாணமாம் கல்யாணம்.’ படத்திற்கும் கதை எழுதினார். நகைச்சுவைப் படமான இதில் கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், ‘சோ’ முதலானோர் நடித்தனர். படம் வெற்றி பெற்றது.
‘பிலிமாலயா’ ராமச்சந்திரனும், பஞ்சு அருணாசலமும் சேர்ந்து, ‘உறவு சொல்ல ஒருவன்’ என்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தை தயாரித்தார்கள். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ என்ற படத்துக்கு பஞ்சு அருணாசலம் கதை எழுதினார்.
இவரிடம் உதவியாளராக இருந்த செல்வராஜ் எழுதிய கதைக்கு இவர் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தார். அன்னக்கிளி என்கிற பெயரில் வெளியான இந்தப் படம், பெரும் வெற்றிப் பெற்று இருநாட்கள் ஓடியது. சிவக்குமார், சுஜாதா நடிக்க தேவராஜ் மோகன் இயக்கிய அந்தப் படத்தில் இசைஞானி இளையாராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.
ரஜினிகாந்த் நடித்த ஆறிலிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், குரு சிஷ்யன், வீரா, கமல் ஹாசன் நடித்த கல்யாணராமன், ஜப்பானில் கல்யாண்ராமன், மைக்கேல் மதன காமராஜன், பாக்யராஜ் இயக்கி நடித்த ராசுக்குட்டி, சரத்குமார் நடித்த ரிஷி, விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர், சிவக்குமார் நடித்த ஆனந்தராகம், சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார், சேரன் கதாநாயகனாக அறிமுகமான சொல்ல மறந்த கதை, ரகுமான் நடித்த தம்பிப் பொண்டாட்டி ஆகிய படங்களை தனது பி.ஏ.ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்தார் இவர்.
சிவாஜி நடித்த கவரிமான் படத்திற்கு கதை, பாடல்கள் எழுதிய இவர், சிவாஜி நடித்த வாழ்க்கை, அவன்தான் மனிதன், ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா, தம்பிக்கு எந்த ஊரு, பாயும் புலி, எங்கேயோ கேட்டக் குரல், முரட்டுக்காளை, கமல் நடித்த சிங்காரவேலன், உயர்ந்த உள்ளம், தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன், மீண்டும் கோகிலா, உல்லாசப் பறவைகள், எல்லாம் இன்ப மயம், விஜயகாந்த் நடித்த எங்கிட்ட மோதாதே என முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதினார். சில படங்களுக்கு கதை, சிலப் படங்களுக்கு வசனமும் எழுதினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள இவர், புதுப்பாட்டு, கலிக்காலம், தம்பிப் பொண்டாட்டி ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் கதை வசனம் எழுதிய தயாரித்த எங்கேயோ கேட்டக் குரல் படத்திற்கு தமிழக அரசின் சிறந்தப் படத்திற்கான முதல் பரிசும், தங்கப் பதக்கமும் கிடைத்தது. அதே போல பாண்டியன் படத்திற்காக சிறந்த கதை ஆசிரியருக்கான விருது பெற்றார் இவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளர்.
இவருக்கு மீனா என்கிற மனைவியும், சண்முகம், சுப்பிரமணியம் என்கிற இரு மகன்களும், கீதா, சித்ரா என்கிற இருமகள்களும் உள்ளனர். இதில் சுப்பு என்கிற சுப்பிரமனியன், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக