நடிகர் மோகன் பிறந்த நாள் ஆகஸ்ட் 23, 1956,
மோகன் (பிறப்பு: ஆகத்து 23, 1956, இயற்பெயர்: மோகன் ராவ் ) ஓர் புகழ்பெற்ற
கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின்
உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட ,
மலையாள , தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும்
தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.
தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு வ.எண் திரைப்படம் மொ
1977 1 கோகிலா கன்
1978 2 அபரிசித்றா கன்
1979
3 மதாலசா மலைய
4 தூர்ப்பு வெள்ளே ரயிலு தெலு
1980
5 மூடுபனி தம
6 நெஞ்சத்தை கிள்ளாதே தம
7 ஹென்னின சேடு கன்
8 முனியன்னா மாதரி கன்
1981
9 காளி முத்து கன்
10 கிளிஞ்சல்கள் தம
11 நிஜமொன்னு பரையட்டே மலைய
1982
12 பொன்முடி மலைய
13 காதோடுதான் நான் பேசுவேன் தம
14 கடவுளுக்கு ஓர் கடிதம் தம
15 இதோ வருகிறேன் தம
16 காதலித்துப் பார் தம
17
தீராத விளையாட்டுப் பிள்ளை
தம
18 பயணங்கள் முடிவதில்லை தம
19 லாட்டரி டிக்கெட் தம
20 சின்னஞ் சிறுசுகள் தம
21 கோபுரங்கள் சாய்வதில்லை தம
22 இனியவளே வா தம
1983
23 ஜோதி தம
24 நெஞ்சமெல்லாம் நீயே தம
25 அந்த சில நாட்கள் தம
26
மனைவி சொல்லே மந்திரம்
தம
27 நாலு பேருக்கு நன்றி தம
28 சரணாலயம் தம
29
தூங்காத கண்ணொன்று ஒன்று
தம
30 இளமை காலங்கள் தம
1984
31 ஓ மானே மானே தம
32 அன்பே ஓடி வா தம
33 நிரபராதி தம
34 நெஞ்சத்தை அள்ளித்தா தம
35 நலம் நலமறிய ஆவல் தம
36 மகுடி தம
37 விதி தம
38 வாய் பந்தல் தம
38 அம்பிகை நேரில் வந்தாள் தம
40 24 மணி நேரம் தம
41 சாந்தி முகூர்த்தம் தம
42 ஓசை தம
43 ருசி தம
44 சட்டத்தை திருத்துங்கள் தம
45 நான் பாடும் பாடல் தம
46 நூறாவது நாள் தம
47 குவா குவா வாத்துகள் தம
48 வேங்கையின் மைந்தன் தம
49 பணம் பத்தும் செய்யும் தம
1985
50 அன்பின் முகவரி தம
51 அண்ணி தம
52 தெய்வப் பிறவி தம
53 நான் உங்கள் ரசிகன் தம
54 உனக்காக ஒரு ரோஜா தம
55 தென்றலே என்னைத் தொடு தம
56 குங்குமச் சிமிழ் தம
57 ஸ்ரீ ராகவேந்திரா தம
58 இதயக் கோயில் தம
59 உதயகீதம் தம
60 பிள்ளை நிலா தம
1986
61 டிசம்பர் பூக்கள் தம
62 பாரு பாரு பட்டணம் பாரு தம
63 உயிரே உனக்காக தம
64 உன்னை ஒன்று கேட்பேன் தம
65 மௌன ராகம் தம
66 மெல்லத் திறந்தது கதவு தம
67 ஆயிரம் பூக்கள் மலரட்டும் தம
68 சங்கலயில் ஒரு சங்கீதம் தம
69 அலப்பனா தெலு
1987
70 பாடு நிலாவே தம
71 ஒரே ரத்தம் தம
72 நேரம் நல்லாருக்கு தம
73 தீர்த்த கரையினிலே தம
74 நினைக்க தெரிந்த மனமே தம
75 ரெட்டை வால் குருவி தம
76 ஆனந்த ஆராதனை தம
77 கிருஷ்ணன் வந்தான் தம
78 இது ஒரு தொடர்கதை தம
1988
79 சகாதேவன் மகாதேவன் தம
80 வசந்தி தம
81 சூப்புலு கலசின சுபவேள தெலு
82 பாசப் பறவைகள் தம
83 குங்கும கோடு தம
84 போலீஸ் ரிப்போர்ட் தெலு
1989
85 நாளை மனிதன் தம
86 பாச மழை தம
87 மனிதன் மாறிவிட்டான் தம
88 மாப்பிள்ளை சார் தம
89 தலைவனுக்கோர் தலைவி தம
90 இதய தீபம் தம
91 சொந்தம் 16 தம
92 ஒரு பொண்ணு நினைச்சா தம
1990
93 வாலிப விளையாட்டு தம
94 ஜெகதால பிரதாபன் தம
1991
95 உருவம் தம
96 அன்புள்ள காதலுக்கு தம
2008 97 சுட்ட பழம் தம
2009 98 கௌதம் கன்
2012 99 சிக்காரி கன்
2015 100 அசோகவனா கன்
விருதுகள்
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பயணங்கள் முடிவதில்லை (1982).
நம்ம 'மைக்' மோகனுக்கு ஹாப்பி பர்த்டே!
தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் மோகன். 80-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இவர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1956-ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவர் மைக் பிடித்துப் பாட்டுப் பாடி நடித்தாலே அந்தப் படம் நிச்சயம் வெள்ளி விழாதான் என்ற நம்பிக்கை நிலவியதால் இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்றும் மைக் மோகன் என்றும் பெயர் வந்தது.
Advertisement
ஹோட்டல் முதலாளியின் மகனான இவர் ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். கேமரா கவிஞர் இயக்குநர் பாலு மகேந்திராவின் பார்வை இவர்மேல் பட்டதின் பலனாக கமல் கதாநாயகனாக நடித்த 'கோகிலா' என்ற கன்னடத் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையைத் துவக்கினார். அந்தப் படமும் கமர்சியலாக பெரிய வெற்றி பெற்றது. மோகன் நடித்த கதாபாத்திரமும் அதிக அளவில் பேசப்பட்டது. இதன் காரணமாகத் தொடக்க காலத்தில் 'கோகிலா' மோகன் என்றே இவர் அறியப்பட்டார்.
இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் அதே ஆண்டு வெளியான 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சில திரையரங்குகளில் இத்திரைப்படம் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது. கதாநாயகனாகத் தமிழில் தனது தடத்தை வலுவாகப் பதிக்க ஆரம்பித்தது இந்தப் படத்தில் இருந்துதான்.
Advertisement
'கிளிஞ்சல்கள்' திரைப்படம் மூலம் தனது இரண்டாவது வெற்றியைக் கொடுத்தார் மோகன். இத்திரைப்படமும் 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. ஆனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிலைத்த இடத்தைப் பிடித்தது 'பயணங்கள் முடிவதில்லை' படம்தான். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய முதல் படமான இதில்தான் மோகன் முதன்முதலாக மைக்கைப் பிடித்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் இன்றளவிலும் ரசிக்கப்படுகின்றன.
'உதயகீதம்', 'இதயகோயில்', 'கோபுரங்கள் சாய்வதில்லை', தென்றலே என்னைத் தொடு' 'இளமைக் காலங்கள்', 'விதி', 'ஓசை', 'நூறாவது நாள்' என மோகனின் திரை வாழ்க்கை அதன்பிறகு ஏறுமுகம்தான். அத்தனையும் வெள்ளிவிழாத் திரைப்படங்கள். 1984-ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் மொத்தம் 19 திரைப்படங்கள் வெளியாகின. ஒரே நாளில் வெளியான இவரது மூன்று திரைப்படங்களும் வெள்ளிவிழா கண்டன. 80-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துவந்த கமல்-ரஜினி புயலுக்கு மத்தியில் இருவருக்கும் போட்டியாக வெள்ளிவிழாத் திரைப்படங்களைத் தந்தவர் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகைகளின் மனதில் கனவுக் கண்ணனாகத் திகழ்ந்தார். 'இதயகோயில்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம், மோகன், இளையராஜா கூட்டணி மீண்டும் இணைந்து 1986-ல் வெளியான 'மெளன ராகம்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மோகனின் சிரிப்பு அழுகையென்றும் அழுதால் சிரிக்கிறார் என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும் இவருக்குண்டான பெண் ரசிகைகள் போல் எந்த நடிகருக்கும் அமைந்ததில்லை எனலாம். ரொமான்ஸ்லாம் அதிகம் பழகாமலே ரொமான்டிக் நாயகன் பெயர் எடுத்தவர். காரணம் இவர் தேர்ந்தெடுத்த படங்கள் எல்லாமே இளமை நிரம்பிய காதல் கதைகளே. அமலா, நதியா என்று அப்போதைய கனவுக் கன்னிகளின் சினிமா நாயகன் மோகன் மட்டுமாகத்தான் இருந்தார்.
காலம் தாண்டி நிற்கும் இளையராஜாவின் இசையும், 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவருக்குப் பின்னணிக் குரல் தந்த எஸ்.என்.சுரேந்தர் ஆகியோரும் இவரது திரைவெற்றிக்கு முக்கியக் காரணம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து நடித்த 'சுட்டபழம்' திரைப்படம் போதிய வெற்றி பெறவில்லை. நூறாவது நாளில் வில்லனாக மிரட்டிய இவர், பின்னாளில் வில்லன் கதாபாத்திர வாய்ப்பு வந்தபோதெல்லாம் நடிக்க மறுத்துவிட்டார். மீண்டும் தற்போது நாயகனாக கன்னடத்தில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். தமிழ் சினிமா இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டத் துவங்கியுள்ளார். நன்றிக்கடன் மறவாமல் சென்னை வெள்ளத்தின்போது ஓடோடி வந்து உதவியதில் இவரும் ஒருவர்.
இன்னிசைப் பாடல்கள் மூலமாக இன்றளவும் தமிழ் ரசிகர்களின் வீடுகளில் வலம்வரும் மோகனுக்கு, எல்லோர் மனதிலும் என்றும் இடமுண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள்!
ஒரு ஓட்டல் முதலாளி பையன் தமிழ் நாட்டின் ரசிகர்களை கிறங்க வைக்க முடியுமா?
அதுக்கு முன்ன ஒரு சின்ன அனலைசஸ்....
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் திரை துறையில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள்...நான்கு பேர்...
ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்
இரண்டாவது மோகன்( மைக் மோகன் என்றால் எல்லோரும் அறிவர்)
மூன்றாவது அர்ஜூன்
நான்காவது பிரகாஷ்ராஜ்.
சரி இதில் இன்றுவரை புகழை முதலிடத்தில் தக்க வைத்துக்கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மாத்திரமே...
ஆனா அதே ரஜினிக்கு ஒரு காலத்தில் பீதி கிளப்ப வைத்த நடிகர் யார் என்றால் அது நடிகர் மோகன்தான்.. இன்னும் ஒரு சுவாரஸ்யம்... கமல் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமானவர்கள் பிற்காலத்தில் அவருக்கு ரெண்டு பேர் ஃடப் பைட் கொடுத்தார் ஒருவர் ரஜினி மற்றவர் மோகன் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா-?
ஆம் ரஜினி கமலுக்கு இணையான சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் என்றால் நம்புங்கள்.1980 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை ரஜினி கமலின் தூக்கத்தை கெடுத்ததில் மோகனுக்கு முக்கிய பங்குண்டு....
1980களில் இளமை பருவத்தை கடந்த பல பெண்களின் கனவு நாயகன் மோகன்தான்... மோகன் போட்டோவை படுக்கையில் வைத்து வியர்வையோடு படுத்தி எடுத்த காலம் அது...
கர்நாடகாவில் ஓட்டல் வைத்து நடத்தியவர் மோகனின் அப்பா...
மோகன் பெங்களூரில் பிறந்தார்... அங்கேதான் படிப்பு எல்லாம்.. ஓட்டலில் பார்த்துதான் அவரை நாடகத்தில் நடிக்க அழைத்தனர்...
அதன் பின் 1977 ஆம் ஆண்டு கமல் நடித்த கோகிலா மூலம்..... பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்யப்பட்டார்.. அதன் பின் 1980 ஆம் வெளிவந்த மூடுபணி... மற்றும் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே... அவருக்கு ஸ்டார் அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்தது எனலாம்.
அதன் பின் வெற்றியோ வெற்றிதான்... திரும்பி பார்க்க முடியாத , நினைத்து பார்க்க முடியாத, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வெற்றி விழா படங்களில் நடித்தவர் மோகன்...
பணங்கள் முடிவதில்லை... மற்றும் கிளிஞ்சல்கள் படங்களில் மோகனை தமிழ் ரசிகர்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினைர்கள்..25 நான் ஓடினால் இப்போது எல்லாம் பெரிய வெற்றி... மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை...500 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் என்றால் நம்புங்கள்...
கட் ஷூ போட்டு பெல்ஸ் பேன்டோடு கையில் மைக்கோடு மோகன் திரையில் வந்தால் .. கரகோஷம் பின்னும்...
மோகனின் திரை வெற்றிக்கு முக்கியகாரணங்களில் ஒன்று காதல் மற்றும் குடும்பகதைகளை தேர்ந்து எடுத்து நடித்துதான்... அதே போல அவர் நடிக்கும் படத்துக்கு ராஜாவின் பாடல்கள் மேலும் மகுடத்தை சேர்க்க வெற்றிக்கு கேட்கவா வேண்டும்.
அவர் கேரியரில் நிறைய படங்கள் மதர்லேன்ட் பிக்சருக்கு செய்து இருக்கின்றார்... உயிரே உனக்காக எனக்கு பிடித்த திரைப்படம்
1978 இல் இருந்து 1988 ஆம் ஆண்டு வரை இருந்த காலம் இருக்கின்றதே... தமிழ் சினிமாவுக்கு நடிகர் மோகனுக்கு அது பொற்காலம் என்றே சொல்லலாம்..
ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் செய்த ஒரே தமிழ் நடிகர் மோன்தான் என்று நினைக்கின்றேன் மூன்றில் ஒன்று பிளாப் ஆக வேண்டும் என்று அக்கலாத்தில் நிறைய பேர் வேண்டிக்கொண்டனர்.. மூன்று படங்களும் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள்.
உதாரணத்துக்கு 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே வருடத்தில் மோகன் நடித்த வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா...?? மொத்தம் 19 திரைப்படங்கள்... எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் முறியடிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் ஆகி மூன்று மே வெள்ளிவிழா படங்கள் என்ற சாதனையையும் இதுவரை எவரும் வெல்லவில்லை... யாரும் இல்லை..
சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் இத்தனை படங்களில் நடித்து இருந்தாலும்... அவர் எந்த படத்திலும் சொந்தக்ககுரலில் பேசி நடித்து இல்லை... ஆம் அவருக்கு இரவல் குரல் கொடுத்தவர் சுரேந்தர்...
ஆனால் கலைஞர் வசனத்தில் வெளியான பாசப்பறைவைகள் படத்தில் முதல் முறையாக சொந்தக்குரலில் பேசி நடித்தார்... விம்சிஹனிபா இந்த படத்தை இயக்கினார் என்று நினைக்கின்றேன்...
10 வருடங்கள் பட்டைய கிளப்பிய நடிகர் இன்று எந்த படத்திலும் நடிக்க வில்லை... யோசித்து பாருங்கள் மோகனின் பார்வையில் பத்து வருடம் தூங்க கூட நேரம் இல்லாமல் நடித்தவர்... ஷார்ட் ரெடி, ஆக்ஷன், கட் போன்ற எந்த சந்ததமும் கடந்த 14 வருடங்களில் கேட்காமல் இருப்பது எவ்வளவு கொடுமை.. சினிமா உலகம் அப்படியானதுதான்...
1990 களில் உருவம் என்ற படத்தில் விகாரமாக நடித்த காரணத்தால் அவரை ரசிகர்கள் தூக்கி எறிந்தார்கள் என்ற பேச்சு உண்டு...
ஆனால் மோகனுக்கு அந்த நேரத்தில் அதிஷ்டம் இருந்து இருந்தால் மவுனராகத்துக்கு பிறகு அஞ்சலி படத்தில் மோகன் ரேவதி ஜோடி நடிக்க முடிவு செய்து இருந்தார்.. மோகன் டேட்ஸ் இல்லாத காரணத்தால் அந்த பாத்திரத்தில் ரகுவரன் நடித்தார்... ஒரு வேளை மோகன் நடித்து இருந்தால் பெரிய வெற்றிப்படமாக அஞ்சலி அமைந்து இருக்கும் காரணம்... மவுனராகம் அந்த அளவுக்கு பெரிய வெற்றி...
அப்படி ஒரு அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த பெண்களுக்கு அன்பாக தகப்பனாக மோகன் நடித்து இருந்தால் பெண்கள் கண்ணை மூடி ஏற்க்கொண்டு இருந்து இருப்பார்கள்..
கடந்த விட்ட காலங்கள் பற்றி பேசி பயன் இல்லை என்றாலும் இப்போதாவது பேசுவோமே...
மோகன் செய்த நல்ல விஷயம் உணர்ச்சி வசப்பட்டு தன் கேரியரை நிலை நிறுத்த சொந்தப்படம் எடுக்கின்றேன் என்று முஷ்ட்டி மடக்கி படம் எடுக்கவில்லை.. ஒரே படம்தான் எடுத்தார்... அதுவும் சரிவரவில்லை என்ற காரணத்தால் விலகி விட்டார்...
தற்போது கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்...
சில்வர் ஜூப்ளி நாயகன் 1990க்கு பிறகு படம் இல்லாமல் தவித்தார்... ஆனால் ஏன் மோகனை அதன் பிறகு குணச்சித்திர , வில்லன் , காமெடியன் படங்களில் அவருக்கு ஏன் வாய்ப்பு தமிழ் சினிமா வழங்வில்லை என்பது மில்லியன் டாலர் கேள்விதான்..
காரணம் காமெடி, வில்லன், குணச்சித்திரம் என பட்டையை கிளப்பியவர் அவர்...
மோகன் நடித்த திரைப்படங்களில் என்னுடைய ஆள் டைம் பேவரைட் திரைப்படம் மவுனராகம்....
நான் எழுதிய தமிழ் சினிமா விமர்சனங்களில் நான் மிகவும் ரசித்து எழுதிய விமர்சனங்களில் மவுனராகமும் ஒன்று...
மௌனராகம் திரைப்படத்தின் விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்
நிறைய பாடகர் கதாபாத்திரங்களில் நடித்த காரணத்தால் மைக் மோகன் என்ற அடைமொழி ஓட்டிக்கொண்டது...
58 வயதாகும் மோகனுக்கு இன்று பிறந்த நாள்.... இன்னும் பல சாதனை புரிய மைக் மோகனை வாழ்த்துவோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக